السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 30 September 2025

இரண்டு முகங்கள்

 


நபி முஹம்மது ﷺ அவர்கள் கூறினார்கள்:

"யாருக்கு இந்த உலகில் இரண்டு முகங்கள் (இரட்டைமுகம், நயவஞ்சகம்) இருக்கிறதோ, மறுமை நாளில் அவனுக்கு நெருப்லாலன ஆன இரண்டு நாவுகள் இருக்கும்."

(சஹீஹ் அபூ தாவூத், ஹதீஸ் எண்: 4873)

🕌 விளக்கம்:

"இரண்டு முகம்" என்பது, ஒருவரிடம் நல்லவனாக நடந்து, பின்னால் தீமையைச் செய்வது, வஞ்சகம் செய்வது, பாசாங்கு காட்டுவது என்பதைக் குறிக்கிறது.


இப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ் மறுமை நாளில் நரகத்தின் தண்டனையாக இரண்டு நாவுகளை கொடுப்பான்.


இதனால் நயவஞ்சகம், பாசாங்கு, முகஸ்துதி போன்றவை இஸ்லாமில் மிகக் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளன.


👉 இது நமக்கு கற்பிக்கிறது:

முஸ்லிம் எப்போதும் ஒரே முகம் கொண்ட நேர்மையானவனாக இருக்க வேண்டும்.

நாவும், மனமும், செயல்களும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்

قال رسول الله ﷺ :

«تَجِدُونَ شِرَّ النَّاسِ ذَا الوَجْهَيْنِ، الَّذِي يَأْتِي هَؤُلَاءِ بِوَجْهٍ، وَيَأْتِي هَؤُلَاءِ بِوَجْهٍ»

(சஹீஹ் புகாரி 6058, முஸ்லிம் 2526)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

"நீங்கள் மக்களில் மிகக் கேடானவனாக இரண்டு முகம் உடையவனை காண்பீர்கள். ஒருவரிடம் ஒரு முகத்தோடு சென்று, இன்னொருவரிடம் வேறொரு முகத்தோடு செல்வான்."




பலவீனமான நபிமொழிகளை வைத்து அமல் செய்யலாமா?

 


*பலவீனமான நபிமொழிகளை வைத்து அமல் செய்யலாமா?*

      ┈┈┈┅◉☆◆☆◉┅┈┈┈

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,     மௌலவி, பாஸில், ஷெய்கு   

  *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்க்கி,* 

  பரேலவி, ஸூபி, நக்ஷபந்தி.

      ┈┈┈┅◉☆◆☆◉┅┈┈┈

பலவீனமான நபிமொழிகள் என்றால் என்ன? நபிமொழியினை அறிவித்தவர்கள் பட்டியலில் ஒருவரோ, அல்லது சிலரோ நபிமொழிக் கலை வல்லுனர்கள் அறிவிப்பாளர்களுக்கென வகுத்து வைத்துள்ள விதிகளுக்கு மாற்றமானவர்களாக இருப்பர். எனவே அறிவிப்பாளர்களின் தகுதியின்மையைக் கருத்தில்  கொண்டு, அவர் அறிவித்த அந்த நபிமொழியை ளயீப்-பலவீனமானது என்று கூறுவர்.


இதில் கூட ஹதீஸ் கலைவல்லுனர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி விதிகளை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அம்று-ஏவல், நஹீ-விலக்கல் போன்ற ஆணைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில்தான் பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாக எடுக்கக் கூடாது. ஆனால் 'பழாயில்' சிறப்பு குறித்தான விசயங்களில் அமல் செயல்வதற்கு பலவீனமான நபிமொழிகளை எடுக்கலாம் என்பது நபிமொழிக் கலை வல்லுனர்களுடையவும் சட்ட அறிஞர்களுடையவும் ஏகோபித்த அபிப்பிராயம் ஆகும்.


பலவீனமான நபிமொழிகளை ஆதாரமாகக் கொண்டு 'பழாலயிலுல் அஃமால்'-நற்செயல்களில் அமல் செய்யலாம் என உலமாக்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். 

(நூல்: ஷரஹ் ஷிபா பாகம் 2 பக்கம் 123)


'நற்செயல்களில் பலவீனமான நபிமொழிகளின் படி அமல் செய்யலாம். சட்டங்கள் வகுப்பதற்குத்தான் ஸஹீஹான அல்லது ஹஸனான நபிமொழிகள் தேவை' 

(ஷரஹ் ஷிபா பாகம் 2, பக்கம் 133)


'பலவீனமான நபிமொழிகளின் படி, ஆசையூட்டுவதற்காக அமல் செய்யலாம் என நபி மொழிக் கலைவல்லுனர்கள் கருத்து வேறுபாடின்றி கூறியுள்ளனர்.' 

(தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 6 பக்கம் 410)


உலமாக்களும், ஹதீஸ் கலை மேதைகளும், ளயீபான ஹதீஸ்களைக் கொண்டு சிறப்பு அமல்களில் ஆசையூட்டுவதற்கும், எச்சரிக்கை செய்வதற்கும் அமல் செய்வது சுன்னத் என சிறந்த ஹதீஸ்கலை மேதையும், சட்டத்துறை அறிஞருமான இமாம் நவவீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது அத்காறுன் நவவீ எனும் நூலில் கூறுகின்றனர்.


பலவீனமான நபிமொழிகளை ஆதாரமாகக் கொண்டு 'பழாயிலுல் அஃமாலில்' அமல் செய்யலாமா? என இமாம் றமலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வின விடுக்கப்பட்டபோது,


இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அமல் செய்யலாம் என ஹதீஸ் கலை மேதைகள் கூறியுள்ளதாகச் சொல்கின்றனர் என பதில் கூறினார்கள். 

(பதாவா ரமலீ பாகம் 4, பக்கம் 383)


ஹாபிழ் இப்னு ஹஜர் மக்கீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லுகின்றார்கள், 'ளயீபான ஹதீஸ்கள் மூலம் சிறப்பானவைகளில் கருத்து வேறுபாடின்றி அமல் செய்யலாம்' 

(அல் மன்ஹுல் மக்கிய்யா ஃபீ ஷரஹில் ஹம்ஸிய்யா பக்கம் 82)


சிறப்பிற்குரிய அமல்களில் பலவீனமான நபிமொழிகளைக் கொண்டு அமல் செய்யலாம் என உலமாக்கள் கருத்து வேறுபாடின்றி சொல்லியுள்ளனர் 

(இமாம் நவவீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களது அர்பஈன் ஹதீஸ் பக்கம் 8, 9)


பலவீனுமான நபிமொழிகளை ஆதாரமாகக் கொண்டு அமல் செய்யலாம் என்பதற்கு இமாம்களும் ஹதீஸ் கலை மேதைகளும் தந்துள்ள அனுமதிகள் இலை. இமாம்கள் பலவீனமான நபிமொழிகளை வைத்து அமல் செய்திருக்கிறார்களா? ஆம்! செய்திருக்கின்றனர். ஆதாரங்கள் இதோ...


றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் 'அலியே! எனக்கு எதை நான் விரும்புகின்றேனோ அதைத்தான் உமக்கும் விரும்புகின்றேன். எனக்காக வெறுப்பவற்றை உமக்காகவும் வெறுக்கின்றேன். நீர் இரு ஸஜ்தாக்களுக்கிடையில் குதிகாலில் அமர வேண்டாம்'. 

அறிவிப்பவர்: அலி ரலியல்லாஹு அன்ஹு.


அபூ ஈஸா திர்மிதீ ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் 'அலி அவர்களிடமிருந்து ஹாரிதும் ஹாரிதிடமிருந்து அபூ இஸ்ஹாக்கும் அறிவிக்கும் இந்த நபிமொழியை வேறு எவரும் அறிவிப்பதாக நாம் காணவில்லை.


இந்த அறிவிப்பாளர்களில் வரக்கூடிய ஹாரிதுல் அஃவர் என்பாேரை சில அறிஞர்கள் பலவீனுமானவராக ஆக்கியுள்ளனர். (எனினும்) அனேகமான அறிஞர்கள் இந்த நபிமொழிப்படியே அமல் செய்கின்றனர். அதாவது இரு ஸுஜூதுகளுக்கிடையில் குதிகாலில் இருப்பது (நாயிருப்பு) மக்ரூஹ் என்று கூறுகின்றனர்.


(நூல்: ஜாமிஉத் திர்மிதி பாகம் 1 பக்கம் 57,58)


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  தொழுகையில் தமது இரு பாதங்களின் முற்பகுதியிலேயே (நிலைக்கு) எழும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.


அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு நூல்: ஜாமிஉத் திர்மிதி பாகம் 1 பக்கம் 58.


இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் காலிது இப்னு இயாஸ் என்பவர் இடம் பெறுகிறார். இவரை ஹதீஸ் கலை மேதைகள் பலவீனமானவர் என்கின்றனர்.


அபூஈஸா திர்மிதி ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றனர், 'அறிஞர்களிடத்து அமலில் இருப்பது அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்ற ஹதீதின் அடிப்படையில்தான்! தொழுகையில் இரு பாதங்களின் முற்பகுதி (யின் துணை)யால்(நிலைக்கு) எழுவதையே அறிஞர்கள் தேர்வு செய்திருக்கின்றனர்.


சற்று எண்ணிப் பாருங்கள்! பலவீனுமானவர்கள் என்று நபி மொழி வல்லுனர்களால் கணிக்கப்படுகின்ற அறிவிப்பாளர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆறு ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான திர்மிதியைத் தந்துள்ள மேதை அபூஈஸா திர்மிதி  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளதோடு அந்த நபிமொழிகளை பலவீனுமானவை, அமல் செய்லதக்கதல்ல என்று கூறாது, அறிஞர்கள் அந்த நபிமொழிகளின் படி அமல் செய்கின்றனர் என்று கூறுகிறார்கள்.


ளயீபான-பலவீனமான ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து அறிஞர் பெருமக்கள் அமல் செய்தனர் என்பதற்கு இதுபோன்ற ஏராளமான ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்ட முடியும்.


ஆனால் நவீனவாதிகள் அமல்கள் செய்வதற்கு தடை விதிக்கின்றனர். இறைபொருத்தத்தை நாடி செய்கின்ற அமல்களை விட்டும் மக்களை சோம்பேறிகளாக ஆக்குகின்றனர். அவர்களின் இக்கெடுதிகளை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக! ஆமீன்!!!


நன்றி: வஸீலா 1-6-87

யாகௌது, யா முஹ்யத்தீன் எனக் கூறலாமா?

 


யாகௌது, யா முஹ்யத்தீன் எனக் கூறலாமா?

      ┈┈┈┅◉☆◆☆◉┅┈┈┈

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி, பாஸில், ஷெய்கு   

    ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்க்கி, 

   பரேலவி, ஸூபி, நக்ஷபந்தி.

      ┈┈┈┅◉☆◆☆◉┅┈┈┈

யாராவது கஷ்டமான வேலையில் என்னை அழைத்தால் அவனது கஷ்டங்கள் தீர்க்கப்படும். நெருக்கடியான வேளையில் என் பெயர் விழித்து என்னை அழைப்பவரது துயரங்கள் நீங்கும். என்னை வஸீலாவாக்கி அல்லாஹ்விடம் கேட்கப்படும் தேவைகள் நிறைவேறும்.


யாராவது இரண்டு றகாஅத் நபில் தொழுது ஒவ்வொரு றகாஅத்திலும் சூறா பாத்திஹாவுக்குப் பின் சூறா இக்லாஸை பதினொரு தடவை ஓதி ஸலாம் கொடுத்தபின் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து ஸலாம் கூற வேண்டும். அதன் பின் மனதில் நினைத்துக்கொண்டு ஈறாக் திசை நோக்கி பதினெட்டு எட்டுக்கள் எடுத்துவைத்து ஒவ்வொரு எட்டிலும் எனது பெயர் கூறி என்னை விளிக்க வேண்டும். அல்லாஹ்வின் உதவியால் அவரது காரியம் நிறைவேறும். இவ்வாறு கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் கூறியுள்ளார்கள்.


ஆதாரம்: பஹ்ஜதுல் அஸ்றார், பக்கம் - 102


ஷைய்குல் இஸ்லாம் இமாம் ஷிஹாபுதீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஷாபிஈ மத்ஹபின் பிரபல்யமான இமாமாவார். ஷைய்குல் இஸ்லாம் ஸஹரிய்யல் அன்சாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மாணவரான இவர்களை முஜத்தித் என்றும் பலரும் பலமாகக் கூறினர். 


இவர்கள் எழுதிய நூற்கள் பாடத்திட்டத்தில் உள்ளன. இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் அறபுக் கல்லூரிகளிலும் இறுதியாண்டுக்கு இவர்களின் நிஹாயா என்ற சட்ட நூல் பாடத்திட்டத்தில் இருக்கின்றது. இவர்கள் வழங்கிய தீர்ப்புக்கள் பதாவா றமலி என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இந்த நூல் அநேகமாக அனைத்து அறபுக் கலாசாலையிலும் இருக்கின்றது.


இந்த பத்வா நூலில் பின்வருமாறு ஒரு தீர்ப்பு இடம்பெறுகின்றது. அது வருமாறு,


கேள்வி:-


(1)- இக்கட்டான வேளைகளில் நபிமார்கள், வலிமார்கள், ஸாலிஹீன்கள், நல்லடியார்கள் உள்ளிட்டோரிடம் உதவி தேடும் நோக்கில் யாரஸூலுல்லாஹ்! யாஅலி! யாஷெய்கு அப்துல் காதிர் போன்ற வார்த்தைகளை பொதுவாக மக்கள் கூறுகின்றனர். இது (ஷரீஅத்தில்) கூடுமா? கூடாதா?


(2)- வலிமார்கள் மரணித்த பின்பு உதவி புரிந்திட சக்தி பெற்றுள்ளனரா? இல்லையா?


விடை:- வலிமார்கள், நபிமார்கள், ஸாலிஹீன்கள், உலமாக்கள் போன்றோரிடம் உதவி தேடுவது (ஷரீஅத்தில்) ஆகுமானதே! அவர்கள் உயிருடன் இருக்கும்போது உதவி செய்ய முடியுமாக இருப்பதுபோல் அவர்கள் மவுத்தான பின்பும் உதவி செய்திட சக்தியுண்டு. நபிமார்களின் முஃஜிஸாத்துக்கள் வலிமார்களின் கறாமத்களாகும்.


ஆதாரம்: பதாவா றமலி, பக்கம் - 382-4


ஹனபி மத்ஹபின் சட்டத்துறையில் பிரபல்யமான நூல் துர்ருல் முக்தார் ஆகும். இந்நூலாசிரியரின் ஆசிரியரின் ஆசிரியர் அல்லாமா கைறுத்தீன் றமலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆவார்கள். இவர்களின் தீர்ப்புக்களின் தொகுப்புக்கள் பதாவா கைரிய்யா என்ற பெயரில் வெளிவந்துள்ளன. அதில் பின்வரும் ஒரு தீர்ப்பு இடம்பெறுகின்றது. அது வருமாறு.


கேள்வி:- 


கஷ்டமான வேளைகளில் உதவிதேடி யாரஸூலல்லாஹ், யாஅலி, யாஷைய்கு அப்துல் காதிர் எனக்கூறி உதவிக்கு அழைப்பதற்கு ஷரீஅத்தில் அனுமதி உண்டா? இல்லையா?


பதில்:- 


கஷ்டமான வேளையில் வலிமார்களை உதவிக்கு அழைப்பதும் அவர்களிடத்தில் உதவி தேடுவதும் அவர்கள் பொருட்டைக் கொண்டு வஸீலாத் தேடுவதும் ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டது. தவிர விரும்பத்தக்கது (சுன்னத்தும்) ஆகும்.


பொறாமைக்காரன், பிடிவாதக்காரன் சங்கைக்குரிய வலிமார்களின் பறக்கத்தை விட்டும், தூரமானவன் போன்றோரைத்தவிர வேறு யாரும் மறுக்க மாட்டான்.


ஆதாரம்: பதாவா கைரிய்யா, பக்கம் - 282-2


மாபெரும் ஹதீஸ் கலை மேதையும் சட்ட, ஆத்மீக ஞானியும், சீர்திருத்தவாதியுமான அஷ்ஷெய்கு ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திதுத் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.


யாருக்காவது ஏதும் தேவைகள் நிறைவேற வேண்டுமாயின் முதலில் இரண்டு றகாஅத் நபில் தொழ வேண்டும் நூறு விடுத்தம் அல்லது அதைவிட அதிகமாக றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும். இவ்வாறு செய்தால் கஷ்டங்கள் நீங்கும், தேவைகள் நிறைவேறும்.


ஆதாரம்: அல் இன்திபாபி ஸிலாஸிலத்தில் அவ்லியா 


மேலும் ஷாஹ் வலியுல்லஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள் கஷ்டமான வேளைகளில் ரஸூலே அக்றம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் பரிசுத்தமான றூஹைக் கொண்டு உதவி தேட வேண்டும்.


ஆதாரம்: அத்தியப்புந்நிஅம், பக்கம் 22


மேலும் மக்கியத்துல் ஹமஷியா என்ற நூலில் பின்வருமாறு றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடத்தில் உதவி தேடி பண்ணிசைக்கின்றார்கள். 


சிருஷ்டிகளில் மேலான அருட் திருத்தூதரே! 


உங்களின் பேரருளை மறுமையில் வேண்டுகின்றேன். 

துன்பங்கள், துயரங்கள், கவலைகள் 

வந்திடும் போதெல்லாம் நீங்கள்தானே 

அரணாகி என்னைக் காப்பாற்றுகின்றீர்கள். 

எனது முழுக் கவனமும் உங்கள் பக்கமே திரும்பியிருக்கின்றது.


எனக்கான ஆதாரமும் நீங்கள்தான்.


எனது நோட்டமும், தேட்டமும், வேட்கையும் உங்களிடமே.


உங்களை முழுமையாக நம்பியவனாக 

உங்களையே ஆதரவு வைக்கின்றேன். 


ஆதாரம்: அத்தியப்புந்நிஅம், பக்கம் 4


அஷ்ஷெய்கு அஹ்மது ஸர்ரூக் ரழியல்லாஹு அன்ஹு எகிப்தில் பிரபலமான அறிஞரும் ஸூபியுமாவார். புகாரீ ஷரீபின் விரிவுரையாளரான அல்லாமா கஸ்தலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கண்ணியத்திற்கும், பெருமைக்குமுரிய ஆசிரியருமாவார். இவர்கள் ஷாதுலியாத் தரீக்காவின் ஷைகுமாவார்கள். இவர்களின் ஒரு கவிதையை ஹதீஸ் கலையின் மாபெரும் அறிஞரான ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் புஸ்தானுல் முஹத்திதீன் என்ற நூலில் எழுதியுளார்கள். அது வருமாறு,


காலத்தின் கொடுமைகள் 

கடுமையாக தாக்கும்போது 

எனது முரீதின் சிதறிய 

உள்ளங்களை ஒன்று 

சேர்ப்பவனாக இருக்கின்றேன். 


என் முரீதே! 


நெருக்கடியும் துன்பமும் 

உன்னை ஆட்கொள்ளும்போது 


யா ஸர்றுக் என்று என்னை அழையும். 


உடன் விரைந்து வந்து உனக்கு உதவுவேன். 


ஆதாரம்: புஸ்தானுல் முஹத்திதீன், பக்கம் 325


ஹளரத் செய்யிது முஹம்மது இப்னு அஹம்தபர்ஜுல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்.


நான் கப்றில் ஆட்சி அதிகாரம் பெற்றவர். இதற்குரிய அனுமதியை அல்லாஹுத்தஆலா எனக்கு வழங்கியுள்ளான். ஆதலால் தேவையுள்ளோர் எனது கப்று அருகில் வந்து எனது முகம் முன் நின்று முறையிட்டால் அதை நிறைவேற்றுவேன்.


ஆதாரம்: தபகாதுல் குப்றா, பாகம் 1, பக்கம் 105


மாபெரும் வலியான ஹளரத் சம்சுத்தீன் முஹம்மது ஹனபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது மரண வேளையில் இறைநேசர்களுக்கு பின்வருமாறு வஸிய்யத் செய்தார்கள். 


எனது கப்றுக்கும், உங்களுக்குமிடையில் ஒரு முழம் மண்தான் திரையாக உள்ளது. மனிதர்களுக்கு நான் இரங்குவதற்கு இம்மண் தடையாக இருக்குமாயின் நான் அங்கு இருந்தும் யாது பயன்? ஆதலால் ஏதும் தேவை உள்ளோர் எனது கப்றருகில் வந்து முறையிட்டால் அவர் தேவைகளை நிறைவேற்றுவேன். 


ஆதாரம்: தபகாதுல் குப்றா, பாகம் 2, பக்கம் 96


இவ்வாறு கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்களும், ஏனைய அறிஞர்களும் வலிமார்களிடம் வஸீலாத் தேடுவதை அனுமதித்து அங்கீகரித்து உள்ளனர். என்பதை மேற்கண்ட அறிஞர்களின் தீர்ப்புக்களின் மூலம் தெளியலாம்.


உதவியின் அடித்தளம் எல்லாம் வல்ல அல்லாஹுவே என்றும், நல்லடியார்கள் உதவி வெளிவரும் வெறும் தளமாகவே இருக்கின்றனர் என்பதும் ஒரு முஃமினின் அடிப்படை நம்பிக்கையாகும்.


உலகில் உயிருள்ளவர், மரணித்தவர் எவரும் சுயமாக உதவி செய்யும் ஆற்றல் அற்றவராகவே இருக்கின்றார். அதனால் அல்லாஹ் கொடுத்த ஆற்றலின் மூலம் உதவி செய்வதில் உயிருள்ளவர், மரணித்தவர் என்ற பேதம் கிடையாது.


எனவேதான் அல்லாஹ்வின் நெருங்கிய வலிமார்களிடம் உதவி தேடுவதனை ஷரீஅத் அங்கீகரித்துள்ளது. இதனைப் புரியாத சிலர் காபிர்கள் சிலைகளிடம் வேண்டுகின்ற பிரார்த்தனையை வலிமார்கள் விடயத்தில் சமப்படுத்தி வாதிக்கின்றனர். இது ஷரீஅத்திற்கு முற்றிலும் முரணான வாதமாகும். இவ்வாறு வாதிப்பது வழிகெட்ட கவாரிஜின்களின் வாதம் ஆகும்.


நன்றி: புஷ்றா - இதழ் 4 மே — ஜூன் 2006

ஏறாவூர் முஹைதீன் ஜும்ஆஃ மஸ்ஜிதில்

 

ஏறாவூர் மஜ்லிஸுல் உலமா  சபையினால்

ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில்  நடைபெற்றுவரும் புனித முஹ்யித்தின் மௌலித் மனாக்கிப் மஜ்லிஸை சிறப்பிக்குமுகமாக... 


ஏறாவூர்  அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் மஜ்லிஸுல் உலமா சபையினால் ஹஸனிய்யத்துல் காதிரிய்யாஹ் அரபுக்கல்லூரியில் இருந்து மாணவர்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்...!!! 


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களிலும் எமது மஜ்லிஸுல் உலமா சபையினால் பல்வேறு மஜ்லிஸ்களை நடாத்துவதற்கு வல்ல ரஹ்மான் தௌபீக் செய்தருள் புரிவானாக...!!!




முர்த்தலிய்யா அஹதிய்யா பாடசாலை நடாத்தும் மீலாத் விழாவும் பரிசளிப்பு விழாவும்

 

முர்த்தலிய்யா அஹதிய்யா பாடசாலை நடாத்தும் மீலாத் விழாவும் பரிசளிப்பு விழாவும்

பொலனறுவை மாவட்டம் -பள்ளியாகொடல்ல 122.123 மெதிரிகிரிய முர்த்தலிய்யா அஹதிய்யா பாடசாலை நடாத்தும் மீலாத் விழாவும் பரிசளிப்பு விழாவும்


காலம் 27-09-2025 ( சனிக்கிழமை ) பிற்பகல் 01 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை நடைபெற்றது.


விசேட பேச்சாளர் - சங்கைக்குரிய மௌலவி உஸ்தாத் U . அப்துல் முனாப் (மன்பயீ) BA,PGDE


சிறப்பு அதிதி


செயலாளர் - அஹதிய்யா சம்மேளனம் பொலன்னறுவை மாவட்டம், மற்றும் செயலாளர்- முஸ்லிம் பள்ளிவாயல் சம்மேளனம் பொலன்னறுவை மாவட்டம் , மற்றும் முகாமையாளர் -அமானா வங்கி - R.ஜிப்ரி (MBA)


அதிதிகளானகிராம உத்தியோகத்தர் - சுசில் பண்டார, மற்றும் ஜமகே, தபால் நிலைய உத்தியோகத்தர்- P.M.K.ஸரோஜனி குலசிங்க

மற்றும் ஊர் உலமாக்கள் பிரதேச கல்விமான்கள் பௌத்த மத குருமார்களான மைலக்க சந்தி, நயபன்சல ஆகியோரும் கலந்து கொண்டனர்


மீலாத் விழாக் குழு 


தலைவர் - மௌலவி அப்துல் ஹமீத் (முஅய்யிதி)

உப தலைவர் - மௌலவி நஸ்மீர் (ஹஸனி அல்காதிரி)

செயலாளர் - மௌலவி ஜப்னாஸ் (நிழாமி)

உறுப்பினர்கள் 

சகோதரர் அம்மார் 

சகோதரர் ஜெஷாம்

சகோதரர் சனூஸ் 

சகோதரர் றியாஸ் கான் 


முர்த்தலிய்யா அஹதியா பாடசாலை ஆசிரியர்கள் :


அதிபர் - மௌலவி முஜாஹிதீன் (அல்அஸீஸி)

ஆசிரியர் - மௌலவி அப்துல் லத்தீப் (முஅய்யிதி)

ஆசிரியர் மௌலவி சிஹாம்தீன் (ஹஸனி அல்காதிரி)

மௌலவி தஸ்பீர் (ஹஸனி அல்காதிரி) BA(SEUSL)

ஆசிரியை - சகோதரி சியாதா ( BA (R))

ஆசிரியை- சகோதரி நஸ் ரீன் பானு (BA(R))


விழாவிற்காக அனைத்து உதவிகளையும் செய்த ரவ்ழதுல் மதீனா இளைஞர் ஒன்றியத்திற்கும் கன்ஸுல் மதீனா ஒன்றியத்திற்கும் பணத்தாலும் பொருளாலும் உதவி புரிந்த ஊர் ஜமாத்தினர்கள், நலன்விரும்பிகள், வெளிநாட்டு வாழ் உறவுகள் அனைவருக்கும் குறிப்பாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை ஆரம்பம் முதல் இறுதிவரை சமுக வலைதளங்களில் நேரடி ஒளிப்பதிவு செய்வதற்காக சேவையாற்றிய கல்முனை அஸ்டோ அமைப்பின் நிர்வாகத்திற்கும் எமது அகம் கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் எமது முர்த்தலிய்யா அஹதிய்யா பாடசாலை நிர்வாகத்தினர், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக தெரிவித்திக் கொள்கின்றார்கள்














https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02zW9j3vwuAUwgyboHBNW2XSBZd95N1r63ns1Yr64ootTn6TgEdSEVArLQC4RWBeicl&id=100064091521276&mibextid=Nif5oz

Monday, 29 September 2025

பக்தாதிலிருந்து பாராளும்

பக்தாதிலிருந்து பாராளும்


 ஸுப்ஹானல்லாஹ்! 

பக்தாதிலிருந்து பாராளும் “பாஸுல் அஷ்ஹப்” முஹ்யித்தீன் ஆண்டகையின் பொற் பாதம் சுமக்க மறுத்தவர் பன்றியைச் சுமந்தார். 


தொகுப்பு: மௌலவீ MJM ஜஹானீ றப்பானீ 


 புனித றபீஉனில் ஆகிர் மாதம் நினைவு கூறப்படும் வலீகட்கரசர் கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் ஹிஜ்ரீ 470ம் ஆண்டு றபீஉனில் ஆகிர் பிறை 11ல் ஜீலான் நகரில் பிறந்து ஹிஜ்ரீ 561 றபீஉனில் ஆகிர் பிறை 10ல் பக்தாத் நகரில் “வபாத்” இவ்வுலகை விட்டும் மறைந்தார்கள். தந்தையின் பெயர் அபூ ஸாலிஹ், தாயார் பெயர் பாதிமா. 


 கௌதுல் அஃளம் அப்துல் காதிர் ஜீலானீ ஆண்டகைக்கு மொத்தம் 49 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் ஆண் குழந்தைகள் 27 உம், பெண் குழந்தைகள் 22 உம் ஆகும். தன்னுடைய விலா எழும்பில் காணப்பட்ட 50வது குழந்தையை தனது அற்புதத்தின் மூலம் “முர்ஸிய்யா” நகரில் வாழ்ந்த நபீ வழித் தோன்றல் ஒருவருக்கு மாற்றிக் கொடுத்தார்கள். 


 “உந்துலுஸ்” ஸ்பெய்ன் நாட்டில் உள்ள “முர்ஸிய்யா” எனும் நகரில் அஸ்ஸெய்யித் அலீ என்பவர் வாழ்ந்து வந்தார். தனக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாததையிட்டு பெரும் கவலையுடன் தனது வீட்டு முற்றத்தில் சோகத்தில் இருந்து கொண்டிருக்கும் வேளை அவ்வழியால் சென்ற ஒரு “மஸ்தான்” “உனக்கு குழந்தைப் பாக்கியம் வேண்டுமானால் “பக்தாத்” நகர் சென்று அங்கு ஆன்மிக அரசாட்சி புரியும் அஸ்ஸெய்யித் அப்துல் அப்துல் காதிர் ஜீலானீ பாதம் பற்றவும்” என்றார். 


 குறித்த மஸ்தானின் அறிவுரையை அல்லாஹ்வின் அறிவுரையாக - அறிவிப்பாகக் கருதி பக்தாத் நகர் வந்தார் அஸ்ஸெய்யித் அலீ அவர்கள். கௌதுல் அஃளம் அப்துல் காதிர் ஜீலானீ நாயகம் அன்னவர்களின் திருச் சமூகம் சென்று தனது குறையை முறையிட்டவர்களாக மண்டியிட்டார்கள். 


 சிறிது நேரம் கண்ணை மூடித் தியானித்த கௌதுல் அஃளம் அன்னவர்கள் உங்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லையே என்றார்கள். பொறுத்துக் கொள்ள முடியாத அஸ்ஸெய்யித் அலீ அவர்கள் வலீமார்களின் எதார்த்தம் புரிந்திருந்த காரணத்தால் உங்களால் முடியும் நாயகமே! என்று கூறி மன்றாடினார்கள். 


 தன்னை நாடி பல நூறு மைல் தொலைவிலிருந்து வந்தவரை வெற்றுக் கையுடன் திருப்பியனுப்ப விரும்பாத கௌதுல் அஃளம் ஆண்டகை அவர்கள் “உங்களின் விலாவில் குழந்தைகள் ஒன்றும் இல்லை. ஆனால் எனக்கு - என்னுடைய விலாவிலிருந்து 49 குழந்தைகள் வெளியாகிவிட்டன. இன்னும் ஒன்று மீதமாயுள்ளது. வேண்டுமானால் அதை உங்களுக்கு மாற்றித் தரலாம்” என்றார்கள். எப்படியேனும் தனக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கவேண்டும் என்று விரும்பிய அஸ்ஸெய்யித் அலீ அவர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். 


 தனது முதுகுப் பக்கம் வந்து அலீ அவர்களின் முதுகை வைத்து - விலாவுடன் விலாவை வைத்து உரசும்படி ஏவினார்கள். கௌதுல் அஃளம் அவர்களின் விலாவிலிருந்த குழந்தை அலீ அவர்களின் விலாவுக்கு மாறிவிட்டது. மன மகிழ்வுடன் தாயகம் திரும்பிய அலீ அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையே உலகம் போற்றும் இறைஞானி மாமேதை இமாம் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களாவர். இது வரலாறு. 


 இந்த வரலாறை ஸூன்னீகளான நாங்கள் முழு மனதுடன் நம்பி ஏற்றுக் கொள்கிறோம். ஆனாலும் அதிகம் படித்த மகான்கள் இதைச் சொன்னால் நையாண்டி செய்து கௌதுல் அஃளம் அவர்களையும், இப்னு அறபீ அவர்களையும் கேவலப்படுத்துவார்கள். 


 கௌதுல் அஃளம் அவர்களின் இவ் அற்புதத்தை இன்றை நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. ஆண்கள் குழந்தைப் பாக்கியமற்றவர்களாக இருந்தால் இன்னொருவரின் விந்தணுவைப் பெற்று அதை அவரின் மனைவியின் கருவில் உட் செலுத்தி குழந்தையைப் பெற்றெடுத்தல். அல்லது பெண் குழந்தைப் பாக்கியம் இல்லாதவளாக இருந்தால் சோதனைக் குழாய்கள் மூலம் கருக்கட்டச் செய்து குழந்தையைப் பெற்றெடுத்தல் என்று பல் வேறு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இம் முறைகள் இஸ்லாமிய “ஷரீஆ”வுக்கு முரணானவையாக இருந்தாலும் உலகில் இன்று இவ்வாறு செய்து கொள்கிறார்கள். 


