السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 7 September 2025

இஸ்ரேலுக்குள் ஆதம் மலை!

 

இஸ்ரேலுக்குள் ஆதம் மலை!

ஸ்ரீ லங்கா அகண்ட இஸ்ரேலின் குடியேற்ற நாடாக மாற்றம்?

(இம்மாத ,எக்ஸத் பத்திரிகையில் வெளிவந்தது)


இஸ்ரேலுக்குள் ஆதம் மலை!


ஒரு ஸியோனிசக் கனவு இஸ்ரேலை உருவாக்கியது !


அந்த ஸியோனிசத்திற்கு இன்னுமோர் கனவு இருக்கிறது அதுதான் அகண்ட யூத சாம்ராஜ்யம்! (அகண்ட பாரதக் கனவு போல்)அகண்ட பாரதம் அமையுமோ இல்லையோ ஆனால் அகண்ட இஸ்ரேல் அமையக் கூடிய சாத்தியங்களை இஸ்ரேல் கொள்கை வகுப்பு விற்பன்னர்கள் திட்டமிட்டு கடந்த 70 வருடங்களாக செயற்படுத்தி வருகின்றனர்.


அப்பாஸிய கிலாபத் காலத்தில் மஃமூன் என்ற பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்த கலீபாவின் ஆட்சியின் போது, பசு மாட்டுக்கும் மனிதனுக்கும் பிள்ளை பிறந்தால் அதற்கான ஷரியத் சட்டம் என்ன என்பது பற்றி விவாதங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள்!ஒரு ஆட்சியின் பொற்காலத்தில் இப்படியான சிந்தனைகளுக்கு ஆட்சி முக்கியத்துவம் வழங்கும்!இது போல் இப்போது இஸ்ரேலியர்களின் ஆட்சியின் பொற்காலமாகும்! தொழில் நுட்பத்திலும், படைபலத்திலும் உலகில் செல்வாக்கு செலுத்துவதிலும் முன்னணியில் இருக்கும் இஸ்ரேல், அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதிலும்,இஸ்ரேலுக்கு நவீன குடியேற்ற நாடுகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகின்றது!இதற்காக ஒரு திணைக்களம் உருவாக்கப்பட்டு இஸ்ரேலின் அதி சக்திவாய்ந்த புத்திஜீவிகள் களமிறக்கப்பட்டு ஆய்வுகள், கள பரிசோதனைகள் எல்லாம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இதற்காகவே அகண்ட இஸ்ரேலுக்குள் வரும் நாடுகளில் ஊடகவியலாளர்கள் ,சுற்றுலாவாசிகள் என்ற போர்வைக்குள் உளவாளிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். (இதற்காக களமிறக்கப்பட்டவரே இலங்கையில் கிறிஸ்தவரான நிராஜ் டேவிட் போன்றவர்கள்)


அகண்ட இஸ்ரேலுக்குள் ஒரு நாட்டைக் கொண்டு வருவதற்காக அதற்கான வரலாற்றுக் காரணங்களை தேடி ஆவணப்படுத்துகின்றனர்! சிறிலங்காவை இஸ்ரேலின் குடியேற்ற நாடாக மாற்றுவதற்காக அவர்கள் முன் வைக்கப் போகும் வரலாற்று ஆவணம் யூதர்களுடைய ஆதித் தந்தையான "ஆதம் "இங்கு இறங்கினார் என்பதாகும்!இதெல்லாம் சாத்தியமா? என சிலர் கேள்வி கேட்கலாம்!கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் காலத்திலேயே இங்கு யூத வணக்கதலங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இப்போது கண்களால் கண்டு கொண்டிருக்கிறோம்!  


எப்படி 1500ம் ஆண்டுகளில் ஐரோப்பிய காலனிகளாக மன்னர்களின் கீழிருந்த சிலோன் மாறிப் போனதோ அதைவிட பலவீனமான அரசியல் உள்ள சிறீலங்கா மிக விரைவாக மானுட தர்மம் பெளத்த சிந்தனையில் இருந்து அகண்ட இஸ்ரேலின் குடியேற்ற நாடாக மாறிப் போகும் சாத்தியங்களை இஸ்ரேல் யூத கொள்கை வகுப்பாளர்கள் சாத்தியப்படுத்தி வருகின்றனர்!


இஸ்லாமிய கிலாபத் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு அரபு தேசியவாதம் ஊக்கப்படுத்தப்பட்டு பலவீனமான படைக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் இப்போதய அரபு நாடுகளே அகண்ட இஸ்ரேலுக்குள் அகப்படப் போகும் நாடுகளாகும்!சிறீலங்கா போன்ற சில நாடுகள் இஸ்ரேலின் நவீன குடியேற்ற நாடுகளாக உலக வரைபடத்தில் இடம் பெறப் போவதை மனித சமூகம் வரலாற்றில் பதிவு செய்யப் போகின்றது!


இதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எந்த வல்லமையும் எந்த உலக நாடுகளிடமும் இப்போதைக்கு இல்லையென்பதே இப்போதைய களநிலவரமாகும்!