காரைதீவு பக்கீர் சேனை பாவாக்களின்
றாத்திப் செய்யும் இடம் சாய்ந்தமருது
ஜும் ஆ பள்ளியால் இடிக்கப்பட்ட வரலாறு!!
××××××××××××××××××××××××××××××××××××××××
பாரம்பரிய அடையாளங்களை, மரபுகளை பேணிப்பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு
சமூகத்தவரதும் தலையாய கடமை. இந்த அடையாளங்கள், மரபுகள் அழிக்கப்படும் போது பல முரண்பாடுகள் உருவாகிவிடும்
என்பது கடந்த கால கசப்புணர்வுகளாகும்.
இவ்வாறான மரபை அழிக்க சாய்ந்தமருது
ஜும் ஆ பள்ளிவாயலநிருவாகிகள் துணை
போனமை பற்றி பலர் அறிந்திருக்கவாய்ப்பு
இல்லை.
காரைதீவு பிரதேசத்தில் தைக்கா சந்தி என
அழைக்கப்பட்ட சந்தி காரைதீவு முச்சந்தி
என மாற்றப்பட்டதன் பின்னணி, அதன்
வரலாறு பற்றி அண்மையில் எழுதினேன்.
இதே போல் காரைதீவு பாலையடி பிரதேசம்
என அழைக்கப்படும் #காரைதீவு விவசாய
விரிவாக்கல் நிலையம்( APC) அமைந்துள்ள
இடத்திற்கு அருகாமையில்" #பக்கீர்சேனை"
எனும் பாவாக்கள் குடியிருந்து இறாத்திபு,
திக்ர் என்பன நிகழ்த்தியஇடம்சாய்ந்தமருது
ஜும் ஆ பள்ளியின் கடந்த கால நிருவாகத்
தினால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு நெற்
காணியாக மாற்றப்பட்டு காலபோகத்திற்கு,
சிறுபோகத்திற்கு குத்தகைக்கு கொடுக்கப்
பட்டு பணம் உழைக்கப்படுகிறது.முஸ்லிம்
களின் அடையாள சின்னத்தை முஸ்லிம்கள்
உடைத்து சின்னாபின்னப்படுத்திய எங்கும்
நடக்காத வரலாறு!
பணத்திற்காக முஸ்லிம்களின் அடையாளம்
சாய்ந்தமருது ஜும் ஆப் பள்ளிவாயலின்
வஹ்ஹாபிசம் குடிகொண்ட ஒருகூட்டத்தின்
முயற்சியினால் உடைக்கப்பட்டுஅத்திவாரம்
தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அல்லாதவர்கள் கூட செய்ய
கூசும் துரோகத்தனத்தை சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாயலின் கடந்த கால நிரு
வாகம் செய்துள்ளது.
விடுதலைப்புலிகளால் கூட சேதமாக்கப்
படாத இந்த பக்கிர்சேனை பாவாக்களின்
கராமத்துகளை அரங்கேற்றும் இடத்தை
நாசமாக்கி இடித்தவர்கள் சாபத்திற்குரிய
நஸராணிகள் அங்கிருந்த அப்துல்லாஹ்
வலி என்பவரின் சியாரத்தையும் உடைத்து
நாசமாக்க முயற்சி செய்தது.
ஆனால் இறைவனின் நாட்டம் இந்த வகாபி
கூட்டத்தினரால் அதனை செய்ய முடியவே
இல்லை. மண்வெட்டியால் கொத்தினார்கள்
மண்வெட்டிகள் உடைந்து தெறித்தன.
பெக்கோ கொண்டு தோண்ட முயற்சித்தனர்
மெசின் புரண்டது. ட்ரக்டர் கலப்பைகளால்
லெவல் பண்ண பார்த்தனர். உழவு மெசின்
முன்னேற முடியாமல் நின்றது.இப்படி பல
அதிசயங்கள் அந்த சியாரத்தில் நடந்தது.
இதனை நான் அவதானித்திருக்கிறேன்.
அதன் பின்னர் அம்முயற்சியை வஹ்ஹாபி
கள் கைவிட்டனர். அந்த இடம் மட்டும் இன்று
வரை மண்மேடாக உள்ளது.அதில் ஒரு பயன்தரு தென்னைமரம் நிற்கிறது.
இந்த சியாராவை சுற்றிவர ஒரு சுவரைகட்டி
பாதுகாக்க முடியாது சாய்ந்தமருது ஜும் ஆ
பள்ளி நிருவாகம் உள்ளதுஎன்பதைஎண்ணி
பார்க்கும் போது வெட்கமாகவுள்ளது.
இவ்வாறான மரபு, அடையாளங்களை ஈமான் கொள்ளாதஅந்நியசமூகம்பணத்திற்
காகவோ வேறு எந்த நோக்கத்திற்காகவும்
செய்யாது.
நான் சம்மாந்துறை வலயக் கல்வியலுவலக
திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய
சமயம் ஏத்தாளைக்குளம் என்னுமிடத்தில்
இருந்த பாடசாலையைபொலிஸ்காவலரண்
அமைக்க பொலிஸ் திணைக்களத்திற்கு
கையளிக்க சென்ற போது பாடசாலைக்கு
அண்மையில் அழிந்த நிலையில் ஒரு தமிழ்
கோயில் இருப்பதை கண்டேன்.
அந்தக் கோயிலின் முன்னால் ஒரு வயதான
தமிழ் முதியவர் தன்னை போர்வையால் போர்த்திக்ஸகொண்டு உட்கார்ந்திருந்தார்.
அவரிடம் சென்று பேச்சுக்கொடுத்த போது
இந்த கோயிலை பாதுகாக்குமாறு கனவில்
தம்மிடம் அம்பாள் கட்டளையிட்ட தாகவும்
அதனால் நான் முழு நேரமும் குந்தி இருப்ப
தாக தெரிவித்தார்.
பார்த்தீர்களா?மரபிடங்கள்பாதுகாக்கப்படும்
விதத்தை.ஆனால் சாய்ந்தமருது மக்களின்
அமானித நிறுவனமான பள்ளி வாயலானது
மரபை உடைத்து பணத்திற்கு அடிமையான
வரலாறே இது.!
(பக்கீர்சேனை பாவாக்களின் றாத்திபு, திக்ர்
மண்டபம் தற்போது இது நெற்காணியாக
ஏலம் விடப்படுகிறது)
ஏ.எல்.எம்.முக்தார்
சிரேஸ்ட ஊடகவியலாளர்.