السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 2 September 2025

மௌலிதில் எழுந்து நிற்பது பற்றிய ஆய்வு! தொடர்:- (13)

மௌலிதில் எழுந்து நிற்பது பற்றிய ஆய்வு! தொடர்:- (13)

 

மௌலிதில் எழுந்து நிற்பது பற்றிய ஆய்வு! தொடர்:- (13)

︗︗︗︗︗︗︗︗︗︗︗︗︗︗︗︗

உருதுமூலம்:- ஜாஅல்ஹக்!

            தமிழில்

︗︗︗︗︗︗︗︗︗︗︗︗︗︗︗︗

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி பாஸில் ஷெய்கு

ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.

︘︘︘︘︘︘︘︘︘︘︘︘︘︘︘︘

எழுந்து நிற்பதில் சட்டங்கள் திட்டவட்டமாகிவிட்டதால் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பிறப்புச் செய்தியைக் கூறும்போது எழுந்து நிற்றல் ஸஹாபாக்கள், ஸலபுஸ்ஸாலிஹீன்களின் ஸுன்னதிலிருந்து நிரூபணமாகியுள்ளது

காரணம் எழுந்து நிற்பது ஸுன்னத்தான 4வது காரணத்தில்


1 - மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும், அல்லது விருப்பத்திற்குரியவரின் செய்தியைக் கேட்கும் போதும் எழுந்து நிற்பது ஸுன்னத் என்பதை ஏற்கனவே கூறியுள்ளோம்.


மார்க்கத்தில் மகத்துவமானவரின் பொருளைக் கண்ணியம் படுத்துவதற்காக எழுந்து நிற்பது ஸுன்னத் என்பதை முதல் காரணத்தில் கூறியுள்ளோம்.


2 - றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பிறப்புச் செய்தியைக் கேட்பதை விட மிகைத்த சந்தோஷம் ஒரு முஸ்லிமுக்கு வேறு என்ன இருக்க முடியும்? ஒரு சந்தோஷமான செய்தியைக் கேட்கும் போது எழுந்து நிற்பது ஸுன்னத்தாகும்.


3 - ஒரு முஸ்லிமுக்கு றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை விட அதிக விருப்பத்திற்குரியவர் யார் இருக்கின்றார்கள்.? அவர்கள் உயிர், பிள்ளைகள், தாய், தந்தை, செல்வம் உள்ளிட்ட யாவற்றையும் விட அதிக விருப்பத்திற்குரியவர்களாகும். அதனால் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பிறப்புச் செய்தியைக்கேட்கும் போது எழுந்து நிற்பது ஸலபுஸ் ஸாலிஹீன்களின் ஸுன்னத்தாகும்.


4 - றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பிறந்த நேரம் மலக்குகள் நின்று கொண்டிருந்தனர். அதனால், மீலாத் மௌலித் வேளையில் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பிறப்புச் செய்தியைக் கேட்கும் போது எழுந்து நிற்பது மலக்குகளின் செயலை ஒத்திருக்கின்றது.


5 - றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தனது பண்புகளையும், தனது குடும்ப பாரம்பரியத்தின் சிறப்புக்களையும் மிம்பரில் ஏறி நின்றவர்களாக எடுத்துரைத்தார்கள் என்பதை ஏற்கனவே மீலாத் பற்றிய ஆய்வில் ஹதீஸின் மூலம் எடுத்துக் கூறியுள்ளோம். இந்த செயல் மீலாதில் எழுந்து நிற்பதற்கு அடிப்படை ஆதாரமாக கிடைத்து விட்டது.


6 - ஷரீஅத் மீலாத் நேரத்தில் எழுந்து நிற்பதை தடைசெய்ய வில்லை. சகல நாட்டிலும் முஸ்லிம்கள் இதை நன்மையான காரியம் என்று நம்பி செய்து வருகின்றனர்.


