السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 16 May 2024

நக்ஷபந்தியா தரீக்கை, இந்தியாவிலும், இலங்கையிலும் வளர்த்த மகான்கள்!

 

நக்ஷபந்தியா தரீக்கை, இந்தியாவிலும், இலங்கையிலும் வளர்த்த மகான்கள்!

நக்ஷபந்தியா தரீக்கா உலகில் பல நாடுகளில் பரந்து காணப்படுகின்றது!
இத்தரீக்காவின் ஸில்ஸிலா றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிலிருந்து கலீபா ஸித்தீக்குல் அக்பர் செய்யிதினா அபூபக்கர் சித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக ஆரம்பித்து, பலகிளைகள் விட்டு ஹளறத் பஹாவுத்தீன் நக்ஷபந்தி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் வரை வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது!
அஷ்ஷைகு பஹாவுத்தீன் நக்ஷபந்தி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களுக்குப் பின் இந்த ஸில்ஸிலா "நக்ஷப்ந்தி" என்ற பெயரில் அறிமுகமாகியது!
ஆகவே, நக்ஷபந்தியா தரீக்காவின் ஸ்தாபகர் ஹளறத் பஹாவுத்தீன் நக்ஷபந்தி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தான் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.,
இத்தரீக்காவின் பயிற்சி முறை ஜத்பிலிருந்து ஆரம்பிப்பிக்கின்றது!, இதனால், ஏனைய தரீக்காக்களை விட இதன் பயிற்சி முறை வேகமானதாகும்,
இத்தரீக்காவை இந்தியாவில் முழுவீச்சில் பரப்பியவர்கள் முஜத்தித் அல்பதானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களாகும்,
இவர்களுக்குப் பின், அவர்களின் கலீபாக்களில் ஷைகு ஆதம், ஹளறத் பாகிபில்லாஹ் வழியாக ஷைகுல் இஸ்லாம் அஷ்ஷாஹ் வலியுல்லாஹில் முஹத்திதுத் திஹ்லவி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் முக்கியமானவர்களாகும்,
ஷைகுல் இஸ்லாம் அஷ்ஷாஹ் வலியுல்லாஹில் முஹத்திதுத் திஹ்லவிக்குப்பின் நான்காவது கலீபா ஞானக்கடல் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபிஹளறத் நாயகம் ஹைதறாபாத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பிரபலமானவர்களாக கருதப்படுகின்றார்கள்;
ஞானக் கடல் ஹைதராபாத் ஸூபிஹளறத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் வரை "வஹ்தத்துல் வுஜூத்," "வஹ்தத்துஷ்ஷுஹுத்" ஆகிய இருகோட்பாடுகளும் இத்தரீக்காவிலும், ஏனைய ஸூபிஸ தரீக்காக்களிலும் முடிச்சு அவிழ்க்கப்படாத பேசுபொருளாக இருந்து வந்தது!
இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள முடிச்சை கண்ணியத்திற்குரிய அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபிஹளறத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் அவிழ்த்து இப்பிரச்சினைக்கு "அல்ஹகீகா" என்ற நூலின் மூலமாக முற்றுப்புள்ளி வைத்தார்கள்,
ஞானக் கடல் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபிஹளறத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் நக்ஷபந்தியா தரீக்காவின் முறாக்கபா முறையையும், திக்றின் வகைகளையும் ஆழமாக "அஸ்ஸுலூக்" என்ற நூலில் விளக்கி எழுதியுள்ளார்கள்,
இவர்களுக்குப் பின் இப்போதனையை முழுவீச்சில் தமிழ்உலகத்தில் எழுத்து மூலமாகவும், பேச்சின் மூலமாகவும் முன்னெடுத்துச் சென்றவர்கள் கொழும்பு குப்பியாவத்தையில் அடங்கியிருக்கும் *கண்ணியத்திற்குரிய ஷைகுனா அஷ்ஷாஹ் ஷைகு அப்துல் காதிர் ஸூபி காதிரி, நக்ஷபந்தி* அவர்கள் என்பதை எவராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது!
இலங்கையில் நக்ஷபந்தியா தரீக்காவை அன்னார்மூலமாகவும், அன்னாரின் மறைவிற்குப் பின், அன்னாரின் *கலீபாக்கள்* எழுபது ஆண்டுகளுக்கு மேலாக போதிக்கப்பட்டு வருவதையும், இத்தரீக்காவின் உயிரோட்டமான வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டை அன்னார் பல நூற்கள் மூலமாகவும், போதனைகள் மூலமாகவும் உயிரூட்டி பாதுகாத்தார்கள் என்பதையும் நன்றியோடு நினைவுகூருவோமாக!


கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி