السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 15 May 2024

கூட்டு துஆவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தீர்ப்பும் ஓர் ஆய்வு! 5

 

நபிகள் நாதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் செய்யாத ஒரு விடயத்தை மற்றவர்கள்  செய்யக்கூடாது என்பது ஷரீஅத்தில் ஆதாரமாகாது. ஒரு விடயம் ரஸுலுல்லாஹி  ஸல்லலலாஹு அலைஹி வஸல்லமவர்களால் செய்யாது தவிர்க்கப்பட்டிருந்தால் அதற்கு பல நியாயங்கள் காணப்படும். இவற்றுள் சில நியாயங்களை கடந்த நான்காவது தொடரில் விளக்கியிருந்தேன்.   கூட்டுத்துஆ கூடாது என்பதற்கு முன்வைக்கப்படும்  பிரதான குற்றச்சாட்டுக்களில் "கூட்டுத்துஆ பித்அத்"! ஆகும்.  பித்அத் எல்லாம்  வழிகேடு!  என்று திருநபியவர்கள் திருவுளமாயிருக்கின்றார்கள். ஆகவே, கூட்டுதுஆ வழிகேடு! என்று வஹாபிகள் முடிவு செய்கின்றனர்.  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் இந்தக் கண்ணோட்டத்தில் தான் கூட்டுதுஆ பற்றித்  கூடாது என்று தீர்ப்புக் கொடுத்துள்ளது.  பித்அத் பற்றி தெளிவான விளக்கம் இல்லாத முட்டாள்கள்தான்  இப்படியான நெறிகெட்ட பத்வாக்களை வெளியிடுவார்கள்.   சுன்னத் வல்ஜமாஅத்தின் அதிகமான விடயங்களை இல்லாதொழிப்பதற்கு இப்படிப்பட்ட ஒவழிகேடர்கள் கையாளும் தந்திரமான விஷஆயுதமும் இதுதான்!  இப்படியான ஃபத்வாக்கள் இவர்களைப்போன்ற தான்தோன்றித்தனமான வழிகேடர்களின் முடிவேயன்றி அறிஞர்கள், இமாம்களின் முடிவல்ல!.  இதனால் இத்தொடரில் பித்அத் பற்றிய தெளிவான ஒரு விளக்கத்தை முன்வைப்பது அவசியம் எனக்கருதுகிறேன்.  "லிஸானுல் அறப்" என்பது முஸ்லிம்களால் எழுதப்பட்ட அறபு அகராதிப் பெருநூல்; இதில் பாகம் 8 பக்கம் 6 ல் "பித்அத்" பற்றி பின்வருமாறு வரையப்பட்டுள்ளது.  "பித்அத்" இரு வகைப்படும்.  1. பித்அத் ஹுதா, 2. பித்அத் ழலாலா. அல்லாஹ்வும், இன்னும் அவனுடைய திருத்தூதரும் இட்ட கட்டளைக்கு மாறாக அமைபவை நிராகரிப்புக்கும், இகழுக்கும் உரிய "பித்அத் ஆகும்.  அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் நல்லது என்று கூறியவைகள் அல்லது நல்லது என்று தூண்டியவைகள் பாராட்டுக்குரிய பித்அத்வகையைச் சேரும்.  நடைமுறையில் இதற்கான முன் உதாரணம் இல்லாத, தர்மம், ஈகை, நற்காரியங்கள் போன்றவைகளும் பாராட்டுக்குரிய  ஃபித்அத்வகையைச்சேரும்.  இவ்வாறானவை  ஷரிஅத் அனுமதிக்காதவைகளுக்குப் பயன்படாமல் இருக்க வேண்டும்.  இப்படியான நற்காரியங்களுக்கு நன்மை உண்டு! என்று ரஸுலுல்லாஹி ஸல்லலலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்‌ கூறியுள்ளார்கள்..   "எவராவது ஒருவர் நல்ல காரியத்தைச் செய்தால், அதற்குரிய கூலி அவருக்குக் கிடைக்கும். மேலும், அதனை ‌ எவராவது செய்தால், அதன் கூலியும் அவருக்குக்கிடைக்கும் என்று கூறிய நபியவர்கள் இதற்கு மாற்றமாக எவராவது ஒருவர் தீய  காரியத்தைச் செய்தால், அதற்கான தண்டனையும், அதனைச்செய்பவரின் தண்டனையும் கிடைக்கும் என்றார்கள்.    தறாவீஹை ஜமாஅத்தாக ஆக்கிய பின் அமீருல் மூஃமினீன் உமர் றலியல்லாஹு அன்ஹு அவர்கள் "இது நல்ல பித்அத்” என்று கூறியதும் இந்த நல்லவையைச் சேர்ந்ததாகும். ஆகவே இது பாராட்டுக்குரிய வகையைச் சார்ந்துள்ளது.  