அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.
والذين هم لفروجهم حفظون ،
இன்னும் அவர்கள் தங்களின் வெட்கத்தலங்களைப் பேணிக்கொள்வார்கள். 23: 4
மேலும் கூறுகின்றான்.
ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ،
மானக்கேடான செயல்களின் பக்கம் அவற்றின் வெளிப்படையான (பெரியதா)னவற்றிற்கும், இரகசியமான (சிறியதான) வற்றிக்கும்
நீங்கள் நெருங்காதீர்கள்;
6:152
இங்கு பெரியது (வெளிபாபடையானது) என்பது விபச்சாரத்தையும், சிறியது (இரகசியமானது) என்பது முத்தம் கொடுப்பதாகும். கெட்ட பார்வையால் பார்ப்பது என்பது, தொடுவதாகும்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
اليدان، والرجلان تزنيان والعينان تزنيان ،. رواه احمد /٤١٢/١
இருகைகளும் விபச்சாரம் செய்கிறன, இருகால்களும் விபச்சாரம் செய்கின்றன, இருகண்களும் விபச்சாரம் செய்கின்றன,
அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.
قل للمؤمنين يغضوامن ابصارهم ويحفظوا فروجهم ذلك ازكي لهم .
(நபியே!) முஃமின்களுக்கு
"தம் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தம் வெட்கத் தலங்களைப் பேணிக்காெள்ள வேண்டும்" என்று நீர் கூறுவீராக! இது அவர்களுக்கு மிக்கப் பரிசுத்தமானதாகும்.
24: 30
ஹறாமானவற்றின் பக்கம் பார்வையைத் திருப்பக்கூடாது என்றும், தங்களின் வெட்கத்தலங்களை ஹறாமான பாவங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் அல்லாஹுத்த ஆலா ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டளையிடுகின்றான்.
அல்லாஹுத்த ஆலா பல்வேறு திருவசனங்களின் மூலமாக விபச்சாரம் ஹறாம் என்று விளக்கிக் கூறுகின்றான்.
அல்லாஹுத்த ஆலா ஒர் இடத்தில் கூறுகின்றான்.
ومن يفعل ذلك يلق اثاما
எவன் விபச்சாரத்தைச் செய்கின்றானோ (அவன்) வேதனையைச் சந்திப்பான்.
25: 68
ஆதாம் اثام என்றால் நரகத்தில் உள்ள ஓர் ஓடை என்று சொல்லப்படுகின்றது சிலரின் கூற்றின்படி, நகரத்திலுள்ள ஒரு குகையாக; அதன் வாசல் எப்போதாவது திறக்கப்பட்டால், அதன் கடுமையான வெடுக்கால் நரகவாதிகள் அலறுவார்கள்.
விபச்சாரத்தில்
ஆறு சோதனைகள் உண்டு!
--------
ஸஹாபாக்களில் சிலர் மூலமாக அறிவிக்கப்படுகின்றது.
விபச்சாரத்தைப் பயந்து கொள்ளுங்கள்.!
அதில் ஆறு சோதனைகள் இருக்கின்றன. அதில் மூன்று உலகத்தோடும், மற்றய மூன்றும் மறுமையோடும் தொடர்பாக இருக்கின்றன.
உலகத்தோடு தொடர்பானவை,
1- இரணம் குறைவடைதல்.
2- ஆயுள் சுருங்குதல்..
3- முகம் கறுத்தல்.
மறுமையின் சோதனைகள்.
1- அல்லாஹ்வின் கோபம்.
2- கடுமையான விசாரணை.
3- நரகம் செல்லல்.
ஹளறத் மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விபச்சாரத்திற்கான தண்டனைய்பற்றி கேட்ட போது அல்லாஹுத்த ஆலா பின்வருமாறு கூறினான்.
நான் இரும்பிலான உருக்குச் சட்டையை அணிவிப்பேன்; அதை மிகப்பெரிய மலையில் வைத்தால் அதன் பாரத்தைத் தாங்க முடியாமல் தூள்துளாகி விடும்.
இப்லீஸுக்கு ஆயிரம் கெட்டவர்களை விட ஒரு விபச்சாரி மிக விருப்பமானவன் என்று கூறப்படுகின்றது.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக "மஸாபீஹ்" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
ஒருவர் விபச்சாரம் செய்ய ஆரம்பித்தால் அவரின் ஈமான் அவரை விட்டும் நீங்கி அவர் தலைக்கு மேலால் குடை போன்று கொழுகப்பட்டிருக்கும். அவர் அதிலிருந்து விடுபட்டபின்பு தான் மீண்டும் அவரிடம் வந்து சேரும்.
இக்னாஃ என்ற நூலில் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பின்வரும் கூற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் தனது சுக்கிலத்தை (நுத்பாவை) ஹறாமான பெண்ணிடத்தில் வைப்பதைவிட மிகப் பெரிய குற்றம் அல்லாஹ்விடத்தில் வேறு எதுவும் கிடையாது.
ஒருபெண்ணின் பின் துவாரத்தில் புணர்வது விபச்சாரத்தை விட படுமோசமானதாகும்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹளறத் அனஸ்இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
சொர்க்கத்தின் சுகந்த வாடை 500 வருட தொலைதூரத்திற்கு வீசும். அதை "லிவாதத்" செய்பவர் நுகரமாட்டார்.
ஹளறத் அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் தனது வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் போது அழகு சௌந்திரியமிக்க (முகத்தில் முடிவளராத) ஒரு சிறுவர் எதிரே வந்து கொண்டிருந்ததைக் கண்டு விரைந்து வீட்டுக்குள் சென்று கதைவைத் தாழிட்டுக் கொண்டார்கள்; சற்று நேரம் கடந்த பின், பித்ரா கடந்துவிட்டதா? இல்லையா? என்று கேட்டார்கள்; கடந்துவிட்டது என்று மக்கள் கூறியதற்குப் பின்புதான் வெளியே வந்து பின்வருமாறு கூறினார்கள்,
அவர்களைப் பார்ப்பதும், அவர்களோடு பேசுவதும், அவர்களோடு உறவாடுவதும் ஹறாம் என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் .
இமாம் காழிஇயாழ் றஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
சில ஷைகுமார்கள் கூறுவதை நான் கேட்டிருக்கின்றேன்.
ஒவ்வொரு பெண்ணோடும் ஒருஷைத்தான் இருப்பான். எழில் மிக்க சிறுவனோடு 18 ஷைத்தான்கள் இருப்பார்கள்.
இச்சையோடு ஒரு சிறுவனை முத்தமிட்டால் ,500ஆண்டுகள் நரகம் செல்வான்., இச்சையோடு ஒரு பெண்ணை முத்தமிட்டால், எழுபது கன்னிகளை விபச்சாரம் செய்தவன் போலாவான்,
ஒருவன் ஒருகன்னிப் பெண்ணை விபச்சாரம் செய்தால் எழுபதாயிரம் திருமணம் முடித்த பெண்களை விபச்சாரம் செய்தவன் போலாவான் என்று அறிவிக்கப்படுகிறது.
றௌனக்குத் தபாஸீர் என்ற நூலில் கல்பி றஹ்மத்துள்ளாஹி அலைஹி அவர்கள் மூலம் பின்வரும் விடயம் நக்லு செய்யப்படுகின்றது.
