السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 11 May 2024

இஸ்லாமிய கேள்வி பதில்

 

eravur


1. முதன் முதலாக அல்லாஹுவால் படைக்கப்பட்ட மனிதர் யார்?

ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்

2. முதன் முதலாக பாங்கு சொன்ன நபித்தோழர் யார்?

ஹழ்ரத் பிலால்; ரலியல்லாஹு அன்ஹு அவர்களாகும்

3. முதன் முதலாக தோன்றிய இறை இல்லம் எது?

புனித கஃபதுல்லாவாகும்

4. முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்ற ஆண் யார்?

ஹழ்ரத் ஆபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களாகும்

5. முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்ற பெண்மணி யார்?

ஹழ்ரத் கதீஜா ரலியல்லாஹூஅன்ஹா அவர்களாகும்

6. முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்ற சிறுவர் யார்?

ஹழ்ரத் அலி ரலியல்லாஹீ அன்ஹீ ஆகும்.

7. முதன்முதலாக இஸ்லாத்தை ஏற்ற அடிமை யார்?

ஹழ்ரத் ஸைத் ரலியல்லாஹூ அன்ஹூ ஆகும்.

8. முதன் முதலாக இஸ்லாத்திலே ஷஹுதான பெண் யார்?

ஹழ்ரத் சுமையா ரலியல்லாஹு அன்ஹு அவர்களாகும்

9. முதன் முதலாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்த பெண் யார்?

ஹழ்ரத் அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களாகும்.

10. முதன் முதலாக காற்றடித்து சாய்ந்த மரம் எது?

நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் கப்பல் செய்ய பயன்படுத்திய மரமான அஷ்ஷாஜ் ஆகும்.

11. முதன் முதலாக வெண்ணிற நரைமுடி யாருக்கு ஏற்பட்டது?

இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்)அவர்களுக்காகும்

12. முதன் முதலாக மறுமை நாளில் எழுப்படுப்பவர் யார்?

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

13.முதன்முதலாக மறுமை நாளில் ஆடை அணிவிக்கப்படுபவர் யார்?

  இப்ராஹீம் ((அலைஹிஸ்ஸலாம்)

14. முதன் முதலாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கரத்தால் கட்டப்பட்ட பள்ளி எது?

        குபா பள்ளி

15. முதன் முதலாக நபி ((ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் தொழ அவர்களால் வைக்கப்பட்ட ஜனாஸா எது?

ஆஸத் பின் ஜராரா (ரலி) அவர்களின் ஜனாஸாவாகும்.

16. முதன்முதலாக தீனுடைய கல்வியை கற்று கொடுப்பதற்காக ஆசிரியராக நபி ((ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் நியமனம் செய்யப்பட்டு அனுப்பப்பட்ட ஸஹாபி யார்?

 முஸ்அப் இப்னு உமைர் (ரலி)

17. முதன்முதலாக மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த பின் பிறந்த முதல் குழந்தை யார்?

 ஹழ்ரத் அப்துல்லாஹ்(ரலி)

இவர்கள் ஹழ்ரத் ஜூபைர் (ரலி) ஹழ்ரத் அஸ்மா (ரலி) இந்த தம்பதிகளின் மகனாவார்.

18. முதன்முதலாக இஸ்லாத்திற்காக உயிர் துறந்த ஆண் தியாகி யார்?

ஹழ்ரத் அம்மார் பின் யாஸிர் (ரலி)

19. முதன் முதலாக இஸ்லாத்திற்காக உயிர்துறந்த பெண் தியாகி யார்?

சுமைய்யா (ரலி)

20. முதன் முதலாக நபி((ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனா சென்ற பின் யார் வீட்டில் தங்கினார்கள்?

 அபூ அய்யூபுல் அன்ஸாரி (ரலி)

21. முதன் முதலாக தொழுகையை தொழுத பெண்மணி யார்?

அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா

22. முதன் முதலாக கொலை செய்யப்பட்டவர் யார்?

ஹழ்ரத் ஆதம் (அலை) அவர்களின் மகனார் ஹாஃபிலாகும்.

23. முதன் முதலாக சுவனத்திலே நுழைபவர் யார்?

ஹழரத் கண்மனி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களாகும்.

24.முதன் முதலாக மக்கா வெற்றி பெற்ற பின் நபிகளாரோடு மக்காவிலே நுழைந்த தோழர்கள் யார்? யார்?

உஸாமதிப்னு ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மானிப்னு தல்ஹா (ரலி) ஆகியோராகும்.

25.முதன் முதலாக சுவனவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு எது?

மீனின் சினைப் பகுதியாகும்.

26.முதன் முதலாக கப்ரில் கேட்கப்படும் கேள்வி எது?

தொழுகையைப்பற்றியாகும்.

27.முதன் முதலாக ஸம்ஸம் நீரை அருந்தியவர் யார்?

ஆண்களில் ஹழ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்)

பெண்களில் அன்னை ஹஜிரா (ரலி)

28.முதன் முதலாக மஸ்ஜிதுன் நபவியான மதினா பள்ளியிலே விளக்கேத்திய ஸஹாபி யார்?

ஹழ்ரத் தமீமுத் தாரீ (ரலி) அவர்களாகும்.