அமீருல் முஃமினீன் உமர் பாறூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இச்செயலை "பித்அத்” என்று குறிப்பிட்டாலும் அதனைப்பாராட்டினார்கள்,  தறாவீஹுத் தொழுகையை நிரந்தரமாக ஜமாஅத்தாக்கிய செயல் நபியவர்கள் செய்யாதது ஆகவேதான் பித்அத் என்றார்கள்.  நபிகள் நாதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் சில இரவுகள் தறாவீஹை ஜமாஅத்தாகத் தொழுதார்கள். ஆனால் அதனைத் தொடரவில்லை,. இதற்காக மக்களைத்திரட்டவில்லை;. ஹழரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திலும் தராவீஹ் ஜமாஅத்தாக தொழப்படவில்லை‌;    ஹழரத் உமர்பாறூக் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில்தான் மக்களை ஒன்று திரட்டி தறாவீஹை ஜமாஅத்தாக நடைமுறைப்படுத்தினார்கள்.   ஆகவே, இதனை " பித்அத் ” என்று கூறினார்கள் ஆனால், உண்மையில் இது "பித்அத்" அல்ல! சுன்னத் ஆகும்;   ஏனெனில்,  "எனது சுன்னத்தையும் எனக்குப் பின்னால் குலபாஉர்ராஷிதீன்களின் சுன்னத்தையும் பின்பற்றுமாறு கண்டிப்பாக நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.  மேலும், எனக்குப் பின் அபூபக்கர், உமர் ஆகிய இருவரையும் பின் பற்றுங்கள்! என்றும் கூறியுள்ளார்கள்.   இந்த ஒழுங்கில்தான் மற்றுமொரு ஹதீதாகிய,  "ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்" என்ற ஹதீதின் உட்கிடை நோக்கப்படல் வேண்டும்.  அதாவது, ஷரீஅத்தின் அடிப்படை (உஸுல்) களுக்கு மாறுபட்டதும் ஸுன்னத்திற்கு உடன்படாதவைகளுமான பித்அத்தே இங்கு நாடப்பட்டுள்ளது.  வழக்கில் அதிகமாக "பித்அத்" என்று பிரயோகப்படுவது நல்ல பித்அத்திற்கு அல்ல!. அனைவரும் ஏற்றுக்கொண்ட அறபு அகராதிப் பெருநூலான  "லிஸானுல் அறப்" என்ற நூல்  "பித்அத்" என்பதற்கு தந்த விளக்கத்தை மேலே கண்டீர்கள்!  அடுத்து, ஹதீதுப் பெருநூற்களுக்கு விளக்கமெழுதிய பேரறிஞர்கள் சிலரது கருத்துக்களை தொடர்ந்து படியுங்கள்!,.  ஹதீதுப் பெருநூற்களில் திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில் மதிக்கப்படுவது ஸஹீஹுல் புகாரி ஷரீப் ஆகும். இதற்கு பல விரிவுரைகள் எழுதப்பட்டுள்ளன,. இவற்றுள் அனைவராலும் பாராட்டப்பட்டதும், வஹாபிகளும் ஆதாரமாக எடுப்பது பத்ஹுல் பாரி ஆகும். இதில் “பித்அத்" பற்றி இவ்வாறு வரைவிலக்கணப்படுத்தப்பட்டு விளக்கம் கூறப்பட்டுள்ளது.   "பித்அ'த்" என்பது, முன் உதாரணம் இல்லாமல் புதிதாக தோற்றுவிக்கப்படுபவற்றிற்கு கூறப்படும்,  ஸுன்ன்னத்திற்கு எதிராக   தோற்றுவிக்கப்பவைகளை பொதுவாக ஷரீஅத்தில் இகழுக்குரிய பித்அத்துக்கள் என்று கூறப்படும்.  ஷரீஅத்தின் நற்காரியங்களை ஒட்டி வருபவைகளாக அது இருப்பின், அழகிய "பித்அத்" ஆகும். ஷரிஅத்தில் பாராட்டப்படாத வெறுப்புக்கும், பழிப்புக்கும் உரியவைகளை ஒட்டியதாக அவை இருக்குமாயின், அவை பழிப்புக்குரியதாகும். அவ்வாறில்லாதிருப்பின், ஆகும் என்ற வகையைச்சாரும். "பித்அத்" என்பது (வாஜிப், ஹறாம்; ஸுன்னத்; மக்றூஹ்; முபாஹ் உள்ளிட்ட ) ஷரீஅத்தின் ஐந்து வகையான  சட்டதிட்டங்களிலும் வரும்.  ஆதாரம் : பத்ஹுல்பாரி பாகம் 4 பக்கம் 253  மேலும், இதே நூல் பாகம் 13 பக்கம் 353ல் சட்ட மேதை இமாமுனா ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்  "பித்அத்” பற்றிக் கூறியது இவ்வாறு இடம் பெற்றிருக்கின்றது.  "திருக்குர் ஆனுக்கும், திரு நபியவர்களின் ஸுன்னாவிற்கும், ஸஹாபாக்களின் நடைமுறைக்கும்,  இஜ்மாவிற்கும் மாறாகவரும் புதியவைகள் தீய  "பித்அத்" ஆகும். புதிதாக உருவாக்கப்பட்ட நற்காரியங்கள் மேற்கூறியவைகளில் எதற்கும் மாறுபடாதிருப்பின், அது தீய "பித்அத்" அல்ல! மாறாக, பாராட்டுக்குரியதாகும். இதே கருத்தையே அனைத்து துறைகளைச்சார்ந்த அறிஞர்களும் கூறியுள்ளனர்.  ஈமான் பற்றியும், நாம் நம்ப வேண்டிய கோட்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்குவது அகீதா நூற்களாகும். இதில் மிகவும் பிரசித்தி பெற்றதும் இலங்கையிலும், உலகத்தின் அதிகமான நாடுகளிலும் மத்ரஸாக்களில் இறுதி ஆண்டிற்கு சிபாரிசு செய்யப்பட்டு பாடவிதானத்தில் இடம் பிடித்துள்ள நூல் "துஹ்பத்துல் முரீது" ஆகும்.  இந்த நூலை ஓதி அதில் பரீட்சை எழுதியவர்கள்தான் இந்த நாட்டிலுள்ள அனைந்து உலமாக்களுமாகும்; ஆகவே, இந்த நூலைத் தெரியாத எவரும் இருக்க முடியாது.  இந்நூல் பக்கம் 123ல் திருக்குர்ஆனுக்கு, அல்லது ஸுன்னாவிற்கு; அல்லது  இஜ்மாவிற்கு; அல்லது கியாஸிற்கு உடன்பட்டு வரும் "பித்அத்" ஸுன்னத் என்று எழுதப்பட்டுள்ளது. "பித்அத்” என்பது என்ன? அவற்றுள் நல்லது கெட்டது எவை? அவற்றை வகைப்படுத்தும் வழி எது? என்பது பற்றி உலகப்புகழ்பெற்ற பேரறிஞர்களின் கூற்றுக்கள் மிகத்தெளிவாக்கப்பட்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ்!. "பித்அத்" பற்றி மேற்கண்ட அறிஞர்கள் வகைப்படுத்தியது அவர்களின் கற்பனை என்றும், அதற்கு ஹதிதில் எதுவித ஆதாரமும் கிடையாது என்றும்; சில வழிகேடர்கள் கூறியும், எழுதியும் வருகின்றனர்.  இவ்வழிகேடர்களின் வெற்று வாதத்திற்கு "முஹ்யுஸ் ஸுன்னா" ஸுன்னாவிற்கு உயிரூட்டியவர்கள் என்று சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகின்ற பேரறிஞர் இமாம் நவவி ரஹ்மத்துலவாஹி அலைஹி தங்களது புகழ்பூத்த ஷரஹு முஸ்லிமில் இவ்வாறு எழுதுகின்றார்கள்.  ரஸுலுல்லாஹி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு திருவுளமானார்கள். "இஸ்லாத்தில் எவராவது ஒருவர் புதிய நல்ல காரியத்தை உருவாக்கி அதை அவருக்குப்பின் எவராவது செய்தால், அதனைச் செய்தவரின் கூலி போன்ற கூலி அதனைத் தோற்றுவித்தவருக்கும் கிடைக்கும். ஆகவே, இவர்களின் கூலியில் எதுவித குறையும் வந்துவிடாது. மேலும், எவராவது ஒருவர் இஸ்லாத்தில் தீய நடைமுறையை உருவாக்கி அதனை அவருக்குப்பின் எவராவது செய்தால், இவர்களுக்குரிய தண்டனையை ஒத்த தண்டனை அவருக்கும் கிடைக்கும். அதனால் இவர்களின் தண்டனையில் எதுவித குறையம் வந்துவிடாது"  (ஆதாரம் : முஸ்லிம்)   மேற்கண்ட நபி மொழிக்கு நவவி ரம்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இவ்வாறு விளக்கம் எழுதுகின்றார்கள். எவராவது ஒருவர் நல்வழி (ஹுதா ) பக்கம் அழைத்தால் அவருக்கு அதனைப் பின்பற்றுவோரின் கூலிகளையொத்த கூலி கிடைக்கும்.  