முதன்முதலாக லிவாதத்தை (ஓரினச்சேர்கையை) இப்லீஸ்தான் ஆரம்பித்தான். அழகிய இளவலின் கோலத்தில் அவர்களிடம் வந்து தன்பக்கமாக மக்களை கவர்ந்திழுத்து அவர்களோடு உறவுகொண்டான். பின்னர் இந்தப் பழக்கம் அவர்கள் மத்தியில் வழக்கமானதாகிவிட்டது. எவராவது ஒரு வழிப்போக்கன் அவர்கள் மத்தியில் வந்தால் அவரோடு இந்த கெட்ட வேலையைச் செய்யலானார்கள்;
ஹளறத் லூத் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் இத்தீய பழக்கத்தை கைவிடுமாறு அவர்களை எச்சரித்தார்கள், அல்லாஹ்வை இபாதத் செய்வதன் பக்கமாக அழைத்தார்கள்; அல்லாஹ்வின் தண்டனை வரும் என்று எச்சரித்தார்கள்; அதற்கு அவர்கள்
ائتنا بعذاب الله ان كنت من الصدقين
நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வுடைய தண்டனையை நீர் கொண்டு வாரும் என்றுகூறினர். 29: 29
ஹளறத் லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் துஆக் கேட்டார்கள்,
அல்லாஹுத்த ஆலா அவர்களுக்கு பதிலளித்து கல்மழை பொழியச் செய்தான்;
ஒவ்வொரு கல்லிலும் ஒருவரின் பெயர் குறிக்கப்பட்டிருக்கும், அது அவரிடத்தில் வந்து விழுந்தது;
இதனை அல்லாஹுத்த ஆலா
مسومة عند ربك
(அவ்வாறு பொழியப்பட்ட ஒவ்வொரு கல்லும்) உம்முடைய றப்பிடமிருந்து அடையாளமிடப்பட்டதாக இருந்தது. 11: 83
என்று குறிப்பிடுகின்றான்.
ஒருவியாபாரியின் கதை:
----------
ஹளறத் லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமுகத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரி வர்த்தக நோக்கத்தோடு மக்காவுக்கு வந்தார். அவரின் பெயர் குறிக்கப்பட்ட கல் மக்காவுக்கு வந்தது, இந்த மனிதன் அல்லாஹ்வுடைய ஹறத்தில் இருப்பதால் வெளியேறி விடு என்று மலக்குகள் கல்லைப் பார்த்துக் கூறினார்கள்;
நாற்பது நாட்களாக அக்கல் ஹறத்துக்கு வெளியே வானத்திற்கும் பூமிக்குமிடையில் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஹறத்துக்கு வெளியே வந்ததும் அக்கல் அவரைத் தாக்கியது. அங்கேயே அவர் ஹலாக்கானார்.
ஹளறத் லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களுடைய சகல குடும்பத்தினர்களையும் அழைத்துக் கொண்டு ஊரை விட்டுப் வெளியேறிச் சென்றார்கள்; யாரும் திரும்பிப் பார்க்கக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறினார்கள்,
தண்டனை இறங்கியதால் மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு கூச்சல் போட்டதைக் கேட்ட அவர்களின் மனைவி மட்டும் திரும்பிப் பார்த்தவர், ஆ! எனது சமுகமே! என்றார். ஒருகல் வந்து அவர் தலையில் விழுந்தது; உடனே அவரும் அங்கே ஹலாக்கானார்.
ஹளறத் முஜாஹீத் றஹ்மத்துள்ளாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்.
விடியற் காலையானதும் ஹளறத் ஜிப்ரியீல் அலைஹிஸ்ஸலாம் அந்தக் கிராமத்தை வேரோடு பிடுங்கி தனது இறக்கைகளில் சுமந்து உயர்த்தி வானத்தின் பக்கமாக உயர்த்திக் கொண்டு சென்றார்கள்; வானத்திலிருந்த மலக்குகள் சேவல்களின் கூவுதலையும், நாய் குரைப்பதையும் கேட்கும் தூரம் வரை எடுத்துச்சென்று புரட்டிப் போட்டார்கள்.
முதன்முதலாக அவர்களின் கட்டடங்கள் இடிந்து விழுந்தன, பின்னர் அவர்கள் பூமியில் வந்து வீழ்ந்தனர். அவர்கள் கண்முன்னே துடைத்தெறியப்பட்டனர்.
ஐந்து கிராமங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதில் மிகப் பெரிய கிராமம் "ஸுதும்" என்ற கிராமமாகும். இதில் மட்டும் ஐந்து இலட்சம் மக்கள் வாழ்ந்தனர். இதனை சூரத்துல் பறாஅத்தில் "முஃதபிகாத்" என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி பாஸில், ஷெய்கு
ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி, பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி