ஒரு விடயம் செய்யத்தகாதது என்று தீர்மானிப்பதற்கு முன், ஷரீஅத்தின் சில அடிப்படை விடயங்களைத் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகும்,
இந்த அடிப்படையைப் புரியாமல் எடுக்கப்படும் தீர்மானம் சமுகத்தைக் குழப்பும் மனோ இச்சையினடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்ப்பாகவே கருதப்படும்;.
சுய விருப்பங்களாலும், மனோஇச்சையாலும் எடுக்கப்படும் எந்த ஒரு தீர்மானமும் ஷரீஅத் வெறுக்கும் தீர்மானமாகவே கருதப்படும்.
இது தொடர்பாக ஏந்தல் திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்;•
"காரியங்களில் புதிதாக தோற்றுவிப்பதை உங்களுக்கு எச்சரிக்கின்றேன். புதியவைகள் ஒவ்வொன்றும் பித்அத் ஆகும்.!• ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்!"
என்ற நபி மொழி இதை உறுதி செய்கின்றது.
ஆகவே, ஷரீஅத்தில் புதியவைகளைத் தோற்றுவிப்பதாயின், அது ஷரிஅத்தை ஆழமாக அறிந்த முஜ்தஹிதான ஒரு சட்ட அறிஞரின் ஒப்புதல் அவசியமாகும். புதிதாக தோற்றுவிக்கப்படும் ஒன்று ஷரிஅத்தின் தீர்மானங்களில் எதற்கு அமைவாக வருகின்றது என்பதை ஆழமாகப் பரீட்சித்து முடிவெடுக்கும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு!. இத்தகுதி இல்லாத எவருடைய தீர்ப்புக்கும் எந்த விதமான பெறுமானமும் ஷரிஅத்தில் கிடையாது.!
ஒரு புதிய செயலை (பித்அத்தை) "நல்ல பித்அத்" என்று தீர்மானிப்பதாயின், அதற்கு ஷரீஅத்தில் சில நிபந்தனைகள் உண்டு! அந்த நிபந்தனைகளைச் சரிவர பின்பற்றப்படல் வேண்டும். அவற்றைச் சுருக்கமாக அடியிற் தருகின்றேன். படியுங்கள்!
1- புதியவையான ஒரு பித்அத் மார்க்கத்தில் வணக்கம் (இபதத்) சார்ந்த ஏதாவது ஒரு விடயம் தொடர்பானதாக அமைதல் வேண்டும்.
"வணக்கம்" என்பது, சாதாரன வழக்கம், நடைமுறை வாழ்க்கை தொடர்பானவைகளாக அமைதல் கூடாது.
"எமது மார்க்கத்தில் (தீனில்) இல்லாத புதியவைகள் தடுக்கப்படல் வேண்டும்" என்ற ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன் மொழி மூலம் இதனைப் புரிய முடிகின்றது.
வணக்கம் (இபாதத்) சாராத ஒரு விடயத்தை, ஷரிஅத்தில் நல்ல பித்அத் என்றோ, தீய பித்அத் என்றோ கூறப்படுவதில்லை.;
சொகுசு வாகனத்தில், அல்லது விமானத்தில் பயணம் செய்வதும், வகை வகையான உணவுகளை சுவைப்பதும், ஆக்கத்திறன் உள்ள நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதையும் பித்அத் என்று எவரும் உரைப்பதில்லை!
கையால் உண்பதுதான் சுன்னத்! ஆனால், மேசையில் அமர்ந்து கைபடாமல் கரண்டியால் சாப்பிடும் வழக்கம் பல இடங்களில் உண்டு! இதனை எவரும் சுன்னத்திற்கு எதிரான
‘பித்அத்' என்று கூப்பாடு போடுவதில்லை;.
நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருந்தாத மென்பானங்கள், குடிபானங்கள் வந்துள்ளன;. இவற்றை வகை வகையான பாத்திரங்களில் பருகின்றனர். இவை எதுவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இருந்ததில்லை . இவை ‘பித்அத்` என்று யாரும் பகருவதில்லை!.