 ஆனால் ஒருவர் தனது அற்புதத்தின் மூலம் தனக்கென்றிருக்கும் வாரிசை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுத்தல் “ஷரீஆ”வுக்கு முரணாக ஆகாது. காரணம் அவர் தன்னுடைய விந்தணுவை எடுத்துக் கொடுப்பதோ, சோதனைக் குழாய் மூலம் குழந்தையைப் பெற்றுக் கொள்வதோ அல்ல. இவ்வாறு பல வலீமார்கள் செய்துள்ளார்கள். காரணக் கடல் நாஹூர் நாயகம் அன்னவர்களும் தனக்கென்றிருந்த வாரிசை தன்னுடைய அற்புதத்தின் மூலம் மாற்றிக் கொடுத்து அதில் பிறந்த குழந்தைதான் “தாதா யூஸுப் வலிய்யுல்லாஹ்” றஹிமஹுல்லாஹ் அன்னவர்களாவர். 


 குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் வாழ்க்கை சரிதையை வாசித்துப் பார்த்தால் தனது வாழ்வில் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி உலகை அதிர வைத்தவர்கள் என்றே கூற வேண்டும். அவர்களின் அற்புதங்களை எழுதுவதாயின் பல பாகங்கள் கொண்ட புத்தகம்தான் எழுத வேண்டும். அவற்றைத் தவிர்த்து மேலே தலைப்பில் குறிப்பிட்ட விடயத்தை இங்கு சுட்டிக் காட்டலாம் என்று விரும்புகிறேன். 


 குத்பு நாயகம் அன்னவர்கள் ஒரு நாள் “ஜத்பு”டைய நிலை மிகைத்து قَدَمِيْ هَذِهِ عَلَى رَقَبَاتِ كُلِّ وَلِيٍّ للهِ “என்னுடைய இக் கால் பாதம் அனைத்து வலீமாரின் தோள்களின் மீதும்” என்றார்கள். அன்று அவர்கள் சொன்ன நேரம் அவர்களின் “ஜத்பு” மிகைத்த இவ்வார்த்தையைச் செவியேற்ற உலகில் காணப்பட்ட அனைத்து வலீமார்களும் ஏற்றுச் செவி சாய்த்தார்கள். தமது தோள்களை பணித்துக் கொடுத்தார்கள். 


 ஆனால் அஷ்ஷெய்குஸ் ஸன்ஆனீ என்பவர் மட்டும் அவர் வலீயாக இருந்தும் மறுத்துவிட்டார். நானும் வலீமாரில் உள்ளவன்தான். இவருடைய சொல்லுக்கு பணிந்து நான் தோளை சாய்க்கத் தேவையில்லை என்றார். 


 இவ்விடயம் கௌதுல் அஃளம் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டது. “என் பாதம் சுமக்க மறுத்தவர் தோளில் பன்றி” என்றார்கள் கௌதுல் அஃளம் அவர்கள். 


 பின்பு குறித்த ஷெய்கு ஸன்ஆனீ என்பவர் புனித மக்கமா நகர் நோக்கிச் செல்ல விரும்பி தனது 400 சீடர்களுடன் சென்றார். இடைவழியில் ஷெய்கு ஸன்ஆனீயின் பார்வை ஒரு கிறித்துவப் பெண் மீது விழுந்தது. அவளோ மிக அழகானவள். அதே நேரம் அவள் சாராயம் விற்பனை செய்பவளாகவும் இருந்தாள். ஷெய்கு ஸன்ஆனீ அவள் மீது காதல் வயப்பட்டு அவளுக்கு கட்டுப்பட்டு நடக்கலானார். எந்த அளவென்றால் அவள் இவரை பன்றிகளை மேய்க்கச் சொன்னாள். ஒரு நாள் பன்றிக் குட்டிகளை அவற்றின் காலில் முட்கல் குத்தாமலிருப்பதற்காக தோளில் சுமக்குமாறும் சொன்னாள்.  


 ஷெய்கின் இவ் இழி செயல் கண்ட முரீதீன்கள் கலைந்து சென்று விட்டார்கள். ஆனால் இருவர் மட்டும் செல்லவில்லை. (அவர்கள் அஷ் ஷெய்கு முஹம்மத் பரீதுத்தீன், அஷ் ஷெய்கு மஹ்மூத் அல் மக்ரிபீ ஆகியவர்களாவர்) அவ்விருவரும் இந்த சோதனை என்ற நெருப்பை அணைக்க வேண்டும் என்றார்கள். இந்த நிலை ஷெய்கு அவர்களுக்கு ஏற்படக் காரணம் அவர் கௌதுல் அஃளம் அன்னவர்களுக்கு தோள் சாய்க்காததினாலேயாகும் என்பதை அவ்விருவரும் அறிந்திருந்தார்கள்.  


 இவ்விருவரிலும் மஹ்மூத் அல்மக்ரிபீ என்பவர் தன்னுடைய கால் சறுகிய ஷெய்குடனிருக்க மற்றவர் - முஹம்மத் பரீதுத்தீன் அவர்கள் பக்தாத் நகர் நோக்கி விரைந்தார்கள். அங்கு சென்று கௌது நாயகத்துக்குப் பணிவிடை செய்தார்கள். தன்னுடைய ஷெய்கை மன்னிக்கும்படி கௌது நாயகத்திடம் வேண்டினார்கள். உனக்காக நான் மன்னிக்கிறேன் என்று அஷ்ஷெய்கு ஸன்ஆனீ அவர்களை மன்னித்துக் கொண்டார்கள். 

 

 கௌது நாயகம் அவர்கள் இவ் வார்த்தையை சொன்ன வேளை அஷ்ஷெய்கு ஸன்ஆனீ அவர்கள் தானிருந்த “ஙப்லத்” எனும் மறதியை விட்டும் உணர்ந்து கொண்டார்கள். அவர்கள் காதலித்த அந்த நஸ்றானிய்யத்தான பெண்ணை வெறுக்கலானார்கள். முன்பு தானிருந்த அந்தஸ்தை அடைந்து கொண்டார்கள். ஆனாலும் அந்தப் பெண் இவர்களை - அஷ்ஷெய்கு ஸன்ஆனீ - நேசிப்பதை விடவில்லை. இவர்கள் அவளை நோக்கி “நீயோ காபிரான பெண். நானோ முஸ்லிம். நமக்குள் பொருத்தம் ஏற்படாது” என்று கூறி மறுத்தார்கள். ஆனாலும் அந்தப் பெண் இவர்களுக்கு நேர்பட்டு புனித இஸ்லாம் மார்க்கத்தை தழுவியது மட்டுமன்றி அவளுடைய ஆதரவாளர்களும் புனித இஸ்லாத்தை தழுவி ஷெய்கு அன்னவர்களுக்கு பணி செய்பவர்களானார்கள். அல்லாஹு அக்பர். 


 இந்தச் சம்பவத்திலிருந்து நாம் இம்மாதத்தின் கதாநாயகர் குத்புல் அக்தாப், கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ஆண்டகை அவர்களின் அந்தஸ்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக அவர்கள் விடயத்தில் அவர்களின் எதார்த்தம் புரியாமல் நாக்கை நுழைப்பது அறிவுடமையல்ல.


تَصْدِيْقُكُمْ نِعْمَ الْبِضَاعَةُ مُحْيِ الدِّيْنْ - تَكْذِيْبُكُمْ سُمُّ سَاعَةٍ يَا مُحْيِ الدِّيْنْ


உமை உண்மை கொண்டோர் உறுதி பெற்றார் முஹ்யித்தீன்!

உமைப் பொய்யென்றோர் கடும் நஞ்சை உண்பார் முஹ்யித்தீன்!


 அல்லாஹு தஆலா எம் கண்மணி நாயகம் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் “உம்மத்” சமூகத்தில் தோன்றிய அவர்களின் “வாரித்” அநந்தரக் காரர்களில் கௌதுனா முஹ்யித்தீன் ஆண்டகை றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிக விஷேடமானவர்கள். பெரும் பெரும் வலீமார்கள் கூட அவர்களின் தரிசனத்தைப் பெற்றுள்ளார்கள். ஸெய்யிதுனா ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ, ஷுஐப் அபூ மத்யன் அல்கவ்த், ஸுல்தானுல் ஆரீபீன் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ றழியல்லாஹு அன்ஹும் போன்றோரைக் குறிப்பிடலாம். 


 மாத்திரமின்றி ஸூபிய்யாக்களிடம் குத்புகள் என்று கணிக்கப்படும் நால்வரில் ஒருவரான ஸுல்தானுல் ஆரிபீன் அஹ்மதுல் கபீர் அர்ரிபாயீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு “வஸிய்யத்” உபதேசிப்பவர்களாக இருந்தார்கள்.


 “நீங்கள் பக்தாத் நகர் சென்றால் குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் உயிருடனிருந்தால் அவர்களை தரிசிக்க முன் எந்த ஒன்றையும் முற்படுத்திவிடாதீர்கள். அவர்களின் மறைவின் பின் அவர்களின் புனித “கப்ர் ஷரீப்” ஐ தரிப்பதை விட எதையும் முற்படுத்திவிடாதீர்கள். ஆன்மிக நிலை பெற்ற எந்த மகானாயினும் பக்தாத் நகர் சென்று அவர்களைச் சந்திக்கவில்லையானால் அவருடைய ஆன்மிக நிலை உருவப்பட்டுவிடும். அவர் அதை மரணத்துக்கு முன்பேனும் இழந்து விடுவார். அவர்களைக் காணதாவன் நஷ்டவாளியே” 



 கௌதுல் அஃளம் ஆண்டகை அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். “என்னைக் கண்டவனுக்கு சுபசோபனம். அல்லது என்னைக் கண்டவனைக் கண்டவனுக்கு சுபசோபனம். அல்லது என்னைக் கண்டவனைக் கண்டவனைக் கண்டவனுக்கு சுபசோபனம். அல்லது என்னைக் கண்டவனைக் கண்டவனைக் கண்டவனைக் கண்டவனுக்கு சுபசோபனம். என்னைக் காணாதவன் நஷ்டவாளியே”


 எல்லாம் வல்ல அல்லாஹ் கௌதுனா, அல்குத்புர் றப்பானீ, வல் கவ்துஸ்ஸமதானீ, வல் ஹைகலின் நூறூனீ, அல் பாஸுல் அஷ்ஹப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ஆண்டகையை கனவிலும், நனவிலும் காணும் பாக்கியத்தை நம்மனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்!

நடுநிலை என்பது இல்லை

 

قال رسول الله ﷺ 

"إِنَّكَ لَنْ تَزَالَ سَالِمًا مَا سَكَتَّ، فَإِذَا تَكَلَّمْتَ كُتِبَ لَكَ أَوْ عَلَيْك (ر واه الطبراني،)


#முத்து நபி முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:


"நீ மௌனமாக இருக்கும் வரை பாதுகாப்பாகவே இருப்பாய். ஆனால், பேசினால் (அந்த வார்த்தை) உன் நன்மைக்காகவோ அல்லது உன் தீமைக்காகவோ எழுதப்படும்."


📖 #ஹதீஸின் விளக்கம்:


முத்து நபி முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இந்த ஹதீஸ், மனிதனின் நாவு (வாயால் சொல்லும் வார்த்தைகள்) எவ்வளவு ஆபத்தானதும், அதே சமயம் நன்மை தரக்கூடியதுமான கருவி என்பதை உணர்த்துகிறது.


#மௌனம் ஒரு பாதுகாப்பு

*************************

ஒருவர் பேசாமல் இருப்பது வரை அவர் பாதுகாப்பில் இருக்கிறார். ஏனெனில் அவர் எந்த தீய வார்த்தையாலும் பாவத்தைச் சம்பாதிக்கவில்லை.


பேச்சின் விளைவு

ஒருவர் பேசும்போது, அது:


நன்மைக்கான பேச்சாக இருந்தால் (அல்லாஹ்வை நினைத்தல், நற்செயலுக்கு அழைத்தல், நல்ல ஆலோசனை) அது அவருக்கு நன்மையாக எழுதப்படும்.


தீமையான பேச்சாக இருந்தால் (பொய், கேலி, கிசுகிசு, இழிவுபடுத்துதல்) அது அவருக்கு பாவமாக எழுதப்படும்.


நடுநிலை என்பது இல்லை

*********************************

மனிதன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிவு உண்டு. அது “நன்மை” அல்லது “தீமை” மட்டுமே. 


“பதிவு செய்யப்படாதது” என்று எதுவும் இல்லை.


✍️நடைமுறை பயன்கள்:


நாவை கட்டுப்படுத்தல்

அதிகம் பேசாமல், சிந்தித்து மட்டுமே பேச வேண்டும்.


நல்ல பேச்சை மட்டும் தேர்வு செய்தல்

நம்முடைய பேச்சு, பிறருக்கு நன்மை தருமா என்பதை முன்னரே யோசிக்க வேண்டும்.


பேசாமல் இருப்பது கூட ‘இபாதத்’

தீமையிலிருந்து நம்மை பாதுகாக்கும் மௌனமும் ஒரு பெரிய நற்செயலே.


பேசுவதற்கு முன் மூன்று கேள்விகள்


இது உண்மையா?


இது அவசியமா?


இது நல்ல விளைவா தருமா?


இந்த மூன்றுக்கும் “ஆம்” என்ற பதில் வந்தால் மட்டுமே பேச வேண்டும்.


👉 அதனால் இந்த ஹதீஸ், நம் வாழ்க்கையில் “நல்லதைச் சொல் அல்லது மௌனமாக இரு” என்ற தங்க விதியை நடைமுறைக்கு கொண்டு வரச் சொல்கிறது.


#Muhammed Yoosuf Musthafi 


#இஸ்லாத்தின் #பண்பாடு #ஒழுக்கமும் #பதவியால் #இமாம் #குணங்களும் #மார்க்கம் #செவிகள் #புன்னகை #நாம் #உண்மை #பொய் #மெளனம்

மீலாதும் கந்தூரியும்

 புனித மீலாத் நபி விழாவும் கந்தூரி நிகழ்வும் 

Organized By;

Faizanul Madeena Arabic College, Eravur

2025-09-28


Album - 4





Sunday, 28 September 2025

தரீக்காக்களின் நோக்கமும், கலப்படத்தின் மோசடியும்.

 


 பதில்:  

காதிரிய்யா தரீக்கா கௌதுல் அஃழம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸில்ஸிலாவில் வருவது , ஜிஷ்தியா தரீக்கா ஙரீப் நவாஸ் காஜா முஈனுத்தீன் ஜிஸ்த்தி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் வழியில் வந்தது , இவ்வாறுதான் ஷாதுலிய்யா , நக்ஷபந்தியா உள்ளிட்ட தரீக்காக்களுமாகும்.


தரீக்காக்களின் நோக்கமும், கலப்படத்தின் மோசடியும்.

===========

ஷர்க்கி, பரேலவி

===============

காதிரிய்யா தரீக்கா கௌதுல் அஃழம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸில்ஸிலாவில் வருவது, ஜிஷ்தியா தரீக்கா ஙரீப் நவாஸ் காஜா முஈனுத்தீன் ஜிஸ்த்தி  கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் வழியில் வந்தது, இவ்வாறுதான் ஷாதுலிய்யா, நக்ஷபந்தியா உள்ளிட்ட தரீக்காக்களுமாகும்.


ஒவ்வொரு தரீக்காவுக்கும் தனித்தனியான பயிற்சி முறைகள் உள்ளன, அவற்றைத் தனியாகவே பின்பற்றவேண்டும்.


இரண்டு மத்ஹபுகளை இணைத்து எவ்வாறு ஒரு மத்ஹபாக்கிப் பின்பற்ற முடியாதோ அவ்வாறுதான் இரு தரீக்காக்களை இணைத்து ஒரு தரீக்காவாக்கமுடியாது.  


ஷைகுனா ஸூபிஹளறத் நாயகமவர்களுக்கு காதிரிய்யா, றிபாஇய்யா, ஜிஷ்தியா நக்ஷபந்தியா உள்ளிட்ட நான்கு தரீக்காக்களுக்கும் கிலாபத், இஜாஸத் இருந்தும் காதிரிய்யா தரீக்காவில் தான் பைஅத் கொடுப்பார்கள், 


பொதுவாக தரீக்காக்களின்  போதனைகளின் நோக்கம்  இரண்டுதான்.


1- அல்லாஹுத்த ஆலாவை நேசிப்பது.


2- மனோ இச்சைக்கு மாறு செய்வது 


இந்த இரண்டையும் அடையும் வழிகள் பல உள்ளன. அவற்றை அடையும் வழிகளில் வித்தியாசம் உண்டு.


