السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 17 October 2025

பதிவு செய்யப்படாத காணி உறுதிகள் செல்லுபடியற்றவையா?

 

பதிவு செய்யப்படாத காணி உறுதிகள் செல்லுபடியற்றவையா?

பதிவு செய்யப்படாத காணி உறுதிகள் செல்லுபடியற்றவையா?


பலருக்கும் பெரிய சந்தேகம்:

“Land Registry Office-ல் பதிவு செய்யாத உறுதி (Deed) காணி உடன்படிக்கை (Land Agreement) / விற்பனை உடன்படிக்கை (Sale Agreement) சட்டரீதியாக செல்லுமா? இல்லையென்றால் அது செல்லுபடியற்றதாகுமா?”


உண்மையை சட்டத்தோடு புரிந்துகொள்ளுங்கள்.


சட்ட ரீதியான நிலை


Sri Lankan Law – Registration of Documents Ordinance No. 23 of 1927 படி—


#காணி தொடர்பான உறுதிகள் (Deeds) பதிவுசெய்யப்படாவிட்டால், அது மூன்றாம் தரப்பிற்கு எதிராக சட்டப்பூர்வ பலத்தை இழக்கும்.


#ஆனால் நிரூபித்து உறுதிப்படுத்த வேண்டிய தேவை ஏற்படலாம். அச்சந்தர்ப்பத்தில் நிரூபித்து உறுதிப்படுத்தினால் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும். 


#ஒரு ஆதனத்திற்கு பதிவு செய்த மற்றும் பதிவு செய்யப்படாத உறுதிகள் இரண்டு ஒரே காலத்தில் அல்லது வேறு வேறு காலத்தில் நிறைவேற்றப்பட்டால் பதிவு செய்யப்பட்ட உறுதிக்கு முன்னுரிமை (Priority) வழங்கப்படும்.


#ஆனால் — கையெழுத்திட்ட இரு தரப்பினருக்குள் அது செல்லுபடியாகும் ஒப்பந்தமாக இருக்கும்.


முக்கியமான சட்ட அம்சங்கள்


Exectuents and Notary + 2 Witness signed Deed or Agreement சட்டரீதியாக செல்லுபடி ஆனால் 3rd party-க்கு enforce செய்ய சிரமம் ஏற்படலாம்.


Registered Deed முழுமையான உரிமை பாதுகாப்பு கிடைக்கும்.


Unregistered Deed or Agreement சில குறிப்பிட்ட சூழ்நிலையில் Court குறிப்பிட்ட Performance வழங்கலாம்.


Fraud or cheating இருந்தால் Criminal + Civil action எடுக்கலாம்


முக்கிய வழக்கு தீர்ப்புகள்


1. Fernando v. Ranasinghe (1992)

பதிவு செய்யாத Sale Agreement இருந்தாலும், Specific Performance கோரி நீதிமன்றம் உத்தரவு வழங்கலாம் என தீர்ப்பு.


2. Jayasinghe v. Thabrew (1984)

Agreement oral ஆக இருந்தாலும் ஆதாரம் நிரூபிக்க முடிந்தால் செல்லுபடி.


3. Mudalige v. Perera (2005)

பதிவு செய்யாத உறுதிக்கு அடிப்படையாக பணம் செலுத்தப்பட்டால், Equity under the law பாதுகாக்கப்படும்.


நீங்கள் அறிந்திருக்க வேண்டியது


1. பதிவு செய்யாத காணி உறுதிகள் முழுமையாக செல்லுபடியற்றவை அல்ல.

2. ஆனால் சட்டப் பாதுகாப்பு குறைவு + மூன்றாம் தரப்பினர் (3rd party) disputes-ல் பலவீனம்.

3. Registry Deed + Possession + Consideration தான் Best...!


உங்களுக்கான சட்ட ஆலோசனை


காணி வாங்கும் முன்னர் இந்த 5 விடயங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்:

1. Title Report (30 years search)

2. Survey Plan

3. Notary + 2 Witness signed Agreement

4. Payment proof (Bank Slip/Receipt)

5. Registered Deed பெற்றே possession எடுக்கவும்!


ஒரே வரியில் உண்மையை சொன்னாலா


“பதிவு இல்லாத காணி உறுதி = ஆபத்தானது ஆனால் செல்லுபடியாகாதது அல்ல!”


இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் — LIKE | COMMENT | SHARE செய்யுங்கள்!

ஏராளமானவர்கள் நிலத்தை வாங்கி ஏமாந்து அழுகிறார்கள் – அவர்களைக் காப்பாற்ற இந்த post-ஐ பகிருங்கள்! 


நான் சட்டத்தரணி 

குமாரசிங்கம் கம்ஷன்


(இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல)