#பெரிய_சம்சுதீன்_எனும் #பெருந்தன்மை_மிக்க #மௌலவி
கிழக்கில் பல மூத்த உலமாக்கள் வாழ்ந்து சமூகப் பணி செய்து இருக்கிறார்கள் அந்த வகையில் கல்முனை பிரதேசத்தில் வாழ்ந்து சமய மற்றும் சமூகப் பணியை செய்த "பெரிய சம்சுதீன்" என அழைக்கப்பட்ட சம்சுதீன் பாகவி அவர்களைப் பற்றிய பதிவே இதுவாகும்
சம்சுதீன் பாகவி அவர்கள் கல்முனையில் பிரபலமான செல்வந்த குடும்பமான மஜீத் முதலாளி என்பவரின் மகனாக பிறந்தார் தனது ஆரம்பக் கல்வியையும் மதரஸா கல்வியையும் காலியில் உள்ள சோலை மதரசாவிலும் பின்னர் இந்தியாவின் "பாக்கியாத்" என அழைக்கப்படும் 1857ல் ஆரம்பிக்கப்பட்ட ஜாமியா அல் பாக்கியத்துச் சாலிஹாத் அரபுக் கல்லூரியிலும் அவர் கற்றார் அங்கு மிகச் சிறப்பு வாய்ந்த அரபு மற்றும் ஏனைய பாடங்களிலும் சித்தி அடைந்து பாகவி பட்டம் பெற்றதுடன் Diploma in Moulavi Aalim என்பதையும் பூர்த்தி செய்து சம்சுதீன் பாகவி என்ற பெயருடன் அவர் மார்க்கப் பணியை ஆரம்பித்தார்.
இலங்கைக்கு அப்பால் இந்தியா ஈரான் மற்றும் இறாக் போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்ததோடு நீண்ட காலமாக ஹஜ்,உம்றா வழிகாட்டியாகவும் பணியாற்றினார்
பாகவி அவர்கள் கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் பேஷ் இமாமாவும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்மா பள்ளிவாசலில் குத்பா பிரசங்கம் நிகழ்த்துகின்ற மௌலவி ஆகவும் நீண்ட காலமாக பணி புரிந்தார்
அவரிடம் இருந்த மிகவும் விசேடமான திறமை யாதெனில் அவர் மார்க்க விடயங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு இலகுவான தீர்வுகளை வழங்குவதாகும் பல்வேறு வகையான மார்க்கப் பிரச்சினைகள் பித்னாக்கள் ஏற்படுகின்ற போது அவரிடம் சென்று மார்க்கத்திற்கான விளக்கத்தைக் கேட்கின்ற போது அவர் மிகவும் இலகுவாக நடைமுறை உதாரணங்களுடன் அவற்றை விளக்குகின்ற ஒரு நவீன பாணிலான ஒரு முறையை கையாண்ட மௌவியாக காணப்படுகின்றார்
தனது சமய கடமைகளுக்கு அப்பால் அவர் பல்வேறு வகைப்பட்ட அரபு கிதாபுகளை வாசிக்கக்கூடிய ஆர்வம் உள்ளவராக இருந்தார் அவர் பயணம் சென்ற இடங்களில் எல்லாம் கிதாபுகளையும் மார்க்கம் சம்பந்தமான புத்தகங்களையும் அவர் கொள்வனவு செய்து அவற்றை வாசிப்பதன் மூலம் நவீன மார்க்க சமய சிக்கல்களுக்கான தீர்வுகளை முன்வைக்கின்றவராகவும், ஒரு தொடர்ச்சியான வாசிப்பு பழக்கத்தை கொண்ட ஒருவராகவும் காணப்பட்டார் அது மட்டும் அல்ல
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பரம்பரையில் வந்த அஹ்லுல் பைத்துக்களுடன் அவருக்கு மிக நெருங்கிய உறவு காணப்பட்டது அவர் பிறந்த இடம் கல்முனை மசூரா தைக்காவுக்கு அருகில் காணப்பட்டதனால் அந்த நெருக்கம் மிகவும் அன்னியோன்யமாக இருந்தது
அஹ்லுல் பைத்துக்களை கண்ணியப்படுத்தல் அவர்களோடு நல்ல உறவைப் பேணுவதையும் அவர் தொடர்ச்சியாக பின்பற்றி வந்தார்
அது மட்டுமல்ல இவர் கற்ற பாக்கியத்து சாலிகாத் போன்ற மதரசாக்களில் மிகப் பிரபலமான உலமாக்களின் மாணவராகவும் அவர் இருந்தார் அவர் கற்ற மதரஸாவிலேயே தைக்கா சுஹைப் ஆலிம் அவர்களும் முன்னாள் மாணவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் கல்முனை பிரதேசத்தில் வாழ்ந்த பிரபலமான மூத்த உலமாவான யாசீன் ஆலிம் அவர்களுடனும் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தார் உண்மையில் பெரிய சம்சுதீன் மௌலவி அவர்கள் அச்சம் இல்லாத மார்க்கத்தை மிகவும் தெளிவாக எடுத்துரைக்கின்ற ஒருவராக காணப்பட்டார் அது மட்டும் அல்லாது போலி வேஷங்களையும் வீணான குழப்பங்களையும் ஏற்படுத்தும் ஒருவராக அவர் இருக்கவில்லை அவர் மிகவும் தெளிவான தன்மையுடையவராகவும் வெளிப்படைத்தன்மை உள்ள ஒரு உலமாவாக காணப்பட்டதோடு தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமய வாழ்க்கையிலும் அவரது வெளிப்படைத்தன்மை பொது மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக காணப்பட்டது
சம்சுதீன் அவர் மௌலவி அவர்கள் தனது நீண்ட மார்க்கப் பணியின் பின்னர் அவர் இவ் உலகை விட்டு பிரிந்தாலும் அவருக்கு நிகரான ஒருவர் இதுவரை உருவாகவில்லை என்பதுடன் அவரது இடைவெளி இன்னும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது
அவர் மார்க்க உலமாக்களிடையே ஏற்படும் பிளவுகள் பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது அவர்களை விருந்துகள் மற்றும் சந்திப்புகளின் மூலம் ஏற்பாடு செய்து அவர்களிடையே ஒரு உறவையும் அன்னியோன்யத்தையும் மீண்டும் ஏற்படுத்தும் ஒரு சிறந்த மத்தியஸ்த ஏற்பாட்டாளராகவும் விளங்கினார் அவ்வாறான நபர்கள் இன்று மிகக் குறைவானவர்களாகவே காணப்படுகின்றனர். எனவேதான் கல்முனை பிரதேசத்தின் இஸ்லாமிய சமூக மறுமலர்ச்சியில் பெரிய சம்சத்தின் மௌலவி அவர்களின் பங்கு அளப்பரியதாகும் அன்னாரின் பாவங்களை மன்னித்து அல்லா அவருக்கு மிகச் சிறப்பான சுவனத்து வாழ்க்கை வழங்கி வைப்பானாக ஆமீன்
கலாநிதி முபிஸால் அபூபக்கர் சிரேஷ்ட விரிவுரையாளர் மெய்யியல் துறை பேராதனைப் பல்கலைக்கழகம்.