السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 12 September 2025

முஹத்திஸீன்களின் மெளலீத்

             முஹத்திஸீன்களின் மெளலீத்





 🌹 முஹத்திஸீன்களின் மவ்லித் 🌹

முஹத்திஸே ஹரமைன் இமாம் ஷெய்கு ஸெய்யது  முஹம்மது பின் அலவி அல் மாலிகி رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு  1426) அவர்கள் சமீபகாலத்தில் இஸ்லாமிய உம்மத்தின் பெரும் அறிஞராக அறியப்பட்டவர்கள். 

எம்பெருமானார்  ﷺ அவர்களது திருப்பேரர் சுவனத்து இளைஞர்களின் தலைவர் ஸெய்யிதினா ஹஸன் رضي الله عنه  அவர்களது பாரம்பரித்தில் வந்தவர்கள்.

அன்னவர்களது குடும்பத்தினர் ஐந்து தலைமுறைகளாக மக்கா முகர்ரமாவில் மாலிகி மத்ஹபின் இமாமாக மக்களுக்கு பணிபுரிந்தனர்.

இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது பாட்டனார் ஸெய்யது அப்பாஸ் அலவி அல்மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் மக்கா முகர்ரமாவின் முப்தி மற்று காழீயாகவும்,இமாமாகவும்,கதீபாகவும் மார்க்கப் பணியாற்றினார்கள்.

அன்னார் இப்பணிகளை உஸ்மானிய கிலாபத்தின் போதும்,பின்னர் ஹாஷிமியாக்களது ஆட்சியலும்,அதன் பின்னர் இன்று 200 வருடங்கள் முன்னர் நிர்மாணிக்கப்பட்ட நவீன சவூது ஆட்சியிலும் தொடர்ந்தனர். அன்றைய மன்னர் அப்துல் அஜீஸ் பின் சவூது இவர்பால் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார்.

இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது ,தகப்பனார் ஸெய்யது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் நாற்பதாண்டு காலம் மக்கா முகர்ரமாவில் பல்வேறு இஸ்லாமிய உலூம்களை கற்பித்துக் கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள்.

தமது தகப்பனாரிடம் இஸ்லாமிய கல்வியை கற்ற இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ,தமது 15 வது வயதில் ஹதீஸ் மற்றும் பிக்ஹ் உடைய கல்வியை ஹரம்ஷரீபில் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

ஆரம்பகால கல்வியை கற்ற பின்னர்,தமது 25 வது வயதில் உலகப் புகழ்பெற்ற ' அல் அஸ்கர்' பல்கலைக்கழகத்தில்  முனைவர் பட்டம் பெற்று தேர்ச்சியானார்கள்.

இஸ்லாமிய உலகெங்கும் பயணித்து மக்ரிப் முதல் மஷ்ரிக் வரை மார்க்கக் கல்வியை பல்வேறு உலமாக்களிடம் கற்றார்கள்.

மவ்லிதுந்நபி  ﷺ ஏன் கொண்டாடுகிறீர்கள் ? ,மற்றும் இன்னபிற ஆட்சேபனைகளுக்கு இரத்தின சுருக்கமாக பின்வருமாறு பதிலுரைத்தார்கள், 

"  நான் கொண்டாடுகின்றேன் ஏனெனில் நபி  ﷺ அவர்களைக் கொண்டு மகிழ்வுறுகின்றேன், நான் நபி  ﷺ அவர்களைக் கொண்டு மகிழ்வுறுகின்றேன் ஏனெனில் நான் நபி  ﷺ அவர்களை நேசிக்கின்றேன், நான் நபி  ﷺ அவர்களை நேசிக்கின்றேன் ஏனெனில் நான் ஒரு முஃமின் " 

📕 ஹவ்ல் அல்இக்திபால் பீ திக்ரி மவ்லித் அல்நபி அஷ்ஷரீப்,இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ

#miladunnabi2025 #MuslimUmmah #JummahMubarak #islamicreminder #islam #Mawlid #miladunnabi #tamil #muslim #islamicpost