السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 14 May 2024

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும்.தொடர் 3


ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும்.  தொடர் :- {3}



 கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,

மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.

குளிப்பின் ஒழுக்கம்.
------------
1- மக்களின் பார்வையிலிருந்து விலகி குளிப்பாட்ட வேண்டும், குளிப்பாட்டுபவரும், அவருக்கு உதவியாளர்களும் மைய்யித்திற்குரிய வலிகாறர்கள் தவிர்ந்த அவசியமின்றி உள் நூளையக்கூடாது;
2- வானத்திற்குக் கீழ் இல்லாமல் ஒரு முகட்டுக்குக் கீழால் குளிப்பாட்டுவது சிறப்பாகும்,
3- கட்டில் போன்று உயரமான இடத்தில் வைத்து குளிப்பாட்ட வேண்டும்,
- தண்ணீர் நன்கு ஊடுருவி செல்லத்தக்க மைய்யித்திற்குரிய பழைய சட்டை இருந்தால் அந்த சட்டையிலேயே குளிப்பாட்டலாம், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை க் குளிப்பாட்டும் நேரத்தில் அன்னாரின் முபாறக்கான திரு மேனியிலிருந்து சட்டையை அகற்ற வேண்டாம் என்று வீட்டகனுள்ளேயிருந்த ஓர் அசரீரி வந்தது; சட்டை இல்லாவிட்டால் அவ்றத்தை மறைத்துக்கொண்டு குளிப்பாட்டவும்.
5- மைய்யித்திற்கு சுடுதண்ணீரின் தேவையில்லாவிட்டால் குளிந்த நீரால் அல்லது உப்பு (கடல்) நீரால் குளிப்பாட்டவும், குளிர்ந்த நீர் மைய்யித்தின் உடலை இறுக்கமாகும்; இன்னும் உப்பு நீர் சிதைவடைவதைத் தடுக்கும். பருவகாலத்தைக் கவனித்து குளிர்ந்த நீர் குளிப்பாட்டுபவருக்கு சிரமத்தைக் கொடுத்தால் அல்லது மைய்யித்தின் உடல் அழுக்கை அகற்றுவதற்கு சுடுநீர் அவசியம் தேவையாக இருந்தால், சுடுநீரைப் பாவிக்கலாம்; ஸம்ஸம் நீரால் மைய்யித்தைக் குளிப்பாட்டுவது மைய்யித்தின் நஜீஸைக்கவனித்து மக்றூஃ ஆகும்;
6- முகத்தை மறைக்க வேண்டும், மைய்யித்தை குளிப்பாட்டும் இடத்திற்குக் கொண்டுவந்த முதல் ஏதும் துணியால் முகத்தை மறைப்பது சுன்னத் ஆகும்.
குளிப்பாட்டுபவரின் ஒழுக்கங்கள்.
--------------
குளிப்பாட்டுபவர் முடிந்த வரை மைய்யித்தின் மறைவிடத்திலிருந்து பார்வையைத் தவிர்த்துக் கொள்வது சுன்னத்தாகும், அப்பகுதியை தொடுவதைத் தவிர்க்க வேண்டும்; மைய்யித்தின் உடலிலின் அவ்றத்தின் பகுதியைப்பார்ப்பதும், திரையின்றி அப்பகுதியைத் தொடுவதும் கணவன், மனைவி தவிர்ந்தவர்களுக்கு ஹறாமாகும்; கணவன், மனைவியின் உரிமை மரணத்தால் துண்டித்து விடுவதில்லை; இதற்கான ஆதாரம் அனந்தரமாகும்.
இச்சையின்றி தொடுவதும், பார்ப்பதும் கணவன், மனைவிக்கு ஆகும்; சிலரின் கூற்றில் தொடாமலும், பார்க்காமலுமிருப்பது சுன்னத்தாகும்; நம்பிக்கைக்குரிய குளிப்பாட்டுபவர் மைய்யித்தில் ஏதும் நல்ல விடயங்களைக்கண்டால், எடுத்துக்காட்டு; முகம் பிரகிசிப்பதைக்காணுதல்; அல்லது நறுமணத்தை பெற்றுக்கொள்வது இவற்றை சொல்லிக்காட்ட வேண்டியது சுன்னத்தாகும்; மைய்யித்தின் நல்ல விடயங்களைக்கூறுவது சுன்னத்தாகும்;
இதற்கு முற்றிலும் மாறாக முகம் இருண்டதாக அல்லது பேதலித்ததாகக் கண்டால் அதை ஏதும் நலவு இல்லையென்றால் கூறுவது ஹறாமாகும்;
முஸ்லிம் ஷரீபின் ஹதீதில் பின்வருமாறு பதிவாகியுள்ளது,
من ستر مسلما ستره الله في الدنيا والاخرة
اذكرةا محاسن موتاكم وكفوا عن مساويهم
ترمذي
من غسل ميتا وكتم عليه غفر الله اربعين مرة
مستدرك
நலவு இரு விதத்திலிருக்கும்,
