السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 14 May 2024

தலைமைத்துவம் இல்லாமல் சீரழியும் முஸ்லிம் சமுகம்

 



சிலுவை யுத்தத்தில் தோற்றுப்போன கிறிஸ்த்தவ உலகம் முஸ்லிம்களையும், முஸ்லிம் தலைவர்களையும் தந்திரத்தாலும், நயவஞ்சகத்தாலும் அவர்களின் பலத்தை சிதைத்து சீரழிக்க வேண்டும் என்று அன்றே அவர்கள் எடுத்த முடிவின் அறுவடையை த்தான் இன்றைய முஸ்லிம் சமுகம்,, குறிப்பாக பலஸ்தீன் மக்கள் அனுபவிக்கின்றனர்,
யஹூதிகளும், நஸாறாக்களும் எப்போதும் இஸ்லாத்தில் பொறாமை கொண்டவர்கள், அவர்களை நம்புவதோ, அவர்களை நண்பர்களாக எடுத்துக் கொள்வதோ ஒருபோதும் கூடாது என்று அல்லாஹுத்த ஆலா திருக்குர்ஆனில் முஸ்லிம்களை பல்வேறு இடங்களில் எச்சரித்துள்ளான்;
அன்றைய முஸ்லிம்கள் இதைப்பேணி நடந்தார்கள், இப்போதுள்ள முஸ்லிம்களும், ஆட்சியாளர்களும், இதை மறந்து உலகாயுத மோகத்தில் சிக்கிய காரணத்தால் பரம விரோதிகளை நண்பர்களாக ஆக்கிக் கொண்டனர்;
இவர்களின் இந்த வரம்பு மீறிய காரணத்தால்தான் இப்போது அரபு நாடுகள் துணிச்சலாக எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்;,
அல்லாஹுத்த ஆலா கூறுவதை காது தாழ்த்திக் கேளுங்கள்!,
يا أيا الذين امنوا لا تتخذوا اليهود والنصاري اولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهد. القوم الظلمين
ஈமான் கொண்டவர்களே! யகூதிகளையும், நசாராக்களையும் நண்பர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம்! அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் நண்பர்களாகும்; உங்களில் எவரேனும் அவர்களோடு நட்பு வைத்துக் கொண்டால், அவரும் அவர்களைச் சேர்ந்தவர்களாகும்; அல்லாஹ் அநியாயக்காரர்களுக்கு வழிகாட்டுவதில்லை
فتري الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشي ان تصيبنا دائرة فعسى الله ان يأتي
بالفتح او امر من عنده فيصبحوا علي ما اسروا في أنفسهم ندمين
மனதில் நோய் உள்ளவர்கள் அவர்கள் பக்கமாக விரைந்து செல்வதையும், அ(வர்களைப் பகைப்ப)தனால் தடைகளும், நெருக்கடிகளும் வரலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று அவர்கள் கூறுவதையும் நீர் காண்பீர்! அல்லாஹ் அவன் தரப்பிலிருந்த வெற்றியையோ அல்லது அவனிடமிருந்து ஒரு தீர்ப்பையோ விரைவில் தரக்கூடும் அப்போது அவர்களுடைய மனதில் மறைத்து இருந்தவை பற்றி கவலைப்படுபவர்களாக ஆகிவிடுவார்கள்
ويقولون الذين امنوا هؤلاء الذين اقسموا بالله جهدوا ايمانهم انهم لمعكم حبطت اعمالهم فاصبحوا خسرين .
அவர்கள் உங்களுடன் இருப்பார்கள் என்று அல்லாஹ் மீது சத்தியம் செய்து அச்சத்தியத்தில் முழுமூச்சாக இருந்தவர்கள்தானா இவர்கள்? என்று தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள் அவர்களின் நற்செயல்கள் யாவும் வீணாகிவிடும் நஷ்டவாளிகளாக ஆகிவிடுவார்கள். 5: 51-53
