السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday 16 September 2018

ராபியத்துல் பஸரிய்யா ரஹ்மத்துல்லாஹ்

ராபியத்துல் பஸரிய்யா ரஹ்மத்துல்லாஹ்
.
தொழுகைக்காக மனிதன் நின்ற போது அவன் மொழியும் ஆரம்ப வார்த்தை இன்ன ஸலாதி வனுஸ்கி வமஹ்யாய வமமாதி லில்லாஹி ரப்பில் ஆலமீன். அதாவது நிச்சயமாக எனது வணக்கங்களும் தியாகங்களும் வாழ்வும் மரணமும் அல்லாஹ்விற்காக வேண்டியாய் இருக்கும். 

இப்படியாக தான் வாழ்ந்தாலும் உனக்காகவே எனது தியாகங்களும் வணக்கங்களும் என்று உறுதி கூறும் மனிதன் வணங்குவதும் இல்லை.தியாகங்கள் புரிவதும் இல்லை. அப்படியே வணங்கினாலும் தியாகங்கள் பரிந்தாலும் அது அல்லாஹ்விற்காகவா என்று பார்த்தால் அதுவுமில்லை. மாறாக பிறர் மதிக்க வேண்டும் மக்கள் போற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் நம் மனதிலே மேலோங்கி நிற்கிறதே தவிர மாண்பாளனான அல்லாஹ்வின் மனம் குளிர வேண்டும் அதனால் நாம் மணம் பெற வேண்டும் என்ற எண்ணம் நம் உள்ளத்தில் எழ மறுக்கிறது. 

உலகை முற்றிலும் துறந்து விடு என்று மார்க்கம் கூற வில்லை மாறாக உலகம் எதுவரை உதவும் என்பதை உணர்ந்து நட என்றுதான் கூறுகிறது. அப்படி உணர்ந்து நடந்த நல்லோர்களைத்தான் நாம் உத்தமர்கள் இறைநேசர்கள் என்று கூறுகிறோம். 

அப்படிப் பட்ட மாந்தருள் மாணிக்கமாகத் திகழ்பவர்கள்தான் ராபியத்துல் பஸரிய்யா ரஹ்மதுல்லாஹ் அவர்களாகும்.  அன்னை ராபியத்துல் பஸரிய்யா அவர்களின் உலக நாட்கள் உதிர்ந்து போகும் இருதி நேரத்தில் இருக்கும் போது அவர்களைக்கான இறைநேசச் செல்வர்களான மாலிக் இப்னு தீனார் ரஹ்மதுல்லாஹ் மற்றும் ரியாஹ் இப்னு கைஸ் ரஹ்மதுல்லாஹ் ஆகிய இரண்டு போரும் அன்னை அவர்களின் வீடு வந்து சேர்ந்தார்கள். ஸக்ராத்த ஹாலில் இருக்கும் அன்னையவர்களின் நிலை கண்டு மனம் வருத்தி அல்லாஹ்வின் நல் அடியாரே! தங்களுக்கு ஏதேனும் விருப்பம் உள்ளதா? என்று கேட்டார்கள்.

ஆம் உள்ளது என்று அன்னை பதில் சொல்ல அவர்கள் என்ன விருப்பம் என்று கேட்க எனது பாவங்கள் மண்ணிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூற மீண்டும் இறைநேசர்கள் கேட்டார்கள் இந்த துன்யாவை விட்டுப் போவப்போகிற உங்களுக்கு இந்த துன்யா சம்பந்தப்பட்ட விருப்பம் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டதும் ஆம் உண்டு.ருதபபெனும் பேரீத்தம் பழத்தை நான் முப்பது வருட காலமாக திண்ண நாடியும் அதனை எனது நப்ஸ_க்கு கொடுக்காமல் இருந்தேன் என்று கூறினார்கள்.

சகோதரியே இந்தக் காலம் பஸராவில் ருதபெனும் பேரீத்தம் பழம் கிடைக்காதே நான் என்ன செய்வேன் மரணவேளையில் உள்ள தங்களது ஹாஜத்தை என்னால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமே! என்று வருத்தியவர்களாக வெளியே பழம் தேடிப்போன போது ஒரு பறவையானது தனது அழகில் ருதபெனும் பழக்குழையை தூக்கிக் கொண்டு மாலிக் இப்னு தீனார் ரஹ்மதுல்லாஹ்விடம் அருகில் வந்து போட்டு விட்டு பறந்து சென்றது.

அல்லாஹ் அக்பர் என்று இறைவனைப் புகழ்ந்தவர்களாக அந்தப்பழங்களைக் கொண்டு வந்து அன்னையிடம் கொடுத்த போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்திலும் கேட்டார்கள். இந்தப் பழங்கள் ஏது? எப்படிப் பெற்றீர்கள் ? என்று..

உடனே மாலிக் இப்னு தீனார் ரஹ்மதுல்லாஹ் கூறினார்கள் அம்மையே இந்தப் பழங்களை ஒரு பறவை கொண்டு வந்து போட்டு விட்டுச் சென்றது நீங்கள் விரும்பி கேட்ட அந்தப் பழங்கள்தான் இது என்றார்கள். அநீதமான முறையிலே வாழும் தீயோரின் தோட்டத்துப் பழங்களாக இவை இருக்காது என்ன நிச்சயம்? ஆகவே இவைகள் எனக்கு வேண்டாம் எனக்கூறி ஒன்றினைக்கூட எடுக்காது தள்ளி வைத்து விட்டார்கள்.

30 வருட காலமாக திண்ண வேண்டும் என்று ஆசித்த ஒரு பொருள் தனக்கு முன் இருந்தும் தொட்டும் பார்க்கவில்லை. இந்நிலையில் அன்னை ராபிய்யா அவர்கள் அல்லாஹ்வின் இறைநேசர்களே! தாங்கள் இருவரும் சிறிது வெளியே செல்லுங்கள் எனது ரப்பை நான் சந்திக்கும் நேரம் நெருங்கி விட்டது என்று கூறினார்கள். அழுத நிலையில் இறை நேசர்கள் இருவரும் வெளியே சென்றதும் சப்தம் உள்ளிருந்து கேட்டது அதாவது யாஅய்துஹன்னப்ஸ_ல் முத்மயின்னாஹ் துர்ஜியி இல ரப்பிகி ராலியத்தன் மர்லிய்யா என்ற ஆயத்தின் சப்தத்தை கேட்டார்கள். உடனே சென்று பார்த்த போது அன்னை அவர்கள் ஸஜ்தாவிலே தலையை வைத்த நிலையில் மரணமடைந்திருக்க கண்டோம் என்று கூறினார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்
 
Abu Izzah Zainab Eravur