மேலும், எவராவது ஒருவர் தீய வழிகேட்டின் பால் அழைத்தால், அதனைப் பின்பற்றுவோரின் தண்டனையையொத்த தண்டனை அவரைச்சாரும்;  புதிதாக தோற்றுவிக்கப்படும் நல்வழியு (ஹுதாவு)ம், வழிகேடும் அவரே தோற்றுவித்தவராக இருக்கலாம். அல்லது அவருக்கு முன் இருந்ததை தூண்டியதாக இருக்கலாம் . இவை கல்வி கற்பித்தல், அல்லது வணக்க வழிபாடுகள், ஒழுக்கம் தொடர்பானவைகள் பற்றியதாக அல்லது இது அல்லாததாக இருக்கலாம்.  மேற்கண்ட தெளிவான இரு ஹதீதுகளும் நல்ல காரியங்களை புதிதாக தோற்றுவிப்பது ஸுன்னத் என்றும், தீய காரியங்களைச் செயவது ஹறாம் என்றும் சுட்டிக்காட்டுகின்றன.  (ஆதாரம் : ஷரஹுல் முஸ்லிம்)  28 ம் பக்கம் பார்க்க  மேற்கண்ட ஆதாரங்களின்படி அனைத்து பித்அத்துகளும் தவறான பித்அத்துக்கள் அல்ல! ஷரியத்திற்கு முரண்படாத நல்ல விடயங்களை செய்வதும் செய்யத் தூண்டுவதும் சுன்னத்தான நல்ல காரியங்கள் ஆகும் இந்த நல்ல செயல்கள் இபாதத் பற்றியும் இருக்கலாம் ஒழுக்கம் சார்ந்ததாகவும் இருக்கலாம் என்று மிகத் தெளிவாக அறிய முடிகின்றது! இதன்படி தொழுகைக்குப் பின் ஓதப்படுகின்ற கூட்டு துவா வாதத்திற்கு பித்அத் என்று வைத்துக் கொண்டாலும் அது நல்ல செயலாக இருப்பதனால் அதனை செய்வது நன்மை தரும் புண்ணிய செயலாகும். ஒரு நன்மையான காரியத்தை புதிதாக தோற்றுவிப்பதும் பிறரை செய்யுமாறு தூண்டுவதும் நன்மை பயக்கும் செயல் என்று திரு நபி அவர்கள் கூறியிருக்கும் போது நன்மை பயக்கும் நல்ல காரியங்களை இபாதத்திலும் கூட புதிதாக தோற்றுவிக்கலாம் என்று சட்ட அறிஞர்கள் ஒப்புதல் அளித்திருக்கும் போது அதனை தடை செய்ய எவருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது! ஒரு நல்ல காரியத்தை தூண்டுவது மூமினின் குணம் என்றும், மாறாக அதனை தடுப்பது ஷைத்தானின், இழி குணம் என்றும்; முறை தவறி தனித்தவனின் இழி குணம் என்றும் திருக்குர்ஆன் எச்சரிக்கின்றது! ஷரீஅத்தின் தெளிவான விளக்கம் இப்படி இருக்கும் போது, பர்லான தொழுகைக்குப் பின் கூட்டு துஆ கூடாது என்று கூறுவது எப்படி நியாயமாகும்.?  இந்த அடிப்படை நியாயத்தை புரிந்து கொள்ளாதவர்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாசபையினால் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்க எப்படி அனுமதிக்க வழங்கினார்கள்?  தகுதியற்றவர்கள் வழங்கும் தீர்ப்புக்களால் ஷரியத்தின் உண்மை நிலையை மக்கள் எப்படி அறிய முடியும்? நீண்ட பாரம்பரியமும், வரலாறும் கூறுகின்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையில் முரண்பட்ட தீர்ப்புகள் இடம் பெறுவது எப்படி?  ஒத்த கருத்து இல்லாத உறுப்பினர்கள் உள்ள சபையிலிருந்து உருப்படியான ஒற்றுமையான தீர்ப்பை- முடிவை எப்படி எதிர்பார்க்க முடியும்.?   இதே உலமா சபை, முதலில் வழிகேடர்கள் என்று இனம் காட்டியவர்களை உலமா சபையின் உயர்பதவியில் வைத்து அழகு பார்த்து ஃபத்வா வெளியிடுகின்ற இன்றைய உலமா சபையின் தீர்பை மக்களால் எப்படி ஏற்க முடியும்? வழிகேடர்களான வஹாபிகளின் கூடாரமாக  இன்றைய உலமா சபை இயங்குவதால், அவர்கள் வழங்கும் ஃபத்வா வஹாபிகளின் ஃபத்வா அன்றி அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் (இஸ்லாத்தின்) ஃபத்வா ஆகாது!  ஆக, அ.இ.ஜ.உ.சபை வெளியிட்ட "கூட்டுத்துஆ பற்றிய ஃபத்வா விஷம் நிறைந்த கபடத்தனமானது! அது கண்டிக்கத்தக்கதும், நிராகரிக்கத்தக்கதுமாகும்‌. தொடரும்‌...

