பேச்சாளர்கள் போர்வையில் பெருச்சாளிகள்
***********************
أكثر ما أخاف على أمتي
كل منافق عليم اللسان
எனது உம்மத்தில் நாவன்மையுள்ள ஒவ்வொரு முனாபிக்கைப் பற்றித்தான் அதிகமாக அஞ்சுகின்றேன்.
என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அஞ்சிய பேச்சாளர்கள் இப்போது வெளியில் வந்துவிட்டார்கள், இவர்களின் பேச்சுக்கள் இதயத்திலிருந்து வராது, தொண்டைக்குழியிலிருந்துதான் வெளிவரும்.
இவர்களைப் பற்றித்தான்
يقراون القران لا يجاوز حناجرهم
திருக்குர்ஆனை ஓதுவார்கள், அது அவர்களின் தொண்டைக் குழியைத் தாண்டாது.
முனாபிக் என்பவனுக்கு இருமுகமுண்டு, எதிரும் புதிருமான இருகூட்டத்தாரிடமும் வெளிப்படையில் சமனான உறவைக்கொண்டிருப்பான்.
முஸ்லிம்களிடம் இலாபத்தை நாடி பாசாங்காகவும், காஃபிர்களிடம் விசுவாசமாகவும் நடப்பான்,
இவ்வாறு அவன் நடப்பதற்கான காரணம் அவனுடைய மனதில் நயவஞ்சகம் - குப்று - என்ற நோய் இருக்கின்றது.
முனாபிக்கின் மனதில் ஈமான் இருக்காது, ஆகவே ஈமானின் இன்பங்களான றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் நேசமோ, ஸஹாபாக்கள், வலிமார்களின் நேசமோ இருக்காது,
இதனால் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பகைவர்களை மனதார நேசிப்பான், உறவு கொள்வான், றஸூலுக்காகவோ, மார்க்கத்திற்காகவோ எவரையும் பகைக்க மாட்டான்.
நல்லவர் என்ற பெயரை இருதரப்பாரிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பான்.
இப்படியான இருமுகத்தார் விடயத்தில் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதிகமாக அஞ்சினார்கள்.
இவர்களின் இலட்சியம் உலக சுகம், இவ்வுலக வாழ்க்கை, மறுஉலக வாழ்க்கை என்று பேசுவதெல்லாம் போலித்தனமானது.
தமிழகத்திலும், இலங்கையிலும் சில கவர்ச்சியான பேச்சாளர்கள் இருக்கின்றார்கள் இவர்கள் பேச்சாளர்கள் அல்ல, பேராசைக்காரன் காளான் பெருச்சாளிகள், ஆகவேதான் தமிழில் ஒரு பழமொழி உண்டு
"பெருச்சாளிக்குப்பின்னால் நலம் இல்லை."
இந்த பெருச்சாளிகளில் ஒருவர் இலங்கை வந்தால் தப்லீக் பக்கா வஹாபி
அஷ்ரப் அலிதானவி வஹாபி
வஹாபிகளோடு எந்த உறவும் வைக்கக்கூடாது.
என்றெல்லாம் முழங்குவார்.
தமிழகம் சென்றால் அஷ்ரப் அலிதானவி ஹகீமுல் உம்மத் என்று போற்றுவோரோடு கொஞ்சிக்குலாவுவார்.
இவரைப் போன்றுதான் தற்போது ஊர் சுற்றும் பிரபலமான பேச்சாளர்களின் கதையாகும்
தமிழகத்தில் குப்று ஃபத்வா வழங்கப்பட்டவர்களோடும், இலங்கையில் முர்தத் ஃபத்வா வழங்கப்பட்டவர்களோடும் நெருக்கமான உறவைப் பேணுவார்கள். இத்தனைக்கும் இவர்கள் ஜமாஅத்துல் உலமா சபையின் தூண்கள்.
அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் காவலர்கள்,
சத்தியத்தின் போர்வாள்கள்
இவர்கள் அக்காலத்திலிருந்த யூத நஸாறா பாதிரிகளின் குணத்தை ஒத்தவர்கள்.
சொற்ப ஆதாயத்திற்காக வேத வசனங்களை மாற்றியவர்.
இவர்களும் பணத்திற்காக ஆளுக்கு இடத்திற்குத் தக்கவாறு பேசுபவர்கள்.
ழியாஉல் குர்ஆன் என்ற தப்ஸீரில்
ولا تشتروا بايت الله ثمنا قليلا
சொற்பமான பணத்திற்காக அல்லாஹ்வின் திருவனங்களை விற்காதீர்கள் என்ற திருவசனத்தின் விளக்கத்தில்
பணத்துக்காக மார்க்கம் பேசுவோரும் இதற்குள் அடங்குவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
நாம் வாழும் காலம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களை எதிர்பார்க்கும் இறுதிக்காலம், இந்தக்காலத்தில் முஃமின்கள் غريب பரதேசிகளாக இருப்பார்கள். முஃமின்களுக்கு மரியாதை இருக்காது, அதனால் அவர்கள் ஒதுக்கப்படுவார்கள்.
முனாபிக்குகள் செல்வாக்கோடு வலம் வருவார்கள்,
இப்போது அஹ்லுஸ்ஸூன்னத் வல்ஜமாஅத்தினர்கள் என்று கூறுபவர்கள் முனாமினிக்கிகள், எல்லோராலும் ஒதுக்கப்பட்ட பொதுவிரோதியை முன்னிலையாக்கி அவரை எதிர்ப்பதாக பாசாங்கு காட்டி தங்களுக்கு முகவரி தேடுபவர்கள், எல்லாப் பக்கமும் வளைந்து கொடுத்து தனது ஆதாயத்தில் குறியாய் இருப்பவர்கள்.
மார்க்கத்தை வைத்தல்லாமல் பணத்தையும் பிரபலத்தையும் வைத்து சத்தியத்தைத் தீர்மானிப்பார்கள்.
தனது நலனைப் பாதுகாத்துக் கொண்டு தன்னைக் கொள்கைவாதியாக முகவரி போடுவதில் குறியாக இருப்பவர்கள்.
மார்க்கத்திற்காக எவரையும் பகைக்க விரும்பாதவர்கள்.
விரைவில் ஒருகாலம் வரும்,
இஸ்லாம் பெயரில் இருக்கும், திருக்குர்ஆன் எழுத்தில் இருக்கும், பள்ளிவாசல்கள் பரிபாலிக்கப்படும், அக்காலத்தில் உள்ள உலமாக்கள் வானத்திற்குக் கீழ் அவர்களில் கொடியவர்களாக இருப்பார்கள், குழப்பம் அவர்களிலிருந்து வந்து அவர்களிடமே போய்ச்சேரும்.
இக்காலத்தில் அஹ்லுஸ்ஸுன்னத்வல் ஜமாஅத்தின் அதிகாரம் பாமரர்களிடமே இருக்கின்றது, இவர்கள் தங்கள் மதிப்பை உயர்த்தும் நோக்கில் கவர்ச்சிகளுக்குப் பின்னாலே செல்வார்கள், முனாபிக்குகளான பெயர் தாங்கி முல்லாக்களுக்கு இது சாதகமான காலம், காற்று அவர்கள் பக்கம் வேகமாக வீசுகின்றது, வீசும் காற்று வாடைக்காற்றல்ல விஷக் காற்று என்பதைப் புரியாமல் பின்னால் ஓடுகின்றனர் பெருசாசிளிகள்.
அல்லாஹுத்த ஆலா இந்த போலி வேஷதாரிகளின் வாடைகூடப்படாமல் நம்மைப்பாதுகாப்பானாக! ஆமீன்.
ஷர்கி பர்ழவி
கலீபத்துல் காயிரிய்யாஹ்