السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 16 May 2024

தொழுகையில் உள்ளச்சம்.

ஒரு தினம் ஹளறத் ஜிப்ரியீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து பின்வருமாறு கூறினார்கள்.  அல்லாஹ்வின் திருத்தூதரே! நான் வானத்தில்   கட்டிலில் ஒரு மலக் இருப்பதைப் பார்த்தேன்; அவரைச் சுற்றி எழுபதனாயிரம் மலக்குகள் அணிவகுத்து நின்று அவருக்கு ஊழியம் செய்கின்றனர்; அவருடைய ஒவ்வொரு மூச்சிலிருந்தும் ஒரு மலக்கை அல்லாஹ் படைக்கின்றான். இன்று அந்த மலக்கை சிறகு உடைந்தவராக "காப்" قاف மலையில் அழுது கொண்டிருப்பவராகக் கண்டேன், என்னை அவர் கண்டதும் தனக்காக ஷபாத்துச் செய்யுமாறு கேட்டார்; நீங்கள் செய்த குற்றம் என்ன? என்று அவரிடம் கேட்டேன்.;  மிஃராஜ் இரவன்று முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் வாகனம்  என்னைக் கடந்து செல்லும் போது நான் கட்டிலிலே  இருந்தேன்; அன்னாரை கண்ணியப்படுத்துவதற்காக எழுந்து நிற்க வில்லை; அதனால், அல்லாஹுத்த ஆலா இந்த இடத்தில் எனக்கு இந்த சோதனையத் தந்துள்ளான் என்றார்.

தொழுகையில் உள்ளச்சம்.

 ஒரு தினம் ஹளறத் ஜிப்ரியீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து பின்வருமாறு கூறினார்கள்.

அல்லாஹ்வின் திருத்தூதரே! நான் வானத்தில் கட்டிலில் ஒரு மலக் இருப்பதைப் பார்த்தேன்; அவரைச் சுற்றி எழுபதனாயிரம் மலக்குகள் அணிவகுத்து நின்று அவருக்கு ஊழியம் செய்கின்றனர்; அவருடைய ஒவ்வொரு மூச்சிலிருந்தும் ஒரு மலக்கை அல்லாஹ் படைக்கின்றான்.
இன்று அந்த மலக்கை சிறகு உடைந்தவராக "காப்" قاف மலையில் அழுது கொண்டிருப்பவராகக் கண்டேன், என்னை அவர் கண்டதும் தனக்காக ஷபாத்துச் செய்யுமாறு கேட்டார்; நீங்கள் செய்த குற்றம் என்ன? என்று அவரிடம் கேட்டேன்.;
மிஃராஜ் இரவன்று முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் வாகனம் என்னைக் கடந்து செல்லும் போது நான் கட்டிலிலே இருந்தேன்; அன்னாரை கண்ணியப்படுத்துவதற்காக எழுந்து நிற்க வில்லை; அதனால், அல்லாஹுத்த ஆலா இந்த இடத்தில் எனக்கு இந்த சோதனையத் தந்துள்ளான் என்றார்.
நான் அவருக்காக அல்லாஹ்விடத்தில் ஷபாஅத் செய்தேன்;
இந்த முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) மீது ஸலவாத்தை கூறச்சொல்லுங்கள் என்று எனக்குச் சொன்னான். அந்த மலக்கு உங்கள் மீது ஸலவாத் சொன்னார்; அல்லாஹுத்த ஆலா அவரின் இந்த குற்றத்தை மன்னித்தான். அவருடைய் இருசிறகுகளும் புதிதாக முளைத்தன.
மறுமையில் முதல் விசாரணை!
-------------
மறுமையில் முதன் முதலில் அடியானின் தொழுகையைத்தான் பார்க்கப்படும்; தொழுகை பூரணமானதாக இருந்தால், தொழுகையோடு சேர்த்து ஏனைய அமல்களும் ஏற்றுக்கொள்ளப்படும்; தொழுகை புரணமாக இல்லையாயின், அதோடு சேர்த்து சகல அமல்களும் நிராகரிக்கப்படும். இவ்வாறு ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
مثل الصلاة كمثل الميزان من اوفي استوفي
பர்ழான தொழுகை தராசைப்போன்றது; அதனை எவர் பூரணப்படுத்துகின்றாரோ அவர்தான் வெற்றி பெற்றவராவார்.
ஹளறத் யஸீத் றக்காஷி றழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை சரியாக நிறுத்தப்பட்டது போன்று சமச்சீராக இருக்கும்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ان الرجلين من امتي ليقومان الي الصلاة وركوعهما وسجودهما واحد وان ما بين صلاتيهما ما بين السماء والارض .
எனது உம்மத்தில் இருவர் தொழுவார்கள்; இருவருடைய றுகூஉம், ஸஜூதும் ஒரே மாதிரியாகத்தானிருக்கும். ஆனால், அவ்விருவருடைய இருதொழுகைகளும் வானத்திற்கும், பூமிக்குமிடையிலுள்ள வித்தியாசம் காணப்படும்; ஒருவரின் தொழுகையில் உள்ளச்சம் இருக்கும்; அடுத்தவர் தொழுகையில் அது இருக்காது.
மேலும் கூறினார்கள்
لا ينظر الله يوم القيامة الي العبد لا يقيم صلبه بين الركوعه وسجوده .
தொழுகையில் அவனுடைய றுகூஉ, ஸுஜூதுக்கிடையில் அவனுடைய முதுகை சமனாக வைக்காத அடியானை அல்லாஹுத்த ஆலா மறுமையில் றஹ்மத்துடைய பார்வையால் பார்க்க மாட்டான்.
மேலும் கூறினார்கள்.
من صلي صلاة لوقتها واسبغ وضوءها واتم ركوعها وسجودها وخشوعها عرجت وهي بيضاءمسفرة تقول : حفظك الله كما حفظتني ، ومن صلي صلاة لغير وقتها ولم يسبغ وضوءها ولم يتم ركوعها ولا سجودها ولا خشوعها عرجت صلاة لغير وقتها ولم يسبغ وضوءها ولم يتم ركوعها ولا سجودها ولا خشوعها عرجت وهي سوداء مظلمة تقول : ضيك الله كما ضيعتني حتي إذا كانت حيث شاء الله لفت كما يلف الثوب الخلق فيضرب بها وجهه
ஒருவர் உரிய நேரத்தில் தொழுது, வுழுவைச்சரியாகச் செய்து, றுகூவையும், ஸுஜூதையும், குஷூஉ, குழூஉ வோடு பூரணமாக நிறைவேற்றினால், அவர் தொழுகை வெண்மை@யாக புறாக்கின் கோலத்தில் விண்ணகம் செல்லும்;
நீ என்னை பாதுகாத்தது போன்று அல்லாஹுத்த ஆலா உன்னைப் பாதுகாப்பான் என்று அது கூறும்;
எவர் உரியநேரத்தில் தொழாமல் வுழுவையும் சரியாகச் செய்யாமல் றுகூஉ, ஸுஜூதில் குஷூஉ, குழூஐ பேணாமல் இருந்தால், அவர் தொழுகை இருண்ட கோலத்தில் மேலே செல்லும்; நீ என்னை எப்படி பாழாக்கினாயோ அவ்வாறே அல்லாஹுத்த ஆலா உன்னையும் பாழாக்குவானாக! என்று அது சொல்லி அவன் முகத்தில் வீசப்படும் ;
தொழுகைத் திருடன்
-------------------------------
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
أسوأ الناس سرقة الذي يسرق من صلاته
கேடுகெட்ட மனிதன் தொழுகையைத் திருடுபவனாகும்.