முஸ்லிம்கள் நல்ல செயலாக கருதுகின்ற எந்த செயலும் அல்லாஹ்விடத்திலும் நல்லதாகவே இருக்கும். இதுபற்றிய திட்டவட்டமான விளக்கத்தை மீலாத் மற்றும் பித்அத் பற்றிய ஆய்வில் விளக்கிக் கூறியுள்ளோம். மேலும் முஸ்லிம்கள் ஸுன்னத்தாக நம்புகின்ற ஒரு செயல் ஷரீஅத்திலும் ஸுன்னத்தான் என்பதை ஏலவே குறிப்பிட்டுள்ளோம்.


ஷாமி பாகம் 3 வக்பு பற்றிய பாடத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்கள்.


لان التعامل يترك به القياس لحديث ما رأه المؤمنون حسنا فهو عند الله حسن


வற்புறுத்தல், மற்றும் ஜனாஸா மற்றும் இதுவல்லாதவையில் கியாஸ் ஆகாததாகவே இருக்க வேண்டும்.

ஆயினும் பொதுமக்கள் இதை நடைமுறைப்படுத்துகின்றனர். அதனால் கியாஸ் இங்கு தவிர்க்கப்படுகின்றது. அதை ஆகுமானதாதுதான் என்று ஏற்க வேண்டியுள்ளது.


முஸ்லிம்கள் நல்லதாகப் காணும் ஒன்றில் ஹறாம் என்பதற்கான திட்டவட்டமான ஆதாரம் இல்லையாயின், அங்கு கியாஸைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.


துர்ருல் முக்தார் பாகம் 5ல் கூலிக்கு விடுதல் என்ற பாடத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.


وجاز تجارة الحمام لانه عليه السلام دخل حمام الجحفة وللعرف وقال النبي صلي الله عليه وسلم ما راه المؤمنون حسنا فهو عند الله حسن .


குளியலறையை கூலிக்குக் கொடுப்பது ஆகுமானது. காரணம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஜுஹைபா என்ற இடத்திலுள்ள குளியலறைக்குள் சென்றிருக்கின்றார்கள். அதனால் ஊர்நடைமுறை தொடர்ந்துள்ளது. மேலும் முஸ்லிம்கள் நல்லதாகப் காண்பவை அல்லாஹ்விடத்திலும் நல்லதுதான் என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.


இச்சொற்றோடருக்கு அடியில் ஷாமியில் பின்வரும் விளக்கம் எழுதப்பட்டுள்ளது.


قال كلا علي القاري ذكر الدميري والنووي انه ضعيف جدا


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஜுஹைபாவிலுள்ள குளியலறைக்குள் சென்றார்கள் என்ற தகவல் மிகவும் பலவீனமான தாகும். சிலர் இதனை இட்டுக்கட்டப்பட்ட மௌலுஊ என்றும் கூறியுள்ளனர். இதனால் குளியலறையில் குளிப்பது ஆகும் என்ற சட்டம் ஊர்நடைமுறை என்ற ஒரேஒரு ஆதாரத்தின் மூலமே நிரூபணமாகியிருக்கின்றது. அதாவது முஸ்லிம்கள் பொதுவாக ஆகுமானது என்று கருதிப் செய்பவை ஆகுமானதுதான்.


ஷாமியில் இதே இடத்தில் எழுதுகின்றார்கள்.


لأن الامصار يدفعون أجرة الحمام فدل اجماعهم علي جواز ذلك وان كان القياس ياباه


சகல நகரங்களிலும் குளியறைகளில் கூலி வாங்குகின்றனர். அது இஜ்மாஃவினடிப்படையில் ஆகுமானது என்று தெரியவருகின்றது. இது கியாஸுக்கு மாற்றமாக இருந்தாலும் சரிதான்.


குளியலறையில் வாங்குகின்ற கூலி கியாஸின் அடிப்படையில் ஆகாதவை காரணம் செலவாகும் தண்ணியில் அளவை மட்டிட முடியாது. கூலிவாங்குவதில் பாவிக்கும் அளவுக்குத்தான் கூலி வாங்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஆயினும் முஸ்லிம்கள் இதை நல்லதாகக் கருதுவதால் தான் இது ஆகுமாகின்றது.


