السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 16 May 2024

புறம் பேசுவது விபச்சாரத்தை விட கொடியது! 01

 

அல்லாஹுத்த ஆலா புறம் பேசுவதை இகழ்ந்தும், புறம் பேசுபவனை மனிதனின் மாமிசத்தைப் புசிப்பவனுக்கு ஒப்பிட்டும் திருக்குர்ஆனில் கூறியுள்ளான். ولا يغتب بعضكم بعضا  ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه ، உங்களில் சிலர் சிலரைப் புறம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம்; உங்களில் ஒருவர் தம் சகோதரனின் மாமிசத்தை மைய்யித்தாக இருக்கும் நிலையில் உண்ண விரும்புவாரா.?                                49: 12 றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். كل مسلم علي المسلم حرام ،دمه وماله وعرضه  ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அடுத்த முஸ்லிமுடைய இரத்தம், செல்வம், கண்ணியம் உள்ளிட்டவை ஹறாமாகு. மேலும் கூறினார்கள். واياكم والغيبة فان الغيبة اشد من الزنا ، فان الرجل قد يزني فيتوب الله عليه ، وان صاحب الغيبة لايغفر له حتي يغفر له صاحبها  புறம் பேசுவதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; காரணம், புறம் விபச்சாரத்தை விடக் கொடியதாகும்; விபச்சாரி விபச்சாரத்திற்குப்பின் தவ்பாச் செய்தால் அல்லாஹுத்த ஆலா அதனை மன்னிப்பான்;  ஆனால், புறம் அவ்வாறல்ல! எவரைப் பற்றி புறம்பேசப்பட்டதோ அவர் மன்னிக்காதவரை மன்னிக்கப்படமாட்டாது.

அல்லாஹுத்த ஆலா புறம் பேசுவதை இகழ்ந்தும், புறம் பேசுபவனை மனிதனின் மாமிசத்தைப் புசிப்பவனுக்கு ஒப்பிட்டும் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.
ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه ،
உங்களில் சிலர் சிலரைப் புறம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம்; உங்களில் ஒருவர் தம் சகோதரனின் மாமிசத்தை மைய்யித்தாக இருக்கும் நிலையில் உண்ண விரும்புவாரா.?
49: 12
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
كل مسلم علي المسلم حرام ،دمه وماله وعرضه
ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அடுத்த முஸ்லிமுடைய இரத்தம், செல்வம், கண்ணியம் உள்ளிட்டவை ஹறாமாகு.
மேலும் கூறினார்கள்.
واياكم والغيبة فان الغيبة اشد من الزنا ، فان الرجل قد يزني فيتوب الله عليه ، وان صاحب الغيبة لايغفر له حتي يغفر له صاحبها
புறம் பேசுவதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; காரணம், புறம் விபச்சாரத்தை விடக் கொடியதாகும்; விபச்சாரி விபச்சாரத்திற்குப்பின் தவ்பாச் செய்தால் அல்லாஹுத்த ஆலா அதனை மன்னிப்பான்; ஆனால், புறம் அவ்வாறல்ல! எவரைப் பற்றி புறம்பேசப்பட்டதோ அவர் மன்னிக்காதவரை மன்னிக்கப்படமாட்டாது.
புறம் பேசுபவனுக்கான உதாரணம் எறிகணை இயந்திரத்தை நிறுத்திவைத்து, வலது, இடது பக்கமாக நன்மைகளை வீசுபவனைப் போலாவான்.
மேலும் கூறினார்கள்.
من رمي اخاه بغيبة يريد بها شينه اوقفه الله تعالي علي جسر جهنم يوم القيمة حتي يخرج مما قال
எவராவது ஒரு முஸ்லிம் சகோதரனைப் பற்றி தீய எண்ணத்தோடு புறம் பேசினால், மறுமையில் ஸிறாத்துல் முஸ்தகீம் பாலத்தில் அவரை நிறுத்திவைப்பான்; அவர் கூறியது அங்கு வெளியாகும்.
மேலும் கூறினார்கள்.
الغيبة ذكرك اخاك بما يكره
புறம் என்பது உனது சகோதரன் விரும்பாததை நீ கூறுவதாகும்.
அந்தக்குறை உடலிலுள்ள குறையாகலாம், அவன் பரம்பரை, அவனுடைய சொல், செயல், அல்லது உலகவிடயம், அல்லது மார்க்க விடயம் பற்றியதாகலாம், அவருடைய ஆடை, வாகனம் உள்ளிட்டவை பற்றிய குறையாக இருந்தாலும் புறமாகவே ஆகும்.
ஒருவரின் ஆடையை நெட்டை, அல்லது குட்டை என்று கூறினாலும் கூட புறமாகும். அவர் வெறுப்பதை உனக்குக் கூறினால் எப்படியிருக்கும்? (அவ்வாறுதான் மற்றவருக்குமாகும்.) என்று முன்னோர்களில் சிலர் கூறுகின்றனர்.
ஒருகட்டையான பெண் ஒரு தேவையின் நிமித்தமாக றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தேவையை முடித்து விட்டுச் செல்லும் போது, இவர் மிகக் கட்டையாக இருக்கின்றாரே! என்று அன்னை ஆயிஷா சித்தீக்கா றழியல்லாஹு அன்ஹா கூறியதும்,
اغتبتها يا عائشة
ஆயிஷாவே! அவரைப்பற்றி புறம் பேசிவிட்டீர் என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மேலும் கூறினார்கள்.
واياكم والغيبة فان فيها ثلاث افات: لا يستجاب لصاحبها دعاء ، ولا تقبل له الحسنة ، وتتراكم عليه السيئات
புறம் பேசுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்! காரணம், அதில் மூன்று ஆபத்துக்கள் உள்ளன.
1- புறம் பேசுபவனின்
துஆ கபூலாக மாட்டாது.
2- அவனுடைய நன்மைகளும் அங்கீகரிக்கப்படமாட்டாது.
3- அவன் மீது கெடுதிகளின் தாக்கம் வந்து கொண்டிருக்கும்.
தொடரும்.....


கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி