السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday 5 May 2024

இலங்கையின் முதலாவது முஸ்லிம்


 இலங்கையின் முதலாவது முஸ்லிம் வைத்தியர் - சி.எம்.எம் சுபைர்

First Muslim Medical Doctor Of Sri Lanka

- Doctor C.M.M Zubair


இலங்கையின் முதலாவது முஸ்லிம் வைத்தியர் Doctor C.M.M சுபைர் ஆவார். கொழும்பு தெமடகொடையை பூர்வீகமாகக் கொண்ட "குழந்தை மரிக்கார் முஹம்மத் சுபைர்" பிரித்தானியாவின் அங்கீகாரம் பெற்ற 

(First British Qualified) முதல் இலங்கையின் முதல் முஸ்லிம் வைத்தியராகக் கருதப்படுகிறார். 


1892ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்த C.M. M சுபைர், மருதானை சென். ஜோசப் கல்லூரியில் பாடசாலைக்கல்வியைப் பூர்த்தி செய்தார். பின்னர் 1912 மார்ச் மாதம் ஸ்கொட்லாந்தின் எடின்பரோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இணைந்துகொண்டார். 1916ஆம் ஆண்டு மருத்துவத்துறைப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். இவர் First Western qualified Ceylon Muslim Doctor ஆக வரலாற்றில் இடம்பிடித்தார். 


இலங்கை வந்து மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என அவர் எண்ணியிருந்தார். ஆனால் இறைவனின் நாட்டம் வேறாக இருந்தது. Dr. C.M.M சுபைர் 1917ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக ஸ்கொட்லாந்தின் எடின்பரோ நகரில் காலமானார்கள். அப்போது அவருக்கு 24 வயதாகும். 


பஸ்ஹான் நவாஸ் Fazhan Nawas 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.