ஹளறத் இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
தொழுகை தராசைப் போன்றது, யார் அதை புரணமாக்கின்றாரோ அவர் வெற்றி பெறுவார்; யார் அளவு நிறையில் குறைசெய்கிறாரோ அவருக்கு அல்லாஹுத்த ஆலா கூறியபடி "வைல்" என்ற நரகத்தின் ஓடையில் வேதனை செய்யப்படுவார்.
உலமாக்களில் சிலர் பின்வருமாறு கூறுகின்றனர்.
தொழுகையாளி வியாபாரியை போன்றுள்ளார்; வியாபாரியின் சுத்தமான மூலதனத்திலிருந்துதான் இலாபம் கிடைக்கும்; அவ்வாறுதான் பர்ழானவையை நிறைவேற்றும் போதுதான் நபிலான வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஹளறத் அபூபக்கர் றழியல்லாஹு அன்ஹு தொழுகைக்குரிய நேரத்தில் பின்வருமாறு கூறுவார்கள்.
அல்லாஹுத்த ஆலா உங்களுக்காக தீயை மூட்டியுள்ளான், அதை தொழகையின் மூலமாக அணைத்திடுவோம் எழுந்து வாருங்கள் என்பார்கள்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
انما الصلاة تمسكن وتواضع
தொழுகை அமைதியோடும், பணிவோடும் இருக்கின்றது.
மேலும் கூறினார்கள்.
من لم تنهه صلاته عن الفحشاء والمنكر لم يزدد من الله الا بعدا ، وصلاة الغافل لا تمنع من الفحشاء والمنكر ،
எவர் தனது தொழுகையின் மூலமாக அருவருப்பான, கெட்ட காரியங்களைக் தடுக்க வில்லையோ அவருக்கு அல்லாஹ்விடமிருந்து தூரம் அதிகமாகிக் கொண்டே செல்லும்.
அதனால்,
மனமறதியோடுள்ளவரின் தொழுகை தீயவைகளைத் தடுக்காது.
மேலும் கூறினார்கள்.
كم من قائم وليس له من قيامه الا التعب والنصب ،
அதிகமான தொழுகையாளிகளுக்கு அவர்களின் தொழுகையின் மூலமாக கவலையையும், சிரமத்தையும் தவிர்த்து வேறு எதுவும் கிடைப்பதில்லை.!
இதன்மூலம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பராமுகமாகத் தொழுபவர்களைத்தான் சுட்டிக் காட்டினார்கள்.
மஃரிபத்திற்குரிய ஞானிகள் கூறுகின்றனர்.
தொழுகை என்பது, நான்கு பொருட்களுக்குரிய பெயராகும்.
الشروع مع العلم ، والقيام مع الحياء ، والاداء مع التعظيم ، والخروج مع الخوف .
1- அறிவோடு ஆரம்பித்தல்.
2- வெட்கத்தோடு
நிற்றல்.
3- கண்ணியத்தோடு நிறைவேற்றல்.
4- இறையச்சத்தோடு
அதை முடித்தல்.
ஷைகுமார்களில் சிலர் கூறுகின்றனர்.
من لم يجمع قلبه علي الحقيقة فسدت صلاته
தொழுகையின் எதார்த்தத்தை எவர் மனம் விளங்க வில்லையோ அவர் தொழுகை பழுதாகி விடும்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
في الجنة نهر يقال له : الافيح ، فيه جواري خلقهن الله من الزغفران يلعبن بالدر والياقوت يسبحن الله بسبعين ألف لغة اصواتهن أطيب من صوت داود عليه السلام ، ويقلن : نحن لمن صلي صلاته بالخشوع والحضور ، فيقول الله تعالي : لاسكننه داري ولاجعلنه من زواري ،
சொர்க்கத்தில் "அபயஹ்" என்ற பெயரில் ஒரு நதியுண்டு, அதில் குங்குமத்தால் படைக்கப்பட்ட ஹூறுல்ஈன்கள் முத்து, மாணிக்கத்தைக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள்; எழுபதானாயிரம் பாஷைகளால் அல்லாஹ்வை அவர்கள் தஸ்பீஹ் செய்வார்கள்; அவர்களின் குரல் தாவூத் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குரலை விட இனிமையானதாக இருக்கும். நாங்கள் தொழுகையை குஷூஉ, குழூவோடு தொழுதவர்களுக்கு உரித்தானவர்களாகும் என்று அவர்கள் கூறுவார்கள்.