1- எவராவது ஒரு பித்அத்காறனின் மைய்யித்தில் ஏதும் நலவைக்கண்டால், மக்கள் பித்அத்காறனைப் பின்பற்றாதிருப்பதற்காக மறைப்பது சுன்னத்தாகும்,
2- எவராவது ஒரு பித்அத்காறனின் மைய்யித்தில் ஏதும் ஒரு குறையைக்கண்டால், அவனின் பித்அத்திலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் எண்ணத்தில் அதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
குளிப்பாட்டும் விதி முறை
-----------------
மைய்யித்தை ஒற்றைப்படையில் 3-5-7-9 விடுத்தம் குளிப்பாட்டுவது சுன்னத்தாகும், இன்னும் முதற்தடவையில் உடலிலுள்ள அழுக்குகளை சுத்தப்படுத்துவதற்காக இலந்தை இலை அல்லது சவர்க்காரத்தை ஊபயோகிப்பதும்; இரண்டாம் தடவை அதன் தடயங்களை நீக்குவதற்காக கழுவதும் சுன்னத்தாகும்; இரண்டாவது தடவை கழுவதை مزيلة அகற்றக்கூடியது என்று கூறப்படும்;
மூன்றாவது தடவை ஊற்றும் தண்ணீரில் கற்பூரத்தைக் கலந்து வெறும் தண்ணியால் கழுவ வேண்டும்
கற்பூரம் மைய்யித்தின் உடலுக்கு வலுவூட்டும்; மேலும் பூமியிலுள்ள பூச்சி புழுக்களிலிருந்தும் பாதுகாக்கும்;
மைய்யித்தின் உடல் சுத்தமானால் இந்த அளவு போதுமாகும்; தவிர, உடல் சுத்தமாகும் வரை எத்தனை விடுத்தம் தேவைப்படுமோ அத்தனை விடுத்தம் இலந்தை இலை, சவர்க்காரம் பாவிக்க வேண்டும்; ஒற்றை எண்ணிக்கையில் குளிப்பாட்டுவது சுன்னத்தாக இருப்பதால், நான்காவது தடவையில் சுத்தமானாலும் ஐந்தாவது விடுத்தம் குளிப்பாட்டுவது சுன்னத்தாகும்;
இஹ்றாம் கட்டியவர் தஹ்லீல் ஆவதற்கு முன் மரணித்தால் கற்பூரத்தைச் சேர்த்துக்கொள்வது ஹறாமாகும், அதற்குப் பின் மரணித்தவர் ஏனையவர் போன்றாவார்; தண்ணீர் பேதகப்படாதிருக்க வேண்டும் என்பதற்காகவேதான் கொஞ்சம் கற்பூரம் கலக்க வேண்டும் என்று கூறப்பட்டது;
வுழுவுக்குப்பின், முதலில் மைய்யித்தின் தலையையும், தாடியையும் இலந்தை இலை அல்லது சவர்க்காரத்தால் கழுவ வேண்டும்; தலைமுடியில் பின்னல் அல்லது சடை இருந்தால் அவிழ்க்க வேண்டும், பெரிய சீப்புப் பற்களால் இலகுவாக வாரி இலகுபடுத்த வேண்டும்; இன்னும் வாரவும் வேண்டும்; இவ்வாறு செய்வதால் முடிகள் உதிருமாயின், அவற்றை திரட்டி கபனுக்குள் வைத்து கப்றில் அடக்கம் செய்ய வேண்டியது சுன்னத்தாகும்; உடலிலிருந்து ஏதும் உறுப்புக்கள் வெளிவந்த பின்பு மரணம் வந்தால் அந்த உறுப்புக்களச்சேர்த்து இவ்வாறுதான் செய்ய வேண்டும்.
ஒழுங்கு முறை:
-----------------
மைய்யித்தை மல்லாத்திய பின், முதலில் உடலின் வலது பாகத்தை, பின் இடது பாகத்தை இலந்தை இலை அல்லது சவர்க்காரம் மூலம் கழுவ வேண்டும்; பின்னர் வலது பக்கத்தின் பிற்பகுதிகளை கழுவவேண்டும்; பின் இவ்வாறு இடது பிற்பகுதியையும் கழுவவேண்டும்; பின் சவர்க்காரம் உள்ளிட்டவையின் தடயங்களை அகற்றுவதற்காக தலையிலிருந்து பாதம் வரை கழுவ வேண்டும்; இந்த குளிப்புக்கு முஸீலா مزيلة என்று கூறப்படும்;
பின் சொற்பமாக கற்பூரத்தைக் கலந்து உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும்; இம்மூன்றும் சோர்வதோடு முதலாவது தடவை குளிப்பு நிறைவேறிவிடும்; ஏனெனில் இறுதியாக சுத்தமான தண்ணீரோடு இந்த எண்ணிக்கை கணிக்கப்படும்; இவ்வாறு இரண்டாவது மூன்றாவது தடவைகளின் குளிப்பு சுன்னத்தாகும்; மூன்றை மூன்றோடு பெருக்குவதால் மொத்த எண்ணிக்கை ஒன்பதாகிவிடும்; மைய்யித்தை குப்பறப் படுக்க வைப்பது ஹறாமாகும்.
