மௌலிதில் எழுந்து நிற்பது பற்றிய ஆய்வு! தொடர்:- (14)
︗︗︗︗︗︗︗︗︗︗︗︗︗︗︗︗
உருதுமூலம்:- ஜாஅல்ஹக்!
தமிழில்
︗︗︗︗︗︗︗︗︗︗︗︗︗︗︗︗
கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி பாஸில் ஷெய்கு
ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.
︘︘︘︘︘︘︘︘︘︘︘︘︘︘︘︘
அத்தியாயம்:- (2)
---------------------------
மீலாதில் எழுந்து நிற்பது பற்றிய குற்றச்சாட்டுக்களும், பதில்களும்
----------------------------------------
குற்றச்சாட்டு:- 1
--------------------
மீலாத் விழாவில் எழுந்து நிற்கும் வழக்கம் இஸ்லாத்தின் முதல் மூன்று நூற்றாண்டிலும் இருக்க வில்லை. அதனால், அது பித்அத் ஆகும். சகல பித்அத்துக்களும் ஹறாமாகும்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு கண்ணியம் செய்வதாக இருந்தால் அதை ஸுன்னத்தின் மூலமாக நிரூபிக்க வேண்டும். தங்களுடைய உருவாக்கங்களை இதில் நுழைக்கக்கூடாது. ஸஹாபாக்கள் இவ்வாறு செய்யவில்லை. அவர்களை விடவா? நமக்கு றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது மஹப்பத் அதிகமுண்டு?
பதில்:-
----------
பித்அத் பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கான பதிலை அதாவது, பித்அத்துக்கள் யாவும் ஹறாமல்ல! என்பதை தெளிவாக ஏற்கனவே கூறியுள்ளோம்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைக் கண்ணியப்படுத்துவதென்றால், அது ஸுன்னத்தின் மூலமாகவே நிரூபிக்க வேண்டும் என்ற கோட்பாடு றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைக் கண்ணியம் படுத்துவதற்கு மட்டுமா? அல்லது, தேவ்பந்து உலமாக்களுக்கும் மற்றும், ஏனையவர்களுக்குமா?,
அப்படியாயின், கிதாபு மத்ரஸாக்களில் நடக்கின்ற ஒவ்வொரு பொருளுக்குமான கண்ணியத்தையும் ஸுன்னத்தின் மூலமே நிரூபிக்க வேண்டும்
தேவ்பந்து உலமாக்கள் வருகை தரும்போது புகையிரத நிலையத்திற்குச் சென்று அவர்களுக்கு மாலையிட்டு வரவேற்பது, அவர்களுக்காக ஊர்வலம் செல்வது, வீதியெங்கும் பதாகைகள், கொடிகள் மூலம் அலங்கரிப்பது, மேடையலங்காரம் செய்து சிம்மாசனம் போடுவது, கதிரைகள் போடுவது, உபதேசத்தின் மத்தியில் "ஜிந்தாபாத்" என்று கூறுவது சாய்ந்திருப்பதற்கு ஏற்ற பெரிய தலையணையை வைப்பது, விரிப்புக்கள் போடுவது இன்னும் இதுவல்லாத கண்ணியங்கள் அனைத்தும் ஹறாமா? ஹலாலா? என்று ஸுன்னாவிலிருந்து நீங்கள் ஆதாரம் காட்ட வேண்டும். உங்களால் நிச்சயம் காட்டவே முடியாது!. அதனால் நீங்கள் வகுத்த விதி சுத்தத் தவறானதாகும்.
ஒவ்வொரு நாட்டிலும், ஊர்களிலும் என்னென்ன நடைமுறைகள் உள்ளனவோ, அவற்றில் ஸுஜூது, அல்லது றுகூஉ இல்லையாயின், ஆகுமானதுதான். எப்பக்கம் மனம் வழிகாட்டுகின்றதோ அது இபாதத் ஆகும்.
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொருவிதமான நடைமுறைகள் இருக்கும். ஓர் ஊரில் கண்ணியமாகச் சொல்லப்படுகின்ற வார்த்தை வேறு ஓர் ஊரில் இகழ்ச்சியாக இருக்கும். ஒருவர் பேச்சு மறு ஊருக்கு ஏச்சு என்று பொதுவாக தமிழிலும் கூறுவார்கள். அதனால், ஊர்நடைமுறையைக் கவனிக்கவேண்டும்.
மிர்க்காத், அஷிஃஅத்துல் லம்ஆத் உள்ளிட்ட நூற்களின் முன்னுரையில் பின்வருமாறு இமாம் மாலிக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் வரலாற்றுப் பதிவு ஒன்று எழுதப்பட்டுள்ளது.
இமாம் மாலிக் றஹ்மதுல்லாஹி அலைஹி மதீனத்து புனித மண்ணில் ஒருபோதும் குதிரையில் சவாரி செய்ததில்லை. ஹதீது ஷரீபைப்பற்றி விளக்கம் கூறும் போது குளித்து உயர்ரக ஆடையணிந்து வாசம் பூசி கம்பீரமாக உட்காருவார்கள். புனிதமதீனா ஷரீப் மண்ணுக்கு, அல்லது ஹதீது ஷரீபுக்கு ஸஹாபாக்களில் எவராவது இவ்வாறு கண்ணியம் செய்திருக்கின்றார்களா? இல்லையே!
இமாம் மாலிக் றஹ்மத்துள்ளாஹி அலைஹி அவர்களின் மன உணர்வுக்கு ஏற்ற நற்கூலி கிடைக்கும்.
தப்ஸீர் றூஹுல் பயானில், சூறா அஹ்ஸாப் 40வது திருவசத்தின் விளக்கத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்கள்.
அயாஸின் மகனின் பெயர் முஹம்மது. சுல்தான் மஹ்மூது அவரின் பெயர் கூறியே அழைப்பது வழக்கம். ஒருதினம் குளியலையிலிருந்து கொண்டு அயாஸின் மகனே! தண்ணீர் கொண்டுவா!, என்று அழைத்தார். மன்னா! அடியேனின் பெயர்கூறாமல் எதற்காக இப்படி விளித்தீர்கள்? என்று பவ்வியமாகக் கேட்டார் அயாஸ். உன்னை நான் கூப்பிடும் போது எனக்கு வுழு இருக்கவில்லை என்று அடக்கமாக சுல்தான் பதில் கூறினார்.
இந்த கண்ணியத்திற்கு சான்று எங்கே உள்ளது? என்று கூறுங்களேன்.
சுல்தான் மஹ்மூதும், இமாம் மாலிக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் ஸஹாபாக்களை விடவா றஸூலுள்ளாஹி ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பேரில் காதல் கொண்டிருந்தனர்.?
2- றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைக் கண்ணியப்படுத்துவதாயின், எழுந்து நின்று கண்ணியம் படுத்துங்கள்!. அதை மௌலிதின் ஆரம்பத்திலேயே செய்யுங்கள். ஆரம்பத்திலும், முடிவிலும் உட்காருகின்றீர்கள். நடுவிலே எழுந்து நிற்கின்றீர்கள். இது என்ன புதுமை?,
பதில்:-
--------
இது ஒரு குற்றச்சாட்டே கிடையாது. அல்லாஹுத்த ஆலா யாருக்காவது தவ்பீக் செய்தால், பெருமானாரின் ஒவ்வொரு புகழ் கூறும் போதும் எழுந்து நிற்கட்டும். மௌலிதின் ஆரம்பம் முதல் முடிவு வரை எழுந்து நிற்பதில் எங்களுக்குள் எந்தத்தடையும் கிடையாது. சகல நேரங்களிலும் எழுந்து நிற்கலாம். அல்லது சில நேரங்களிலும் எழுந்து நிற்கலாம். அனைத்தும் ஆகுமானதுதான்.