வஹாபிஸம் என்ற நயவஞ்ச நோய் அரபு நாட்டு மக்களையும், ஆட்சியாளர்களையும் வெகுவாக பீடித்த காரணத்தால், தங்களின் இருப்பு, செல்வம் உள்ளிட்டவையைப் பாதுகாக்க இவர்(யஹூதிநஸாறாக்)கள் தான் தகுதியானவர்கள் என்று நம்பி, தங்கள் நாட்டில் அவர்களின் படைக்கு இடம் கொடுத்தார்கள்; தங்களின் செல்வங்களை அவர்களின் நாட்டில் குவித்தார்கள்;
இப்போது நாங்கள் நம்பிய நண்பர்கள் நயவஞ்சகர்கள், மோசடிக்காறர்கள் என்பதை புரிந்து விளங்கியபின், ஏமாந்து விட்டோம் என்று ஏங்குகின்றனர்.
தற்போது அரபு நாடுகளும், முஸ்லிம் நாடுகளும், இஸ்ரேலைக் கண்டிப்பதும், எச்சரிப்பதைக் வெறும் கண்துடைப்போ? என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.;
இவர்கள் யூத, நஸாறாக்களின் சதி வலைக்குள் முழுமையாக சிக்கிக் கொண்டுள்ளார்கள்; அதிலிருந்து இலகுவாக அவர்களால் வெளியேற முடியாது!
காஸா குடியிருப்புப் பகுதிகள் முழுமையாக அழிக்கப்படுகிறது, சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்; இந்த கொடூரமான காட்சியைப் பார்த்துக் கொண்டு முஸ்லிம் தலைவர்கள் வாய்ப்பேச்சில் கண்டணங்களையும், எச்சரிக்கைகளையும் பஞ்சமில்லாமல் அள்ளி வீசுகின்றனர்.
அரைமணி நேரத்தில் இஸ்ரவேல் என்ற நாட்டையே தடயமில்லாமல் அழித்துவிடுவோம் என்று கர்ஜனை செய்தவர்களும் அறிக்கைகளோடும், எச்சரிக்கைகளோடும் திருப்தியடைகின்றனர்.
வான்வெளியை எதிரிக்கு சுதந்திரமாக திறந்து கொடுத்துக்கொண்டு ஒருபோதும் இந்த யுத்தத்தை வெல்ல முடியாது!
தனது கடல், வான்; தரைப் பாதுகாப்பை முழுமையாக
உறுதிசெய்யும்வரை யுத்தத்தில் ஒருபோதும் இறங்கியிருக்கக்கூடாது.
இப்போதுள்ள நிலையில் அரபு நாடுகள் ஒருபோதும் விசுவாசமாக யுத்தத்தில் பங்கேற்ற மாட்டாது என்றே எண்ணத்தோன்றுகின்றது;
ஏனெனில், யஹூதி நஸாறாக்களை நண்பர்களாக எடுத்துக் கொண்டவர்களை அநியாயக்காரர்கள் என்றும் அல்லாஹ் அவர்களுக்கு நல்வழி காட்டமாட்டான் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளான்.
இன்றைய முஸ்லிம் நாட்டுத் தலைவர்கள் வெளிப்படையாக துணிச்சலான தீர்மானங்களை எடுப்பார்களா? என்பது சந்தேகம்?
இந்த யுத்தத்தில் அரபு நாடுகள் துருக்கி ஈரானோடு விசுவாசமாக நடப்பார்களா என்பது அவர்களுக்கு இருக்கும் பலமான சந்தேகமாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் முதலாம் உலகப்போரில் பட்ட அனுபவத்தை துருக்கி மறக்கவில்லை; .
பாவம் அப்பாவி பலஸ்தீனர்கள்! நம்பி ஏமாந்து போகின்றனர்.
இஸ்ரேல், பலஸ்தீன் யுத்தத்தை வைத்து சிலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு இலாபம் தேடுகின்றனர்,
இவர்களின் நோக்கம் மக்களின் உணர்ச்சிக்கேற்ற வாறு பேசி தங்களை வளர்த்துக் கொள்வதாகும்;
இப்போது வழிகெட்ட வஹாபிகளும் இதற்குள் குதித்து இலாபமீட்டுகின்றனர்.
இவை தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள அவர்கள் எடுக்கும் நடிப்பாகும்.