السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 14 May 2024

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும்.தொடர் 7

 

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும்.             தொடர் :- {7}

அர்கான்:
-------
ஜனாஸாத் தொழுகைகைக்கு ஏழு றுக்னுகளாகும்,
1- நிய்யத்,
2- நிற்றல்;
3- தக்பீர் தஹ்ரீமோடு சேர்த்து நான்கு தக்பீர்கள்,
4- பாத்திஹா சூறத்தை ஓதுதல்;
5- ஸலவாத்;
6- துஆ
7- ஸலாம்.
1- நிய்யத்:
----------
ஜனாஸாத்தொழுகைக்கான நாட்டத்தோடு பர்ளைக்குறிப்பாக்குவது வாஜிப், பொதுவாக பர்ளை நிய்யத் வைப்பது போதுமானது; கிபாயாவை வெளிப்படுத்துவது அவசியமில்லை;
نويت الصلاة علي هذا الميت فرضا او علي من صلي عليه الامام او علي من حضر من اموات المسلمين مستقبلا الي الكعبة الشريفة لله تعالي
இந்த மைய்யித்தின் மீது பர்ளான தொழுகையை,, அல்லது, இமாம் தொழுவிக்கும் நபரின் மீதான தொழுகையை; அல்லது, இங்கு பிரசன்னமாக இருக்கும் முஸ்லிம்களில் மரணித்தவர்களின் மீது கஃபாவை முன்னோக்கியவனாக அல்லாஹ்வுக்காக நிய்யத் வைக்கின்றேன்
பெயரை குறிப்பாக்கி மைய்யித்தின் பக்கம் சாடை செய்யவும், அல்லது பெயரில் தவறு நிகழ்ந்தாலும் குற்றமில்லை; முதல் தக்பீரோடு சேர்த்து நிய்யத் இணைந்திருப்பது வாஜிபாகும்; இமாமுக்கு இமாமத் பற்றிய நிய்யத் வாஜிபில்லை; ஆனாலும், இமாமத்தின் நிய்யத்தை வைப்பதினூடாக இமாமுக்கு ஜமாஅத்திற்குரிய நன்மை கிடைக்கும்; தவறினால் கிடைக்காது; இமாமை பின்தொடர்பவருக்கு பின்தொடர்வதற்கான நிய்யத் அவசியமாகும்;
2- நிலை:
நிற்க சக்தியுள்ளவர் நிற்பது வாஜிபாகும், நிற்க முடியாவிட்டால் உட்கார வேண்டும்; உட்காரவும் முடியாவிட்டால், ஒருபக்கமாக சாய்ந்து படுத்துக்கொள்ளவும்.
3- தக்பீர்கள்:
தகபீர் இஹ்றாமோடு சேர்த்து நான்கு தக்பீர்கள் வாஜிபாகும், ஒவ்வொரு தக்பீரோடு சேர்த்து இரு கைகளை உயர்த்துவதும், இன்னும், கையை நெஞ்சுக்குக் கீழ் கட்டுவதும் சுன்னத்தாகும்; நான்கு தக்பீர்களும் ஒரு றுக்னில் அடங்கும்; ஜனாஸாத் தொழுகையில் மறதிக்கான சுஜூது கிடையாது!
4- கிறாஅத்:
முதல் தக்பீறுக்குப் பின், ஃபாத்திஹா சூறத் வாஜிபாகும், பகலில் ஓதினாலும்; இரவில் ஓதினாலும்; இமாம், அல்லது தனிநபர் கிறாஅத்தை இரகசியமாகவே ஓதவேண்டும்; இமாம் மட்டும் தக்பீறிலும், ஸலாத்திலும் சத்தத்தைக் கூட்டிகொள்ளவும்..தனிநபரும், இமாமைப்பின் தொடர்பவர்களும் தக்பீர்களையும், ஸலாத்தையும் இரகசியமாக கூறவேண்டும்;
பிஸ்மில்லா பாதிஹா சூறத்தின் ஓர் அங்கமாகும், பிஸ்மில்லாஹ்வுக்குமுன் அஊது சொல்வதும்; பாதிஹா சூறத்தை முடித்ததும் ஆமீன் கூறுவதும் சுன்னத்தாகும்; ஜனாஸாத்தொழுகையை இலேசாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவேண்டியேதான் இப்திதாவுடைய துஆ (வஜ்ஜஹ்து) கிறாஅத் சுன்னத்தாக்கப்படவில்லை; கப்றிலும் மறைவான தொழுகையிலும் இவ்வாறே ஓதவேண்டும்;
