السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 19 May 2024

ஹாஜா நாயகத்தின் வரலாறு

 

*ஹழ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றஹிமஹுல்லாஹ் அவர்களும் சிஷ்திய்யா  தரீகாவும்* 


சிஷ்திய்யா தரீக்காவின் மூலவர் : ஹழ்ரத் அபூ இஸ்ஹாக் ஷாமீ  றஹிமஹுல்லாஹ் (ஹிஜ்ரீ 238-329/ கி.பி. 852 - 941 Sy Syria) அவர்களாவர்.


இந்த தரீக்கா உலகில் தோன்றிய தரீக்காக்களில் மிக முந்தியது ஆகும். இது ஹழ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றஹிமஹுல்லாஹ் அவர்களால் உலகப்பிரசித்தி பெற்றது. 


ஹழ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றஹிமஹுல்லாஹ்  அவர்கள் தந்தை வழியில் ஹுஸைனியாகவும் தாய்வழியில் ஹஸனீ ஆகவும் இருக்கின்றார்கள். 

ஒரு விதத்தில் ஹாஜா நாயகம் அவர்கள் ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரியின் மகன் (மருமகன்) முறையும் ஆவார்கள். கெளதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் அந்திம காலத்தில் அவர்களைச்சென்று சந்தித்து ஆசிபெற்றார்கள். அவர்களுடைய உத்தரவின்பேரிலேயே குருநாதர் ஹழ்ரத் உத்மான் ஹாரூனீ றஹிமஹுல்லாஹ் அவர்களை சந்தித்தார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உத்தரவின்பேரில் இந்தியா-அஜ்மீர் வந்து 90 லட்சம் பேரை இஸ்லாத்தில் இணைத்தார்கள். 


தந்தை வழி (Paternal) :   

1. Hazrat Khwaja Moinuddin Chisti (ra), son of

2. Hazrat Khwaja Ghiyasuddin Hasan (ra), son of

3. Syed Ahmed Hassan (ra), son of

4. Syed Hassan Ahmed (ra), son of

5. Syed Najmuddin Tahir (ra), son of

6. Syed Khwaja Abdul Aziz Hussain (ra), son of

7. Syed Imam Mohammad Mehdi (ra), son of

8. Syed Imam Askari (ra), son of

9. Hazrat Imam Musa (ra), son of

10. Imam Ali Naqi (ra), son of

11. Hazrat Imam Mohammad Taqi (ra), son of

12. Hazrat Imam Ali Musa Raza (ra), son of

13. Hazrat Imam Musa (ra), son of

14. Hazrat Imam Mohammad Jafar Sadiq (ra), son of

15. Hazrat Imam Mohammad Baqir (ra), son of

16. Hazrat Imam Zainul Abedin (ra), son of

17. Hazrat Imam Hussain  , son of

18. Hazrat Imam ALI 


தாய் வழி (Meternal) :


செய்யிதுனா அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹ் > இமாம் ஹஸன் (றழி) > இமாம் ஹஸன் முதன்னா > இமாம் அப்துல்லாஹ் மஹ்ழ் > மூஸா ஜவ்ன்> தாவூத் > முஹம்மத் முவர்ரிஸ் > ஸாஹித் > அப்துல்லாஹ் ஹம்பல் > தாவூத் > பீபி உம்முல் வரஃ மாஹே நூர்> அஸ்ஸெய்யித் ஹஸன் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ


இறைஞான பாரம்பரியம் (சில்சிலா)


செய்யிதுனா ஹழ்ரத் அலீ றழியல்லாஹு அன்ஹு (D: ஹிஜ்ரி 41/ கி.பி 662), அவர்களிடமிருந்து 

>> இமாம் ஹஸன் பஸரீ அவர்கள்                   (d: ஹிஜ்ரி 110/ கி.பி728), வழியாக;


>> இமாம் அப்துல் வாஹித் பின் செய்த்        (d: ஹிஜ்ரி 177/ கி.பி793), 


>> இமாம் புழைல் பின் இயாழ் (d: ஹிஜ்ரி 187/ கி.பி.803 Mecca), 


>> ஹழ்ரத் இப்றாஹிம் பின் அத்ஹம்            (d: ஹிஜ்ரி 165/ கி.பி.782 Balgh), 


>> ஹழ்ரத் சதிதுத்தீன் ஹுதைபா அல் முராசி (d: ஹிஜ்ரி 207/ கி.பி 822), 


>> ஹழ்ரத் அமீனுத்தீன் அபூஹுரைரா அல் பஸ்ரி (d: ஹிஜ்ரீ 279, கி.பி.892 Basra), 


>> ஹழ்ரத் மிம்ஷாத் அலீ தைனூரீ                   (d: ஹிஜ்ரீ 299/ கி.பி 912 Iranian kurdistan), 


>> ஆகியோர் ஊடாக வந்த இறைஞான பாரம்பரியம் ஈற்றில், 

>> ஹழ்ரத் அபூ இஸ்ஹாக் ஷாமீ (d: ஹிஜ்ரீ 329/ கி.பி.941 Syria) அவர்களை  வந்தடைந்தது. 


ஹழ்ரத் மிம்ஷாத் அலீ தைனூரீ தம் மாணவர் ஹழ்ரத் அபூ இஸ்ஹாக் ஷாமீ அவர்களை நோக்கி சிஷ்த் என்ற சிற்றூர் சென்று தங்கி, ஆன்மீக செங்கோல் செலுத்திவருமாறு பணித்து, "இன்று முதல் உலக முடிவு நாள் வரை உம் ஞானவழி சிஷ்திய்யா என்று அழைக்கப்பெறுக!" என்று வாழ்த்தியனுப்பினார்கள். அதன்பின்னர் இந்த ஞான வழித்தொடர் சிஷ்திய்யா என அழைக்கப்படலாயிற்று.


 அடுத்து,

>> ஹழ்ரத் குத்வதுத்தீன் அபூ அஹ்மத் அப்தால் சிஷ்தீ (d: ஹிஜ்ரீ 355/ கி.பி.966 Chist, Afghanistan)


>> ஹழ்ரத் அபூ முஹம்மத் சிஷ்தீ (d: ஹிஜ்ரீ 411/ கி.பி.1020 Chist)


>> ஹழ்ரத் நசிருத்தீன் அபு யூஸுப் சிஷ்தீ    (d: ஹிஜ்ரீ 459/ கி.பி.1067 Chist) 


>> ஹழ்ரத் குத்புத்தீன் மவ்தூத் சிஸ்தீ (d: ஹிஜ்ரீ 527/ கி.பி.1133 Chist)

>> ஹழ்ரத் ஹாஜி நூருத்தின் ஷரீஃப் சிந்தானீ சிஷ்தீ (d: ஹிஜ்ரீ 612/ கி.பி.1215 Syria)

>> ஹழ்ரத் உத்மான் ஹாரூனி சிஷ்தீ (d: ஹிஜ்ரீ 616/ கி.பி.1219 Harun-Iran) அவர்கள் வழியாக 

>> ஹழ்ரத் ஹாஜா முயீனுத்தீன் ஹஸன் அஜ்மீரீ சிஸ்தீ (d: ஹிஜ்ரீ 633/ கி.பி.1236 Sanjar-Iran) அவர்கள் மூலம் இத்தரீக்கா உலகப்பிரசித்தி பெற்றது.


ஹழ்ரத் ஹாஜா  முயீனுத்தீன் சிஸ்தீ இசையை ஆன்மாவின் ஆகாரம் என்றிருப்பதால் சிஷ்திய்யா தரீக்கினர் இசையில் ஈடுபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். சிஷ்திய்யாவின் திக்ரில் இல்லல்லாஹு என்ற உச்சரிப்பை மிக அழுத்தமாக உச்சரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


இந்த தரீக்கா;

>> ஹழ்ரத் குதுபுத்தீன் பக்தியார் கஃகீ          (d: ஹிஜ்ரீ 642/ கி.பி.1244 Osh- Kyrgistan)


>> ஹழ்ரத் பாபா பரிதுத்தீன் கன்ஜே ஷகர் (d: ஹிஜ்ரீ 664/ கி.பி.1266 Multan, Panjab -Pakistan)


>> ஹழ்ரத் அலாவுத்தீன் அலி அஹ்மத் சாபிர் கலியாரி (d: ஹிஜ்ரீ 690/ கி.பி.1291 Herat, Khwarazmian Empire) மற்றும் 

>> ஹழ்ரத் நிஸாமுத்தீன் அவ்லியா                  (d: ஹிஜ்ரீ 725/ கி.பி.1325 Delhi) ஆகிய பெரும் மகான்களை உருவாக்கியது.


சிஷ்திய்யா தரீக்கா இந்திய தத்துவ மரபுகளுக்கு மத்தியில்  இஸ்லாத்தின் தத்துவத்தை நிலைநிறுத்தியது. மேலும் அரசியல் ஆன்மீக ஆட்சியையும் நடத்தியது. ஹழ்றத் ஹாஜாமுயீனுத்தீன் சிஷ்தீ நாயகத்தின் வருகையால் இந்திய தத்துவ மரபுகள் ஆட்டம் கண்டன.

தொகுத்தோர்:

மெளலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ 

BBA (Hons)

ஜனாப். ¬MI.ஜெம்ஸீத் (CompTIA A+)