#குத்புல் அக்தாப் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் உரையிலிருந்து ....
அல்லாஹ்வின் அச்சம் (تَقوى) இல்லாமல் எந்த அமலும் பயனில்லை.
#தக்வா என்பது – அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றியும், அவன் தடைசெய்தவற்றை வெறுத்து விட்டு விடுதலும் ஆகும் .
#நப்ஸ் (உள்ளார்ந்த ஆசைகள்) மனிதனை பாவத்திற்குத் தள்ளும். தக்வா மட்டுமே அதை அடக்கும்.
உலக சுகங்கள் தாற்காலிகம். அல்லாஹ்வின் அருகில் நிலைத்திருக்கும் நன்மையே உண்மையான செல்வம்.
தக்வா உடையவன் உலகிலும் மரணத்திற்குப் பின் வாழ்க்கையிலும் காப்பாற்றப்படுவான்.
மனிதனே! உன் வெளிப்படையான உடலாலும், உன் உள்ளார்ந்த இதயத்தாலும் தக்வா உடையவனாகு. ஒருவன் மக்களுக்கு முன்பு தக்வா உடையவனாகத் தோன்றினாலும், உள்ளார்ந்த நிலையில் அப்படியில்லையெனில், அல்லாஹ்வின் முன் அவனுக்கு மதிப்பு இல்லை.”
உண்மையான அடியார் என்றால், வெளியில் மட்டும் அல்லாமல் உள்ளத்திலும் தக்வா உடையவரே.
தக்வா இல்லாமல் உன் சலாஹ், துஆ, நோன்பு அனைத்தும் பயனற்றது.
அல்லாஹ் தக்வா உடையவர்களையே நேசிக்கிறான்.
#நஸீஹத்தின் #மெளலீத் #இதயத் #ரகசியங்களின் #குத்பு #அமலால் #மறைவின் #ஒளியின் #உலகம் #குத்புல்
Muhammed Yoosuf Musthafi