<><><><><><><><><><><><><><><><><><>
படம்: ஷஹீத் உமர் முக்தார் அவர்கள் சிறுபிள்ளைகளுக்கு குர்ஆன் கற்பிக்கும் உண்மைப் படம்.
ஷஹீத் உமர் முக்தார் அவர்களின் நெருங்கிய கூட்டாளியும் அவர் ஷஹீதான பின் போராளிக்குழுவை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றவருமான யூசுஃப் பூ ரஹீல் அவர்கள் உமர் முக்தார் அவர்களை (மத்ரசாவில்) சந்தித்தபோது கூறினார்: “இத்தாலியர்களை எதிர்த்து போரிடுகிறீர்களே… அது போதாதா!? ஏன் சிறுபிள்ளைகளுக்கு குர்ஆன் சொல்லிக்கொடுக்கும் வேலையையும் செய்து உங்களை வருத்திக் கொள்கிறீர்கள்?” என்று.
அதற்கு ஷஹீத் உமர் முக்தார் கூறினார்: “நமது போர் வெறும் துப்பாக்கிப் போரல்ல. அது கொள்கையின் போர். நாம் குர்ஆனின் போதனைகளை கைவிட்டதனால் தான் நம்மை இத்தாலியர்கள் ஆக்கிரமிக்கின்றனர்”.
#Imam_Ilyas_Riyaji #ilyas_riyaji #umar_muhthar







