யானைப்படைக்காக ஒரு சாலை..! 🦣
*******************************************
மக்கா முகர்ரமா
யமன் தேச மன்னன் அப்ரஹா அல் ஹபஷி மிகப்பெரிய யானைப்படையுடன் புனித கஃபதுல்லாஹ்வை அழிக்க வந்தான்.
அல்லாஹ் தனது அருள் மறையில் 105 அத்தியாயத்தில் இந்த வரலாற்றை பதிவு செய்கிறான்.
ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறப்பதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சுமார் கிபி 571 ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளது.
யானைகள் பாலைவன மணலில் நடக்க இயலாது. என்பதற்காக அந்த மன்னனின் அதிகாரிகள் அப்போதே எழுபது கிமீ தூரத்திற்கு நான்கு மீட்டர் அகலத்தில் கருங்கற்கள் மூலமாக தற்காலத்தில் பேவரிட் பிளாக் கற்கள் மூலம் பாதை அமைப்பதைப் போன்றே அமைத்துள்ளார்கள்.
இந்த யானைப் பாதை இன்றும் மக்கா முகர்ரமா நகருக்கு அருகே உள்ள அல் ஜவ்ஃப் என்ற நகரில் இருந்து 24 கிமீ தூரத்தில் இருந்து இந்த பாதையை நீங்கள் காணலாம்.
#makkamukarrama #elifentarme
#abrahaalhabashi🦣











