ஒவ்வொரு வருடமும் ஸபர் மாதம் கடைசி புதன்கிழமையை "ஒடுக்கத்துப் புதன்" என்று கூறப்படுகிறது.
இந்த நாளில் ஒரு வருடத்துக்கான சோதனை (பலாய்)கள் இறங்குவதாக நம்பப்படுகிறது.
அதனால், அத்தினத்தில் இறங்குகின்ற சோதனை
(பலாய்)கள் தங்களை அணுகாமல் இருக்க சில வழிமுறைகளை நமது முன்னோர்கள் காட்டித் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
அதனை நாம் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.
கடந்த காலத்தில் இவை மறுப்புக்கள் இல்லாமல் நடைமுறையில் செய்யப்பட்டு வந்தன.
இயக்கங்களும், வழிதவறிய சிந்தனைகளும் மேலோங்கி வருகின்ற காரணத்தால், இந்த செயல்பாடுகள் பிழையான ஒன்றாக இப்போது சிலரால் சித்தரித்து காட்டப்படுகின்றன.
நமது முன்னோர்கள் ஆதாரமில்லாமல் எதையும் செய்ததில்லை. சொன்னதுமில்லை.!
அதனை பார்க்காமல் சிலர் விளக்கம் கூறுவதும், தீர்ப்பு கூறுவதும், கற்பனையான விளக்கங்களைக்கூறி வித்துவம் பேசுவதெல்லாம் வழிதவறிச் செல்வதற்கேதான் வழிகோலாகும்.
"உங்களுடைய ஹவாவை நீங்கள் பின்பற்ற வேண்டாம்.! உங்களை அது வழி கெடுத்து விடும்".! என்று அல் குர்ஆனில் அல்லாஹுத்தஆலா எச்சரிக்கின்றான்.
அதனால்,
கற்பனையான விளக்கங்களைக் கூறுவது மக்களை தவறாக வழி நடத்துவதாகவே அமையும்.!
ஒடுக்கத்துப் புதனின் எதார்த்தத்தை ஆத்ம ஞானம் பெற்ற அறிஞர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் 320 ஆயிரம் பலாய்கள் ஸபர் மாதம் ஒடுக்கத்துப் புதன் அன்று இறங்குகின்றன.
அந்த பலாய்கள் நம்மை அணுகாமலிருக்க பின்வரும் ஒழுங்கு முறையை ஆரிபீன்கள் கூறுகின்றனர்.
ஒடுக்கத்துப் புதன் அன்று
நான்கு றகாஅத் நபில் தொழ வேண்டும்.
ஒவ்வொரு றகாஅத்திலும் சூறா பாத்திஹாவுக்குப் பின்,
"சூறா கௌதர் ஏழு விடுத்தமும் "சூறா இக்லாஸ்
ஐந்துவிடுத்தமும், "சூறா பலக், "சூறா நாஸ் தலா ஒரு விடுத்தமும் ஓதிதொழுகையை முடித்து ஸலாம்கொடுத்த பின்,
பின் வரும் துஆவை ஓதவேண்டும்.!
اللهم يا شديد القوى، ويا شديد المحال يا عزيز يامن ذلت لعزتك جميع خلقك اكفني من شر جميع خلقك يا محسن يا مجمل يا متفضل يا منعم يا متكبر يامن لااله الا انت ارحمني برحمتك يا ارحم الراحمين.
اللهم بسر الحسن واخيه وجده وابيه وامه وبنيه اكفني شر هذا اليوم وما ينزل فيه يا كافى المهمات يا دافع البليات فسيكفيكهم الله وهو السميع العليم.
۔ وحسبنا الله ونعم الوكيل ولا حول ولا قوة الا بالله العلى العظيم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم ،
ஆதாரம் : முஜர்ரபுத் தைறபி
பக்கம். : 74.
நிஹாயத்துல் அமல் என்ற நூலில் பின் வருமாறு பதியப்பட்டுள்ளது.
விதியில் எழுதப்பட்ட ஒரு வருடத்திற்கான பலாய்கள் லௌஹுல் மஹ்பூழ் ஏட்டிலிருந்து முதல் வானத்திற்கு ஸபர் மாதம் ஒடுக்கத்துப் புதன் அன்றே இறங்குகின்றன.
அதனால்.
பின் வரும் ஏழு திருவசனங்களையும் எழுதிக்கரைத்து யாராவது குடித்தால் அதன் தாக்கத்திலிருந்து மீளுவார்.
அத்திருவசனங்கள் வருமாறு.
1-سلام قولا من رب رحيم ،
2- سلام على نوح فى العالمين ،
3- سلام على ابراهيم ،
4- سلام على موسى وهارون ،
5 سلام على الياسين ،
6- سلام عليكم طبتم فادخلوها خالدين ،
7- سلام هي حتى مطلع الفجر ،
ஆதாரம் : நிஹாயத்துல் அமல். பக்கம். 250.
பொதுவாக ஸபர் மாதம் ஒடுக்கத்துப் புதன் எப்போதுமே நஹ்சு (தீய) நாளாகவே இருந்து வருகின்றது. என்று முஜத்தித் இமாம் அஹ்மது றிழாகான் கான் *(அஃலா ஹளறத்)* றஹ்மதுள்ளாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
ஆதாரம். பதாவா றிஸ்வியா. பாகம் .23: பக்கம், 293
ஒவ்வொரு மாதமும் இறுதி புதன் கிழமை நஹ்சுக்குரிய நாளாகவே இருந்து வருகின்றது. என்று மர்பூஆன ஒரு ஹதீதின் மூலமாகவும் காணக்கிடைக்கின்றது.
ஆதாரம். கன்சுல் உம்மால்.
ஹதீத் எண் .29.030
"நோய் மொத்தமாக இறங்குகின்றன. நிவாறனம் சிறிது சிறிதாகவே இறங்குகின்றன."
என்ற ஹதீதை இமாம் ஹாகீம், இமாம் தைலமி றஹிமஹுமல்லாஹு அன்ஹுமா ஆகியோர் பதியும் ஹதீதை ஹாபிழ் இமாம் சுயூத்தி றஹ்மதுள்ளாஹி அலைஹி அவர்கள் அத்துறறுல் மன்தூறா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
ஆதாரம் பதாவா ஹதீதிய்யா ஓரம் : பக்கம் . 261
மேற்படி ஹதீதில் நோய் மொத்தமாக இறங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருப்பது கவனத்திற்குரியது.
ஒடுக்கத்துப் புதன் பற்றிய அறிஞர்களின் மேற்கோள்களை மேலே படித்தீர்கள்.
ஒடுக்கத்துப் புதனின் பின்னணிக்காரணம் வருடத்திற்கான பலாய்கள் அந்தத் தினத்தில் இறங்குகின்றன. என்பதும்,
அதிலிருந்த தப்பிக்கவேண்டிய வழியைக் கையாளுதலுமாகும்.
இதற்கு அப்பால் ஒடுக்கத்துப் புதனுக்கும், றசூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு நோய் ஏற்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
அதனால், ஒடுக்கத்துப் புதன் தொடர்பான நடைமுறை ஆரிபீன்களின் கஷ்பின் மூலம் வந்தது என்பதும். அதனை அறிஞர்கள் விமர்சிக்காமல் அங்கீகரித்து நடைமுறைப்படுத்தி வந்த செயல் என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
ஆரிபீன்கள் கூறியதை ஏற்றுக் கொள்பவர் அவர்கள் கூறிய வழிமுறையை பின் பற்றி ஒழுகினால் அந்த வருடத்தில் இறங்கும் பலாய்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவார்.
அதுதவிர,
ஒடுக்கத்துப் புதன் என்பது
ஷரீஅத்தின் அங்கமோ, அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதாவைச் சேர்ந்தது என்றோ, வாதிப்பது தவறானது.
கஷ்பின் மூலம் ஷரீஅத் சட்டம் நிரூபணமாகாது. ஆயினும். அதனை ஏற்றுச் செயல்படுபவர் அதன் பலனை அனுபவிப்பார். மறுப்பவர் அதன் விளைவை அனுபவிப்பார்.
ஆரிபீன்களின் கஷ்பில் நம்பிக்கை வைப்பதும், அவர்களில் நல்லெண்ணம் கொள்வதும் சீதேவித்தனத்திற்கு ஆதாரமாகும்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குப் பின் ஓதப்படுகின்ற
"இலாஹி லஸ்த்து லில்பிர்தௌஸி.."
என்ற துஆவும் அதன் பலனும் குத்புர்றப்பானி அப்துல் வஹ்ஹாபுஷ் ஷஃறானி றஹ்மதுள்ளாஹி அலைஹி அவர்களின் கஷ்பின் மூலம் வந்த நல்ல நடைமுறையாகும்.
இந்த நல்ல செயலுக்கு சட்ட அறிஞர்கள் அங்கீகாரம் வழங்கி நடைமுறைப்படுத்தி வந்தனர்.
"முஸ்லிம்கள் ஒருகாரியத்தை நல்லதாகக் கண்டால் அச் செயல் அல்லாஹ்விடத்திலும் நல்லதாகவே இருக்கும்."
என்று றசூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியதன் படியும்,
"பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்."
"துஆ பலாயைத்தட்டும்."
"நிச்சயமாக தொழுகை மானக்கேடானதும் அருவருப்பானதுமான செயலைத் தடுக்கின்றது."
என்பன போன்றவை
ஒடுக்கத்துப் புதன் விடயத்திற்கு வலுவூட்டுகின்றது.