இறுதிக் காலத்தில் பொய்யர்களும் புரட்டர்களும் தோன்றுவார்கள். நீங்களும் உங்கள் முன் உள்ளவர்களும் கேட்டிராத புதிய செய்திகளைக் கூறுவார்கள். நீங்கள் அவர்களோடு சேர்வதை எச்சரிக்கின்றேன்.
அவர்களையும் எச்சரிக்கின்றேன். நீங்கள் அவர்களிடம் சேராவிட்டால், அவர்களை உங்களிடம் நெருங்க இடம் கொடுக்காவிட்டால் (மாத்திரமே) உங்களை வழி கெடுக்க அவர்களால் முடியாது.
(முஸ்லிம்).
காயல் பட்டினத்தில் பிறந்து பறங்கிப்பேட்டையில் மறைந்து வாழும் மகான் அல்லாமா மஹ்மூத் தீபி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை அறியாதார் தமிழுலகில் எவரும் கிடையாது. அறபு மொழி சட்டம், ஆன்மீகம் உள்ளிட்ட எல்லாத்துறைகளிலும் அபார ஆற்றல் பெற்றிருந்த இவர்கள், கஃபத்துல்லாஹ்வில் பல்லாண்டுகள் தலைமை இமாமாகப் பணிசெய்து அதே கஃபத்துல்லாஹ்வில் அறிவார்ந்தோருக்கு அறிவுரை வழங்கிய அறிவுலக மேதை இமாம் சதக்கத்துள்ளாஹ் அப்பா றஹ்மத்துள்ளாஹி அலைஹி அவர்களின் முக்கிய சீடராகும்.
இவர் பல மௌலிதுகளை அறபியில் எழுதியுள்ளார்கள். அதில் முஹ்யத்தீன் மௌலிது, ஷாஹுல் ஹமீது மௌலிது குறிப்பிடத்தக்கதாகும். கவிதையாகவும், உரை நடையாகவும் எழுதப்பட்ட இம்மௌலிதுகள் தமிழ் கூறும் நல்லுலகில் பக்தியுடன் படித்தவர், பாமரர் அனைவரும் ஓதி வருகின்றனர்.
தக்க சான்றுடன் எழுதப்பட்ட இம்மௌலிதுகள் மேற்படி வலிமார்களின் வரலாற்றையும், வாழ்கையில் நடந்த அற்புதங்களையும் விளக்கி வைக்கும் சரித்திர ஆதாரங்களாக அமைந்திருக்கின்றன.
இஸ்லாத்திற்காக தன்னை முழுதாக அற்பணம் செய்த இம்மகான்களின் வரலாறுகள் ஓதியுணர்ந்து நன்றியுடன் நினைவு கூரத்தக்கவைகள் என்பது நன்றிகலந்த காணிக்கை என்று அறிஞர்கள் சமூகம் கருதியதனால் அன்னார்களின் நினைவு நாட்களிலும், முக்கிய வைபவங்களிலும் இம்மௌலிதுகள் ஓதப்பட்டு வருவது கண்கூடு.
இவர்கள் பெயரால் ஓதப்படும் மௌலிதுகள், கொடுக்கப்படும் கந்தூரிகள் மூலமாக ஒன்றுபட்டிருந்த பன்சமூக பண்பாட்டுத் தளம் இதற்கெதிரான பிரசாரத்தால் உடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருவதையும் முஸ்லிம்களின் அரிதான சரித்திர சான்றுகள் சரிக்கப்படும் சதியினையும் சமுதாயம் புரிந்துகொள்ள வேண்டும்.
சமுதாயத்தின் வரலாறுகளையும், சரித்திர அரிதாரங்களையும் அழித்தொழிக்கும் கும்பல் எக்காலத்திலும் தொடந்திருந்து வருகின்றனர். சதிகாரர்களின் கைக்கூலிகளாக மாறிய இவர்களின் சந்ததிகளின் எச்சங்களாக பீ.ஜே போன்றோர் இப்போது செயல்படுகின்றனர்.
பீ.ஜே. யின் ஒட்டுமொத்த முயற்சி இஸ்லாமியப் பெரியார்களை திட்டுவது, சரித்திரங்களை சரிப்பது, சமுதாயத்தின் வைரமணிகளான இமாம்களின் நூற்களில் குறையிருப்பதாகக் கூறி சமுதாயக் கட்டுக்கோப்பை அழிப்பது தவிர வேறெதுவுமில்லை.
இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலும், அதன் பின்பும் முஸ்லிம் சமுகத்துள் ஊடுருவியிருந்து சமுதாயத்திற்கெதிராக சதிசெய்துவந்த முனாபிகுகள் இந்த வேலையைத்தான் செய்து வந்தார்கள். இதில் துளியும் வேறுபடாமல் ஒருபடி மேலேநின்று நர்த்தனம் போடுகிறார் இந்த வழிகேட்டு கதாநாயகன்.
இவரின் சித்து விளையாட்டில் ஒன்றுதான் முஹ்யதீன் மௌலிது ஓர் ஆய்வு என்ற நூலாகும்.
முஹ்யத்தீன் மௌலிதுக்கு இவர் எழுதிய ஆய்வு மூலம் இவருக்கு ஹதீது, வரலாறு உள்ளிட்ட நூற்களில் உள்ள திறமையின்மை நன்கு புலப்படுகின்றது.
கடந்தகால, நிகழ்கால வஹாபிஸ முல்லாக்களின் நூற்களில் தஞ்சம் கொண்டிருந்த பீ.ஜே. முஹ்யத்தீன் மௌலிதில் தனிமைப்பட்ட ரகசியம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
அவரின் ஆய்வையும், நமது பதிலையும் கருத்தூண்றிப் படியுங்கள்! உண்மை எளிதில் புரியும்! சத்தியம் ஓங்கி ஒலிக்கும்!!!
முஹ்யத்தீன் மௌலிதில் இடம்பெற்றுள்ள அற்புதங்களில் இதுவும் ஒன்று. அறபியிலுள்ள இதன் தமிழாக்கம் இவரின் முஹ்யத்தீன் மௌலித் ஓர் ஆய்வு என்ற நூலிலிருந்து அப்படியே தரப்படுகிறது. அற்புதக்கதை இதுதான்.
அபுல் முஆலி என்பவர் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்து என் மகனுக்கு பதினைந்து மாதகாலம் காய்ச்சல் விலகாமல் உள்ளது என்றார்.
அதற்கு அப்துல் காதிர் அவர்கள் காய்ச்சலே! நீ எப்போது இவனைப் பிடித்தாய்? நீ ஹில்லா எனும் ஊருக்குச் சென்று விடு. என்று உன்னுடைய மகனுடைய காதில் கூறு என்றார்கள். அவர் கட்டளையிடப்பட்டவாறு செய்தார்.
அதன்பின் அவனுக்கு காய்ச்சல் ஒரு சிறிதும் மீண்டும் வரவில்லை. பிறகு ஹில்லா எனும் ஊரில் உள்ள ராபிளிய்யா கூட்டத்தினர் அனேகர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது.
முஹ்யத்தீன் மௌலிது ஓர் ஆய்வு, பக்கம் 24
முஹ்யத்தீன் மௌலிதில் வரும் மேற்கண்ட நிகழ்ச்சியானது, அறிவிப்பாளர் ஆதாரத்துடன் பஹ்ஜதுல் அஸ்ரார் என்ற நூலில் பக்கம் 153 (பேரூத் தாறுல் குத்புல் இல்மிய்யா, பதிப்பகம் 2002)இல் பதிவாகியுள்ளது.
பஹ்ஜதுல் அஸ்ரார் நூலில் வரும் ஆதார பூர்வமான நிகழச்சியை மகான் மஹ்மூதுத்தீபி றஹ்மத்துள்ளாஹி அலைஹி அவர்கள் எடுத்தெழுதியிருக்கின்றார்கள். கடந்தகால அறிஞர்கள் இதனை நன்கு அறிந்த காரணத்தினாலும் மகான் மஹ்மூதுத் தீபி றஹ்மத்துள்ளாஹி அலைஹியின் கனம் தெரிந்திருந்ததனாலும் எதிராக யாரும் வாய் திறக்கவே இல்லை.
ஏதுமறியாத கைக்கூலியான பீ.ஜே. போன்ற கல்புக் கபோதிகளுக்கு இவை எப்படிப் புரியும்? தேவர்கள் நடுங்குமிடத்தில் முட்டாள்கள் நர்த்தனமாடுவார்களாம். பீ.ஜே. விடயத்தில் இது முற்றிலும் பொருத்தம். அவலை நினைத்து உரலை இடிக்கும் பீ.ஜே. யின் ஆய்வையும் அலசலையும் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.
தொடரும்....