இந்த காணொளி யில் நீங்கள் காணும் அறிஞர் எகிப்து நாட்டின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும்
டாக்டர் ஜமால் ஃபாரூக் என்பவர்.
அந்நேரத்தில் மாணவர்கள் அவரிடம் பாடங்களை வாசித்து கொடுக்கின்றனர்.
அவரும் அப்பாடத்தின் விளக்கவுரைகளை மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறார்.
அவ்வேளையில் நல்லடியார்களான அல்லாஹ்வின் அவ்லியாக்களைக் குறித்து விளக்கிச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
அப்போது வகுப்பறையில் உள்ள ஒரு மாணவர் அவரிடம் கேட்கிறார்.
இந்த காலகட்டத்தில் அல்லாஹ்வின் அவ்லியாக்கள் இருக்கிறார்களா...?
உடனே அவர் சொல்கிறார்...
ஆம்..
இந்த காலகட்டத்திலும் அல்லாஹ்வின் அவ்லியாக்கள் இருக்கிறார்கள்..
இந்திய நாட்டில் கேரளாவில் ஒரு நல்லடியார் இருக்கிறார்..
அவர் பெயர் ஷெய்க் அபூபக்கர் அஹ்மத்.
அவருக்கு என்பது வயதாகிறது..
அவர் இந்தியாவில் ஏராளமான இஸ்லாமிய ஸ்தாபனங்கள் கட்டி எழுப்பியுள்ளார்.
மேலும் இப்னு அத்தாயில்லாஹி சிக்கந்தரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய ஹிகம் எனும் நூலுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார்.
ஒரு சந்தர்ப்பத்தில் அவர் எகிப்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அங்கே சென்ற வேளையில் இப்னு அத்தாயில்லாஹி சிக்கந்தரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கப்ரை ஸியாரத் செய்ய செல்கின்றார்.
தாங்கள்
எழுதிய ஹிகமிற்கு நான் ஒரு விளக்கவுரை எழுதியுள்ளேன்.
அதை பாடம் நடத்திக் கொள்ளட்டுமா என இப்னு அத்தாயில்லாஹி சிக்கந்தரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் சம்மதம் கேட்கின்றார்.
சம்மதம் கேட்ட பின்னர் அவர் அங்கிருந்து திரும்பி செல்கிறார்.
அன்று இரவில் அவர் படுத்து உறங்கும் போது இப்னு அத்தாயில்லாஹி சிக்கந்தரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஷெய்க் அபூபக்கர் அஹ்மத் அவர்களின் கனவில் தோன்றி ஹிகம் பாடம் நடத்துவதற்கு சம்மதம் கொடுக்கிறார்கள்...
என்று டாக்டர் ஜமால் ஃபாரூக் அவர்கள் தனது மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்..
சுப்ஹானல்லாஹ்..
எவ்வளவு பெரிய அனுபவம்..
கண்ணியமிகு ஏ.பி.உஸ்தாத் அவர்களின் இதுபோன்ற எத்தனை எத்தனை இரகசியங்கள் புதைந்து கிடக்கிறது..
அரபு நாட்டு அறிஞர் பெருமக்கள் எந்தளவுக்கு உஸ்தாதை புரிந்து வைத்துள்ளார்கள்..
வல்லோன் அல்லாஹ் உஸ்தாத் அவர்களுக்கு நிறைவான ஆரோக்கியத்தை யும் நீண்ட ஆயுளையும் வழங்கி அருள் பாலிப்பானாக.
தகவல்:
*M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.*