அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.
واتقوا الله الذي تساءلون به والارحام
அல்லாஹ்வை அஞ்சிநடந்து கொள்ளுங்கள்; (அவன் எத்தகையோரென்றால்) அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் உங்களுக்கு (வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; 4:1
மீண்டும் கூறுகின்றான்.
فهل عسيتم ان توليتم ان تفسدوا في الارض وتقطعوا ارحامكم اولئك الذين لعنهم الله فاصمهم واعمي ابصارهم
ஆகவே நயவஞ்சகர்களை போருக்கு வராமல் நீங்கள் புறக்கணித்து விட்டீர்களானால், பூமியில் நீங்கள் குழப்பம் செய்வதையும் உங்களுடைய உறவுமுறைகளை துண்டித்து விடுவதையும் எதிர்பார்க்கிறீர்களா?
47: 22
மேலும் கூறுகின்றான்.
الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك هم الخسسرون .
அ(ந்த நயவஞ்சகரான)வர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்து விடுகின்றனர்; மேலும், சேர்ந்திருக்க வேண்டும் என்று அல்லாஹ் எதைக் கட்டளையிட்டானோ அதைத் துண்டித்து பூமியில் குழப்பமும் செய்கிறார்கள்; இவர்கள்தாம் நஷ்டவாளிகள். 2: 25
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ان الله تعالي خلق الخلق حتي فرغ منهم قامت منهم الرحم فقالت. هذا مقام العائذ بك من القطيعة ؟ قال نعم اما ترضين ان اصل من وصلك واقطع من قطعك ؟ قال بلي ، قال فذاك لك
அல்லாஹுத்தஆலா படைப்புகளை படைத்து முடித்தபின், குடும்ப உறவு எழுந்து அல்லாஹ்விடத்தில் குடும்ப உறவை துடிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறியது; யார் உன்னுடைய உறவை தொடர்கின்றாரோ, அவருடைய உறவை நானும் தொடருவேன்; யார் உன்னுடைய உறவை துண்டித்து கொண்டாரோ, அவருடைய உறவை நானும் துண்டித்ப்பேன்; இது உனக்கு திருப்தியா? என்று அல்லாஹ் கேட்டான், ஆம்! என்றது, அதன்பின்,
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வரும் வசனத்தை ஓதினார்கள்.
فهل عسيتم ان توليتم ....
ஆகவே, நயவஞ்சகர்களை போருக்கு வராமல் நீங்கள் புறக்கணித்து விட்டீர்களானால், பூமியில் நீங்கள் குழப்பம் செய்வதையும் உங்களுடைய உறவுமுறைகளை துண்டித்து விடுவதையும் எதிர்பார்க்கிறீர்களா?
47 : 22 . 23.
அறிவிப்பவர் :
அபூஹுறைறா றழியல்லாஹு அன்ஹு.
நூல்: புகாரி, முஸ்லிம்.
ஹளறத் அபூபக்கர் சித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ما من ذنب اجدر -اي احق ان يجعل الله لصاحبه العقوبة في الدنيا مع ما يدخر له في الآخرة من البغي وقطيعة الرحم .
அழிச்சாட்டியம்செய்வதும், குடும்ப உறவை முறிப்பதும் இந்த உலகத்திலும், மறு உலகத்திலும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
மேலும் கூறினார்கள்.
لا يدخل الجنة قاطع
குடும்ப உறவை துண்டிப்பவன் சொர்க்கம் செல்ல மாட்டான்.
முஸ்னத் அஹ்மதில் பதிவாகியுள்ளது.
ان اعمال بني ادم تعرض كل خميس وليلة جمعة فلا يقبل عمل قاطع رحم
மனிதனின் அமல்கள் ஒவ்வொரு வியாழனும், வெள்ளி இரவும் எடுத்துக் காட்டப்படுகின்றன; குடும்ப உறவை வெட்டி வாழ்பவனுடைய எந்த அமலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
இமாம் பைஹகீ அறிவிக்கின்றார்கள்.
انه اتاني جبريل عليه السلام فقال هذه ليلة النصف من شعبان ولله فيها عتقاء من النار بعدد شعر غنم بني كلب ، لا ينظر الله فيها الي مشرك ، ولا الي مشاحن ، ولا الي قاطع رحم ، ولا الي مسبل اي ازراره - خيلاء ، ولا الي عاق لوالديه ولا الي مدمن خمر .