நபிகள் நாதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யாத ஒரு விடயத்தை மற்றவர்கள் செய்யக்கூடாது என்பது ஷரீஅத்தில் ஆதாரமாகாது. ஒரு விடயம் ரஸுலுல்லாஹி ஸல்லலலாஹு அலைஹி வஸல்லமவர்களால் செய்யாது தவிர்க்கப்பட்டிருந்தால் அதற்கு பல நியாயங்கள் காணப்படும். இவற்றுள் சில நியாயங்களை கடந்த நான்காவது தொடரில் விளக்கியிருந்தேன்.
கூட்டுத்துஆ கூடாது என்பதற்கு முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டுக்களில்
"கூட்டுத்துஆ பித்அத்"! ஆகும்.
பித்அத் எல்லாம் வழிகேடு!
என்று திருநபியவர்கள் திருவுளமாயிருக்கின்றார்கள். ஆகவே, கூட்டுதுஆ வழிகேடு! என்று வஹாபிகள் முடிவு செய்கின்றனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் இந்தக் கண்ணோட்டத்தில் தான் கூட்டுதுஆ பற்றித் கூடாது என்று தீர்ப்புக் கொடுத்துள்ளது.
பித்அத் பற்றி தெளிவான விளக்கம் இல்லாத முட்டாள்கள்தான் இப்படியான நெறிகெட்ட பத்வாக்களை வெளியிடுவார்கள்.
சுன்னத் வல்ஜமாஅத்தின் அதிகமான விடயங்களை இல்லாதொழிப்பதற்கு இப்படிப்பட்ட ஒவழிகேடர்கள் கையாளும் தந்திரமான விஷஆயுதமும் இதுதான்!
இப்படியான ஃபத்வாக்கள் இவர்களைப்போன்ற தான்தோன்றித்தனமான வழிகேடர்களின் முடிவேயன்றி அறிஞர்கள், இமாம்களின் முடிவல்ல!.
இதனால் இத்தொடரில் பித்அத் பற்றிய தெளிவான ஒரு விளக்கத்தை முன்வைப்பது அவசியம் எனக்கருதுகிறேன்.
"லிஸானுல் அறப்" என்பது முஸ்லிம்களால் எழுதப்பட்ட அறபு அகராதிப் பெருநூல்; இதில் பாகம் 8 பக்கம் 6 ல் "பித்அத்" பற்றி பின்வருமாறு வரையப்பட்டுள்ளது.
"பித்அத்" இரு வகைப்படும்.
1. பித்அத் ஹுதா,
2. பித்அத் ழலாலா.
அல்லாஹ்வும், இன்னும் அவனுடைய திருத்தூதரும் இட்ட கட்டளைக்கு மாறாக அமைபவை நிராகரிப்புக்கும், இகழுக்கும் உரிய "பித்அத் ஆகும்.
அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் நல்லது என்று கூறியவைகள் அல்லது நல்லது என்று தூண்டியவைகள் பாராட்டுக்குரிய பித்அத்வகையைச் சேரும்.
நடைமுறையில் இதற்கான முன் உதாரணம் இல்லாத, தர்மம், ஈகை, நற்காரியங்கள் போன்றவைகளும் பாராட்டுக்குரிய ஃபித்அத்வகையைச்சேரும்.
இவ்வாறானவை ஷரிஅத் அனுமதிக்காதவைகளுக்குப் பயன்படாமல் இருக்க வேண்டும்.
இப்படியான நற்காரியங்களுக்கு நன்மை உண்டு! என்று ரஸுலுல்லாஹி ஸல்லலலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்‌ கூறியுள்ளார்கள்..
"எவராவது ஒருவர் நல்ல காரியத்தைச் செய்தால், அதற்குரிய கூலி அவருக்குக் கிடைக்கும். மேலும், அதனை ‌ எவராவது செய்தால், அதன் கூலியும் அவருக்குக்கிடைக்கும் என்று கூறிய நபியவர்கள் இதற்கு மாற்றமாக எவராவது ஒருவர் தீய காரியத்தைச் செய்தால், அதற்கான தண்டனையும், அதனைச்செய்பவரின் தண்டனையும் கிடைக்கும் என்றார்கள்.
தறாவீஹை ஜமாஅத்தாக ஆக்கிய பின் அமீருல் மூஃமினீன் உமர் றலியல்லாஹு அன்ஹு அவர்கள் "இது நல்ல பித்அத்” என்று கூறியதும் இந்த நல்லவையைச் சேர்ந்ததாகும். ஆகவே இது பாராட்டுக்குரிய வகையைச் சார்ந்துள்ளது.
அமீருல் முஃமினீன் உமர் பாறூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இச்செயலை "பித்அத்” என்று குறிப்பிட்டாலும் அதனைப்பாராட்டினார்கள்,
தறாவீஹுத் தொழுகையை நிரந்தரமாக ஜமாஅத்தாக்கிய செயல் நபியவர்கள் செய்யாதது ஆகவேதான் பித்அத் என்றார்கள்.
நபிகள் நாதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் சில இரவுகள் தறாவீஹை ஜமாஅத்தாகத் தொழுதார்கள். ஆனால் அதனைத் தொடரவில்லை,. இதற்காக மக்களைத்திரட்டவில்லை;. ஹழரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திலும் தராவீஹ் ஜமாஅத்தாக தொழப்படவில்லை‌;
ஹழரத் உமர்பாறூக் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில்தான் மக்களை ஒன்று திரட்டி தறாவீஹை ஜமாஅத்தாக நடைமுறைப்படுத்தினார்கள்.
ஆகவே, இதனை " பித்அத் ” என்று கூறினார்கள் ஆனால், உண்மையில் இது "பித்அத்" அல்ல! சுன்னத் ஆகும்;
ஏனெனில், "எனது சுன்னத்தையும் எனக்குப் பின்னால் குலபாஉர்ராஷிதீன்களின் சுன்னத்தையும் பின்பற்றுமாறு கண்டிப்பாக நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும், எனக்குப் பின் அபூபக்கர், உமர் ஆகிய இருவரையும் பின் பற்றுங்கள்! என்றும் கூறியுள்ளார்கள்.
இந்த ஒழுங்கில்தான் மற்றுமொரு ஹதீதாகிய,
"ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்"
என்ற ஹதீதின் உட்கிடை நோக்கப்படல் வேண்டும்.
அதாவது, ஷரீஅத்தின் அடிப்படை (உஸுல்) களுக்கு மாறுபட்டதும் ஸுன்னத்திற்கு உடன்படாதவைகளுமான பித்அத்தே இங்கு நாடப்பட்டுள்ளது.
வழக்கில் அதிகமாக "பித்அத்" என்று பிரயோகப்படுவது நல்ல பித்அத்திற்கு அல்ல!.
அனைவரும் ஏற்றுக்கொண்ட அறபு அகராதிப் பெருநூலான "லிஸானுல் அறப்" என்ற நூல் "பித்அத்" என்பதற்கு தந்த விளக்கத்தை மேலே கண்டீர்கள்!
அடுத்து, ஹதீதுப் பெருநூற்களுக்கு விளக்கமெழுதிய பேரறிஞர்கள் சிலரது கருத்துக்களை தொடர்ந்து படியுங்கள்!,.
ஹதீதுப் பெருநூற்களில் திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில் மதிக்கப்படுவது ஸஹீஹுல் புகாரி ஷரீப் ஆகும். இதற்கு பல விரிவுரைகள் எழுதப்பட்டுள்ளன,. இவற்றுள் அனைவராலும் பாராட்டப்பட்டதும், வஹாபிகளும் ஆதாரமாக எடுப்பது பத்ஹுல் பாரி ஆகும். இதில் “பித்அத்" பற்றி இவ்வாறு வரைவிலக்கணப்படுத்தப்பட்டு விளக்கம் கூறப்பட்டுள்ளது.
"பித்அ'த்" என்பது, முன் உதாரணம் இல்லாமல் புதிதாக தோற்றுவிக்கப்படுபவற்றிற்கு கூறப்படும்,
ஸுன்ன்னத்திற்கு எதிராக தோற்றுவிக்கப்பவைகளை பொதுவாக ஷரீஅத்தில் இகழுக்குரிய பித்அத்துக்கள் என்று கூறப்படும்.
ஷரீஅத்தின் நற்காரியங்களை ஒட்டி வருபவைகளாக அது இருப்பின், அழகிய "பித்அத்" ஆகும். ஷரிஅத்தில் பாராட்டப்படாத வெறுப்புக்கும், பழிப்புக்கும் உரியவைகளை ஒட்டியதாக அவை இருக்குமாயின், அவை பழிப்புக்குரியதாகும். அவ்வாறில்லாதிருப்பின், ஆகும் என்ற வகையைச்சாரும்.
"பித்அத்" என்பது (வாஜிப், ஹறாம்; ஸுன்னத்; மக்றூஹ்; முபாஹ் உள்ளிட்ட ) ஷரீஅத்தின் ஐந்து வகையான சட்டதிட்டங்களிலும் வரும்.
ஆதாரம் : பத்ஹுல்பாரி பாகம் 4 பக்கம் 253
மேலும், இதே நூல் பாகம் 13 பக்கம் 353ல் சட்ட மேதை இமாமுனா ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்
"பித்அத்” பற்றிக் கூறியது இவ்வாறு இடம் பெற்றிருக்கின்றது.