இப்படிப்பட்ட தொழுகையாளிகளுக்கு எனது றஹ்மத்துக்கு அருகில் இருப்பாட்டுவேன்; அவர்களுக்கு என்னுடைய திருக்காட்சியையும் வழங்குவேன் என்று அல்லாஹுத்த ஆலா கூறுவான்.
தொழுகையை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்.?
-------------------
روى أن الله تعالي أوحي الي موسى ، يا موسى ، عليه السلام : يا موسي إذا ذكرتني فاذكرني وانت تنتفض اعضاؤك ، وكن عند ذكري خاشعا مطمئنا ، واذا ذكرتني فاجعل لسانك من وراء قلبك ، واذا قمت بين يدي ، فقم قيام العبد الذليل ، وناجني بقلب ولسان صادق .
அல்லாஹுத்த ஆலா ஹளறத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பின்வருமாறு வஹி அறிவித்தான்.
மூஸாவே! நீர் எப்போது மனம் கவலை தோய்ந்த நிலையில் என்னை நினைத்தால், நானும் உம்மை நினைப்பேன். பூரணமான நிம்மதியோடும், உள்ளச்சத்தோடும் என்னை நினைத்துக் கொண்டிரு! தனது நாவை மனதுக்கு வழிப்படச்செய்து கொள்!
எனது சன்னிதானத்திற்கு பணிவுள்ள அடியாரைப் போன்று சமுகம் கொடு! அச்சமுள்ள மனதால் என்னை அழைக்கவும்; வாய்மையான நாவால் என்னைக் கூப்பிட்டுக் கொண்டேயிரு.!
அல்லாஹுத்த ஆலா ஹளறத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இவ்வாறு வஹி அறிவித்தான்.
உங்களுடைய உம்மத்தில் என்னைப்பற்றி நினைக்காத பாவிகளுக்குச் சொல்லுங்கள்!
என்னை யார் நினைவு கூறுகின்றார்களோ அவர்களை நானும் நினைவு கூறுவேன்; இவர்கள் என்னை நினைவு கூர்ந்தாலும் அவர்களை லஃனத்துச் செய்வேன் என்று எனது தாத்தின் மீது சத்தியம் செய்துள்ளேன்.
அல்லாஹ்வை நினைவு கூருகின்ற பாவிகளின் நிலை இதுவானால் அல்லாஹ்வை நினைவு கூராமலும், பாவம் செய்து கொண்டு மிருக்கின்றவர்களின் நிலை எதுவாக இருக்கும்? என்று புத்தியுள்ளவர்களே சிந்தித்துப் பாருங்கள்.!
சில ஸஹாபாக்கள் கூறுகின்றனர்.
يحشر الناس يوم القيامة علي مثال هيئتهم في الصلاة من الطمأنية والهدوه ومن وجودالنعيم بها واللذة
மனிதன் தொழுகையில் எந்தளவு அமைதி, நிம்மதி, இன்பம், சந்தோஷம் உள்ளிட்டவயைப் பெற்றுக்கொள்கின்றாரோ அந்தளவு தான் கியாமத்தில் அமைதி உண்டாகும்.
ஒரு மனிதன் தொழுகையில் தாடியைக் குடைந்து கொண்டிருப்பதை றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டார்கள்; இவருடைய உள்ளத்தில் உள்ளச்சம் இருந்திருந்தால், அது அவருடைய உறுப்புகளில் வெளியாகும் என்று கூறினார்கள்.
(தொழுகையில் இப்படி ஈடுபடுபவர் மனதில் உள்ளச்சம் கிடையாது என்பது வெளிப்படைதான்.! )
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
من لم يخشع قلبه ردت صلاته
எவருடைய உள்ளத்தில் இறையச்சம் இல்லையோ அவருடைய தொழுகை நிராகரிக்கப்படும்.
தொழுகையில் உள்ளச்சத்தோடு தொழுபவர்களின் பண்புகள்.
---------------------
அல்லாஹுத்த ஆலா தொழுகையில் உள்ளச்சத்தோடு தொழுபவர்களைப் பாராட்டி பல திருவசனங்களில் கூறியுள்ளான்.
அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.
في صلاتهم خشعون ،
علي صلاتهم يحافظون ،
علي صلاتهم دائمون
தங்களுடைய தொழுகையில் அவர்கள் உள்ளச்
சமுடையவர்களாக இருப்பார்கள்.
22: 2
அவர்கள் தங்கள் தொழுகையின் மீதும் மிகப் பேணுதலாகவும் இருப்பார்கள். 6: 93
அவர்கள் தம் தொழுகையில் நிரந்தரமாக இருப்பார்கள். 70: 23
ஒருவர் மிக அழகாகக் கூறினார்.
தொழுகின்றவர்கள் ஏராளமிருக்கின்றனர், உள்ளச்சத்தோடு தொழுகின்றவர்கள் மிகக் குறைவு!
ஹாஜிகள் அதிகம் உண்டு! ஆனால், நல்ல நடத்தையுள்ளவர்கள் குறைவு!
பறவைகள் ஏராளமுண்டு.! ஆனால், புல்புல்- கோகிலம்- மிகக் கூறைவு!
ஆலிம்கள் அதிகமாக இருக்கின்றனர், ஆனால் , அமல்செய்கின்றவர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர்.
சரியான தொழுகை!
--------------------------------
சரியான தொழுகை என்பது, குஷூஉ, குழூஉ , பணிவு உள்ளிட்டவைக்கான பெயராகும். இதுதான் தொழுகை நிறைவேற்றுவதற்கான அடையாழமுமாகும். எவ்வாறு தொழுகை நிறைவேறுவதற்கு நிபந்தனைகள் உள்ளதோ அவ்வாறே தொழுகை கபூலாவதற்கு இது நிபந்தனைகளாகும்.
ஆகுமானது என்பதற்கும் நிபந்தனைகள் உள்ளன, ஒப்புக்கொள்ளப்படுவதற்கும் நிபந்தனைகள் உள்ளன.
ஆகுமானதற்கான நிபந்தனைகள் பர்ளுகளை நிறைவேற்றுவதாகும். கபூலாவதற்கான நிபந்தனைகள் உள்ளச்சமாகும்.
தக்வா என்பது பட்டியலின் சிரசாகும்.
அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.
قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ،
தொழுகையில் உள்ளச்சத்தோடு தொழுதவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுள்ளனர்.
தக்வாவைப் பற்றிக் கூறும் போது
انما يتقبل الله من. المتقين
அல்லாஹ் பயபக்தி உள்ளவர்களிடமிருந்து தான் ஏற்றுக்கொள்கின்றான். 5 : 27.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
من صلي ركعتين مقبلا فيهما علي الله بقلبه خرج من ذنوبه كيوم ولدته امه
எவர் முழுமையான உள்ளச்சத்தோடு தொழுகின்றாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவமில்லாதவராகின்றார்.
உண்மை என்னவென்றால், தீய சிந்தனைகளால் சரியான விதத்தில் தொழுகையில் கவனம் செலுத்த முடியாதிருக்கின்றது; அதனால் அத்தீய சிந்தனைகளிலிருந்து வெற்றிபெறுவற்கான வழிகளைக் கையாளவேண்டியது அவசியமாகும்.
