தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துமா?
இது சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் ஒரு பெரிய கேள்வி! உண்மையை சட்டத்தோடு தெரிந்துகொள்வோம்...!
ஆம் – இலங்கையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் (Right to Information Act No.12 of 2016) நீதிமன்றங்களுக்கும் பொருந்தும். ஆனால் சில விஷயங்களில் மட்டும் விதிவிலக்கு (Exceptions) உண்டு.
இதற்கான சட்ட ஆதாரம் என்ன?
01. RTI Act – Section 3
“This Act shall apply to all public authorities.”
02. RTI Act – Section 43
“Courts, Tribunals, Parliament and Provincial Councils are also Public Authorities.”
அதாவது – நீதிமன்றங்களும் RTI சட்டத்தின் கீழ் வருகின்றன. ஆனால் முழுவதும் இல்லை – முக்கியமான சில வரையறைகள் உண்டு.
RTI மூலம் கேட்க முடியாத தகவல்கள் (Exemptions – Section 5):
1. நடந்து கொண்டிருக்கும் வழக்குகளின் நீதிமன்ற உத்தரவுகளுக்குப் புறம்பாக தகவல்
2. நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் தகவல்
3. நீதிமன்றத்தில் In Camera மூலம் நடந்த வழக்குகள் தொடர்பான தகவல்
4.பிரத்தியேக தனியுரிமை (Privacy) பாதிக்கும் தகவல்கள்
5. தேசிய பாதுகாப்பு / நீதிமன்ற நிர்வாக ரகசிய தகவல்கள்
RTI மூலம் நீதிமன்றத்திலிருந்து பெறக்கூடியவை:
1. வழக்கின் Case Progress Details
2. Certified Copies விண்ணப்பங்கள் பற்றிய நிலை
3. நீதிமன்ற நிர்வாக தகவல்கள் (staff, procedures, delays)
4. வழக்கு உள்ளடங்காத பொது நிர்வாக தகவல்கள்
5. Court Administration தொடர்பான தகவல்கள்
6. Appointment procedures – நீதிமன்ற ஊழியர்கள் பற்றிய non-sensitive தகவல்கள்
RTI மூலம் கிடைக்காதவை:
1. நீதிபதியின் தீர்ப்பு எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது தொடர்பான Internal Notes
2. Sub Judice நிலையில் உள்ள வழக்கின் ரகசிய தகவல்கள்
3. In Camera evidence
4. Judge–Attorney ரகசிய தொடர்புகள்
5. Judicial decision-making process
கவனிக்க வேண்டிய முக்கிய உண்மை:
RTI என்பது நீதிமன்ற செயல்முறைகள் அல்லது தீர்ப்புகளை சவால் செய்யும் வழி அல்ல.
து நீதித்துறை வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் உரிமை கருவி!
RTI விண்ணப்பம் எங்கே சமர்ப்பிப்பது?
நீதிமன்றங்களில் தகவல் அறியும் அலுவலர் (Designated Information Officer) இருப்பார்.
1. அவ்வாறு தனிப்பட்ட எந்த ஒரு அலுவலர்களையும் அமைச்சு நியமிப்பதில்லை. இதற்கான பிரதான காரணம் தினமும் குறித்த கடமை செய்ய வேண்டியதில்லை மேலும் மாதம் முழுவதும் குறித்த அலுவலருக்கு கடமை இருக்கப்போவதில்லை.
2. திணைக்களத் தலைவர் ஒரு உத்தியோகத்தரை பெயர் குறிப்பிட்டு நியமிக்கலாம்
3. இல்லாவிடின் திணைக்கள தலைவரோ பதில்/உபதலைவரோ தாங்களாக குறித்த கடமையை நிறைவேற்றலாம் அல்லது இயங்கலாம்.
காரணம் குறித்த நியமனத்தை வழங்கும் அதிகாரம் திணைக்கள தலைவருக்கே உள்ளது.
குறித்த சட்ட ஏற்பாட்டின்படி
RTI Act – Section 23(1)
Every public authority shall designate one or more officers as Information Officers.
Section 43 – Interpretation
"Public Authority" என்பதில் அமைச்சரவை, திணைக்களங்கள், அரசு நிறுவனங்கள் அனைத்தும் அடங்கும்.
அதாவது – ஒரு திணைக்களத்தில் Information Officer (IO) மற்றும் Designated Officer (DO) இருவரையும் அந்த திணைக்களத்தின் தலைமை அதிகாரியே நியமிக்க வேண்டும்.
யார் இந்த "தலைமை அதிகாரி"?
ஒரு திணைக்களத்தில் பொதுவாக ;
அமைச்சு Secretary to the Ministry
அரசு திணைக்களம் Director General / Commissioner / Department Head
பிரதேச செயலாளர் அலுவலகம் District Secretary / Divisional Secretary
பல்கலைக்கழகம் Vice Chancellor
நகரசபை / பிரதேசசபை Mayor / Chairman / Commissioner
அரசு நிறுவனம் Chairman / General Manager
இவர்கள் தான் தமது திணைக்களத்தில் RTI Information Officer-ஐ நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்கள்.
RTI Information Officer-ஐ நியமிக்கும் அதிகாரம் அந்த திணைக்களத்தின் தலைமை அதிகாரியிடம் உள்ளது.
இது Right to Information Act No.12 of 2016 – Section 23 மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் மூலம் RTI Application Form A மூலம் பெறலாம்.
30 தினங்களுக்குள் பதில் தர வேண்டும் என்று சட்டமே சொல்கிறது!
ஆகவே சட்டத்தின்படி :
A. RTI நீதிமன்றங்களுக்கும் பொருந்தும் – ஆனால் சட்டத்தின்படி சில கட்டுப்பாடுகளுடன்!
B. உங்கள் உரிமையை அறியுங்கள் – கேள்வி கேட்பது குற்றமல்ல!
C. நீதியும் வெளிப்படைத்தன்மையும் பொதுமக்களின் உரிமை!
உங்களுக்குத் தெளிவானதா?
RTI விண்ணப்பம் செய்வது எப்படி என்று போஸ்ட் வேண்டுமா? Comment பண்ணுங்க!
"YES – RTI GUIDE வேண்டும்" என்று எழுதுங்கள்
நான் சட்டத்தரணி
குமாரசிங்கம் கம்ஷன்
(இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல. )
#RTI #SriLankaLaw #LegalAwareness #Justice #KnowYourRights #RightToInformation #Judiciary #LawPost #TrendingLegalPost