உடலைக்கழுவதில் கன்னியிழந்த பெண் மலம் கழிக்க உட்காரும் போது வெளியாகும் பெண்ணின் வெட்கத்தலத்தின் பகுதியும் உள்ளடங்கும், கத்னா செய்யப்படாத ஆண்களின் கத்னாவுக்குரிய தோலின் உட்பகுதியும் உள்ளடங்கும்; இந்தப் பகுதியைக் கழுவவும் வேண்டும்; இந்தப்பகுதி கழுவப்படாதிருந்தால் நஜீஸ் உள்ளே தங்கியிருக்கும்; ஆகவே மையித்திற்கு ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றுவதற்காக தயம்மம் செய்ய வேண்டும் என்று இமாம் இப்னு ஹஜர் றஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்; நஜீஸ் உள்ளே தங்கியிருப்பதால் தயம்மமும் செய்யக்கூடாது, தொழவும் கூடாது என்று இமாம் றமலி றஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்;
மையித்திற்கு ஜனாஸாத் தொழுவதால் மைய்யித்திற்கு அவமானம் ஏற்படுவதில்லை என்பதால், இமாம் இப்னு ஹஜர் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கூற்றைப் பின்பற்றுவது பொருத்தமாகக் காணப்படுகின்றது; மரணத்தின் பின் கத்னாச்செய்வது ஹறாம் என்பது திட்டவட்டமான சட்டமாகும்.
ஐந்து விடுத்தம் குளிப்பாட்டுவதில் முதற்தடவை இலந்தை இலை அல்லது சவர்க்காரத்திற்கும், இரண்டாவது தடவை அதை நீக்குவதற்கும்; இன்னும் மூன்று தடவைகள் சுத்தமான நீரால் கழுவதற்குமாகும்;, அல்லது, மூன்று தடவைகள் இலந்தை இலைக்கும் நான்காவது தடவை அதை நீக்குவதற்கும்; ஏனைய மூன்று தடவைகள் சுத்தமான நீரால் கழுவதற்குமாகும்; அல்லது, மூன்று விடுத்தம் இலந்தை இலையாலும் நான்காவது தடவை அதை நீக்குவதற்கும் ஐந்தாவது தடவை சுத்தமான நீரால் கழுவதற்குமாகும்;
ஏழு விடுத்தம் குளிப்பாட்டுவதில்,
முதல் தடவை இலந்தை இலையாலும், இரண்டாவது தடவை அதை நீக்குவதற்கும்; மூன்றாவது தடவை இலந்தை இலைக்கும்; நின்காவது நடவை அதை அகற்றுவதற்கும்; ஏனைய மூன்று விடுத்தங்களும் சூத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும்; அல்லது மூன்று விடுத்தம் நல்ல தண்ணீராலும், நான்கு இன்னும் ஐந்தாவது தடவைகள் இலந்தை இலையாலும் ஆறாவது விடுத்தம் அதை நீக்குவதற்கும் ; ஏழாவது தடவை நல்ல தண்ணீரால் குளிப்பாட்ட வேண்டும்; அல்லது, முதல் தடவை இலந்தை இலையாலும், இரண்டாம் விடுத்தம் அதை நீக்கவும்; மூன்றாவது விடுத்தம் இலந்தை இலையாலும்; நான்காவது தடவை அதை நீக்கவும் ஐந்தாவது தடவை இலந்தை இலையாலும் ஆறாவது தடவை அதை நீக்கவும் ஏழாவது தடவை நல்ல தண்ணீரால் குளிப்பாட்ட வேண்டும்;
ஒன்பது விடுத்தம் கழுவதில் முதற் தடவை இலந்தை இலையாலும், இரண்டாவதில் அதை நீக்குவதற்கும்; மூன்றாவதில் நல்ல தண்ணீராலும்; நான்காவதில் இலந்தை இலையாலும்; ஐந்தாவதில் அதை நீக்குவதற்கும்; ஆறாவதில் இலந்தை இலைக்கும்; ஏழாவதில் அதை நீக்குவதற்கும்; எட்டாவதில் இலைந்தை இலைக்கும் ஒன்பதாவதில் நல்ல தண்ணீரால் குளிப்பாட்டுவதுமாகும்;,
நல்லதண்ணீரில் எப்போதும் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்க வேண்டும், சவர்கார நுரை நீக்கப்பட்ட பின் எப்போதும் நல்ல நீரால் கழுவ வேண்டும்; இறுதியாக சுத்தமான நீரால் கழுவ வேண்டும்
சுருக்கம்:
------------
மிகக் குறைந்தளவு குளிப்பு: மைய்யித்தின் முழு உடலையும் கழுவதாகும், பூரணத்தில் தாழ்ந்தது மூன்று விடுத்தமாகும்; நடுத்தரமானது ஐந்து அல்லது ஏழு விடுத்தமாகும்; சம்பூரணமானது ஓன்பது விடுத்தம் குளிப்பாட்டுவதாகும்.
தொடரும் .....
All reactions:
Ibrahim Ahmed, Jameel Deen and 10 others