தக்பீர் இஹ்றாமில் இமாமோடு கூட்டானவரை "முவாபிக்" موافق என்றும், அதற்குபின் கூட்டாகும் நபரை மஸ்பூக் مسبوق என்றும் கூறப்படும், மஸ்பூக் தனது ஆரம்பத்தக்பீருக்குப்பின் சூறா பாத்திஹாவை ஓதவேண்டும்; இதற்கு முன் இமாம் ஓதி முடித்திருந்தாலும் சரியே! இமாமின் தொழுகையின் ஒழுங்கு மஸ்பூக் மீது கிடையாது; இமாம் ஸலாம் கொடுத்த பின், மஸ்பூக்கின் வாஜிபான கருமத்தைப் பூர்த்தி செய்வது மஸ்பூக்கின் மீது வாஜிபாகும்; இன்னும் சுன்னத்தான கருமங்களைப் பூர்த்தி செய்வது சுன்னத்தாகும்; பாத்திஹா சூறத்தை முதல் தக்பீறுக்குப்பின்புதான் ஓதவேண்டும் என்பது வாஜிபில்லை; இரண்டாவது தக்பீர்களுக்குப்பின் ஸலவாத்தோடு அல்லது துஆவோடு சேர்த்தும் கூட ஓதலாம்.
5- ஸலவாத்:
இரண்டாம் தக்பீறுக்குப்பின் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுவது வாஜிபாகும், இதற்குப்பின் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்கள் மீது ஸலவாத் கூறுவது சுன்னத்தாகும்;
குறைந்தளவான ஸலவாத்:
اللهم صل علي محمد
பூரணமான ஸலவாத் இரண்டாவது அத்தஹிய்யாத்தில் ஓதுவதாகும்.
اللهم صل علي سيدنا محمد وعلي ال سيدنا محمد كما صليت علي سيدنا ابراهيم وعلي ال سيدنا ابراهيم وبارك علي سيدنا محمد كما باركت علي سيدنا ابراهيم وعلي ال سيدنا ابراهيم في العالمين انك حميد مجيد .
ஸலவாத்தில் அஸ்ஸாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு என்று ஸலாம் கூறுவது சுன்னத் அல்ல; ஸலவாத்திற்கு முன் அல்ஹம்தைக் கூறுவது சுன்னத்தாகும்; அதாவது,
الحمد لله رب العالمين اللهم صل علي سيدنا محمد الخ
என்று இறுதிவரை ஓதவேண்டும்;
இரண்டாவது தகபீறுக்குப்பின்புதான் ஸலவாத் ஓதவேண்டும்; மூன்றாவது, நான்காவது தக்பீறுக்குப்பின் அல்ல!
மைய்யித்திற்கான துஆ:
-----------------------
மூன்றாவது தக்பீறுக்குப் பின், மைய்யித்திற்காக துஆக்கேட்பது வாஜிபாகும்,
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,
اذا صليتم علي الميت فاخلصوا له الدعاء ،
நீங்கள் மைய்யித்தின் மீது தொழும்போது அதற்காக கலப்பற்ற மனதோடு துஆக்கேளுங்கள்.
துஆவில் ஆகக் குறைந்தது,
اللهم اغفر له
ஆணாயின் ஹுه என்றும், பெண்ணாயின் ஹா ها என்றும் மொழிய வேண்டும்,
பூரணத்தில் குறைந்தளவு துஆ:
اللهم اغفر لحينا وميتنا و شاهدنا وحاضرنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه علي الاسلام ومن توفيته منا فتوفه علي الايمان اللهم اغفرله (ها) وارحمه(ها)
யாஅல்லாஹ்! எங்களுடைய உயிருள்ளவரையும் இன்னும் எங்களுடைய மரணித்தவரையும் மன்னிப்பாயாக! இன்னும், எங்களுக்கு முன்னால் உள்ளவர்களையும், எங்களுடைய மறைவானவர்களையும் இன்னும், எங்களுடைய பெரியவர்களையும்; சிறியவர்களையும்; இன்னும் எங்களுடைய ஆண்களையும்; எங்களுடைய பெண்களையும் மன்னிப்பாயாக!
யாஅல்லாஹ்! எங்களில் நின்றும் எவரை வாழவைத்தாயோ அவர்களை இஸ்லாத்தின் மீது வாழவைப்பாயாக! இன்னும் எங்களிலிருந்து எவரை நீ மரணிக்கச்செய்தாயோ அவர்களை ஈமானின் பேரில் மரணிக்கச்செய்வாயாக!
யாஅல்லாஹ்! அவரை மன்னிப்பாயாக! இன்னும் இரக்கம் காட்டுவாயாக!
பரி பூரணமான துஆ:
எங்களில் உயிருள்ளவர் ...اللهم اغفر لحينا என்பதிலிருந்த அவரை ஈமானின் மீது வபாத்தாக்குவாயாக! وتوفه علي الايمان வரை ஓதிய பின், பின்வரும் துஆவை ஓதவேண்டும்.
اللهم ان هذا عبدك وابن عبدك خرج من روح الدنيا وسعتها ومحبوبه احباءه فيها الي ظلمة القبر وما هو لاقيه ، كان اشهد ان لا اله الا انت وحدك لا شريك لك وان محمدا عبدك ورسولك وانت اعلم به منا ، اللهم انه نزل بك وانت خير منزول به واصبح فقيرا الي رحمتك وانت غني عن عذابه وقد جئناك راغبين اليك شفعاء له
اللهم ان كان محسنا فزد احسانه وان كان مسيئا فتجاوز عنه ولقه برحمتك رضاك وقه فتنة القبر وعذابه وافسح له في قبره وجاف الارض عن جنبيه ولقه برحمتك الامن من عذابك حتي تبعثه امنا الي جنتك برحمتك با ارحم الراحمين .
யாஅல்லாஹ்! இவர் உனது அடியார், இன்னும் இரு அடியார்களின் மகன்; உலகத்தின் சுகம் விசாலம் உள்ளிட்டவையிலிருந்து வெளியேறிவிட்டார்; அவருக்கு விருப்பமானவையும்; அவரின் நண்பர்களும் அங்கேதான் இருக்கின்றார்கள்; கப்றின் இருட்டின் பக்கமும், அவர் அங்கு சந்திக்க வேண்டியதன் பக்கமும் வந்துள்ளார்;
வணக்கத்திற்குத் தகுதியானவன் நீயல்லாது வேறு நாயன் கிடையாது என்றும்; நீதனித்தவன்; உனக்கு கூட்டு இல்லை என்றும்; நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உனது நல்லடியார், இன்னும் உன்னுடைய திருத்தூதர் என்றும் அவர் சாட்சி கூறுபவராக இருந்தார்; நீ இந்த மைய்யித்தை எங்களை விட அதிகம் அறிந்தவன்;
யாஅல்லாஹ்! நிச்சயமாக அவர் உனது விருந்தாளியாக வந்துள்ளார், நீ அவருக்கு சிறந்த விருந்தோம்பல் செய்பவனாகும்;, உனது றஹ்மத்தின்பால் தேவையுள்ளவராக உன்னிடத்தில் வந்துள்ளார்; நீ அவரை வேதனை செய்வதிலிருந்து தேவையற்றவனாகும்; நிச்சயமாக அவருக்காக சிபாரிசை வேண்டியவர்களாக உனக்கு முன்னால் சமூகம் கொடுத்துள்ளோம்;
யாஅல்லாஹ்! அவர் நல்லவராயின் அவரின் நன்மைய அதிகரிக்கச்செய்வாயாக! அவர் தீயவராயின், அவரின் தீயவையிலிருந்து அவரை கடக்கச்செய்வாயாக! இன்னும், அவரை தனது றஹ்மத்தின் காரணமாக தனது பொருத்தத்தில் செர்துக்கொள்வாயாக!
இன்னும், அவரின் கப்றின் குழப்பத்திலிருந்தும், அதன் வேதனையிலிருந்து அவரைப்பாதுகாப்பாயாக! இன்னும் அவரின் கப்றை விசாலப்படுத்துவாயாக! இன்னும் அவரின் விலாப்புறத்திலிருந்து கப்றை தூரமாக்குவாயாக! இன்னும், தன்னுடைய றஹ்மத்தின் காரணமாக உன்னுடைய வேதனையிலிருந்து அச்சமற்று இருப்பதில் சேர்பாயாக! கருணாகரனே! தன்னுடைய றஹ்மத்தின் காரணமாக தன்னுடைய பாதுகாப்போடு சொர்கம் வரை சேர்த்து வைப்பாயாக!
மைய்யித் பெண்ணாக இருந்தால், ஆரம்பத்திலேயே
ان هذه امتك و بنت عبديك
என்றும், ஆணாயின் ه என்றும், பெண்ணாயின். ها என்றும் பல எண்ணிக்கையுள்ள மைய்யித்துகளாக இருந்தால் هم என்றும் பாவித்துக்கொள்ள வேண்டும்;
துஆவில் இரு பகுதிகள் உள்ளன; 1- பொதுவானது,
2- குறிப்பானது; முன்னாலிருக்கும் மைய்யித்தோடு தொடர்பானது
பொதுவான துஆ الله اغفر لحينا தொடக்கம் فتوفه علي الايمان வரையானது,
சுருக்கமான துஆ الاهم اغفر له وارحمه
பரிபூரணமானது اللهم ان هذا عبدك என்பதிலிருந்து يا ارحم الراحمين வரையானது.
பரிபூரணமான துஆ மைய்யித்திற்குரியது இன்னும் வாஜிபானது; அர்கானுக்குள் அடங்கியது.
தொடரும்..

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.