இதற்கான வழிகள் பல உண்டு.! அவற்றில் ஒன்று இருட்டில் தொழுவது, அல்லது , தொழும் இடம் நிசப்தமான தாகவும், வர்ணமான விரிப்பில்லாததாகவும், கவனத்தைக் கவர்ந்திழுக்கக் கூடிய சித்திரங்கள் பொறிக்கப்பட்ட ஆடை அணியாமலும் இருக்க வேண்டும். இப்படியானவையில் தொழுகின்றவரின் பார்வை பட்டால், கவனம் அப்பக்கமே செல்லும்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹளறத் அபூ ஜஹ்ம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கிய சித்திர வேலைப்பாடுகள் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு தொழுதார்கள்; தொழுது முடித்ததும் உடனே அதைக் கழட்டி அவரிடமே திருப்பி அனுப்பி விட்டு, இது தொழுகையில் எனது கவனத்தைத் திருப்பியது என்று கூறினார்கள்.
ஒருவிடுத்தம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புதிய பாதணி அணிந்து கொண்டு தொழுதார்கள்; தொழுது முடித்த பின், அதைக் கழட்டிவிட்டு பழைய பாதணியை அணிந்து கொண்டார்கள்; தொழுகையில் அதன் பக்கம் பார்வை சென்றது என்று பின்னர் காரணம் கூறினார்கள்.
ஆண்களுக்கு தங்கம் அணிவது ஹறாமாக்கப்படுவதற்கு முன், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தங்க மோதிரம் அணிந்து கொண்டு மிம்பரில் ஏறினார்கள்; பின்னர் அதை கழட்டி வீசிவிட்டு,
شغلني هذا ،نظرة اليه ونظرة اليكم .
இது என்னை அதன்பக்கமும், உங்கள் பக்கமும் பார்வையைச் செலுத்த வைத்து விட்டது என்று கூறினார்கள்.
ஹளறத் அபூ தல்ஹா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு விடுத்தும் தங்களின் பேரீத்தம் தோப்பில் தொழுது கொண்டிருந்தார்கள்; எதிர்பாராத விதத்தில் ஒரு பறவை பறந்து வந்து மரக்கிளையிலிருந்து வெளியேறுவதற்கான வழியைக் தேடிக்கொண்டிருந்தது;
ஹளறத் அபூ தல்ஹா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆச்சிரியத்தோடு இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்; இதனால், எத்தனை றக்காஅத் தொழுதோம் என்பதை மறந்து விட்டார்கள்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, தனக்கு நேர்ந்த சோதனையைப்பற்றிக் கூறிக்கொண்டே அல்லாஹ்வின் திருத்தூதரே! ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நான் அந்தத் தோப்பை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்து விட்டேன்; நீங்கள் எப்படி விரும்புகின்றீர்களோ அப்படியே செலவு செய்து கொள்ளுங்கள்.! என்று கூறினார்கள்.
மற்றுமொரு ஸஹாபி ஹளறத் உதுமான் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில் தனது பேரீத்தம் தோப்பில் தொழுது கொண்டிருந்தார்; அவர்பார்வை பழுத்து தொங்கிக் கொண்டிருக்கும் பேரீத்தம் பழக் குலைகளின்பக்கம் விழுந்தது! அதன் அழகில் பார்வைபட்டதால் எத்தனை றக்காஅத் தொழுதோம் என்பதை மறந்து விட்டார்;
தொழுது முடித்துவிட்டு நேரே அமீருல் முஃமினீன் ஹளறத் உதுமான் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் அவைக்கு வந்து, எனது இந்தத்தோப்பை அல்லாஹ்வுக்காக தர்மம் செய்து விட்டேன்; அதனை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்து கொள்ளுங்கள் என்றார்கள். ஹளறத் உதுமான் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அதனை விற்றார்கள்.