ஏதாவது ஒரு வழியைத் தேர்வு செய்து அதை தொடர்ந்து செய்தால் நோக்கத்தை அடையலாம்.


காதிரிய்யா றிபாஇய்யா, காதிரிய்யா ஜிஸ்த்திய்யா

காதிரிய்யா நக்ஷபந்தியா என்றெல்லாம் பல தரீக்காக்கள் உள்ளன.


இதில் எந்த குறையும் கிடையாது...    


ஆனால், 


தரீக்காவின் நோக்கத்தை அறியாமல் இரண்டையும் கலந்து ஒன்றாக்கி புதிதாக ஒரு தரீக்காவை உருவாக்குவது மோசடியாகும்.

Saturday, 27 September 2025

இரண்டு சஜ்தாக்களின் ரகசியம்

 

இரண்டு சஜ்தாக்களின் ரகசியம்
இரண்டு சஜ்தாக்களின் ரகசியம் – வாழ்க்கையும் மரணமும் நினைவூட்டும் சின்னம்


முஸ்லிம் தொழுகையின் அடிப்படைத் தூண்களில் ஒன்றான சஜ்தா (سجدة) என்பது, அடியாரின் ஆன்மீக உச்ச நிலையை வெளிப்படுத்தும் தருணமாகும்.


 அதில், நமது நெற்றி மண்ணைத் தொடுகிறது. ஆனால், ஒரே ஒரு சஜ்தா போதாமல், ஒவ்வொரு ரக்அதிலும் (ركعة) இரு சஜ்தாக்கள் வைக்கப்பட்டுள்ளன. 


ஏன் இரண்டும்? ஒரே ஒன்று போதாதா? என்ற கேள்வி, மனித மனதில் இயல்பாகவே எழும்.


இந்த கேள்வியை ஒருவர்க் கேட்டபோது, அமீருல்-முஃமினீன் அலீ இப்னு அபீ தாலிப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அளித்த விளக்கம் மிக ஆழமான தத்துவ, ஆன்மிக சிந்தனையை வெளிப்படுத்துகிறது.


குர்ஆன் சான்று :


مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى


"அதிலிருந்தே (மண்ணிலிருந்தே) உங்களை உண்டாக்கினோம்; அதிலேயே உங்களை மீண்டும் சேர்த்துவிடுவோம்; மேலும் அதிலிருந்தே மீண்டும் ஒருமுறை உங்களை எழுப்புவோம்."

سورة طه: 55) 


முதல் சஜ்தா – பிறப்பு நினைவூட்டல்


ஒருவர் சஜ்தாவில் தாழ்ந்து நெற்றியைத் தரையில் வைக்கும் தருணத்தில், அவர் மனதில் இந்த செய்தி பதிகிறது:


"மண்ணிலிருந்தே நாம் உண்டாக்கப்பட்டோம்."

எனவே, மனிதன் எவ்வளவு உயர்ந்த அறிவும், செல்வமும், ஆற்றலும் பெற்றிருந்தாலும், அவன் ஆரம்பமும் மண்ணில்தான் என்பதை இந்தச் சஜ்தா நினைவூட்டுகிறது.


இரண்டாம் சஜ்தா – மரணம் நினைவூட்டல்


மீண்டும் சஜ்தா செய்யும்போது, அது ஒரு வலுவான உண்மையை நமக்கு அறிவுறுத்துகிறது:


"மண்ணுக்குள் நாம் திரும்புவோம்."

இதனால், மரணம் ஒரு அந்நிய அச்சமாக அல்லாமல், இயல்பான திரும்பிச்சேர்வாக புரியப்படுகிறது.


 மனிதன் எப்போதும் தன் இறுதியை மறந்துவிடாமல், வாழ்நாள் முழுவதும் தாழ்மையுடனும், பொறுப்புடனும் வாழ வழி வகுக்கிறது.


சஜ்தாவிலிருந்து எழுதல் – மறுமை நினைவூட்டல்


இரண்டு சஜ்தாக்கள் முடிந்து, மனிதன் மீண்டும் தன் தலையை உயர்த்துகிறான். அதுவே:


"மண்ணிலிருந்தே மீண்டும் உங்களை எழுப்புவோம்" என்ற அல்லாஹ்வின் வாக்குறுதியை நினைவூட்டுகிறது.

இது மறுமை நாள் (يوم القيامة) பற்றிய நம்பிக்கையை உயிர்த்தெழச் செய்கிறது.


ஆன்மிகச் செய்தி


ஒவ்வொரு ரக்அதிலும் இரு சஜ்தாக்கள் வைக்கப்பட்டிருப்பது, ஒரு உடல் அசைவு மட்டும் அல்ல; அது வாழ்க்கைச் சுழற்சியின் சின்னம்:


1. பிறப்பு – மண்ணிலிருந்து தோற்றம்


2. மரணம் – மண்ணுக்குள் மறைதல்


3. உயிர்ப்பு – மறுமை நாளில் மண்ணிலிருந்து எழுத்தல்


இதன் மூலம் முஸ்லிம், தன் ஒவ்வொரு தொழுகையிலும் வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தையும், மரணத்தின் நிச்சயத்தையும், மறுமையின் நம்பிக்கையையும் மீண்டும் மீண்டும் சிந்திக்கிறான்.


அதனால் தான், சஜ்தா என்பது ஒரு "இருமுறை வணக்கம்" அல்ல, அது மனித வாழ்க்கையின் ஆதாரம், முடிவு, மறுஉயிர்ப்பு ஆகிய மூன்றையும் கற்றுக்கொடுக்கும் ஆன்மிகப் பாடம்.


இப்படியாக, தொழுகையின் ஒவ்வொரு ரக்அதிலும் இரு சஜ்தாக்கள் வைக்கப்பட்டிருப்பது, நமது இருப்பின் துவக்கத்தையும், முடிவையும், மறுமையையும் நினைவூட்டும் சின்னம் என்பதை அமீருல்-முஃமினீன் அலீ இப்னு அபீ தாலிப் றழியல்லாஹு அன்ஹு. அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.


தொகுப்பு :- மௌலவீ Hmm. பஸ்மின் றப்பானீ.

28/09/2025

ஷெய்க் அலி அல்-தந்தாவி நீதிபதியாக

 

ஷெய்க் அலி அல்-தந்தாவி நீதிபதியாக

ஷெய்க் அலி அல்-தந்தாவி நீதிபதியாக – ஆராய்ச்சிமிகு கட்டுரை


முன்னுரை


ஷெய்க் அலி அல்-தந்தாவி (1909–1999) நவீன அரபு உலகின் புகழ்பெற்ற அறிஞர், சிந்தனையாளர், இலக்கியவாதி மற்றும் பத்திரிகையாளர் ஆவார். ஆனால் அவர் வாழ்க்கையில் ஒரு முக்கிய கட்டமாக சிரியா நாட்டில் நீதிபதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் நீதிமன்றத்தில் காட்டிய நேர்மை, இரக்கம், மனிதநேயம் ஆகியவை அவரை வரலாற்றில் தனித்துவப்படுத்தின.


---


நீதிபதியாக நியமனம்


அலி அல்-தந்தாவி 1940களில் சிரியாவில் நீதித்துறைக்கு நியமிக்கப்பட்டார். அவர் தமஸ்கஸ், ஹமா, ஹலப் போன்ற நகரங்களில் நீதிபதியாகச் செயல்பட்டார். அவருக்கு சட்டம் ஒரு கடினமான விதிமுறை மட்டும் அல்ல, மாறாக மனித வாழ்க்கையின் நியாயம் மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்தும் கருவி என்று நம்பிக்கை இருந்தது.


---


அவரது தீர்ப்புகளில் மனிதநேயம்


அவர் தீர்ப்புகளில் பல சமயங்களில் சட்டத்தை மட்டும் அல்லாமல், இரக்கமும் சமூக நலனும் பிரதிபலித்தன.


ஒரு நிகழ்வு: ஒருமுறை ஒரு ஏழைத் தொழிலாளி திருட்டு குற்றச்சாட்டில் கொண்டு வரப்பட்டான். ஆதாரம் பலவீனமாக இருந்தாலும், அவன் பசியால் அப்படி செய்தது தெளிவாயிற்று. அப்போது தந்தாவி நீதிபதி, சட்டத்தின் அடிப்படையில் தண்டனையைத் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருந்தும், அவர் குற்றவாளியை சிறை தண்டனையால் அல்லாமல், சமூக சேவையால் திருத்தும் வகையில் தண்டித்தார். இதனால் குற்றவாளி வாழ்க்கையைச் சீர்திருத்திக் கொண்டான்.


மற்றொரு சம்பவம்: விவாகரத்து தொடர்பான வழக்கில், கணவன் மனைவியை அநியாயமாக விட்டுச் செல்ல முயன்றான். தந்தாவி நீதிபதி இருவரையும் அழைத்து, குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி பேசினார். சட்டம் வழங்கிய உரிமையை மட்டும் பார்க்காமல், அவர் குடும்பத்தை காப்பாற்றுவதற்கான முயற்சியையும் செய்தார். இறுதியில் அந்த தம்பதிகள் மீண்டும் இணைந்தனர்.


---


நீதியிலும் துணிச்சலிலும் புகழ்


அவர் அதிகாரம் வாய்ந்தவர்களின் அழுத்தத்தையும் பயப்படாமல், உண்மையை ஆதரித்து தீர்ப்பளித்தார்.


ஒரு அரசியல் வழக்கு: சிரியாவில் அரசாங்கம் எதிர்ப்பாளர்களை அநியாயமாக வழக்குப் போட்டபோது, தந்தாவி நீதிபதி வெளிப்படையாக உண்மையைச் சொன்னார். அதனால் அரசாங்கம் அவரை மாற்றியது. ஆனால் மக்கள் அவரை “நீதியின் குரல்” என்று அழைத்தனர்.


---


எழுத்திலும் நீதித்துறை அனுபவம்


அவரது நீதித்துறை அனுபவம், பின்னர் அவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் உரைகளில் வெளிப்பட்டது. அவர் பலமுறை குறிப்பிட்டார்:


> "நீதிபதி ஒரு சட்ட இயந்திரம் அல்ல; அவர் மனிதர்களின் வாழ்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பு பெற்றவர்."


இதனால், அவரது எழுத்துகள் சட்ட மாணவர்களுக்கும், சமூக சிந்தனையாளர்களுக்கும் வழிகாட்டியாகின.


முடிவு


ஷெய்க் அலி அல்-தந்தாவி ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் இஸ்லாமிய சிந்தனையாளர் மட்டுமல்லாது, ஒரு நீதிமிகு, மனிதநேயம் நிறைந்த நீதிபதி என்றும் வரலாற்றில் நிலைத்தார். அவரது தீர்ப்புகள், நிகழ்வுகள், நீதியில் காட்டிய துணிச்சல் – இவை அனைத்தும் இன்றும் நீதித்துறை மற்றும் சமுதாயத்திற்குப் பாடமாக உள்ளன.🔹

Thursday, 25 September 2025

விஷமமான கிராமம் இது...! 🏚️🌋


விஷமமான கிராமம் இது...! 🏚️🌋


***************************************


மகீதா...!


கைபரில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்.


யூதர்கள் பெருமளவு வாழ்ந்து வந்த இந்த கிராமத்தில் ஜைனப் பின்த் ஹாரிஸ் என்ற யூதப் பெண் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் விருந்தளிப்பதாக அழைத்தாள்.


ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.


இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொல்லத் திட்டமிட்டு இறைச்சியில் விஷம் கலந்து விடுகிறாள்.


விருந்துக்கு வந்த பிறகு தங்களுக்கு வழங்கப்பட்ட விருந்துணவை சாப்பிட ஆரம்பிக்கிறார்கள்.


ஆனால் அல்லாஹ் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த விஷயத்தை காட்டிக் கொடுத்து விட்டான்.


சுதாரித்துக் கொண்ட ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவை சாப்பிடுவதை நிறுத்தி தனது தோழர்களுக்கும் அறிவித்து விடுகிறார்கள்.


அதற்குள்ளாக ஒரு கவளம் சாப்பிட்டு விட்ட ஹஜ்ரத் பிஷ்ரு இப்னு பராஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் விஷ உணவை சாப்பிட்டு விட்டதால் அதன் காரணமாக இறந்து விடுகிறார்கள்.


விருந்தாளிகளாக அழைத்து அதில் விஷம் வைத்து கொலை செய்யும் கொடூர மனம் படைத்த அந்த யூதர்களின் கிராமம் இது தான்..!


இங்கு தான் மேற்காணும் மனிதத்தன்மையற்ற செயல் நடைபெற்றது.


#khaibar #makeeda #poisenfood






குத்பு நாயகம் என்றால் ......

 

இது குத்பு நாயகம் அவர்களுடைய மாதம். ஸுன்னத்து வல்ஜமாஅத்து மக்கள் அதிலும் குறிப்பாக காதிரிய்யா தரீக்காவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அவர்களின் சிறப்புகளைப் பற்றி மனாகிபுகளில் வாசித்து, அன்னவர்களின் பெயரால் முஹ்யித்தீன் மௌலூத் ஓதி அவர்கள்மீது மஹப்பத்தை அதிகரித்துக்கொள்ளும் மாதம்.


‎‫قطب الاقطاب غوث الأعظم محيي الدين عبد القادر الجيلاني قدس الله سره العزيز رضي الله عنه‬

"குத்புல் அக்தாப் கௌஸுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் - ரழியல்லாஹு அன்ஹு"


இது எல்லா உலமாக்களும் குத்பு நாயகத்தைப் பற்றிய பயான்களில் அடிக்கடி உபயோகிக்கக் கூடிய ஒரு சொற்றொடர். சரி இதன் பொருள் என்ன என்று சிந்தித்தீர்களா?


புவியியல் பாடத்தில் நீள் கோடுகள் என்று இருக்கின்றன அல்லவா? அக்கோடுகள் எல்லாம் வட – தென் துருவங்களில் ஒரே இடத்தில் ஒன்று சேர்கின்றன. அப்படி ஒன்று சேரும் இடத்துக்கு வட துருவம், தென் துருவம் என்று பெயர். அரபியில் இது குத்பு ( ‫قطب‬ ) என்று சொல்லப்படும்.


அதே மாதிரி உலகில் உள்ள எல்லா அவ்லியாக்களும் ஒரு வலியுல்லாஹ்வின் ஆத்மீக ஆட்சியின் கீழ் ஒன்று சேர்வார்கள். அவர் அந்த எல்லா அவ்லியாக்களுக்கும் தலைவராக இருப்பார். எனவே அவருக்கு ஆத்மீகப் பரிபாஷையில் “குத்பு" என்று பெயர்.


அவ்வாறு எல்லா அவ்லியாக்களுக்கும் தலைவராக இருப்பவருக்கு "குத்பு" என்றும், அந்த "குத்புமார்கள்" அனைவருக்கும் தலைவராக இருப்பவருக்கே "குத்புல் அக்தாப்" (‫قطب الاقطاب‬) என்றும் பெயர்.


"கௌதுல் அஃழம்" (‫غوث الأعظم‬) என்றால் பொருள் என்ன ?

"கௌது" (‫غوث‬) என்றால் "இரட்சிப்பவர்" என்பது பொருள். அதாவது : "பாதுகாப்பவர்" என்று தற்கால இலகு நடையில் கூறலாம். பிள்ளைகளைப் பெற்றோர்கள் "பாதுகாக்கிறார்கள்" என்று கூறுவதில்லையா? மாணவர்களை ஆசிரியர்கள் "பாதுகாக்கிறார்கள்" என்றும், நாட்டு மக்களை எதிரிகளிடமிருந்து ஜனாதிபதி "பாதுகாக்கிறார்" என்றும், நோயாளிகளை நோயிலிருந்து வைத்தியர்கள் "பாதுகாக்கிறார்கள்" என்றும், கூறுவது எல்லோரும் அறிந்த மொழி வழக்கு அல்லவா?

நபிமார்களும் அவ்லியாக்களும் குப்ரு, சிர்க்கு, பாவங்களில் நின்றும் மனித இனத்தை "பாதுகாக்கிறார்கள்" என்று கூறுவதும் சர்வ சாதாரணமாக அனைவரும் அறிந்த விடயம்.


