*அண்ணல் நபியின் போர்வை*
┈┈┈┅◉☆◆☆◉┅┈┈┈
*கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி, பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி, ஸூபி, நக்ஷபந்தி.*
┈┈┈┅◉☆◆☆◉┅┈┈┈
அண்ணல் பெருமானாரின் அனுமதிபெற்று பானத்ஸு ஆதா எனும் கவிதையைப் பாடினார்கள் கஃபு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். பாடலை ரசித்துக்கேட்ட அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திருத்தோள் அலங்கரித்த போர்வையினை கஃபுக்கு போர்த்தினார்கள். அப்போர்வையை பதினாயிரம் பொற்காசுகளுக்கு முஆவியா ரழியல்லாஹு அன்ஹு கேட்டும் கஃபு ரழியல்லாஹு அன்ஹு கொடுக்கவில்லை.
அன்னாரின் மறைவுக்குப் பின்னர் அவருடைய வழித்தோன்றல்களிடமிருந்து முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்போர்வையை இருபதுனாயிரம் பொற்காசுகள் கொடுத்து விலைக்கு வாங்கினார்கள். இப்போது அப்போர்வை இஸ்தான்பூலில் பாதுகாக்கப்படுகின்றது.
நூல்: குலபாஉர் ராஷிதீன், பக்கம் - 19
நன்றி: வஸீலா, 15.01.1987