"திருக்குர் ஆனுக்கும், திரு நபியவர்களின் ஸுன்னாவிற்கும், ஸஹாபாக்களின் நடைமுறைக்கும், இஜ்மாவிற்கும் மாறாகவரும் புதியவைகள் தீய "பித்அத்" ஆகும். புதிதாக உருவாக்கப்பட்ட நற்காரியங்கள் மேற்கூறியவைகளில் எதற்கும் மாறுபடாதிருப்பின், அது தீய "பித்அத்" அல்ல! மாறாக, பாராட்டுக்குரியதாகும்.
இதே கருத்தையே அனைத்து துறைகளைச்சார்ந்த அறிஞர்களும் கூறியுள்ளனர்.
ஈமான் பற்றியும், நாம் நம்ப வேண்டிய கோட்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்குவது அகீதா நூற்களாகும். இதில் மிகவும் பிரசித்தி பெற்றதும் இலங்கையிலும், உலகத்தின் அதிகமான நாடுகளிலும் மத்ரஸாக்களில் இறுதி ஆண்டிற்கு சிபாரிசு செய்யப்பட்டு பாடவிதானத்தில் இடம் பிடித்துள்ள நூல் "துஹ்பத்துல் முரீது" ஆகும்.
இந்த நூலை ஓதி அதில் பரீட்சை எழுதியவர்கள்தான் இந்த நாட்டிலுள்ள அனைந்து உலமாக்களுமாகும்; ஆகவே, இந்த நூலைத் தெரியாத எவரும் இருக்க முடியாது.
இந்நூல் பக்கம் 123ல் திருக்குர்ஆனுக்கு, அல்லது ஸுன்னாவிற்கு; அல்லது இஜ்மாவிற்கு; அல்லது கியாஸிற்கு உடன்பட்டு வரும் "பித்அத்" ஸுன்னத் என்று எழுதப்பட்டுள்ளது.
"பித்அத்” என்பது என்ன? அவற்றுள் நல்லது கெட்டது எவை? அவற்றை வகைப்படுத்தும் வழி எது? என்பது பற்றி உலகப்புகழ்பெற்ற பேரறிஞர்களின் கூற்றுக்கள் மிகத்தெளிவாக்கப்பட்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ்!.
"பித்அத்" பற்றி மேற்கண்ட அறிஞர்கள் வகைப்படுத்தியது அவர்களின் கற்பனை என்றும், அதற்கு ஹதிதில் எதுவித ஆதாரமும் கிடையாது என்றும்; சில வழிகேடர்கள் கூறியும், எழுதியும் வருகின்றனர்.
இவ்வழிகேடர்களின் வெற்று வாதத்திற்கு "முஹ்யுஸ் ஸுன்னா" ஸுன்னாவிற்கு உயிரூட்டியவர்கள் என்று சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகின்ற பேரறிஞர் இமாம் நவவி ரஹ்மத்துலவாஹி அலைஹி தங்களது புகழ்பூத்த ஷரஹு முஸ்லிமில் இவ்வாறு எழுதுகின்றார்கள்.
ரஸுலுல்லாஹி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு திருவுளமானார்கள்.
"இஸ்லாத்தில் எவராவது ஒருவர் புதிய நல்ல காரியத்தை உருவாக்கி அதை அவருக்குப்பின் எவராவது செய்தால், அதனைச் செய்தவரின் கூலி போன்ற கூலி அதனைத் தோற்றுவித்தவருக்கும் கிடைக்கும். ஆகவே, இவர்களின் கூலியில் எதுவித குறையும் வந்துவிடாது. மேலும், எவராவது ஒருவர் இஸ்லாத்தில் தீய நடைமுறையை உருவாக்கி அதனை அவருக்குப்பின் எவராவது செய்தால், இவர்களுக்குரிய தண்டனையை ஒத்த தண்டனை அவருக்கும் கிடைக்கும். அதனால் இவர்களின் தண்டனையில் எதுவித குறையம் வந்துவிடாது"
(ஆதாரம் : முஸ்லிம்)
மேற்கண்ட நபி மொழிக்கு நவவி ரம்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இவ்வாறு விளக்கம் எழுதுகின்றார்கள்.
எவராவது ஒருவர் நல்வழி (ஹுதா ) பக்கம் அழைத்தால் அவருக்கு அதனைப் பின்பற்றுவோரின் கூலிகளையொத்த கூலி கிடைக்கும். மேலும், எவராவது ஒருவர் தீய வழிகேட்டின் பால் அழைத்தால், அதனைப் பின்பற்றுவோரின் தண்டனையையொத்த தண்டனை அவரைச்சாரும்;
புதிதாக தோற்றுவிக்கப்படும் நல்வழியு (ஹுதாவு)ம், வழிகேடும் அவரே தோற்றுவித்தவராக இருக்கலாம். அல்லது அவருக்கு முன் இருந்ததை தூண்டியதாக இருக்கலாம் . இவை கல்வி கற்பித்தல், அல்லது வணக்க வழிபாடுகள், ஒழுக்கம் தொடர்பானவைகள் பற்றியதாக அல்லது இது அல்லாததாக இருக்கலாம்.
மேற்கண்ட தெளிவான இரு ஹதீதுகளும் நல்ல காரியங்களை புதிதாக தோற்றுவிப்பது ஸுன்னத் என்றும், தீய காரியங்களைச் செயவது ஹறாம் என்றும் சுட்டிக்காட்டுகின்றன.
(ஆதாரம் : ஷரஹுல் முஸ்லிம்)
28 ம் பக்கம் பார்க்க
மேற்கண்ட ஆதாரங்களின்படி அனைத்து பித்அத்துகளும் தவறான பித்அத்துக்கள் அல்ல! ஷரியத்திற்கு முரண்படாத நல்ல விடயங்களை செய்வதும் செய்யத் தூண்டுவதும் சுன்னத்தான நல்ல காரியங்கள் ஆகும் இந்த நல்ல செயல்கள் இபாதத் பற்றியும் இருக்கலாம் ஒழுக்கம் சார்ந்ததாகவும் இருக்கலாம் என்று மிகத் தெளிவாக அறிய முடிகின்றது!
இதன்படி தொழுகைக்குப் பின் ஓதப்படுகின்ற கூட்டு துவா வாதத்திற்கு பித்அத் என்று வைத்துக் கொண்டாலும் அது நல்ல செயலாக இருப்பதனால் அதனை செய்வது நன்மை தரும் புண்ணிய செயலாகும்.
ஒரு நன்மையான காரியத்தை புதிதாக தோற்றுவிப்பதும் பிறரை செய்யுமாறு தூண்டுவதும் நன்மை பயக்கும் செயல் என்று திரு நபி அவர்கள் கூறியிருக்கும் போது நன்மை பயக்கும் நல்ல காரியங்களை இபாதத்திலும் கூட புதிதாக தோற்றுவிக்கலாம் என்று சட்ட அறிஞர்கள் ஒப்புதல் அளித்திருக்கும் போது அதனை தடை செய்ய எவருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது!
ஒரு நல்ல காரியத்தை தூண்டுவது மூமினின் குணம் என்றும், மாறாக அதனை தடுப்பது ஷைத்தானின், இழி குணம் என்றும்; முறை தவறி தனித்தவனின் இழி குணம் என்றும் திருக்குர்ஆன் எச்சரிக்கின்றது!
ஷரீஅத்தின் தெளிவான விளக்கம் இப்படி இருக்கும் போது, பர்லான தொழுகைக்குப் பின் கூட்டு துஆ கூடாது என்று கூறுவது எப்படி நியாயமாகும்.?
இந்த அடிப்படை நியாயத்தை புரிந்து கொள்ளாதவர்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாசபையினால் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்க எப்படி அனுமதிக்க வழங்கினார்கள்?
தகுதியற்றவர்கள் வழங்கும் தீர்ப்புக்களால் ஷரியத்தின் உண்மை நிலையை மக்கள் எப்படி அறிய முடியும்?
நீண்ட பாரம்பரியமும், வரலாறும் கூறுகின்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையில் முரண்பட்ட தீர்ப்புகள் இடம் பெறுவது எப்படி?
ஒத்த கருத்து இல்லாத உறுப்பினர்கள் உள்ள சபையிலிருந்து உருப்படியான ஒற்றுமையான தீர்ப்பை- முடிவை எப்படி எதிர்பார்க்க முடியும்.?
இதே உலமா சபை, முதலில் வழிகேடர்கள் என்று இனம் காட்டியவர்களை உலமா சபையின் உயர்பதவியில் வைத்து அழகு பார்த்து ஃபத்வா வெளியிடுகின்ற இன்றைய உலமா சபையின் தீர்பை மக்களால் எப்படி ஏற்க முடியும்?
வழிகேடர்களான வஹாபிகளின் கூடாரமாக இன்றைய உலமா சபை இயங்குவதால், அவர்கள் வழங்கும் ஃபத்வா வஹாபிகளின் ஃபத்வா அன்றி அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின்
(இஸ்லாத்தின்) ஃபத்வா ஆகாது!
ஆக, அ.இ.ஜ.உ.சபை வெளியிட்ட "கூட்டுத்துஆ பற்றிய ஃபத்வா விஷம் நிறைந்த கபடத்தனமானது! அது கண்டிக்கத்தக்கதும், நிராகரிக்கத்தக்கதுமாகும்‌.
தொடரும்‌...

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.
➖➖➖➖➖➖➖➖