ஷாபான் 15 ஆவது இரவு ஜிப்ரீல் என்னிடம் வந்தார், இன்று அல்லாஹுத்தஆலா கிலப் கோத்திரத்தாரின் ஆடுகளின் முடிகளின் எண்ணிக்கை அளவு பாவிகளுக்கு மன்னிப்பு வழங்குகிறான்; ஆனால், இணைவைக்கின்ற முஷ்ரிக், குரோதம் பாராட்டுபவன், குடும்ப உறவை வெட்டி வாழ்பவன், பெருமைக்காக தனது கைலியை கரண்டைக்கு கீழே தொங்க விடுபவன், பெற்றோருக்கு மாறு செய்பவன், மது அருந்துபவன் உள்ளிட்ட இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்க மாட்டான்.
ஹளறத் இப்னு ஹிப்பான் றஹ்மத்துள்ளாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ثلاثة لا يدخلون الجنة ، مدمن خمر ، وقاطع رحم ، ومصدق بالسحر
மூன்று நபர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்கள்;
1- குடும்ப உறவைவெட்டி நடப்பவன்,
2-குடி வெறியிலிருப்பவன்.
3-சூனியக்காரன்
முஸ்னத் அஹ்மத், இப்னு அபீ துன்யா, பைஹகி உள்ளிட்டோர் அறிவிக்கின்றார்கள்.
يبيت قوم من هذه الامة علي طعام وشراب ولهو. ولعب فيصبحوا قد مسخوا قردة وخنازير وليصيبنهم خسف وقذف حتي يصبح الناس فيقولون : خسف الليلة ببني فلان وخسف الليلة بدار فلان دور
بشربهم الخمر ، ولبسهم الحرير ، واتخاذهم القينات ، واكلهم الربا ، وقطيعتهم الرحم
இந்த உம்மத்தில் சிலர் உண்பது, குடிப்பது, பொழுதுபோக்கு, விளையாட்டு உள்ளிட்டவையிலேயே இரவை கழிக்கின்றனர்; காலை விடிந்ததும் அவர்களுடைய உருவங்கள் பன்றிகளாக, குரங்குகளாக உரு மாற்றப்படும்;
பூமிக்குள் அவர்கள் புதையுண்டு போவார்கள்;
இந்தநிலையில் காலையில் மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, இந்த குடும்பம் பூமிக்குள் புதையுண்டு போய்விட்டது! இன்ன கண்ணியமான குடும்பம் எல்லோரும் சேர்ந்து பூமியில் புதையுண்டு போய்விட்டார்கள்; எனபேசிக் கொள்வார்கள்;
அவர்களில் குடிகாரன், வட்டிக்காரன், குடும்ப உறவைத் துண்டிப்பவன், நாட்டியக்காரி, பட்டாடை உடுப்பவர்கள் இருப்பார்கள்;
இவர்களுடைய இந்த செயலின் காரணமாக லூத் அலைஹிஸ்ஸலாமவருடைய சமூகத்துக்கு நடந்ததுபோல் கல்மாரி பொழியும், ஆது சமூகத்திற்கு நடந்ததுபோல் ஊழிக்காற்று வீசும், இதன் காரணமாக குடும்பம், கோத்திரங்களாக அவர்கள் அழிந்து போவார்கள்.
தப்றானி றஹ்மத்துள்ளாஹி அலைஹி அவர்கள் அவ்ஸத் என்ற கிரந்தத்தில் ஹளறத் ஜாபீர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் அறிவிக்கின்றார்கள்.
நாங்கள் ஒன்றுகூடி பேசிக்கொண்டிருக்கும்போது, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களின் வீட்டில் இருந்து வெளியே வந்தார் அப்போது இவ்வாறு கூறினார்கள்
முஸ்லிம்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.! குடும்ப உறவைப் பேணிக் கொள்ளுங்கள், காரணம், குடும்ப உறவுக்கான நன்மை விரைவாகக் கிடைக்கும்;
அதிகமாக அநியாயம் செய்வதை அஞ்சிக்கொள்ளுங்கள்! அதற்கான தண்டனையும் விரைவாகவே கிடைக்கும்; பெற்றோருக்கு மாறு செய்வதை அஞ்சுங்கள்!
