السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 16 May 2024

ஹளறத் முகையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி றழியல்லாஹு அன்ஹு அவர்களை سيد الاولياء என்று சொல்லலாமா?

 

வலிகள் கோமான் முகையத்தீன் அப்துல் காதீர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ். கேள்வி: ~~~~~~ (1) - ஹளறத் முகையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி றழியல்லாஹு அன்ஹு அவர்களை سيد الاولياء என்று சொல்லலாமா? (2) - ஹளறத் ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலம் தொட்டு கியாமத் நாள் வரையுள்ள வலிமார்களுக்கும் அவர்கள் தலைவர் என்று கூறலாமா?  ஆதாரம் தருக!  பதில்: ~~~~~ செய்யிதுனா  முஹ்யித்தீன் அப்துல்காதீர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் வலிமார்களுக்கு அரசராக, தலைவராக இருக்கின்றார்கள் என்று நிச்சயமாகக் கூற முடியும். ஸஹாபாக்களை விட உயர்ந்தவர்கள் என்று கூற முடியாது. ஸஹாபாக்களின் தரத்தை அவர்களுக்குப் பின் வந்த எவராலும் அடைய முடியாது!

வலிகள் கோமான் முகையத்தீன் அப்துல் காதீர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்.
கேள்வி:
~~~~~~
(1) - ஹளறத் முகையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி றழியல்லாஹு அன்ஹு அவர்களை سيد الاولياء என்று சொல்லலாமா?
(2) - ஹளறத் ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலம் தொட்டு கியாமத் நாள் வரையுள்ள வலிமார்களுக்கும் அவர்கள் தலைவர் என்று கூறலாமா?
ஆதாரம் தருக!
பதில்:
~~~~~
செய்யிதுனா முஹ்யித்தீன் அப்துல்காதீர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் வலிமார்களுக்கு அரசராக, தலைவராக இருக்கின்றார்கள் என்று நிச்சயமாகக் கூற முடியும். ஸஹாபாக்களை விட உயர்ந்தவர்கள் என்று கூற முடியாது. ஸஹாபாக்களின் தரத்தை அவர்களுக்குப் பின் வந்த எவராலும் அடைய முடியாது!
ஹளறத் செய்யிதுனா அபூபக்கர் சித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிமார்களுக்கு அடுத்துள்ள சகல முஃமின்களைவிடவும் உயர்ந்தவர்கள்.
செய்யிதுனா ஹஸன் செய்யிதுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரும் சொர்க்கத்தின் வாலிபர்களின் தலைவர்கள்.
ஹளறத் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கலீபாவும், காத்தமத்துல் விலாயத்துடையவர்களும் ஆவார்கள்; ஆதலால் இவர்கள் குத்பு நாயகத்தை விட மேலானவர்கள்.
தவிர,
ஏனைய வலிமார்களை விட கௌதுல் அஃழம் முகையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் மேலானவர்களாகும்.
இந்த உம்மத் ஏனைய உம்மத்துக்களை விட மேலானவர்கள்; அதுபோல் இந்த உம்மத்திலுள்ள வலிமார்கள் ஏனைய உம்மத்துடைய வலிமார்களை விட மேலானவர்கள் என்பதால் முந்திய நபிமார்களின் காலத்திலுள்ள வலிமார்களை விட கௌதுல் அஃழம் முகையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் மேலானவர்களாகும்.
கௌதுல் அஃழம் முகையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
الانس لهم مشايخ ،والجن لهم مشايخ ، والملائكة لهم مشايخ ، وانا شيخ الكل
قال : وسمعته في مرض موته يقول لاولاده : بيني وبينكم وبين الخلق كلهم بعد مابين السماء والارض لا تقيسوني باحد ولاتقيسوا علي احدا
بهجة الاشرار : ص, ٥٢
கௌதுல் அஃழம் முகையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் கூறுகின்றார்கள்.
மனிதர்களுக்கு ஷைகுமார்கள் இருக்கின்றார்கள், ஜின்களுக்கும் ஷைகுமார்கள் இருக்கின்றார்கள், மலக்குகளுக்கும் ஷைகுமார்கள் இருக்கின்றார்கள், நான் சகலர்களுக்கும் ஷைகாவேன்.
மேலும் அவர்களின் வபாத்துடையவேளையில் பிள்ளைகளைப் பார்த்து கூறினார்கள்.
எனக்கும், உங்களுக்கும் ஏனைய படைப்புக்களுக்கு மிடையிலுள்ள தூரம் வானத்திற்கும், பூமிக்குமிடையிலுள்ள தூரம் போன்றதாகும்.
என்னை எவரோடும் ஒப்பாய்வு செய்ய வேண்டாம், எவரையும் என்னில் ஒப்பாய்வு செய்யவும் வேண்டாம்.
பஹ்ஜத்துல் அஸ்றார்
பக்கம் : 52
அஃலா ஹளறத் இமாம் அஹ்மது றிழா கான் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் கூறுகின்றார்கள்.
