السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 17 September 2025

மெளலவி கெளரவிப்பு


 எனது நண்பர் மௌலவீ துஜாஸ் றப்பானி அவர்களுக்கு ஸூபிஸ குர்ஆன் மத்ரஸாக்களின் அபிவிருத்தி சம்மேளனத்தினால் 2025ம் ஆண்டு நடாத்தப்பட்ட ஆண்டிறுதிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைய வைத்தமைக்காக. பாலமுனை ஸூபி மன்சில் பள்ளிவாயல் நிர்வாகத்தினால் கொரவிப்பு நிகழ்வு நடந்ததையிட்டு மிக சந்தோசப்பட்டேன்.


மிக நீண்ட தூரம் பயணம் செய்து அல்லாஹ்வின் இல்லத்தில் கடமை புரிந்து. குர்ஆன் மத்ரஸாவையும் நடாத்திவருகின்றார். 


இன்றைய காலத்தை பொருத்தவரையில் உலக கல்விக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. மிக சொற்ப நேரமே மத்ரஸாவில் மாணவர்கள் கல்வி கற்கின்ரார்கள். அவர்களை ஓதவைப்பதே மிகச்சிரமமான விடயமாகும்.

அப்படி இருக்க அவர்களை அதி கூடிய புள்ளிகள் எடுக்கவைப்பது என்பது அசாத்தியமான ஒன்றாகும்.


எனவேதான் அசாத்தியத்தை சாத்தியமாக்க ஒரு மௌலவீ எவ்வளவு கஸ்டப்படவேண்டும் என்பது ஏனையவர்களைவிட அதே துறையில் இருக்கும் எனக்கு சொல்லவா வேண்டும். மிகவும் கடினமானது.


பாலமுனை ஸூபி மன்சில் பள்ளிவாயல் ஏனைய எமது மத்ரஸாக்களைவிட ஒரு படி உயர்ந்து ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டாக இந் நிகழ்வை ஏற்பாடு செய்தது மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும்.


உலகக் கல்வி ஆசிரியர்களை மதிக்கும் மக்கள் அல்குர்ஆனை கற்பிக்கும் ஆலிம்களை உதாசீனப்படுத்துவது அவர்கள் பெருமானாரின் அமுத வாக்கை மறந்ததினாலாகும்.


خيركم من تعلم القرآن وعلمه

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : உங்களில் சிறந்தவர் குர்ஆனைக் கற்று அதை பிறருக்கும் கற்றுக் கொடுப்பவராவார். (புஹாரி : 4666)