இப்னு அப்துல் வஹ்ஹாபுந் நஜ்தியுடைய மகன் மீலாதுந் நபி கொண்டாட்டம் பற்றி என்ன சொல்கிறார்??
-------------------------------------------------------------
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் புனித மீலாதில் மகிழ்ச்சி கொண்டாட அல் குர் ஆனில் இருந்தும் ஹதீதில் இருந்தும் ஏராளமான ஆதாரங்களை நாம் வழங்கிவருகின்ற போதிலும் வஹ்ஹாபிகள் அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை.
காரணம் அவர்கள் எதிர்பார்க்கும் ஆதாரம் குர் ஆன் ஹதீதில் இருந்து அல்ல! மாறாக தங்கள் குருநாதர்களின் கருத்துக்களில் இருந்து கிடைப்பவற்றை மட்டுமே அவர்கள் ஏற்று பின்பற்றுவார்கள்.
அவர்களது குருநாதர்கள் யாரென்பதை உலகறியும்.
கொள்கையில் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் கருத்தையும் ஹதீஸ் துறையில் அல்பானியின் கருத்தையும் தாண்டி ஒரு முழமேனும் இந்தக் கும்பல் நகராது.
வழிகெட்ட வஹ்ஹாபிஸத்தின் தோற்றுவாயான முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அந் நஜ்தியுடைய மகன் "அப்துல்லாஹ்" என்பவர் "முக்தஸர் ஸீரதுர் றஸூல்" என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார்.
அந்தக் கிரந்தத்தில் மீலாதுந் நபி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்துக்கு நாம் ஆதாரமாகக் கொள்ளும் பின்வரும் கருத்தில் அமைந்த ஹதீஸினைக் கொண்டு வருகிறார்.
"கண்மணி றஸூலுல்லாஹ் பிறந்த செய்தியை அறிவித்த அபூலஹபுடைய அடிமைப் பெண்ணான துவைபாவை மகிழ்ச்சியின் காரணமாக அவன் விடுதலை செய்தான். அவனது மரணத்துக்குப் பின்னர் அவன் ஒருவரது கனவில் தோன்றி தான் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்ற போதிலும் திங்கட்கிழமைகளில் தன் சகோதரர் மகனான பெருமானார் பிறந்த செய்தியை அறிவித்த துவைபாவை மகிழ்ச்சியின் காரணமாக எந்த விரல்களை நீட்டி விடுதலை செய்தேனோ அதிலிருந்து தனக்கு நீர் புகட்டப்படுவதாகவும் கூறினான்"
மேற்படி செய்தியோடு மட்டும் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அந் நஜ்தி நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை..
ஆனால் இச்செய்திக்கு அடுத்தே இமாம் இப்னு ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் இந்த ஹதீஸ் குறித்து கூறியுள்ள கூற்றினைக் கொண்டு வருகிறார்.
இங்குதான் வஹ்ஹாபிகளின் இரத்த நாளங்கள் வெடித்துச் சிதறப் போகிறது!
இமாம் இப்னு ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் கூறுகிரார்கள் :
"அல் குர்ஆனில் அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட ஒரு காபிருக்கே நபிகளாரின் மீலாதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்தளவு நன்மை கிடைக்கிறது எனில் மீலாது கொண்டாடுவதன் மூலம் ஒரு முஸ்லிம் அடையும் நன்மைகளை கற்பனை செய்து பாருங்கள்"
வஹ்ஹாபிகளே!
நீங்கள் புனிதராகப் போற்றும் இப்னு அப்துல் வஹ்ஹாபுந் நஜ்தியின் மகனார் மீலாதுந் நபி கொண்டாட்டத்துக்கு ஆதரவாக ஹதீதையும் பதிவு செய்துவிட்டு அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இமாம் இப்னு ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்தையும் தனது கிரந்தத்தில் கொண்டு வந்திருக்கிறாரே!!
தனையனே தன் தந்தையின் கொள்கையை குழிதோண்டிப் புதைத்துவிட்ட பின்னர் அந்த அசிங்கத்தை நீங்கள் ஏன இன்னும் சுமந்து திரிகிறீர்கள்?