السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 17 May 2024

வரலாற்றில் #ஓர் #ஏடு #தொடர் 481

#தாய் #என்பவள் 

-------------------------------

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களிடத்தில் ஒருவர் வருகிறார்.


ஈரானில் உள்ள ஒரு நகரம், ஹுராசானிலிருந்து நான் என் தாயை சுமந்து வந்திருக்கிறேன்.


ஹஜ் செய்வதற்காக. எங்கிருந்து சுமக்கிறார்? ஈரானிலிருந்து சுமந்து வருகிறார். ஏறக்குறைய 2500 கிலோ மீட்டர்களுக்கு மேல் தூரம். இருக்கும். .


அங்கிருந்து தன் தாயை தூக்கி தன் முதுகில் சுமந்து ஒருவர் வந்திருக்கிறார். எதற்காக? அவர்களுக்கும் ஹஜ்ஜின் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக


அப்துல்லாஹ் இப்னு உமரிடத்தில் சொல்கின்றார். “என் தாயை முதுகில் சுமந்தவனாக தவாஃப் செய்தேன், என் தாயை முதுகில் சுமந்தவனாக சயீ செய்தேன், முதுகில் சுமந்தவனாக மினா அழைத்துச் சென்றேன், பிறகு அரஃபா, பிறகு முஸ்தலிஃபா, பிறகு மக்கா என அனைத்து கடமைகளையும் என் தாயை முதுகில் சுமந்தவனாகச் செய்தேன்.


பிறகு கேட்கிறார்; என் தாய்க்குள்ள கடமையை நான் செய்துவிட்டேனா? என்று.


அப்போது, இப்னு உமர் (ரலி) சொன்னார்கள்:- இல்லை. நீ சிறு பிராயத்தில் இருக்கும் போது, அந்த தாய் உன்னை பார்த்து ஒருமுறையாவது புன்முறுவலாக சிரித்திருப்பார் அல்லவா? மனமாற உன்னை பார்த்து மகிழ்ந்திருப்பார் அல்லவா? அதற்கு கூட நீ இன்னும் நன்றி செலுத்தவில்லை” என்று.


பெற்றோருக்கு முன்னால் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்,அதட்டி பேசாதீர்கள்,கண்ணியமாக பேசுங்கள்,பணிவோடு நடந்து கொள்ளுங்கள் என்று.அல்லாஹ் கூறுகின்றானே அதற்கு என்ன பொருள் தெரியுமா? எந்த விஷயங்களை எல்லாம், அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான் என்று குர்ஆனின் விரிவுரையாளர்கள் இப்னு அப்பாஸ் சொல்கிறார்.


“உங்கள் பெற்றோருக்கு முன்னால் உங்கள் ஆடைகளை உதறாதீர்கள். அப்படி உதறும் போது ஏற்படுகிற காற்றினாலோ அல்லது அந்த ஆடையில் பட்டு இருக்கக்கூடிய தூசியினால் அவர்கள் சிரமப்பட்டால் அதுவும் அவர்களுக்கு நீங்கள் செய்கிற நோவினை,குறைபாடு என்று இப்னு அப்பாஸ் அவர்கள் விளக்கம் சொல்கின்றார்கள். ( சாதுல் மஸீர் 1/92 – அல்குர்ஆன்: 2: 83 )


மேலும் சொல்கின்றார்கள், அவர்களை அதட்டாதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் அல்லவா, அவர்களுக்கு முன்னால் கத்திப்பேசாதீர்கள்,சத்தத்தை உயர்த்திப் பேசாதீர்கள்.


ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடத்தில் கேட்கப்படுகின்றது.


பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றால் என்ன? என்பதாக.


أن تبذل لهما ما ملكت ، وأن تطيعهما في ما أمراك به ، إلا أن تكون معصية


“நீ உன் கை வசம் என்ன வைத்திருக்கிறாயோ, அனைத்தையும் அவர்களுக்காக செலவு செய்ய வேண்டும். பாவமற்ற காரியங்களில் அவர்கள் கூறும் விஷயத்திற்கு நீ கீழ்படிந்து நடக்கவேண்டும்”. நூல் : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், எண் : 9288.


அபூஹுரைரா (ரலி) அவர்கள் இருவரை பார்க்கிறார்கள்.அவர்களை பார்த்ததற்கு பிறகு, இவர் யார்? என்று கேட்கிறார். அப்போது, இரண்டாமவர் சொல்கிறார், இவர் என்னுடைய தந்தை என்பதாக. உன் தந்தையா! அவரை பெயர் கூறி நீ அழைக்காதே! அவர் நடந்தால் அவருக்கு முன்னால் நீ நடக்காதே! ஓர் இடத்திற்கு நீங்கள் சென்றால் அவர் உட்கார்வதற்க்கு முன்னால் நீ உட்காராதே! ( நூல்: அத்துர்ருல் மன்சூர் 6/253, அல்குர்ஆன்: 17:23,34 )


ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடத்தில் அவர் மாணவர் ஒருவர்.”என் பெற்றோர் தப்பு செய்கிறார்கள் நான் என்ன செய்வது?


இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) சொல்கிறார்கள்.


கண்ணியமாகச் சொல், நீ சொல்வதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் சரி,இல்லை உன் பேச்சு பிடிக்கவில்லை, அவர்கள் முகம் திருப்புகிறார்களா? அவர்கள் அதை வெறுத்தால் நீ அவர்களை அப்படியே விட்டு விடுவீராக”. ( நூல்: உஸ்னதுல் இப்னு ஜஅத் 2608 )


சயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்கள் பல நூறு சஹாபாக்களிடத்தில் கல்வி படித்த மிகப்பெரிய தாபியீ அவர்களிடத்தில் கேட்கப்படுகிறது,


பெற்றோருக்கு முன்னால் முற்றிலும் பணிந்து விடுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறானே இதற்கு விளக்கம் என்ன? என்று, அதற்கு அவர்கள் பதில் சொன்னார்கள்; “ஒரு அடிமை தவறு செய்து விட்டான்,தன் எஜமானனுக்கு குற்றம் இழைத்துவிட்டான், அந்த எஜமானன் மிகக் கோபக்காரன்,மிகக் கண்டிப்புடையவன், அந்த எஜமானனுக்கு முன்னால் குற்றம் செய்த அடிமை எப்படி பயந்து பணிவோடு இருப்பானோ அப்படி பணிவோடு நீங்கள் நிர்ப்பதைத்தான் அல்லாஹ் இங்கு சொல்கின்றான், பெற்றோர்களுக்கு முன்னால் பணிந்து விடுங்கள் என்று.”.