“அரசகாணியில் நீங்கள் 10 வருடமாக குடியிருக்கிறீர்களா? அது உங்கள் சொத்து ஆகுமா ? ஆவணங்கள் எதுவும் இல்லையா...? - சட்டரீதியான விளக்கம் இதோ!”
பலருக்கும் இருக்கும் பெரிய சந்தேகம் இதுதான். “நாங்கள் 30 வருடமாக இந்த அரசகாணியில் இருக்கிறோம் இப்போது அது எங்களுடையதுதான் என சொல்லிக் கொள்ளலாமா?” என்ற கேள்வி.
உங்கள் சந்தேகத்திற்கு சட்ட அடிப்படையிலான தெளிவான பதில்
சட்டம் என்ன சொல்கிறது?
1. Prescription Ordinance No.22 of 1871 அடிப்படையில் (Prescription) ஆட்சியுரிமை சார்ந்த சட்டம் அரச காணிகளுக்கு (State Land) பொருந்தாது.
2. இதனை அரச காணிகள் கட்டளைச் சட்டமும் State Lands Ordinance No.8 of 1947 உறுதிப்படுத்துகிறது:
ஆகவே அரசு சொத்துக்கள் எச்சந்தர்ப்பத்திலும் எவராலும் ஆட்சி உரிமை மூலம் உரிமை கோரி தங்களுடைய சொத்தாக ஆக்கிக் கொள்ள முடியாதவை.
மேலும் Sri Lankan Case Law இதை மீண்டும் மீண்டும் தீர்ப்பு அளித்துள்ளது:
Mahaweli Authority vs Udayakumara (SC Appeal 21/2010)
Attorney General vs Jinadasa (1994)
நீண்ட காலம் அரச காணியில் இருப்பது மட்டும் சட்ட உரிமையாக கருதப்படாது.
#அப்படியென்றால் #அரச #காணியை #சட்டப்படி #எவ்வாறு #பெறலாம்?
கீழ்க்கண்ட சட்ட நடைமுறைகள் மூலம் பெற்றால் மட்டுமே உரிமை கிடைக்கும்:
1. அளிப்பு பத்திரம் Grant (Land Development Ordinance கீழ் LAND GRANT மூலம்)
2. காணி அனுமதிப்பத்திரம் Permit (Jayabhoomi / Swarnabhoomi / LDO Permit)
3. நீண்டகால குத்தகை Lease (99 Years Lease Agreements from State)
4. விசேட அளிப்பு Grant under Special Schemes (Mahaweli, UDA, NHDA allocations)
5. பூரண அளிப்பு (FREE GRANT) பத்திரம் மூலம்
#கசப்பான உண்மை என்னவென்றால் :
அரச காணியில் நீண்ட காலம் வசிப்பது மட்டும் உரிமைகோர போதாது — சட்ட அடிப்படையான ஆவணம் அவசியம்!
நீங்கள் தற்போது அரசுக் காணியில் இருந்தால் – கவனிக்க வேண்டியவை!
A. நிலத்தை விற்கவும் முடியாது
B. Bank Mortgage வைக்க முடியாது
C. Tittle Deed பெற முடியாது
D. Court இல் Ownership Claim போட முடியாது
✅ ஆனால் சில வழிகளில் சட்டபூர்வமாக உரிமை பெற முயற்சிகள் செய்யலாம்:
1. பிரதேச செயலாளரிடம் (Divisional Secretariat மூலம் Regularization Application) விண்ணப்பம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
2. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை (National Housing Development Authority) மூலம் விண்ணப்பம்
3. அனுமதிப்பத்திரம் இனை அளிப்பு பத்திரமாக மாற்றம் செய்து பெற்றுக் கொள்ளலாம் (Permit Upgrade to Grant)
இந்த போஸ்ட் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
👉 தொடர்ச்சியாக “Land Law Awareness” பதிவுகள் வேண்டும் என்றால் “YES” என்று Comment போடுங்கள்!
ஆம்
👉 நிலத்தை பாதுகாப்பது உங்கள் உரிமை – சட்டத்தை தெரிந்து கொள்ளுதல் உங்கள் கடமை!
நான் சட்டத்தரணி
குமாரசிங்கம் கம்ஷன்
(இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல)
Copy paste thanks kumarasinkan kamsan Annan loyar