கௌதுல் அஃழம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தங்களுடைய காலத்தில் சகல வலிமார்களுக்கும் தலைவர்களாகும். அவர்கள் அனைவரினதும் பிடரி அன்னாரின் பாதத்திற்குக்கீழாகும்.
நமது கௌதுல் அஃழம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹளறத் ஹஸன் அஸ்கரி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொட்டு ஹளறத் மஹ்தி அலைஹி ஸ்ஸலாம் வரை உலகத்தில் உள்ள சகல கௌது, கௌதுகளுக்கெல்லாம் கௌதுகள், சகல வலிமார்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தலைவராகும்.
இதற்கு ஆதாரமாக பஹ்ஜத்துல் அஸ்றார் நூலில் இரு ஸனதுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
1اخبرنا ابوالمعالي الصالح ابن علي البعدادي المالكي سنة احدي وسبعين وستمائة ......
والله ما اظهرالله تعالي ولا يظهر الي الوجود مثل الشيخ محي الدين عبد القادر رضي الله عنه
அல்லாஹ்வின் மீது ஆணையாக! வுஜூதில் அஷ்ஷைகு அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களைப்போன்று வேறு எவருக்கும் கறாமாத் வெளியாகவில்லை வேறு அல்லாஹுத்த ஆலா வெளியாக்கப் போவதுமில்லை;
பஹ்ஜத்துல் அஸ்றார்.
பக்கம்: 57, பழைய பதிப்பு : 52
2- قال الشيخ ابو محمد : فقلت للخضر عليه السلام :فهل لهؤلاء الاحباب رجل ، فرد في كل وقت يرجعون الي امره ، قال: نعم فقلت : ومن هو في وقتنا هذا ؟ قال هو الشيخ عبد القادر ، قال هو فرد الاحباب وقطب الاولياء في هذ الوقت
وما ارسله الله تعالي وليا الي مقام الا وكان الشيخ عبد القادر أعلاه ، ولا سقي الله حبيبا كأسا من حبه الا وكان الشيخ عبد القادر اهناه ولا وهب الله لمقرب حالا الا وكان الشيخ عبد القادر أجله وقداودعه الله تعالي سرا من أسراره سبق به جمهور الاولياء وما اتخذ الله وليا كان او يكون الا وهو متأدب معه الي يوم القيمة رضي الله عنهم اجمعين
بهجة الاسرار : ص: ٣٢٦
அஷ்ஷைய்கு முஹம்மது என்பவர் கூறுகின்றார்:
ஒருவரின் கட்டளையில் சகல (இறை) நேசர்களும் செயல்படக்கூடிய தனித்த நபர் யாராவது இருக்கின்றார்களா? என்று நபி ஹிழ்று அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்டேன், ஆம் என்றார்கள், எங்களுடைய இந்த நேரத்தில் இருக்கின்றவர் யார் என்று கேட்டேன்.? ஷைகு அப்துல் காதிர் என்றார்கள்;
ஷைகு அப்துல் காதிர் அவர்களின் நிலையைப் பற்றி எனக்குச் சொல்லிக் காட்டுங்கள் என்றேன். அவர்கள் இந்த வேளையில் பர்துல் அப்றாத், குத்புல் அவ்லியாவாக இருக்கின்றார்கள்;
இந்த படித்தரத்திற்கு வந்தடைந்த எந்தவொரு வலியையும் விட அப்துல் காதிர் உயர்ந்த படித்தரங்களில் தான் இருந்தார்;
அல்லாஹுத் தஆலா யாராவது ஒரு நபருக்கு மஹப்பத் என்ற பானத்தைப் புகட்டினால், ஷைகு அப்துல் காதிருக்கு அதை மிக விருப்பத்தோடு புகட்டுகின்றான்.
அல்லாஹ்வை நெருங்கியவருக்கு அவன் ஒரு நிலையை حال கொடுக்கின்றான்; ஷைகு அப்துல் காதிருக்கு மிக உயர்ந்த நிலையை வழங்குகின்றான்;
அல்லாஹுத்த ஆலா அவனுடைய ஸிர்ருகளில் ஒரு ஸிர்ரைக் கொடுத்துள்ளான், அது பெரும்பான்மையான வலிமார்களுக்குரியதை மிகைத்ததாகவே இருக்கும்;
அல்லாஹுத்த ஆலா யாரையாவது வலியாக ஆக்கியிருந்தாலும், எதார்காலத்தில் வலியாக ஆக்குவதாக இருந்தாலும் கியாமத் நாள் வரை அவர் அவருடன் ஒழுக்கத்தோடு நடப்பவராகவே இருப்பார். றழியல்லாஹு அன்ஹும்.
பஹ்ஜத்துல் அஸ்றார்.
பக்கம்: 326
பதாவா றிஸ்வியா
பாகம்:26 :பக்கம்: 561
மேற்கண்ட தக்க ஆதாரங்களின் படி கௌதுல் அஃழம் முகையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் இப்போது வாழ்கின்ற சகல வலிமார்களுக்கும் தலைவராக இருக்கின்றார்கள் என்று கூற முடியும்; இந்த சாட்சியத்தை ஸைய்யிதுனா நபி ஹிழ்று அலைஹி ஸலாம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இது தவிர இன்னும் நிறைய ஆதாரங்கள் உண்டு!
பஹ்ஜத்துல் அஸ்றார் என்ற நூல் ஸனதினடிப்படையில் பார்த்தால் புகாரி ஷரீபின் மனதை விட ஆதாரபூர்வமான தாகும்;
காரணம்
அவையனைத்தும் முதவாதிர்களாகும்.
இதனால் இத்தோடு சுருக்கிக் கொண்டோம்.
வல்லாஹு அஃழம்.