السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 15 September 2025

கண்ணியமான சகோதரர்களே

 

கண்ணியமான சகோதரர்களே!


அல்லாஹ் உங்களுக்கு செய்த மாபெரும் கிருபை, இன்று நீங்கள் மேலான இஷா தொழுகையை இமாம் ஜமாஅத்தாக நிரைவேற்றிவிட்டு இந்த மஹல்லாவிலே அமர்ந்திருக்கின்றீர்கள். இது அல்லாஹ் உங்களுக்கு தந்த பாக்கியம் கண்ணியமான சகோதரர்களே 


இன்றைக்கு பூரா உலகத்திலும் மார்க்கத்துக்கான உழைப்பு மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது, இந்த உழைப்பு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களும் அவர்களுடைய சஹாபாக்களும் மேற்கொண்ட உழைப்பு; மேலான பெரியோர்களே சகோதரர்களே.... 


இந்த மேலான தீன் எங்களிடம் வரவேண்டுமாக இருந்தால் நாங்கள் இதற்காக உழைக்கவேண்டும் சகோதரர்களே சஹாபாக்களும் இதனைத்தான் மேற்கொண்டார்கள்; சகோதரர்களே....


தீன் என்றால் அல்லாஹ்வினுடைய கட்டளைகள் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கை வழிமுறை 


ஒருவனுக்கு இந்த தீன் கிடைக்கின்றது என்பது இந்த துன்யா, துன்யாவிலுள்ள அனைத்து வஸ்த்துக்களை விடவும் மேலானது என்று சொல்லப்படுகின்றது. இதற்காக நாமெல்லாம் கொஞ்சம் உழைப்பதற்கு தயாராகுவோமா சகோதரர்களே!!1


இன்ஸா அல்லாஹ் யாரெல்லாம் 4 மாதம் அல்லாஹ்வுடைய பாதையில் உழைப்பதற்கு தயாராக இருக்கின்ரீர்கள், 


மாஷா அல்லாஹ் அந்த சாப் எழும்பிட்டாங்க, இந்த சாப் எழும்பிட்டாங்க, ஒரு டொக்டர் எழும்பிட்டாங்க அவர்களுடைய மேலான உழைப்பை விட்டுவிட்டு தன்னுடைய வாழ்க்கையில் தீன் வரவேண்டும் என்பதற்காக எழுந்திருக்காங்க அல்லாஹ் அவர்களுக்கு அருள்பாளிக்கட்டும் 


4 மாதம் நிய்யத்தோடு 40 நாள் தீனுடைய பாதையில் வெளியாக்குவதற்கு யாரெல்லாம் தயாராக இருக்கின்றீர்கள்......


இந்த மௌலானா எழுமிட்டாங்க அந்த மொலான எழும்பிட்டாங்க யுனிர்வர்சிட்டியில படிக்கிற ஒரு ஸ்டுடென்ட் எழும்பிட்டாரு - முக்கியமா கல்வியை ஒரு பக்கத்தில வச்சிட்டு தன்னுடைய வாழ்க்கையில் தீன் வரணும் என்பதற்காக தயாராகிட்டாங்க அவர்களுக்கு அல்லாஹ் அருள்பாளிப்பானா 


4 மாசம் இப்போதைக்கு போக முடியாது 40 நாளும் இப்போதைக்கு ஏலாது ஆனால் மேலான மார்க்கம் எங்களிடம் வரணும் என்பதற்காக யாரெல்லாம் ஒரு 3 நாளுக்கு அல்லாஹ்ட பாதையில் போவதற்கு தயாரா இருக்கின்றோம் சகோதரர்களே, எழும்புங்க எழும்புங்க ஒரு 3 நாள் அல்லாஹ்வுடைய பாதையில போறதுக்கு தயாராகுங்க மாஷா அல்லாஹ் இந்த மஹல்லா 30 பேர் தயாராக இருக்காங்க மாஷா அல்லாஹ் 


இது இலங்கையில் ஒரு இஸ்லாமிய இயக்கமொன்றின் வாராந்த அழைப்பு. ( இன்ஸா அல்லாஹ் -ஏனைய இயக்கங்களின் அழைப்பு குறித்தும் நான் விரிவாக எழுதுவேன்)  


இந்த அழைப்பு " மனிதர்களுக்கான அல்லாஹ்வின் மார்க்கமாகிய இஸ்லாத்தை ஒரு சிறு வட்டத்துக்குள் மட்டுப்படுத்திய சிறைபிடிக்கின்ற alaippu" என்பதை எம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பேயில்லை, ஆனால் விசாலமான மார்க்கத்தை கற்றுக்கொள்வதிலிருந்தும் தடுக்கின்ற, அறிவு ஞானத்தை விருத்தி செய்வதிலிருந்தும் தடுக்கின்ற, உலகத்தை எதிர்கொள்கின்ற் சக்திவாய்ந்த சமூகமாக முஸ்லிம் சமூகங்களை மாற்றுவதைவிட்டும் தடுக்கின்ற, இலங்கையில் முஸ்லிம் மக்களை ஏனைய சமூகங்களிலிருந்தும் அந்நியப்படுத்துகின்ற ஒரு அழைப்பு என்பதை நாம் புரிந்துகொள்ளவேயில்லை


Fb