ஸலபுகளான முன்னோர்களில் சிலர் கூறுகின்றனர்.
தொழுகையில் நான்கு விஷயங்கள் மிகக்கெட்டதாகும்.
1- அடுத்தவரைப் திரும்பிப் பார்ப்பது,
2- கையால் முகத்தைத் தடவுவது,
3- நெற்றியில்பட்ட பொடி கற்களை துப்பரவு செய்வது
4- மக்கள் நடமாடும் இடத்தில் தொழுவது
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ان الله عز وجل مقبل علي المصلي ما لم يلتفت ،
ஓருவர் தனது தொழுகையிலிருந்து கவனத்தைத் திருப்பாதிருக்கும் வரை அல்லாஹ் அந்த அடியானின் பக்கம் முகம் நோக்குகிக் கொண்டிருக்கின்றான்.
ஹளறத் அபூபக்கர் சித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகையில் நாட்டுக்கட்டையைப் போன்று (ஆடாமல் அசையாமல்) நிற்பார்கள்.
வேறு சிலர் றுகூ செய்வார்கள்; பறவைகள் இவை கற்கள் என்று எண்ணி அவர்களின் முதுகில் தங்கிவிட்டுச்செல்லும்.
இதனை நமது அனுபவமும் ஏற்றுக் கொள்கின்றது,
உலகத்தில் அதிஉயர் பதவி வகிக்கும் நபர்களுக்கு முன்னால் அவர்களைக் கண்ணியப்படுத்தும் நோக்கில் இப்படியெல்லாம் நிற்கவே செய்கின்றனர். அப்படியானால் அரசர்களுக்கெல்லாம் அரசனானான அல்லாஹ்வுக்கு முன்னால் உச்ச கண்ணியத்தோடு நிற்கவேண்டியது கடமையாகும்.
தௌறாத் வேதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
மனிதா! எனக்கு முன்னால் அழுது கொண்டும், தொழுது கொண்டும் நிற்பதற்கு அஞ்சவேண்டாம். நான்தான் உனது இறைவன்! உனது மனதை விட நெருக்கமாக இருக்கின்றேன். சகல இடங்களிலும் எனது பேரொளி வியாபித்திருக்கின்றது.
ஹளறத் உமர் பாறூக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிம்பரிலிருந்து கொண்டு பின்வருமாறு கூறினார்கள்.
இஸ்லாத்தின் சூழலிலேயே ஒரு மனிதன் வயோதிபனாகின்றான், ஆனாலும் அவனுடைய தொழுகை பூரணமானதாக அமைவதில்லை;
அதெப்படி என்று அவர்களிடம் கேட்கப்பட்டது? மனதில் உள்ளச்சம் வருவதில்லை. பணிவும் ஏற்படுவதில்லை; இவற்றோடு அல்லாஹ்வை நோக்கினால் எப்படிப் பூரணமாகும் என்றார்கள்.
ஹளறத் அபூ ஆலியா றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம்,
الذين هم عن صلاتهم ساهون
அவர்கள் அவர்களின் தொழுகையில் பாராமுகமாக இருப்பார்கள்.
என்ற இத்திருவசனத்தின் பொருள் யாது? என்று கேட்கப்பட்டதற்கு,
தொழுகையில் எத்தனை றக்காஅத் தொழுதோம், ஒன்றா? இரன்டா என்று தெரியாமல் மறக்கின்றவர்களைப் பற்றியது என்று விடை பகர்ந்தார்கள்.
ஹளறத் ஹஸன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
நேரம் முடியும் வரை தொழுகையை மறக்கின்றவர்கள் விடயத்தில் இறங்கியது.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
قال الله تعالي : لا ينجو مني عبدي الا بأداء ما افترضته عليه
எனது அடியானின் மீது நான் கடமையாக்கியதை நிறை வேற்றும் வரை அவன் என்னிடமிருந்து வெற்றி பெறவே முடியாது.