சொர்க்கத்தின் சுகந்த வாடை ஆயிரம் ஆண்டுகள் தொலை தூரத்துக்கு வீசிக் கொண்டிருக்கும், பெற்றோருக்கு மாறு செய்கின்றவனும், குடும்ப உறவை வெட்டி நடப்பவனும் , கிழட்டு விபச்சாரியும், பெருமைக்காக தன்னுடைய கைலியை (சாறனை) கரண்டைக்குக் கீழே தொங்க விடுவபவனும் அதை நுகர மாட்டான். பெருமை, ரப்புல் ஆலமீனுக்குரியதாகும்.
ஹளறத் இஸ்பஹானி றஹ்மத்துள்ளாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நாங்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சபையிலிருந்தோம், "எமது சபையில் குடும்பத்தை வெட்டி நடப்பவர் உட்கார வேண்டாம் என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அப்போது சபையில் இருந்த ஒரு வாலிபர் எழுந்து அவருடைய தாயின் சகோதரியின் வீட்டுப் பக்கமாக சென்றார்; அங்கே அவர்களுக்கு மத்தியில் ஒரு பிணக்கு நடந்து கொண்டிருந்தது, அவளிடத்தில் அவர் மன்னிப்பு கேட்டார், அவளும் அவருக்காக மன்னித்தார், பின்னர் சபைக்கு வந்தார், அப்போது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
ان الرحمة لا تنزل علي قوم فيهم قاطع الرحمة
குடும்ப உறவை வெட்டி நடப்பவன் இருக்கும் சபையில் அல்லாஹ்வுடைய ரஹமத் இறங்குவதில்லை.
ஹளரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு தஆலா அன்ஹு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களிடமிருந்து கேட்டபின்வரும் ஹதீதுகள் இதற்கு இன்னமும் வலு சேர்க்கின்றன.
குடும்ப உறவைப் பேணாதவர்கள் அனைவரும் எமது சபையிலிருந்து வெளியேறுங்கள்.!, என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் சொன்ன போது, ஒரு வாலிபர் சபையிலிருந்து வெடுக்கென கிளம்பி அவருடைய தாயின் சகோதரியின் வீட்டுக்கு சென்றார்; அவரோடு இரண்டு வருட பகைமை இவருக்கு இருந்தது,
இருவரும் ஒருவரை ஒருவர் மன்னித்துக் கொண்டு திருப்தி அடைந்தனர், இவ்வளவு விரைவாக மன்னிப்புத் தேடி வந்ததற்கான காரணத்தை தாயின் சகோதரி கேட்டார்,
"குடும்ப உறவை வெட்டி நடப்பவன் இருக்கும் இடத்தில் அல்லாஹ்வுடைய ரஹமத் இறங்குவதில்லை" என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் என்று கூறினார்.
இமாம் தப்றானி றஹ்மத்துள்ளாஹி அலைஹி அவர்கள் ஹளறத் அஃமஷ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் அறிவிக்கின்றார்கள்.
ஹளறத் இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸுப்ஹுக்குப் பின் ஒரு மஜ்லிஸிலிருந்து கொண்டு பின் வருமாறு கூறினார்கள்.
இங்கு நாங்கள் துஆக்கேட்கப் போகின்றோம்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! குடும்பத்தை வெட்டி நடப்பவர்கள் இங்கிருந்து எழுந்து செல்லுங்கள் என்றார்கள்; காரணம்
فان ابواب السماء مرتجة مغلقة دون قاطع الرحم
குடும்பத்தை வெட்டி நடப்பவர் மீது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. (அதனால் இவர்கள் இங்கிருந்தால் துஆக்கபூலாகாது)
புகாரி, முஸ்லிமில் பின்வரும் ஹதீது இடம் பெறுகின்றது.
الرحم معلقة بالعرش تقول ، من وصلني وصله الله ، ومن قطعني قطعه الله ،
உறவும், குடும்பமும் அல்லாஹ்வின் அர்ஷோடு பிணைக்கப்பட்டிருக்கும்; யார் என்னோடு சேருகின்றாரோ அவரோடு அல்லாஹ்வும் சேர்ந்திருப்பான்; யார் என்னோடு துண்டித்து நடக்கின்றாரோ அவரை அல்லாஹ்வும் துண்டிப்பான்.
ஹளறத் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்பு றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பின்வருமாறு கூறியதை நான் காதால் கேட்டேன்.
قال الله تعالي انا الله وانا الرحمن خلقت الرحم وشققت لها اسما من اسمي ، فمن وصلها وصلته ، ومن قطعها قطعته او قال بتته اي قطعته ،
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:
நான்தான் அல்லாஹ்! ரஹ்மானும் நானே! இரக்கத்(றஹ்மத்)தை நானே படைத்தேன்; அதிலிருந்துதான் எனது திருநாமத்தை ஏற்படுத்தினேன்; யார் குடும்ப உறவைப் பேணுகிறாரோ, அவர் எனது றஹ்மத்துக்குள் உள்வாங்கப் படுவார்; எவர் குடும்பத்தை வெட்டி நடக்கிறாரோ அவர் எனது றஹ்மத்திலிருந்து தூரமாகி விடுவார்.
முஸ்னத் அஹ்மதில் பின்வரும் அறிவிப்புக் காணப்படுகின்றது.
ان من اربي الربا الاستغابة في عرض المسلم بغير حق ، وان هذه الرحم شجنة من الرحمن عز وجل فمن قطعها حرم الله عليه الجنة ،
வட்டியில் மிகப்பெரிய வட்டி முஸ்லிம்களின் சொத்துக்களை அநியாயமாக சாப்பிடுவதாகும்;
குடும்ப உறவு அல்லாஹ்வுடைய றஹ்மத்தின் ஒரு கிளையாகும்; குடும்ப உறவைப்பேணாதவனுக்கு அல்லாஹுத்த ஆலா சொர்க்கத்தை ஹறாமாக்கிவிடுவான்;
ஸஹி ஹிப்பானில் பின்வரும் ஹதீது பதிவாகியுள்ளது.
குடும்ப உறவு (رحم) என்பது அல்லாஹ்வின் கொடையாகும்
இரட்சகா! எனக்கு அநியாயம் நடந்துள்ளது, என்னைப்பற்றி குறை கூறப்படுகிறது என்று குடும்ப உறவு அல்லாஹ்விடத்தில் முறையிட்டது;
யார் உன்னோடு சேர்ந்து நடக்கின்றாரோ அவரை எனது றஹ்மத்தால் அணைத்துக் கொள்வேன், யார் உன்னை வெட்டி நடக்கின்றாரோ அவரை எனது றஹ்மத்திலிருந்து தூரமாக்குவேன், என்று அல்லாஹுத்த ஆலா கூறினான்.
பஸ்ஸார் றஹ்மத்துள்ளாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
குடும்ப உறவு என்பது அல்லாஹ்வுடைய அர்ஷிலிருக்கும் துறட்டியாகும்; யார் என்னோடு உறவு வைத்துள்ளாரோ அவரோடு நீயும் உறவை வைத்துக்கொள்! யார் என்னைத் துண்டித்து நடக்கின்றாரோ அவரை நீயும் தூண்டித்து நட என்று அல்லாஹ்விடத்தில் அதன் கூரிய நாவால் கூறியது;
உன்னுடைய பெயரும், றஹ்மான் என்ற எனது பெயரும் றஹீம் என்ற சொல்லிலிருந்து பிரிந்ததாகும்; உன்னைச் சேர்த்துக் கொண்டு நடப்பவனை நானும் சேர்த்துக் கொள்வேன், உன்னை வெட்டி நடப்பவனை நானும் என்னுடைய றஹ்மத்திலிருந்து வெட்டி விடுவேன் என்று அல்லாஹுத்த ஆலா கூறினான்.
மேலும் பஸ்ஸார் அறிவிக்கின்றார்கள்.
மூன்று வஸ்த்துக்கள் அல்லாஹ்வுடைய அர்ஷோடு கொழுகி நிற்கும்.
1- குடும்ப உறவு :
நான் உன்னோடுதானிருப்பேன், உன்னை விட்டும் பிரிய மாட்டேன் என்று கூறும்
2- அமானத்:
நம்பிக்கை, நான் உன்னோடுதானிருப்பேன், உனது றஹ்மத்தை விட்டும் ஒருபோதும் பிரிய மாட்டேன் என்று கூறும்.
3- நிஃமத்:
நான் உனது றஹ்மத்தை விட்டும் பிரிய விரும்ப வில்லை; எனது நிராகரிப்பு ஏற்படாமலிருக்க வேண்டும் என்று கூறும்.
தொடரும்...