எனவே அவ்லியாக்களின் தலைவரான குத்பு நாயகம் அவர்களும் மனிதர்களை "பாதுகாக்கிறார்கள்" என்று கூறுவது மிகவும் தெளிவான மொழி நடை அல்லவா? இதனை அரபு மொழியில் ( ‫غوث‬ ) கௌது என்கிறோம். ஏற்கனவே கூறிய விதம் அவர்கள் எல்லா குத்புமார்களுக்கும் தலைவராக இருப்பதால் (‫غوث الأعظم‬) கௌதுல் அஃலம் என்று கூறுகிறோம். (‫الأعظم‬) அஃலம் என்றால், வலுப்பமான, மகத்துவமான, பெரிய, மேலான எனப் பொருள்படும். எனவே "பாதுகாப்பவர்களில் மிகவும் மேலானவர்கள்" என்பது இதன் பொருள். மொழி ரீதியாக சிந்திக்க தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் சிக்கலான விடயம் அல்ல.


"முஹ்யித்தீன்" (‫محيي الدين‬) என்றால், அவர்கள் தீனுல் இஸ்லாத்தை ஹயாத்தாக்கியவர்கள் என்று பொருள். மார்க்கத்தை ஹயாத்தாக்கிய நான்கு கலீபாக்கள், ஹனபி, மாலிக்கி, ஷாபியி, ஹன்பலி, புகாரி, முஸ்லிம், அபூ தாவுத், மாதுரீதி, அஷ்அரி இன்னும் உள்ள ஏராளமான இமாம்களுக்கும் இச்சொல் பொருந்தும். எனினும், குத்பு நாயகம் அவர்களின் காலத்தில் ஆத்மீக துறையில் ஏராளமான தவறான கருத்துக்களும் வழிகேடுகளும் நிறைந்திருந்து, அவற்றை அவர்கள் நீக்கி, எல்லா அவ்லியாக்களின் ஆத்மீகப் பாதைகளையும் ஒன்றிணைத்ததால் அவர்களுக்கு "முஹ்யித்தீன்" என்ற பெயர் நிலைத்து நின்றது. அல்லாஹு தஆலா அக்கால ஸாலிஹீன்களின் மனதில் அந்த உணர்வைப் ஏற்படுத்தியதன் காரணமாக அவர்கள் குத்பு நாயகத்தை அவ்வாறு அழைக்கலானார்கள்.


அப்துல் காதிர் (‫عبد القادر‬) என்பது அவர்களின் இயற் பெயர். தத்துவம் (சக்தி) உள்ள அல்லாஹ்வின் அடியான் என்பது அதன் பொருள். இப்போதும் இப்பெயரைத் தாங்கிய ஏராளமான முஸ்லிம்கள் உலகில் இருக்கின்றார்கள்.


"ஜீலானி" (‫الجيلاني‬) என்பது, அவர்கள் பாரசீக நாட்டில் "ஜீலான்" என்ற ஊரில் பிறந்ததால் இவ்விதம் அழைக்கப்படுகிறார்கள்.


"கத்தஸல்லாஹு" (‫قدس الله‬) என்றால், அல்லாஹ் அவர்களை கௌரவிப்பானாக, தூய்மைப் படுத்துவானாக, பறக்கத்துச் செய்வானாக என்பது பொருள். ரஸூலுல்லாஹ் மீது ஸலவாத்து சொல்வது போன்று, ஸஹாபாக்கள் மீது " ரழியல்லாஹு அன்ஹு" அவரைத் தொட்டும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்று கூறுவது போன்று, குத்பு நாயகம் அவர்களுக்கும் ஏனைய அவ்லியாக்களுக்கும் இவ்வாறு துஆக் கேட்பது ஆன்மீக வழக்கு. "ஸிர்ரஹு" (‫سره‬) என்றால் அவர்களின் ரகசியத்தை, யதார்த்தத்தை , அகமியத்தை என்பது பொருள். எனவே குத்பு நாயகம் அவர்களின் அகமியத்தை பறக்கத்தானதாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் துஆக் கேட்பதே இது. " அல் அஸீஸ்" (‫العزيز‬) என்றால், வலுப்பமான, மகத்துவமான என்பது பொருள். ஆக, "அவர்களுடைய மகத்துவமான அகமியத்தை பறக்கத்தானதாக ஆக்குவாயாக" என்று அல்லாஹ்விடம் கேட்கும் துஆ தான் இது. இதில் விளங்காத புதிர் ஒன்றும் இல்லை.


"ரழியல்லாஹு அன்ஹு" (‫رضي الله عنه‬) என்றால் அவர்களைத் தொட்டும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்பது அர்த்தம். ஸஹாபாக்களுக்கும், தாபியீன்களுக்கும், தபவுத்தாபியீன்களுக்கும் பெரும் அவ்லியாக்களுக்கும் இவ்வாறு துஆ கேட்பது இஸ்லாமிய உலக வழக்கு. அவர்கள் ஏற்கனவே அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றவர்கள் என்று முஸ்லிம் உம்மத்து யாரைப் பற்றி நம்புகிறார்களோ அவர்களுக்கு இவ்வாறு துஆ கேட்பது முஸ்லிம்களின் வழக்கமாக இருந்தது.


எனவே நாமும் குத்பு நாயகம் அவர்களை இவ்வாறு புகழ்ந்து, அல்லாஹ்விடம் துஆக் கேட்டு, அதன் பறக்கத்தையும் அவர்களின் நேசத்தையும் பெற்றுக் கொள்வோமாக..!

ஆமீன்.!


Rcvd via whatsapp

Tuesday, 23 September 2025

இஸ்லாத்தில் பேய், பிசாசுகள் இருக்கின்றதா? தொடர்= 2

 

இஸ்லாத்தில் பேய், பிசாசுகள் இருக்கின்றதா? தொடர்= 2

இஸ்லாத்தில் பேய், பிசாசுகள் இருக்கின்றதா? தொடர்= 2

●•┄─━━━•▣▣•━━━─┄•●

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,

மௌலவி பாஸில் ஷெய்கு

*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*

பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.

●•┄─━━━•▣▣•━━━─┄•●

மனிதனில் ஜின், ஷைத்தான் ஊடுருவும் வழிகள்

-----------------

ஜின், ஷைத்தான்கள் மனித உடலில் ஊடுருவி பல்வேறு தாக்கங்களைச் செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. மனிதனின் உடல், உள சமநிலைத் தன்மையை சீர்குலைத்து நோயாளியாகவும் பைத்தியக்காரணாகவும், மன நோயாளியாகவும் மாற்றிவிடும் ஆற்றல் இவர்களுக்குண்டு. இப்படி ஷைத்தானால், ஜின்களால் பீடிக்கப்பட்டவர்களை அனுபவரீதியாக காண்கின்றோம். இவர்களுக்கு சித்தமிருப்பதில்லை. சிலவேளைகளில் சுய நினைப்பும் இருப்பதில்லை. இவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டால் தவிர, சுகம் கிடைப்பது அரிது. எனவே, ஜின், ஷைத்தான் எப்படியெல்லாம் மனிதனுள் ஊடுருவி மக்களுக்கு துன்பம் கொடுக்கும் துயரத்தை ஏற்படுத்தும் வழிகளை அறிந்திருத்தல் அவசியமாகும்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஜின், ஷைத்தான் ஊடுருவும் வழிகளை தெளிவாக கூறியுள்ளார்கள். அவற்றிலிருந்து சிலவற்றை வாசகர்களாகிய உங்களுக்கு தருகின்றோம். அவை வருமாறு,


01. கெட்ட கனவு

கனவில் ஷைத்தான் ஊடுருவி கவலை, அச்சம், தொல்லை, மனக்குழப்பம் போன்றவைகளை ஏற்படுத்தும் இதனை பின்வரும் நபி மொழிகள் உறுதி செய்கின்றன.


கனவு மூன்று வகையில் அமையும். மகிழ்ச்சிகரமான அனைத்து கனவுகளும் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வருவதாகும். அச்சம், கவலை போன்றவற்றை தோற்றுவிக்கும் அனைத்து கனவுகளும் ஷைத்தானின் தூண்டுதல்களாகும்.

அறிவிப்பவர் : அவ்ப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு

நூல் : இப்னு மாஜா — 340-1 3154-3155


நீங்கள் காணும் (சந்தோஷமான) கனவுகள் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வருவதாகும். அவ்வாறு நல்ல கனவுகள் கண்டால் அல்லாஹ்வைப் புகழுங்கள்! அக்கனவை அடுத்தவர்களுக்கும் அறிவியுங்கள். மாறாக கவலை தரும் கனவுகள் ஷைத்தான் தரப்பிலிருந்து வருவதாகும். அதன் தீங்குகள் வந்து சேராமல் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள். மற்றவர்களுக்கு அதனை கூற வேண்டாம்.

புகாரி ஷரீப் : 369-12 ஹதீது எண்-6985


02. மரணவேளையில் வழிகெடுத்தல்

உயிர் பிரியும் வேளையில் ஷைத்தான் ஊடுருவி பல்வேறு தொல்லைகள் கொடுக்கும் மன ஒர்மையை குலைத்து ஈமானை இழக்க முயற்சிக்கும். அதனால், மரணவேளையில் ஷைத்தானின் தீங்கு அணுகாமல் கார்மானம் தேடுமாறு ரஸூல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள். நபியவர்கள் இவ்வாறு அதிகமாக கார்மானம் தேடி பின்வருமாறு துஆ கேட்டுள்ளார்கள்.


யாஅல்லாஹ் ஒவ்வொரு பொருட்களின் அடியிலிருந்து வரும் தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். இன்னும் இடிபாடுகள்! நீரில் மூழ்குதல்! எரியுண்டு போகுதல், மரண வேளைகளில் ஷைத்தான் மேலாதிக்கம் பெறுதல், இறைபாதையில் போரிட்டு பின்நோக்கிச் சொல்லும்போது மரணம் நிகழ்தல், விஷம் தீண்டி அதனால் மரணம் நிகழ்தல் போன்றவைகளை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

நூல் : நஸஈ 318-2 மிஷ்காத், ஹதீது எண் - 2473


03. வாந்திபேதி பெருந்தீட்டுக்களை உண்டாக்குதல்

வாந்திபேதி, உங்களின் விரோதியான ஜின்களின் அம்பின் சொட்டுக்களாகும். அது உங்களுக்கு (முஃமின்களுக்கு) ஷஹாதத் ஆகும்.

அறிவிப்பவர் : அபூபக்கர் மூஸல்அஷ்ஆரி ரழியல்லாஹு அன்ஹு

நூல் : தப்றானி, பத்ஹுல் பாரி — 182-10


ஹம்னா பின்த ஜஹ்ஸ் ரழியல்லாஹு அன்ஹா அவர்கட்கு வழக்கத்தை விட அதிக நாட்கள் மாதாந்திர உதிரப்போக்கு எற்பட்டது. அதுபற்றி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களிடத்தில் கேட்கப்பட்டது. அது ஷைத்தானின் சதிவேலையில் ஒரு சதியாகும் என்று பதில் கூறினார்கள்.

அபூதாவூத் - 56-1 , ஹதீது எண் - 267

நஸஈ : 40-1,ஹதீது எண் - 110 இமாம்


04. மனிதனில் முழு ஆதிக்கம் செலுத்துதல்

அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மகன் அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, தனது தந்தையிடம் ஜின், ஷைத்தான் உடலில் புகுந்து ஆதிக்கம் செலுத்தும் திராணி பெற்றுள்ளான் என்பதை பலர் மறுக்கின்றார்கள். உங்கள் கருத்து என்ன? என்று கேட்டதற்கு, இமாமவர்கள் பின்வருமாறு பதில் கூறினார்கள்.


மகனே! இவர்களின் வாதம் சுத்தப்பொய்! ஷைத்தான்தான் இவர்கள் நாவின் வழியாகப் பேசுகின்றான் என்பதுதான் உண்மை என்று இப்னுதைமிய்யா கூறுகின்றார்.

ஆதாரம் : மஜ்முஉல் பதாவா, பாகம் - 19, பக்கம் - 12


இப்னுதைமிய்யா மேலும் அதே நூல் பாகம் 24, பக்கம் 277ல் கூறுகின்றார்கள்.


வட்டி உண்பவர்கள் ஷைத்தான் பிடிப்பவன் போன்று மறுமையில் எழுப்பப்படுவான் குர்ஆன் 2:275 என்று அல்லாஹுத்தஆலா கூறியுள்ளான். இதனை அடிப்படையாக வைத்து ஜின், ஷைத்தான் மனிதனின் உடலில் ஊடுருவி முழு ஆதிக்கம் செலுத்தும் ஆற்றல் பெற்றுள்ளான் என்று அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் இமாம்கள் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளனர் என்று இப்னு தைமிய்யா இயம்புகின்றார்.

ஆதாரம் : மஜ்முஉல் பதாவா, 12-19


நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் குருதி ஓடும் இடங்களிலெல்லாம் ஓடுகின்றான் என்று ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.

புகாரி ஷரீப் : 159-13

முஸ்லிம் : ஹதீது எண் - 1712


மனித உடலில் ஜின், ஷைத்தான் உட்புகுந்து குடிவாழும் என்று இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தனது மகாலத்து அஹ்லுஸ்ஸுன்னா என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதாக இப்னு தைமிய்யா தனது மஜ்முஉல் பதாவா பாகம் - 19, பக்கம் 12இல் குறிப்பிடுகிறார். மேலும் இப்னுதைமிய்யா கூறுகிறார்


ஜின், ஷைத்தான் உடலில் உட்புகுந்து உடலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் தொல்லைகள் கொடுப்பதும் ஷரீஅத் அனுமதித்த உண்மைகளாகும், ஷரீஅத்தில் பொய் புரட்டு செய்பவர்கள்தான் இந்த உண்மையை மறுப்பார்கள்.


சில அறிவிலிகளும், வழிகேடர்களுமே இதனை மறுக்கின்றனர். முஃதஸிலாக்களின் உட்பிரிவைச் சார்ந்த ஜுபாயி, அபூபக்கர் அல்றாஸி உள்ளிட்டோர் கடுமையாக சாடுகின்றனர்.

ஆதாரம் : மஜ்முஉல் பதாவா, பாகம் - 19, பக்கம் 12


இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமி, மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு கூறுகின்றார்கள்.


ஷைத்தான் அவனது நம்பிக்கையை மனிதனின் உள்ளத்தில் போடுகின்றான். அவன் அல்லாஹ்வை திக்று செய்தால் பின்வாங்குகின்றான். அல்லாஹ்வை மறந்தால் உள்ளத்தில் ஊடுருவி சலனங்களை தோற்றுவிக்கின்றான். இவ்வாறு ஸஹீஹான ஹதீதுகளில் வந்துள்ளது. இதனை அல்கன்னாஸ் (என்ற ஷைத்தான்) உள்ளத்தில் சலனங்களை (சந்தேகங்களை) ஏற்படுத்துகின்றான் என்ற திருமறை வசனம் உறுதி செய்கின்றது.


ஜின் மனித உடலில் உட்புகுந்து பல்வேறு துன்பங்களை ஏற்படுத்தும் என்பது சுன்னத்துல் வல் ஜமாஅத்தின் கோட்பாடாகும் என்று அல்லாமா இப்னு ஹஜர் மக்கி ஹைதமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.

ஆதாரம் : பதாவா ஹதீதிய்யா, பக்கம் 62


05. தீப்பிடித்தல்

ஷைத்தான் பல்வேறு உபாயங்களைப் பயன்படுத்தி எரிகாயங்களையும், எரித்தலையும் ஏற்படுத்துகின்றான் என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்.


நீங்கள் தூங்க ஆரம்பித்தால் விளக்கை அணைத்து விடுங்கள். காரணம், ஷைத்தான் எலியை அனுப்பி விளக்கை வீழ்த்துவான், அது பிற பொருளில் பட்டு தீப்பிடித்து அங்கிகளையும் தாவிப்பிடித்து கரித்துவிடும்.

ஆதாரம் : அபூதாவூத் - 983-3, ஹதீது எண் - (4369)


இதனால்தான் தீப்பிடித்து எரிவதைக் கண்டால் அதான் (பாங்கு) கூறுவது சுன்னத்தாக்கப்பட்டிருக்கின்றது. அதான் ஒலியை ஷைத்தான் கேட்டால் காற்றுப் பறக்க விரண்டோடுகின்றான் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்.


06. சிறு குழந்தைகளுக்கு தொல்லைகள் கொடுத்தல்

எந்தக் குழந்தையையும் ஷைத்தான் தொடாமல் பிறப்பதில்லை. அதனால்தான் அது உரத்து அழுகின்றது தவிர, மரியம் அவர்கள் மகன் ஈஸா (அலைஹிவஸல்லம்)

ஆதாரம் : புகாரீ ஷரீப் 469-6 ஹதீது எண் 3431


பிறக்கின்ற எல்லாப் பிள்ளைகளின் விலாவிலும் ஷைத்தான் விரலால் குத்துகின்றான். அதன் வலியால்தான் பிள்ளைகள் அழுகின்றன. தவிர ஈஸா அலைஹிவஸல்லம் அவர்களையும் விரலால் குத்த எத்தனித்தான். ஒரு திரை விழுந்து தடுத்து விட்டது.