மீலாத், மௌலிதில் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பிறப்புச் செய்தியைக் கேட்கின்ற போது எழுந்து நிற்பதை முஸ்லிம்கள் ஸுன்னத்தாகவே கருதுகின்றனர். அதனால் இதுவும் ஸுன்னத்துத்தான்.


7 - அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.


وتعزروه وتوقروه


முஸ்லிம்களே! நமது நபிக்கு உதவி செய்யுங்கள். அவரைக் கண்ணியப் படுத்துங்கள்.


கண்ணியம் எவ்வாறு செய்ய வேண்டும் என்ற எந்தவொரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.


எந்தெந்த காலத்தில் எந்தெந்த ஊரில் எவ்விதமான விதத்தில் கண்ணியப்படுத்த றுகூஊ ஸூஜூது செய்வது போன்று ஷரீஅத் ஹறாம் என்று கூறாத வகையில் கண்ணியம் செய்யலாம்.


நமது காலத்தில் அரசாங்க சட்டங்களை நின்ற வண்ணமே பிரஸ்தாபிக்கின்றனர் அதனால் விருப்பதிற்குரியவரின் செய்தியையும் நின்று கொண்டே கூறவேண்டும்.


திருக்குர்ஆனில்

كلوا واشربوا


உண்ணுங்கள் குடியுங்கள்


இதில் பொதுவாக உண்பதற்கும், குடிப்பதற்கும் அனுமதியுள்ளது.


ஹலாலான சகலதையும் உண்ணுங்கள் குடியுங்கள். பிரியாணி, குளம்பு, குருமா உள்ளிட்ட சகலதும் ஹலால் தான். இவற்றில் உள்ளவை ஆரம்ப பொற்காலமாக மூன்று நூற்றாண்டிலும் இல்லாதிருந்தாலும் சரிதான். இவ்வாறுதான். توقروه

அவரைக்கண்ணியப் படுத்துங்கள் என்பதும் பொதுவான கட்டளைதான். சகலவிதமான கட்டிடங்களும் அவை முதல் மூன்று நூற்றாண்டிலும் இல்லாதிருந்தாலும் ஆகுமானதுதான் என்பது இதன்மூலம் உறுதியாகிவிட்டது.


8- அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.


ومن يعظم شعائرالله فانها من تقوي القلوب


அல்லாஹ்வின் நினைவுச்சின்னத்தைக் கண்ணியப்படுத்துவது கல்பினால் செய்கின்ற தக்வாவில் நின்றுமுள்ளதாகும்.


தப்ஸீர் றூஹுல் பிரான்சில் பின்வரும் திருவசனத்தில் விளக்கத்தில் எழுதுகின்றார்கள்.


وتعاونوا علي البر والتقوي ولا تعاونوا علي الاثم والعدوان .


தக்வாவுக்கும் நன்மையிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பகைக்கும் பாவத்திலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்.


மகத்துவமிக்க ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வின் நினைவுச் சின்னமாகும். அதற்குக் கண்ணியம் செய்ய வேண்டியது அவசியமாகும்.


உ+மாக, சில மாதங்கள், சில தினங்கள், சில இடங்கள், சில நேரங்கள் மற்றும் இவை தவிர்ந்தவைகள்.


இதனால்தான் ஸபா, மர்வா, சங்கையான கஃபா, றமழான்மாதம், கத்றுடைய இரவு உள்ளிட்டவைக்கு கண்ணியம் செய்யப்படுகின்றது.


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பிறப்புச் செய்தியைக் கூறுவதும் அல்லாஹ்வின் நினைவுச் சின்னம்தான். அதனால் அதற்கும் கண்ணியம் செய்ய வேண்டியது ஏற்றமாகும். அந்த கண்ணியம் எழுந்து நிற்பதன் மூலம் நிறைவேறுகின்றது.


எழுந்து நிற்பது தொடர்பாக எட்டு நியாயங்களை முன்வைத்துள்ளோம். ஆனால் மறுப்பாளர்களிடத்தில் அல்லாஹ்தான் அறிவான் ஹறாம் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. கற்பனையால் மட்டுமே ஹராம் என்று கூறுகின்றனர்.


தொடரும்....