அஃலா ஹளறத் இமாம் அஹ்மது றிழாகான் றஹ்மதுல்லாஹி அலைஹி நின்று கொண்டே ஹதீது வகுப்பை நடத்துவார்கள். பாடம் கற்றவரும் நின்றுகொண்டே கற்றதாக என்னிடம் கூறினார். அவர்களின் இந்த செயல் உன்னதமான முபாறக்கான செயலாகும்.
மீலாதில் ஆரம்பம் தொட்டு இறுதி வரை நிற்பதால் பாமர மக்களுக்கு அதிக சிரமம் ஏற்படும். அதனால்தான் பெருமானாரின் பிறப்புச் செய்தியைக் கூறும் போது மட்டும் எழுந்து நிற்கின்றார்கள். சிலர் உட்கார்ந்து கொண்டே தூங்கி விடுவார்கள். நின்று கொண்டு ஸலவாத்து ஸலாம் கூறும் போது தூக்கம் பறந்து விடும். அதனால்தான் அந்த நேரத்தில் பன்னீர் தெளிக்கின்றனர். தண்ணீர் பட்டால் தூக்கம் கலைந்துவிடும்.
தொழுகையில் சில நிகழ்வுகளை நின்று கொண்டு ஓதுகின்றோம். சிலவற்றை றுகூஇலும், ஸுஜூதிலும், இருப்பினும் செய்கின்றோமே! ஏன்? சகல நிகழ்வுகளையும் ஏன் நின்று ஓதக்கூடாது.?
அத்தஹிய்யாத்தில் அஷ்ஹது அன்லாயிலாக இல்லல்லாஹ்! என்று கூறும் போது சுட்டு விரலை அசைக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. ஆயிரமாயிரம் விடுத்தும் இந்தக் கலிமாவை மொழிகின்றீர்கள். அப்பொழுதெல்லாம் ஏன் விரலசைப்பதில்லை.?
ஸூபியாக்களின் சில வழீபாக்களில் சைக்கினையான சில விதியை வைத்திருக்கின்றனர். உதாரணமாக, வழக்கில் நீதிபதிக்கு முன்னால் சென்றால், كهيعص என்பதை ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு விரலை மட்டக்கவேண்டும். ஆடுத்து حمعسق என்பதை ஒவ்வொரு எழுத்தையும் கூறி கையை விரித்து நீதிபதிக்கு முன்னால் ஊதவேண்டும். திருக்குர்ஆனை ஓதும் போது இந்த வகையான எழுத்துக்கள் வரும் போது ஏன் கையை பொத்துவதுமில்லை விரிப்பதுமில்லை? இப்படியான சைக்கினைகள் ஸஹாபாக்களில் இருந்ததற்கு ஏதும் ஆதாரங்கள் இருக்கின்றனவா?
ஹிஸ்புல் பஹ்று ஓதும் வழக்கமுள்வர்கள் சில இடங்களில் குறிப்பாக சைக்கினை செய்கின்றனர். மற்ற இடங்களில் ஏன் சாடை செய்வதில்லை.
தவாபு செய்யும் போது முதல் நான்கு சுற்றிலும் குதித்து ஓடுகின்றனர். றமலிலும் இவ்வாறு செய்கின்றனர். அதற்குப்பின்னால் ஏன் செய்வதில்லை.?
இப்படியான பல நூறு கேள்விகளை அடுக்க முடியும்.
இமாம் புகாரி றஹ்மதுல்லாஹி அலைஹி சில அறிவிப்புக்களை அறிவிப்பாளர் வரிசையோடு கூறியிருக்கின்றார்கள். சிலவற்றை அறிவிப்பாளர்கள் இன்றி கூறியிருக்கின்றார்கள். எல்லாவற்றையும் ஒன்று போல் ஏன் விளக்கிக் கூறவில்லை? இப்படியான செய்திகளினால் ஹறாம் வந்து விடவா போகின்றது.?
தொடரும்...