#நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"#ஜும்ஆ நாளில் மஸ்ஜிதின் கதவுகளுக்கு மலக்குகள் அனுப்பப்படுகிறார்கள்.
அவர்கள் முதலில் வருபவர்களை, பின் வருபவர்களை (வரிசையாக) எழுதிக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால், இமாம் மிம்பருக்கு ஏறிச் சென்றதும், (அதற்குப் பின் வருபவர்களுக்கு எழுதாமல்) அந்தப் பதிவுகள் சுருட்டி வைக்கப்படும்."
📚 மூலம்: صحيح الجامع (சஹீஹுல் ஜாமிஉ்) ஹதீஸ் எண்: 2909
Muhammed Yoosuf Musthafi
இத்திலிருந்து பெறப்படும் பாடங்கள்
1. ஜும்ஆ நாளில் விரைவில் மஸ்ஜிதுக்குச் செல்வது மிகச் சிறப்பு.
2. மஸ்ஜிதுக்கு வருவது சோம்பேறித்தனமாக அல்ல, ஆர்வத்துடன் இருக்க வேண்டும்.
3. குத்பா ஆரம்பித்த பின் பேசாமல், கவனமாக கேட்பது கடமை.
4. ஜும்ஆ ஒரு சாதாரண தொழுகை அல்ல, அது ஒரு பெரும் நன்மைகளை சம்பாதிக்கும் வாய்ப்பு.
@highlight அஸ்டோ நூலகம் #ஜும்ஆ #இமாம்