காதிரிய்யா தரீக்கா கௌதுல் அஃழம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸில்ஸிலாவில் வருவது , ஜிஷ்தியா தரீக்கா ஙரீப் நவாஸ் காஜா முஈனுத்தீன் ஜிஸ்த்தி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் வழியில் வந்தது , இவ்வாறுதான் ஷாதுலிய்யா , நக்ஷபந்தியா உள்ளிட்ட தரீக்காக்களுமாகும்.
ஒவ்வொரு தரீக்காவுக்கும் தனித்தனியான பயிற்சி முறைகள் உள்ளன, அவற்றைத் தனியாகவே பின்பற்றவேண்டும்.
இரண்டு மத்.ஹபுகளை இணைத்து எவ்வாறு ஒரு மத்ஹபாக்கிப் பின்பற்ற முடியாதோ அவ்வாறுதான் இருதரீக்காக்களை இணைத்து ஒரு தரீக்காவாக்கமுடியாது.
ஷைகுனா அஷ்ஷாஹ் ஸூபிஹளறத் நாயகமவர்களுக்கு காதிரிய்யா, றிபாஇய்யா, ஜிஷ்தியா நக்ஷபந்தியா உள்ளிட்ட நான்கு தரீக்கா க்களுக்கும் கிலாபத் , இஜாஸத் இருந்தும் காதிரிய்யா தரீக்கா வில் தான் பைஅத் கொடுப்பார்கள்,
பொதுவாக தரீக்காக்களின் போதனைகளின் நோக்கம் இரண்டுதான்.
1- அல்லாஹுத்த ஆலா வை நேசிப்பது.
2- மனோ இச்சைக்கு மாறு செய்வது
இந்த இரண்டையும் அடையும் வழிகள் பல உள்ளன. அவற்றை அடையும் வழிகளில் வித்தியாசம் உண்டு.
ஏதாவது ஒரு வழியைத் தேர்வு செய்து அதை தொடர்ந்து செய்தால் நோக்கத்தை அடையலாம் .
காதிரிய்யா றிபாஇய்யா, காதிரிய்யா ஜிஸ்த்திய்யா
காதிரிய்யா நக்ஷபந்தியா என்றெல்லாம் பல தரீக்காக்கள் உள்ளன.
இதில் எந்த குறையும் கிடையாது ஆனால்,
தரீக்கா வின் நோக்கத்தை அறியாமல் இரண்டையும் கலந்து ஒன்றாக்கி புதிதாக ஒரு தரீக்கா வை உருவாக்குவது மோசடியாகும்.