புகாரீ: ஹதீது எண் 2376-3286


07. உணவு, குடிப்பு, உறக்கம் போன்றவைகளில் உறவு கொள்ளல்

மனிதனின் உணவிலும், குடிப்பிலும், உறக்கத்திலும் ஜின், ஷைத்தான் பங்காளியாகின்றன. அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் காட்டித்தந்த ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்காமல் விட்டால் இந்த நிலை ஏற்படும். இன்னும் அல்லாஹ்வின் நினைவுமாறி மதிமயக்கத்தில் கிடக்கும் போதும் இது நடக்கும்.


ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள், நாங்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் அவையிலிருக்கும்போதும் சரி, அல்லது சாப்பிட அழைக்கப்படும் போதும் சரி அண்ணலார் உணவுத் தட்டில் கையை வைக்கமுன் நாங்கள் உண்ண ஆரம்பிக்க மாட்டோம். ஒரு தினம், ஒரு பெண் யாரோ ஒருவர் பின்னால் விரட்டி வருவது போன்று பெருமானாரின் அவைக்கு வந்து நேராக உணவுத் தட்டில் கைபோட்டாள். உடனே அவள் கையை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பிடித்துக் கொண்டார்கள். அதன்பின் ஒரு கிராமவாசி அவ்வாறே வந்தார். வந்ததும் உணவில் கையைப் போட்டார். அவர் கையையும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் இறுக்கப் பிடித்துக் கொண்டார்கள். அதன்பின் விளக்கம் கூறினார்கள்.


ஷைத்தான் இந்த உணவை ஹலாலாக ஆக்கிக்கொள்ள முனைந்தான். எதில் அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதில் அவன் பங்கேற்கிறான்.


ஷைத்தான் இந்தப் பெண்னோடு வந்து இந்த உணவில் பங்கெடுக்க முனைந்தான். அவள் கையைப் பிடித்துக் கொண்டேன். பின், கிராமவாசி மூலம் முயன்றான். அப்போதும் அவன் கையைப் பிடித்துக் கொண்டேன். எவன் கையில் என் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அவன் (ஷைத்தானின்) கை அவள் கையுடன் என் கையில் சிக்கியிருக்கின்றது.

ஆதாரம் : முஸ்லிம் ஹதீது எண் 2017


ஒரு மனிதர் அல்லாஹ்வின் பெயர் கூறாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கடைசி கவளத்தை உண்ண முன் பிஸ்மில்லாஹி அவ்வலுஹு வஆகிறுஹு என்று கூறினார். இதைக் கண்ணுற்ற காருண்ய நபியவர்கள் விளக்கம் கூறினார்கள். ஷைத்தான் உனது உணவில் பங்காளியாக இருந்தான். நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியதும் அதுவரை உன்னோடு சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை வாந்தி எடுத்து விட்டான்.

நூல் : அபூதாவூத், இப்னு ஸனிய்யா — பக்கம் 218

அஹ்மத் முஸ்னத் : 336-4


ஒரு மனிதர் நின்றுகொண்டு நீர் அருந்துவதை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கண்டார்கள். உடன் வாந்தி எடுக்குமாறு அவரைப் பணித்தார்கள். அவர் காரணம் கேட்டார். ஒரு பூனை உன்னிடம் சேர்ந்து நீர் அருந்துவதை விரும்புவீரா? என்று அவரிடம் திருப்பிக் கேட்டார்கள். இல்லை என்றார், பூனையைவிட கெட்ட ஷைத்தான் உன்னிடம் சேர்ந்து உனது நீரைக் குடிக்கின்றான் என்று விளக்கம் கூறினார்கள் வேந்தர் நபியவர்கள்.

நூல் : அஹ்மத், முஸ்னத் 366-4, ஹாக்கீம் 108-109-4


மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் விளக்கை அணையுங்கள்! அதன்மீது அல்லாஹ்வின் திருநாமத்தை உச்சரியுங்கள்! உங்கள் பாத்திரத்தையும் மூடி விடுங்கள்! அப்பொழுதும் அதன்மீது அல்லாஹ்வின் திருநாமத்தை உச்சரியுங்கள். (மூடி இல்லாவிட்டால்) அதன் (பாத்திரத்தின்) மேல் குறுக்கே ஒரு குச்சியையாவது வையுங்கள்.

நூல் : புகாரி ஷரீப், 336-6


பாத்திரத்தை மூடி விடுங்கள். கஸ்தூரி குப்பியை மூடி வையுங்கள், கதவை மூடி விடுங்கள், விளக்கை அணைத்து விடுங்கள், மூடிய போத்தலை ஷைத்தான் திறக்க மாட்டான். மூடிய பாத்திரத்தை அவனால் திறக்க முடியாது.

முஸ்லிம் : ஹதீது எண் 2012


இவ்வாறான பொன்மொழிகள் பலநூறு உண்டு. எடுத்துக்காட்டாக சிலதை முன்வைத்துள்ளேன். புரியும் திறனுள்ளவர்களுக்கு இவை போதும்! புத்திகெட்ட மாந்தர்களுக்கு எதுவும் புரியாது. ஜின் ஷைத்தானின் தீங்கிலிருந்து ஷரீஅத் கூறும் வழியில் பாதுகாப்பைப் பெற்று நிம்மதியாக வாழ அல்லாஹ் தௌபீக் செய்வானாக!

எழுத்துக்களின் மறைஞானம்.

 

எழுத்துக்களின் மறைஞானம்.

அறிவியலும் ஆன்மீகமும் சந்திக்கும் இடம்: 'அஸ்ராருல் ஹுரூஃப்' - எழுத்துக்களின் மறைஞானம்.


'அஸ்ரார் அல் ஹுரூஃப்' என்பது என்ன?


அரபு மொழியின் எழுத்துக்களுக்கு ஒரு ஆழமான, மறைவான அர்த்தம் உண்டு. 'அஸ்ரார் அல் ஹுரூஃப்' என்பது, அந்த எழுத்துக்களின் ரகசியங்களை ஆராயும் ஒரு பண்டைய அறிவியலாகும். 


இது வெறும் தத்துவமல்ல; கணிதம், மொழியியல், பிரபஞ்சவியல் மற்றும் ஆன்மீகம் ஆகிய துறைகளை ஒன்றிணைத்து, இந்த எழுத்துக்கள் பிரபஞ்சத்தின் உள்ளார்ந்த அதிர்வுகளையும், மறைஞான அர்த்தங்களையும் தாங்கிக்கொண்டிருக்கின்றன என்ற கருத்தை முன்வைக்கிறது.


இந்த அறிவு குர்ஆனில் உள்ள தனித்த எழுத்துக்களான 'அலிஃப் லாம் மீம்' (ا.ل.م) மற்றும் 'ஹா மீம்' (ح.م) போன்றவற்றை ஆய்வு செய்வதிலிருந்து உருவானது.


 இந்த எழுத்துக்கள் வெறும் குறியீடுகள் அல்ல, மாறாக அவை தெய்வீகச் செய்திகளின் திறவுகோல்கள் என்பது இந்த அறிவியலின் முக்கிய கோட்பாடு.

முக்கிய அம்சங்கள்


 * எண்ணியல் குறியீடு ('அல்-ஜுமல்'): இந்த அறிவியலின்படி, ஒவ்வொரு அரபு எழுத்திற்கும் ஒரு எண் மதிப்பு உண்டு. இந்த மதிப்புகளைக் கொண்டு, வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களின் ஆன்மீக அர்த்தங்கள் கணக்கிடப்படுகின்றன. 


உதாரணமாக, 'பிஸ்மில்லாஹ்' (بسم الله) என்ற சொல்லின் எண் மதிப்பு, சில பிரபஞ்ச சுழற்சிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு விளக்கப்படுகிறது.


 * வடிவவியல் ரகசியங்கள்: அரபு கலைக்கல்லிகிராபியின் புள்ளிகள், கோடுகள், மற்றும் வளைவுகள் அழகிற்காக மட்டும் வரையப்பட்டவை அல்ல. 


அவை ஒவ்வொன்றும் பிரபஞ்ச மற்றும் ஆன்மீக குறியீடுகளைக் கொண்டுள்ளன.


 * ஒலி மற்றும் அதிர்வின் தாக்கம்: ஒவ்வொரு எழுத்தின் ஒலியும் அதன் அதிர்வும் மனித மனம், ஆன்மா மற்றும் உடல் மீது ஒரு தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக 'அஸ்ரார் அல் ஹுரூஃப்' கூறுகிறது. 


சூஃபி ஞானிகள் 'அல்லாஹ்' (الله) என்ற நாமத்தை திரும்பத் திரும்பச் சொல்வது, மனதின் அதிர்வுகளை மாற்றி அமைதியைத் தருகிறது என்று நம்புவது இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான்.


 * பிரபஞ்சத் தொடர்பு: எழுத்துக்களுக்கும், நட்சத்திரங்களுக்கும், இயற்கைச் சுழற்சிகளுக்கும் இடையே ஒரு மறைமுகமான தொடர்பு இருப்பதாக இந்த அறிவியல் கூறுகிறது. 


இந்தத் தொடர்பு, மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களை புரிந்துகொள்ள உதவுகிறது.

பாரம்பரிய ஆதாரங்கள்

'அஸ்ரார் அல் ஹுரூஃப்' என்ற தலைப்பில் அபுல் காசிம் அல் கர்மானி (Abul Qasim al-Kirmani) எழுதிய நூல், இப்னு அரபி (Ibn Arabi) போன்ற சூஃபி ஞானிகளின் படைப்புகள், இந்த அறிவியலுக்கான முக்கிய ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன.


நடைமுறைப் பயன்பாடு

இந்த அறிவு அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது:


 * தியானம்: இறைவனின் நாமங்களை உச்சரிப்பது, எழுத்துக்களின் அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டது. 


இது மனதிற்கு அமைதியைத் தந்து, ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.


 * மறைஞான சிந்தனை: வார்த்தைகள், எழுத்துக்கள், மற்றும் எண்கள் அனைத்தும் பிரபஞ்சத்தின் உண்மைகளை பிரதிபலிக்கும் குறியீடுகள் என்ற கருத்தை இந்த அறிவு வலியுறுத்துகிறது.


'அஸ்ரார் அல் ஹுரூஃப்' என்பது வெறுமனே எழுத்துக்களைப் பற்றிய ஒரு அறிவு அல்ல. இது மொழி, கணிதம், மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள பாலமாகும். 


இது குர்ஆன் போன்ற தெய்வீக நூல்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு புதிய ஆன்மீக கண்ணோட்டத்தை வழங்குகிறது.


தொகுப்பு :- மெளலவீ HMM. பஸ்மின் றப்பானீ 

23/09 / 2025

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

செவிகள், கண்கள், இதயம்

 

செவிகள், கண்கள், இதயம்

#அல்லாஹ் நமக்குக் கொடுத்த மிகப் பெரிய நிஃமத் — செவிகள், கண்கள், இதயம்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:


 إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُو۟لَٰٓئِكَ كَانَ عَنْهُ مَسْـُٔولًۭا (அல்-இஸ்ரா: 36)


“உன் செவிகள், கண்கள், இதயம் – இவற்றையெல்லாம் குறித்து கேட்கப்படுவாய்.”


#இந்த வசனம் நமக்கு நினைவூட்டுவது என்னவெனில்:


நாம் கேட்பது எல்லாம் அல்லாஹ்வின் முன் கணக்கிடப்படும்.


#நாம் பார்க்கிறதற்கெல்லாம் நியாயத் தீர்ப்பு நாளில் கேள்வி கேட்கப்படும்.


நம் இதயத்தில் வைத்திருந்த எண்ணங்களுக்கே கூட அல்லாஹ் கேட்பான்.


#செவிகள் – நல்லதையே கேட்கட்டும்: குர்ஆன், ஹதீஸ், நல்ல அறிவுரை.


கண்கள் – ஹராமைத் தவிர்த்து நன்மை தருவதை மட்டுமே பார்ப்போம்.


#இதயம் – தூய்மையாக, அல்லாஹ்வின் நினைவில் வாழட்டும்.


இறுதியாக, சகோதரர்களே!

இவை அனைத்தும் அமானாத் (நம்பிக்கை). நாளை கியாமத் நாளில் இவற்றைப் பற்றிக் கேட்கப்படுவோம். எனவே, இன்று முதலே நம் செவியை, கண்களை, இதயத்தை அல்லாஹ் விரும்பும் வழியிலேயே பயன்படுத்துவோம்.


Muhammed Yoosuf Musthafi

Monday, 22 September 2025

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ

 

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ

எனது முரீத் உதயத்திலிருந்து 

அல்லது அஸ்தமனத்திலிருந்து 

அல்லது விண்ணில் பறந்த நிலையில் 

அல்லது ஆழ்கடலின் அடியிலிருந்து 

என்னை அழைத்தாலும் அவரை நான் இரட்ஷிப்பேன். 

நானுமோ தீர்ப்பு வாள்.  

(முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ஆண்டகை.)


ஆண்டகையின் சொற்படி காதிரிய்யஹ் வழியில் சேர்ந்து வாழும் ஒவ்வொருவரும் அவர்களின் முரீதுகள்தான். 


நீங்கள் அவர்களை அழைக்காத ஒன்றுதான் குறை.!

அழையுங்கள்! 


மனமுருகி மனக்கண் முன் உங்கள் நெற்றியின் மத்திபத்தில் முத்தொளி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ நாயகத்தை முன்னிறுத்துங்கள்.!


நீங்கள் கரம் பற்றிய காதிரிய்யஹ் தரீகத்தின் ஷைகுவை நினைத்தாலே போதும் !


உங்களுடன் இருப்பவர்கள் முஹ்யித்தீன் தஸ்தகீர் ஆண்டகையே! 


எதற்கும் அஞ்ச வேண்டாம் ! 


சித்திக்கும் முக்திக்கும் காரணா காரியமே அவர்கள்தான்.!


அல்லாஹ்வின் வலீமார்களுக்கு 

அச்சம் பயம் கவலை எதுவும் கிடையாது.!


- மௌலவீ Hmm. பஸ்மின் றப்பானீ.-

இமாம் கஸ்ஸாலியின்புரட்சிகர பார்வை

 

புரட்சிகர பார்வை

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் அபூ ஹாமித் அல் கஸாலி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் புரட்சிகர பார்வை:


 "உண்மையும் பொய்மையும் பிரித்த தீர்மானக் கோடு."


இஸ்லாமிய சிந்தனை வரலாற்றில், இமாம் அபூ ஹாமித் அல்-கஸாலி (ரஹ்) அவர்கள் ஒரு தனித்துவமான சிந்தனையாளராக மிளிர்கிறார்கள். 


அவர்கள் வெறும் தத்துவங்களை முன்வைத்தவர் அல்ல, மாறாக, சிந்தனை உலகில் ஒரு "திடமான அறிவார்ந்த புத்திசாலி" (العقل الأصولي الفذ) என்று அறியப்படுகிறார்கள். 


இதற்குக் காரணம், அவர்கள் எப்போதும் அறிவுக்குரிய அளவுகோல்களையும் (معايير), அமல்களுக்குரிய சமநிலை முறைகளையும் (موازين) உருவாக்கி, உண்மையும் பொய்யும், ஈமானும் (நம்பிக்கை) குஃப்ரும் (நிராகரிப்பு) இடையே தெளிவான வரையறைகளை வகுத்தார்கள். 


அவர்களது புகழ்பெற்ற நூல்களான "மிஃயார் அல்-இல்ம்" (அறிவின் அளவுகோல்) மற்றும் "மீஸான் அல்-அமல்" (அமல்களின் சமநிலை) ஆகியவை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.


குஃப்ர் தீர்ப்பு - ஒரு ஷரீஅத் பிரச்சினை, தர்க்க விவாதமல்ல.


இமாம் கஸாலியின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, "தக்ஃபீர்" எனப்படும் ஒருவரை காஃபிர் என்று தீர்ப்பளிக்கும் விஷயத்தை அவர்கள் கையாண்ட விதம். 


அவர்கள் தனது "அல்-இக்திஸாத் ஃபில் இஃதிகாத்" நூலில், 


اعلم قبل كل شيء أن التكفير مسألة فقهية ؛ أعني : الحكم بتكفير من قال قولاً أو تعاطى فعلاً ... أما معرفة كونه كافراً أو مسلماً فليس إلا شرعياً »


"அறிந்து கொள்ளுங்கள், தக்ஃபீர் என்பது 


ஒரு ஃபிக்ஹ் (இஸ்லாமிய சட்டம்) சார்ந்த பிரச்சினை. 


ஒருவரின் சொல் அல்லது செயலால் அவர் முஸ்லிம் அல்லது காஃபிர் எனத் தீர்மானிப்பது, வெறும் அறிவின் அடிப்படையிலானது அல்ல; அது முழுமையாக சட்ட அடிப்படையில்தான் இருக்க வேண்டும்," என்று தெளிவுபடுத்தினார்கள். 


இந்த ஆழமான பார்வை, ஒருவரின் தனிப்பட்ட உணர்ச்சிகள் அல்லது தர்க்க வாதங்களின் அடிப்படையில் அல்லாமல், இஸ்லாமிய ஷரீஅத்தின் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே இத்தகைய தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.


நம்பிக்கையின் அடிப்படை நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றுவதே !

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் அபூ ஹாமித் அல் கஸாலி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கூற்றுப்படி, குஃப்ர் (நிராகரிப்பு) என்பது 


الكفر : هو تكذيب الرسول صلى الله عليه وسلم في شيء مما جاء به ، والإيمان : هو تصديقه في جميع ما جاء به


நபீ ﷺ அவர்கள் கொண்டு வந்த எந்தவொரு விஷயத்தையும் மறுப்பதே ஆகும்.


 அதேபோல, ஈமான் (நம்பிக்கை) என்பது அவர்கள் கொண்டு வந்த அனைத்தையும் முழுமையாக ஏற்றுக்கொள்வதே. 


இந்த எளிய, ஆனால் ஆழமான வரையறை, நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மறுப்பதே குஃப்ரின் நிரந்தரமான மற்றும் பிரிக்க முடியாத அடையாளம் என்பதை நிறுவுகிறது. 


இதுவே, இஸ்லாம் மற்றும் குஃப்ர் இடையே உள்ள அடிப்படை வித்தியாசத்தை வரையறுக்கிறது.


ஃபத்ரா கால மக்கள்: அல்லாஹ்வின் கருணையின் வெளிப்பாடு.


இமாம் கஸாலி, அல்லாஹ்வின் நீதி (அத்ல்) மற்றும் கருணை (ரஹ்மா) ஆகிய பண்புகளை முன்னிறுத்தி, "அஹ்லுல் ஃபத்ரா" (நபித்துவ செய்தி சென்றடையாத மக்கள்) என்ற பிரிவினருக்கு ஒரு தெளிவான விளக்கத்தை அளித்தார்கள். 


அவர்கள் மக்களை மூன்று வகைகளாகப் பிரித்தார்கள்:


 * நபீயின் பெயரைக் கூட கேட்காதவர்கள் - இவர்கள் அல்லாஹ்வின் கருணைக்கு உரியவர்கள்.


 * நபீயின் பெயரையும், அற்புதங்களையும் கேட்டும், உண்மையை அறிந்தும் அதை மறுத்தவர்கள் - இவர்கள் நிரந்தரமான காஃபிர்கள்.


 * நபீயின் பெயரைக் கேட்டும், ஆனால் அவர்களைப் பற்றி தவறான தகவல்களை மட்டுமே அறிந்தவர்கள் - இவர்களும் அல்லாஹ்வின் கருணைக்கு உரியவர்கள்.


இந்த விரிவான அணுகுமுறை, அல்லாஹ்வின் கருணை எவ்வளவு விசாலமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. 


بل أقول : أكثر نصارى الروم والترك في هذا الزمان تشملهم الرحمة


"உண்மையில், இக்காலத்தில் ரோம் மற்றும் துருக்கியில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வின் கருணைக்குள் அடங்குவார்கள்" என்று அவர்கள் கூறியது, இந்த நியாயமான மற்றும் கருணையுள்ள அணுகுமுறைக்கு ஒரு சிறந்த சான்றாகும்.


முக்கிய ஹதீஸ்கள் மற்றும் தக்ஃபீரின் ஆபத்து.


இமாம் கஸாலி றஹ்மதுல்லாஹ் அவர்களின் இந்த நிலைப்பாடுகள், இஸ்லாத்தின் அடிப்படை மூலங்களான ஹதீஸ்களின் ஆழமான புரிதலில் இருந்து உருவானவை. 


من قال لأخيه يا كافر فقد باء بها أحدهما »

(صحيح البخاري ومسلم)


"யார் தன் சகோதரனை 'காஃபிர்' என்று சொன்னால், அது அவர்களில் ஒருவருக்குத் திரும்பும்" என்ற புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் உள்ள ஹதீஸ், தக்ஃபீர் எவ்வளவு ஆபத்தானது என்பதை வலியுறுத்துகிறது. 


அதேபோல், 


لا يُكلِّف الله نفسًا إلا وُسعها 

(سورة البقرة: 286)


"அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாகச் சுமத்தமாட்டான்" என்ற குர்ஆன் வசனம், நபித்துவ செய்தி சென்றடையாதவர்கள் மன்னிக்கப்படுவார்கள் என்ற அவர்களது முடிவுக்கு அடித்தளம் அமைக்கிறது.


இறுதியாக, இமாம் கஸாலி (றஹ்) அவர்கள் தனது "ஃபைஸல் அத்தஃப்ரிகா" என்ற நூலின் மூலம், தக்ஃபீர் என்ற சிக்கலான விவகாரத்தை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, ஷரீஅத் அடிப்படையிலான அணுகுமுறைக்கு மாற்றி, இஸ்லாமிய சமூகத்தில் உண்மையும் பொய்யும் இடையே ஒரு நிரந்தரமான வரையறையை விட்டுச் சென்றார்கள்.


தொகுப்பு :- மௌலவீ Hmm. பஸ்மின் றப்பானீ.

23/09/2025


இன்ஷா அல்லாஹ் தொடரும்....

நாயகத்தின் வெளிப்படையான முஃஜிஸாத்துக்கள்

 

நாயகத்தின் வெளிப்படையான முஃஜிஸாத்துக்கள்

நபிகள் நாயகத்தின் வெளிப்படையான முஃஜிஸாத்துக்கள்.

=========✍️=========

அரபு மூலம் : அஷ்ஷிபா

இமாம், காழி இயாழ்

றஹ்மத்துள்ளாஹி அலைஹி

தமிழில்: கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி, பாஸில் ஷெய்கு, ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி, பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.

=================

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு அல்லாஹுத்தஆலா அறிவுகளையும், ஞானங்களையும் சேகரமாக்கி கொடுத்ததும்; இன்னும், அனைத்து மார்க்க, உலக விவகாரங்களில் விளக்கமானவையை அன்னாருக்கு எடுத்துக்காட்டி தனித்துவப்படுத்தியவையும்; அன்னாரின் வெளிப்படையான அற்புதங்களில் நின்றுமானவை யாகும்.


இன்னும் அன்னாருக்கு ஷரிஅத்தின் கருமங்கள் தொடர்பான வணக்கம், கொடுக்கல் வாங்கல் உள்ளிட்டவை பற்றியும்; மார்க்க ரீதியான உட்பிரிவு விதிகளையும்; அடியார்களின் அரசியல் விவகாரங்கள் பற்றிய ஞானமும் வழங்கப்பட்டுள்ளன.


இன்னும், அன்னாருக்கு முன்னுள்ள சமுதாயத்தின் நிலைகளைப் பற்றிய தகவல்களும், இன்னும்; நபிமார்கள், றஸூல்மார்கள்; அரசர்களின் சரித்திரங்கள், சம்பவங்கள்; ஹளரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொட்டு அன்னாரின் புனித காலம் வரையிலான கடந்து போன காலங்களின் அனைத்தும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன; இன்னும், அவர்களின் ஷரியத்துக்கள்; மற்றும் வேதங்கள் பற்றியும் முழுமையாக தெரியப்படுத்தப்பட்டுள்ளன.


இன்னும், அவர்களின் சரித்திரங்கள், பழக்கவழக்கங்கள்; அவர்களின் தொடர்ச்சியான செய்திகள்; (அவர்களில் நடந்த நல்ல, கெட்ட சம்பவங்கள் உள்ளிட்ட) அல்லாஹ்வின் நாட்கள்; அவர்களுள் சிறப்புக்குரியவர்களின் பண்புகள்; அவர்களின் வேறுபட்ட அபிப்பிராயங்கள்; அவர்களின் ஆயுட் காலங்கள்; அவர்களுள் புத்திஜீவிகளின் தத்துவங்கள்; ஒவ்வொரு சமுதாயத்தினர்கள் மத்தியிலும் நடந்த சண்டைகள்; வேதக்காரர்களிடமிருக்கும் வேதத்திலுள்ள ஒவ்வொரு பிரிவினருக்குமிடையிலான முரண்பாடுகள்; அவற்றிலுள்ள இரகசியங்கள்;


இன்னும், அவற்றுள் மறைந்திருக்கும் அறிவுகள் பற்றிய தகவல்களை வழங்குவது; அவர்கள் மறைத்த விடயங்கள் பற்றி அவர்களுக்கு தகவல் வழங்குவது; அரபு மொழியில் திரிவடைந்தவையின் மாற்றங்களை தெரிவிப்பது; பல்வேறுபட்ட கூட்டத்தினரின் அரிதான வார்த்தைகள்; அவர்களின் நாகரீக அணி இலக்கியத்தின் வகைகளை சூழ்ந்தறிதல்; அவர்களின் ஆதாரங்கள், வழக்காற்றுச் சொற்கள்; உதாரணங்கள்; தத்துவங்கள்; கவிதைகள்; பொருட்கள்: பாதுகாப்பு உள்ளிட்ட இவை யாவையும் அல்லாஹுத்தஆலா நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு திறந்து கொடுத்துள்ளான்.


இன்னும், அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு செறிவான பொருளும், வார்த்தையும் கொண்ட வாக்கியங்களையும், சரியான உதாரணங்களைக் கூறும் அறிவு ஞானமும்; நுட்பமான விடயங்களைத் தெளிவாகப் புரிய வைக்கக்கூடிய; தத்துவங்கள்; கஷ்டமான வார்த்தைகள் உள்ளிட்டவையை தெளிவுபடுத்துதல் உள்ளிட்டவையை அல்லாஹுத்தஆலா வழங்கியுள்ளான்.


இன்னும், ஷரீஅத்தின் விதிகளில் குளறுபடியோ, சீர்கேடோ இல்லாமல் சரியான விதத்தில் தெளிவாக்கினார்கள்; இன்னும், அன்னாரின் ஷரிஅத்தின் அழகிய வழிமுறைகளையும்; புகழ்மிக்க ஒழுக்கங்களையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது!


இன்னும், ஒவ்வொரு பொருளும் அதன் சிறப்புக்களோடு தெளிவாக இருப்பதுடன், எந்த ஒரு குழப்பவாதிக்கும்; தெளிந்த புத்தி உள்ளவருக்கும் எந்த கோணத்திலும் சரி விரோதத்தால் அன்றி எந்த ஒரு நெருக்கடியும் அதை விளங்குவதில் கிடையாது; அதை மறுப்பவன் எவனாயினும் சரி, அவன் காஃபிர் அல்லது அறியாத மூடன் ஆவான்; எப்பொழுதாவது அதனை செவியேற்றால், இன்னும் அதன் பால் அழைக்கப்பட்டால்; அதை சரி காண்பான்; இன்னும், அதை அழகான தீர்வாகவே ஏற்றுக்கொள்வான்; அதன் மீது ஆதாரங்களையும் சான்றுகளையும் நிறுவ வேண்டிய தேவை கிடையாது!


பின்னர், முஸ்லிம்களுக்கு சுத்தமானவை ஹலாலாக்கப்பட்டுள்ளன, அசிங்கமானவை அவர்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளன; இன்னும், அவர்களின் வாழ்வுக்கும்; கண்ணியத்திற்கும்; சொத்துக்கும்; மறுமையின் தண்டனை; விரைவாக தண்டனை நிறைவேற்றல் மூலமும் இன்னும் குறிப்பிட்ட காலம்வரை நரகவேதனை உண்டு என்ற எச்சரிப்பின் மூலம் பாதுகாத்தார்கள்.

இவை அனேகமான கலைகள், அறிவுத் துறைகளைப் பொதிந்தவையாகும்; இதை அறிந்தவர்கள் அறிந்து கொள்வார்கள்; மருத்துவம்; கனவுக்கு பலன் கூறுவது; வாரிசுச்சட்டம்; கணிதம்; பரம்பரை பற்றிய அறிவு; மற்றும் இவை தவிர்ந்த அறிவுத்துறைகளையும், பிரிவுகளையும் சில அறிஞர்கள் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முபாரக்கான பேச்சை மூல அடிப்படை ஆதாரமாக்கி தங்களுடைய அறிவுத்துறைகளை விளக்கிக் கூறியுள்ளனர்.


உதாரணமாக, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (கனவின் பலன் பற்றிக்) கூறினார்கள்.


الرؤيا لاول عابر وهي علي رجل الطائر


கனவுக்கான பலன் பறவையின் காலை ஒத்துள்ளது (விரைவாக நடக்கக்கூடியது) என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியது போன்று கனவுக்கு முதலில் கூறுபவரின் கருத்தே விரைவாக பலன் கொடுக்கும்.


கனவு மூன்று விதங்களில் இருக்கும்,


1- நிஜமான கனவுகள்,


2- ஒரு மனிதனின் மனதில், (நல்லது, கெட்டது) தோன்றுவது,


3 சைத்தானின் தூண்டுதலால் ஏற்படும் கவலைக்குரிய கனவு


காலம் சுருங்கினால் முஸ்லிம்களின் கனவு பொய்யாகாது! அனைத்து நோய்க்கும் மூல வேர் அஜீரணமாகும் என்றும் கூறினார்கள்.


ஹளறத் அபூஹுரைரா ரலியல்லாஹு தஆலா அன்ஹு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்,


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (மருத்துவம் தொடர்பாகக்) கூறினார்கள்.


குடல் (இரப்பை) உடலின் தடாகம் ஆகும், நரம்புகள் (உணவின் சத்துக்களை உறிஞ்சி உடல்களுக்கு) அதிலிருந்து வருகின்றன; இந்த ஹதீதை நாம் ஸஹீஹாகக்கொள்ளாத போதிலும் சரியே! (இந்த ஹதீது மருத்துவத்தின் அடிப்படையைக் கூறுகின்றது) இமாம் தாரகுத்னி ரஹ்மத்துல்லாஹி இதை மௌலூஃ இட்டுக்கட்டப்பட்டது என்றும் கூறியுள்ளார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


நீங்கள் செய்யும் மருந்தில் மிகச் சிறந்தது நாசிக்கு நீர் செலுத்துவது, தொண்டைக்குள் நீர் செலுத்தி கொப்பளித்தல்; நடை; ஹஜாமத் (இரத்தம் குத்தி எடுத்தல்) ஆகும்; ஹிஜாமத் செய்வதற்குரிய சிறந்த நாள் பிறை 17 19 21 ஆகிய தினங்கள் ஆகும்.


அகில் கட்டை விடயத்தில் கூறினார்கள்,


இதில் ஏழு நோய்களுக்கு சுகம் கிடைக்கும் விலாப்புறத்து நோய், நீர்க்கடுப்பு; உணவிலும், உடலுறவிலும் விருப்பமின்மை; விஷம்; மாதவிடாய் பெருக்கு; ஈரல் தொடர்பான நோய்கள்;


ஆதத்தின் மகனின் வயிற்றை விட அதிக தீங்குள்ளது எதுவுமில்லை என்றும் கூறினார்கள் அவசியம் உண்ண வேண்டியிருந்தால், மூன்றில் ஒருபகுதி உணவுக்கும். மூன்றில் ஒருபகுதி குடிப்புக்கும்; மூன்றில் ஒருபகுதி சுவாசத்திற்கும் இருக்க வேண்டும்.


பரம்பரை பற்றிக்கூறினார்கள்


وقد سئل عن سبأ أرجل هو أم امرأة أم ارض فقال رجل ....


ஸப இன் سبأ என்பது ஆணா? அல்லது பெண்ணா? அல்லது நிலமா? என்று கேட்கப்பட்டதற்கு, அவர் உண்மையான மனிதர்; அவருக்கு பத்து ஆண் பிள்ளைகள் உண்டு! ஆறு பேர் எமனிலும்; நான்கு பேர் ஷாமிலும் சென்று குடியேறியுள்ளனர் என்று கூறினார்கள்.


திர்மிதி (பாபுத்தப்ஸீர்) பாகம் 5 பக்கம் 39


இந்த ஹதீது நீளமானதாகும் இதுபோன்று பரம்பரை விடயத்திலும் பதில் கூறினார்கள்.


மஜ்ம உஸ்ஸவாயித் பாகம் 1 பக்கம் 194,195


பரம்பரை பற்றிய விடயத்தில் அரபுகள் அதிக அக்கறை காட்டியிருந்தும்கூட, சிக்கலான விடயங்களை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமிடம் கேட்டார்கள்; அதை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார்கள்.


ஹிம்மீர் حمير என்பவர் அரபுகளின் தலைவராவார், நல்லவர் (ஹிம்மீரி எமனில் பிரபலமான கோத்திரமாகும்) மத்ஹஜ் (கோத்திரம்) தலையும்; இன்னும் கழுத்துமாகும்; அஸ்த் (கோத்திரம்) அதன் முதுகும், கழுத்தும் போன்றாகும்; ஹமதான் (கோத்திரம்) அதன் பிறடியைப் போன்றதாகும்.


கஷ்புல் அஸ்தார் பாகம் 3 பக்கம் 305 மஜ்ம உஸ்ஸவாயித் பாகம் 10 பக்கம் 41


கணிதம் حساب (கணிப்பு) தொடர்பாக கூறும் போது,


நிச்சயமாக, வானமும்; பூமியும் அல்லாஹ் படைத்த நாளிலிருந்து அதன் சுழற்சி ஒழுங்கிலேயே இருக்கிறது‌.


ஸஹீஹுல் புகாரி பாகம் 6 பக்கம் 55 ஸஹி முஸ்லிம் பாகம் 3 பக்கம் 1305


ஹவ்ழுல் கௌதரைப்பற்றிக் குறிப்பிடும் போது,

அதன் உள்ளிடை சமமான அளவு கொண்ட நாற் சதுரமாகும் என்று கூறினார்கள்.


ஸஹிமுஸ்லிம் பாகம் 1793


(தொழுகைக்குப் பின் செய்யும் தஸ்பீஹ் பத்து, தஹ்மீத் பத்து; தக்பீர் பத்து; மொத்தம் முப்பது இந்த) திக்றின் எண்ணிக்கையின் மொத்த கணக்கைக் கூறும் போது, ஒரு நன்மை அதன் பத்து மடங்கில் இருக்கும், (இதன்படி தொழுகையில் அதன் மொத்தம்) நாவில் 150, மீஸானில் 1500 ஆகும்.


(ஹவ்ழுக்குரிய அளவைக் குறிப்பிட்டபின்) ஓர் இடத்தைக்காட்டி இந்த இடம் கழிப்பிடத்திற்கு حمام பொருத்தமான நல்ல இடம் என்று (வாஸ்த்து முறையைக்) கூறினார்கள்.


தப்றானி, மஜ்ம உஸ்ஸவாயித் .


மதீனா வாசிகளுக்கு கிழக்கிற்கும், மேற்குக்குமிடையில் கிப்லா உண்டு என்று கூறினார்கள்.


சுனன் திர்மிதி ( கிதாபுஸ்ஸலாத் ) பாகம் 1 பக்கம் 214.


(குதிரையை அறிந்து கொள்ளவதைப் பற்றியும், குதிரையை ஓட்டுவதைப் பற்றியும் கூறுகையில்,


உயைனா عيينة அல்லது, அக்றஃ الاقرع என்பவரிடத்தில் நான் உம்மை விட குதிரையை வேகமாக ஓட்டத் தெரிந்தவர் என்று கூறினார்கள்.


ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுதக் கூடியவராக இல்லாவிட்டாலும், உன்னுடைய பேனாவை உம்முடைய காதில் வைத்துக் கொள்! அவ்வாறு வைத்துக் கொள்வது எழுத்தாளனுக்கு நினைவைக் கொடுக்கும் என்று கூறினார்கள்.


சுனன் திர்மிதி ( கிதாபுத்தஹாறத்) பாகம் 1 பக்கம் 29


ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுத வாசிக்கத் தெரியாத உம்மியாக இருந்தும் கூட, அல்லாஹுத்தஆலா அனைத்து பொருட்களின் அறிவையும் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளான், எழுத்தின் உறுப்மைவையும் அதன் அழகையும் பற்றி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிந்திருந்தார்கள் என்று ஹதீதுகளில் சந்தேகமின்றி வந்துள்ளது; பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்பதை நீட்டி எழுத வேண்டாம் என்று கூறினார்கள்.

இப்னு ஷஃபான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஹளறத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹுமா மூலம் அறிவித்துள்ளார்கள்.


முஸ்னத் பிர்தௌஸ் பாகம் 1 பக்கம் 296


மற்றுமொரு ஹதீதில், ஹளரத் முஆவியா ரலியல்லாஹு தஆலா அன்ஹு மூலம் அறிவிக்கப்படுகிறது,


ஹளறத் முஆவியா ரலியல்லாஹு தஆலா அன்ஹு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு முன்னால் எழுதிக் கொண்டிருந்தார்கள், அவர்களைப் பார்த்து மைக்கூட்டை சரியாக வைக்கவும்; பேனாவின் முனையை வலது பக்கமாக சாய்த்து வைத்து பே என்ற எழுத்தை சற்று நீட்டவும்; ஸீனின் பற்களை வேறுபடுத்தவும்; மீமின் வட்டத்தை அழிக்க வேண்டாம்! அல்லாஹ் என்பதை அழகாக எழுதவும்; றஹ்மான் என்பதை நீட்டவும்; ரஹீம் என்பதை சிறப்பாக எழுதவும்; இந்த விடயம் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும் என்று கூறினார்கள்.


முஸ்னத் பிர்தௌஸ் தைலமி

மனாஹிலுஸ்ஸபா பக்கம் 168.


ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதையாவது எழுதி இருக்கின்றார்களா? என்பது நிரூபிக்கப்படாவிட்டாலும் கூட, இது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தூரமான விடயம் அல்ல! ஏனெனில், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு ஒவ்வொரு பொருளின் அறிவும் வழங்கப்பட்டும் எழுத்தையும், வாசிப்பையும் ஏதோ ஒரு காரணத்திற்காக தடுக்கப்பட்டிருக்கலாம்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் அரபு மொழி பற்றிய அறிவும், கவிதைகளின் பொருள்களை நினைவில் கொண்டிருப்பதும் மிகப் பிரசித்தி பெற்ற விடயமாகும்; இந்த ஷிபா என்ற நூலின் முதல் பிரிவில் இது பற்றி அறிவித்துள்ளோம்; இது போன்று கடந்த கால சமுதாயங்களின் ஏராளமான மொழிகளையும் நினைவில் கொண்டிருப்பதும் நிரூபணமானதாகும்; இது சன்னா சன்னா என்ற சொல் பற்றி ஹதீதில் வந்திருப்பது போன்று ஹபஷி மொழியில் இதன் பொருள் அழகு என்பதாகும்.


ஸஹீஹுல் புகாரி (கிதாபுல்லிபாஸ்) பாகம் 7 பக்கம் 13


இதுபோன்று ஹறஜ் هرج கொலை அதிகமாகும் என்றார்கள். (ஹறஜ் என்பது ஹபஷி மொழி இதன் பொருள் கொலை)


ஸஹீஹுல் புகாரி (கிதாபுல் பிதன்) பாகம் 9 பக்கம்41

ஸஹி முஸ்லிம் (கிதாபுல் இல்மு) பாகம் 4 பக்கம் 2056.


ஹளறத் அபூஹுரைரா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் அறிவிப்பில்,


அஷ்கன்பு துர்து اشكنب درد என்று பாரசீகத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹதீதில் வந்துள்ளது, இதன் பொருள் வயிற்று வலி! இதுவல்லாத அதிகளவான அறிவுகளை முழுமையாகவோ, அல்லது சிலதையோ வாழ்நாள் முழுக்க நூல்களோடும்; கற்றலோடும் வாழ்க்கையைக் கழித்த ஒருவரால் மட்டுமே சாத்தியமாகும்.


சுனன் இப்னு மாஜா (கிதாபுத்திப்பு)

பாகம் 2 பக்கம் 1154.


ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுத வாசிக்கத் தெரியாத ஒரு உம்மி நபி! கற்றல், வாசிப்பு உள்ளிட்ட துறைகளைக் கொண்ட புத்திஜீவிகளின் சபையில் ஒருபோதும் உட்கார்ந்து கல்வி கற்றவர்களுமல்ல; ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதற்கு முன் இத்துறைகள் தொடர்பான எந்த ஓர் அறிவையும் பெற்றதாக பிரபல்யமாக இருக்கவுமில்லை.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.


وما كنت تتلوا من قبله من كتاب ولا تخطه بيمينك. العنكبوت 48


இதற்கு முன் நீர் எந்த ஒரு வேதத்தையும் ஓதியவர் அல்ல! இன்னும், உமது வலது கரத்தால் எதையும் எழுதியவருமல்ல! அப்படியிருப்பின், வீணர்கள் கண்டிப்பாக சந்தேகித்திருப்பார்கள். 29-48


அறிவுத்துறையில் அரபிகளின் அதி உச்ச இடமாக இருந்தவை,


1- ஒவ்வொரு கோத்திரத்தின் குடும்ப பாரம்பரியங்கள் பற்றிய ஞானம்,

2-முன்னோர்களின் (நல்லது, கெட்டது) பற்றிய வரலாறு,


3- கவிதையின் யாப்பிலக்கணம், அணி இலக்கணம்;


4-உரை நிகழ்த்துதல்,

உள்ளிட்டவையாகும்.


இத்துறைகளை மிக கஷ்டப்பட்டும், முயற்சித்தும்; கஷ்டப்பட்டுத் தேடிப் படித்தும்; அறிஞர்களுடன் கலந்துரையாடியும் பெற்றுக் கொண்டார்கள், இவர்கள் பெற்றுக் கொண்ட மேற்கண்ட துறைகள் யாவும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் அறிவுச் சமுத்திரத்தில் ஒரு துளியின் அளவு தான்! ஒரு பெரும் எழுத்தில் ஒரு புள்ளி தான்! நாம் இப்போது கூறியவையில் முரண்டு பிடிக்கும் வீணர்களுக்கு இதை மறுப்பதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது! நாம் கூறியவையை முன்னோர்களின் புராணங்கள் என்றும்; மனிதனால் கற்றுக் கொடுக்கப்பட்டவை என்றும் கூறுவதை தவிர்த்து காபிர்களுக்கு இதை மறுக்க எது வித தந்திரமும் கிடையாது!


(இந்த திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுத்தவர்கள் என்று) எவரைத் தொடர்பு படுத்தி இதை அவர்கள் கூறுகின்றார்களோ அவர்கள் அஜமியாகும்; ஆனால், இது (அல்குர்ஆன்) தூய நாகரிக மிக்க அரபு மொழியாகும் என்று அவர்களின் கூற்றை அல்லாஹுத்தஆலா நிராகரித்துள்ளான்; இவர்கள் கூறுவது அப்பட்டமான பகற் கொள்ளையாகும்; ஏனெனில்;


ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றதாக எவர்பக்கம் தொடர்பு படுத்தி

இவர்கள் கூறுகின்றார்களோ அவர்கள் ஒன்றில், சல்மானுல் பாரிஸி, அல்லது பல்ஆம் றூமி றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களாகும்; உண்மையில் ஸல்மானுல் பாரிஸி றழியல்லாஹு அன்ஹு ஹிஜ்ரத்துக்கு பின்பு தான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமிடம் வந்து சேர்ந்தார்கள்; அதற்குள் திருக்குர்ஆனின் அதிகமான பகுதிகள் இறங்கிவிட்டன; கணக்கற்ற அத்தாட்சிகளும் முஃஜிஸாத் (அற்புதங்) களும் வெளியாகிவிட்டன;


இவர் போன்று தான் றூமி பல்ஆம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்; திருக்குர்ஆனை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமே கற்றார்கள். இவரின் பெயரில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன; ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மர்வா மலையடியில் மக்களோடு இருப்பார்கள்; அப்போது இவர்கள் நபியவர்களிடத்தில் வருவார்கள்; அப்படியிருக்க, எவ்வாறு இவரிடம் கற்றிருக்க முடியும்? இவர்கள் இருவரும் அரபிகள் அல்லாத அந்நிய மொழி பேசும் அஜமிகள்;


குறும்புத்தனம் காட்டும் இந்த காபிர்கள் நாகரீக மொழி வளமிக்கவர்கள்; விரைவாகவும், தீர்க்கமாகவும் உரையாற்றும் வல்லமை பெற்றவர்கள்; திருக்குர்ஆனோடு போட்டி போட்டு அதுபோன்ற ஒன்றைக் கொண்டு வருவதில் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள்; திருக்குர்ஆனின் வர்ணிப்பையும்; அதன் வசனங்களையும்; அதன் போங்கையும் புரிந்து கொள்வதில் குறைபாடு உள்ளவர்களாக இருந்தார்கள்; இந்த நிலையில், இந்த அஜமிகள் அவர்களுக்கு முன்னால் எங்கே நிற்க முடியும்?


ஹளறத் சல்மானுல் பார்ஸி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் அல்லது பல்ஆம் அல்லது யஙீஷ் يعيش அல்லது ஜப்ரு جبر அல்லது யஸார் يسار என்று இவர்களின் பெயரில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன; இவர்கள் இருவரும் வாழ்நாள் முழுக்க ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள்; ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களிடமிருந்து இந்த குர்ஆனை பெற்றுக் கொண்டார்களா? என்று ஒருவர் கூட அவர்களைச் சந்தித்து கேட்கவில்லையே!

திருக்குர்ஆனைப் போன்று தான் அவர்களும் பேசினார்கள் என்று அவர்களில் ஒருவராவது கூறியதாக பிரஸ்தாபமும் கிடையாது! அந்த நேரத்தில் அதிக அளவில் விரோதிகள் இருந்தார்கள்; கடுமையாக (குறைகளைத்) தேடிக்கொண்டிருந்தார்கள்; உச்ச பொறாமை கொண்ட முரண்பட்டவர்கள் இருந்தார்கள்; இத்தனைக்கும் மத்தியில் ஒருவராவது அவரைத் தடுக்கவில்லையா? அவர்களும் கூட அவர்களிடம் ஒரு வருடம் உட்கார்ந்து அவரிடமிருந்து அறிவைப் பெற்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டு வந்ததை புறக்கணித்திருக்கலாம் தானே! அன்னாரின் கொந்தளிப்பை அடக்க அவரிடம் இருந்து கற்று ஆதாரத்தை அவசியம் முன் வைத்திருக்கலாம் அல்லவா.?


நழ்றிப்னு ஹாரிது தனக்கோ, மற்றவர்களுக்கோ பயன்படாத அவரின் புத்தகங்களில் பொய்யான சரித்திரங்களை இரட்டடிப்புச் செய்தது போன்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தனது சமூகத்தை விட்டும் ஒருபோதும் மறையவே இல்லை, அதிகளவில் வேதக்காரர்களிடமிருந்து அதிகளவு உதவியை பெற்றார்கள் என்று கூறுவதற்கு அவர்களின் நகரங்களுக்கு போக்குவரத்து செய்யவுமில்லை; எனினும்; ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாலிப பருவம் வரை நபிமார்களின் வழக்கத்தையொட்டி ஆடு மேய்த்தார்கள்; ஊரை விட்டு ஒன்று அல்லது இரு விடுத்தம் வெளியிலுள்ள நகரங்களுக்கு பிரயாணம் செய்தார்கள்; அதுவும் இதற்கு சாத்தியப்படுமளவு காலம் அங்கு இருக்க வில்லை; சொற்பளவானதைக்கூட கற்பதற்கு வாய்ப்பில்லாதிருக்கும் போது அதிகளவு கற்பது எங்கனம் சாத்தியமாகும்?


அவ்வாறு சென்ற வெளியூர் பயணங்களில் அவர்களின் கூட்டத்தார்களோடு தான் இருந்தார்கள்; தங்களின் நெருங்கிய உறவினர்களின் உறவிலிருந்து எந்த நிலையிலும் காணாமல் போகவில்லை; இன்னும், மக்கத்துல் முக்கர்ரமாவில் இருந்த காலத்தில் கூட அன்னாரின் கற்றலில் எது வித மாற்றமும் நிகழவில்லை; இன்னும் எந்த ஒரு யூத அல்லது நஸாரா பாதிரி அல்லது நட்சத்திர அறிவுள்ளவர் அல்லது ஜோதிடர் உள்ளிட்ட எவரிடமும் போய் வந்ததாகவும் கிடையாது! இவ்வளவுமிருந்தும் இந்த விடயம் அண்ணலாருக்கு வந்ததென்றால், அது திருக்குர்ஆனின் முஃஜிஸாவாகும்.


நிச்சயமாக திருக்குர்ஆன் அவர்களின் ஒவ்வொரு காரணங்களையும் துண்டாக்கி, ஒவ்வொரு ஆதாரங்களையும் சுக்கு நூறாக்கி; ஒவ்வொரு கருமங்களையும் தெளிவுபடுத்தக் கூடியதாகும்.