விதவிதமான ஆடை ஆலங்காரங்கள் சந்தைக்கு வந்துள்ளன. அவை நபியவர்கள் காலத்தில் இல்லாதவைகள் என்று யாரும் தவிர்ப்பதில்லை!
திருமணங்கள் அல்லாஹ்வின் இல்லத்தில் நிகழ்வதுதான் சுன்னத்! ஆனால், இன்று உல்லாச ஹோட்டலில் ஆடம்பரமாக பிரமாண்டமாக அரங்கேறுகின்றன. அதனை எவரும் பித்அத் என்று தீர்ப்புக் கூறுவதில்லை!
தொலைக்காட்சி, முகநூல் உள்ளிட்டவையில் அலங்காரத்தோடு பெண்கள் கலந்து கொள்கின்றனர், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகின்றனர்; செய்தி வாசிக்கின்றனர்; இவை பித்அத்தாகத் தெரிவதில்லை;
பாடசாலை, பல்கலைக்கழகங்களில் வயது வந்த ஆண்களும், பெண்களும் சரிசமமாக கலந்து படிக்கின்றனர்; பிரயாணம் செய்கின்றனர்; அந்நிய ஆண் வைத்தியர்களை பாகுபாடில்லாமல் பெண்கள் சந்திக்கின்றனர்; இவையாவும் பித்அத் என்று எந்த மேதாவியும் கூறியதில்லை;
இவ்வாறு புதியவைளில் வழக்கம் தொடர்பானதும், நடைமுறை சார்ந்ததுமான பல் வேறு விடயங்கள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன;. இவைகள் "இபாதத்" என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் ‘நடைமுறை' என்று நோக்குவதால் எவரும் அதனை நல்ல பித்அத், தீய பித்அத் என்று பிரித்துப்பார்பதில்லை. ஆனால்,
மேற்படி விடயங்கள் 'பித்அத்' என்றில்லாமல் வேறு ஒரு கோணத்தில்
'ஹறாம் அல்லது‘ மக்றூஹ் என்று தீர்மானிக்கப்படலாம்.
உண்பதில், உடுப்பதில்; விழாக்கள்; திருமண வைபவங்கள் நிகழ்த்துவதில் காபிர்களின் கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்துதல் என்ற எண்ணம் இருக்குமாயின், அது சுத்த ஹராமாகும். காரணம்,
எந்த ஒரு விடயத்திலும் அது சிறியதாயினும், பெரியதாயினும் காபிர்களைப் பின்பற்றுவதற்கு ஷரீஅத்தில் அனுமதி கிடையாது!.
பெண்கள் உடலை மறைப்பது கடமை! அழகை அன்னியவருக்கு மறைப்பதுதான் பெண்கள் உடலை மறைப்பதன் பிரதான நோக்கமாகும். இந்த நோக்கத்தை எப்படி அடைந்தாலும் குற்றமில்லை; ஆனால்,
தற்காலத்தில் "பர்தா" என்றபெயரில் இருக்கின்ற ஹபாய், ஹிஜாப், சாரி உள்ளிட்டவையில் இந்த நோக்கம் பூர்த்தி செய்யபபடுவதில்லை;.
அந்நியனின் கடைக்கண்பார்வை படாமல் காக்கவேண்டிய "பர்தா" இன்று தூரத்தில் உள்ளவர்களை கவர்ச்சி காட்டி சுண்டி இழுக்கும் ஆடைகளாக மாறியுள்ளன. ஆகவே,
நவீன ஹபாய்கள் உடலை மறைத்தாலும், சுவர்ச்சியைக் காட்டுபவையாக இருப்பதனால், அவை ஹராமாகும். கவர்ச்சியைக்காட்டாதவைகள் அனுமதிக்கப்பட்டவை;
இவ்வாறு, வணக்கம், பழக்கம் பற்றியவைகளை பட்டியலிடலாம்.
இவற்றிற்கு பித்அத் என்றில்லாமல் வேறு காரணங்களினாலேயே தடை வருகின்றன என்பதை புரிதல் வேண்டும்.
02 : புதியவை ஷரீஅத்தின் ஏதாவது ஒரு அடிப்படை (உஸூலு)க்கு அமைவாக இருத்தல் வேண்டும் . அல்லது, ஷரீஅத்தின் குறிக்கோளில் ஏதாவது ஒன்றிற்கு கீழ்ப்பட்டு இருக்க வேண்டும்; அல்லது, அதன் பொதுவான கட்டளைகளில் ஏதாவது ஒன்றைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் .
உதாரணமாக,
அமீருல் முஃமினின் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் றமழானில் தறாவீஹை இருபது றகஅத்துக்களாக ஜமாஅத்தாக ஆக்கினார்கள். நபியவர்கள் தறாவிஹை இருபது றகஅத்துக்களாக ஜமாஅத்தாத் தொழுதார்கள் என்று ஸஹீஹான ஹதீஸ்களில் காணப்படவில்லை,. இருப்பினும்;
"எனது சுன்னத்தையும், நேர்வழியில் உள்ள குலபாஉர்ராஷிதீன்களின் சுன்னத்தையும் பின்பற்றுவது உங்களுக்கு அவசியம்!. இதனை உங்கள் கடவாய் பற்களால் இறுக்கப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்;" என்றும்
"எனக்குப்பின், அபூபக்கர் , உமர் றழியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரையும் நீங்கள் பின்பற்றுங்கள்" என்றும்
திரு நபியவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள்.
தறாவீஹ் இருபது றகாஅத்துக்கள் என்று அமீறுல் முஃமினீன் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நிர்ணயம் செய்தது சுன்னத்தாகும்,. காரணம், அது நபியவர்களின் மேற்படி கட்டளைக்கு உட்பட்டிருப்பதால் அது ஷரீஅத்தின் கட்டளைகளுக்குள் அடங்குவதால் அது சுன்னத் என்று தீர்மானிக்கப்படுகின்றது.
மௌலீது , மீலாது வைபவங்களில் அல்லாஹ்வை திக்று செய்வதும், நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து மொழிவதும்; நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களை பாராயணம் செய்வதும்; ஏழைகளுக்கும், மற்றவர்களுக்கும் அன்னதானம், காணிக்கைகள் வழங்குவதும் அடங்குகின்றன!. இவை அனைத்தும் ஷரீ அத்தின் கட்டளைக்குப்பட்டவைகளாகும்.
நபியவர்களின் காலத்தில் நபியவர்கள் கண்முன்னே நபி புகழ் ஒதப்பட்டுள்ளது, பல்வேறு வகைகளில் நபி புகழ் பாடியவர்கள் பாராட்டப்பட்டுள்ளார்கள்; ஆகவே, இப்போது நடைமுறையிலிருக்கும் இச்செயல்
"பித்அத்" ஆயினும், ஷரீஅத்தின் நோக்கத்தில் எதற்கும் இடையூறாக இல்லாத காரணத்தாலும், ஷரீஅத்தின் நோக்கத்திற்குட்பட்டவையாக இருப்பதாலும், இச்செயல் நன்மை தரும் "பித்அத்துன் ஹஸனா" என்ற வகைக்குள் வருகின்றது என்பதில் எதுவித ஐயமுமில்லை;
தொழுகைக்குப் பின் துஆக்கேட்குமாறு திருக்குர்ஆனின் கட்டளை இருப்பதனாலும் فاذا فرغت فانصب , பர்ளான தொழுகைக்குப் பின், துஆ விரைவாக ஏற்கப்படும் என்று திருநபியவர்கள் நவின்றிருப்பதாலும்; தொழுகைக்குப் பின் கூட்டாகத் துஆக்கேட்பது ஷரீஅத்தின் எந்த ஒரு நோக்கத்திற்கும் மாறுபடாதிருப்பதாலும் கூட்டுத்துஆ ஷரீஅத் விலக்காத நல்ல செயலாகும்.
03- ஒரு பித்அத்தான காரியம் ஷரீஅத்தின் தெளிவான (நஸ்ஸான) ஒரு தீர்வு கட்டளைக்கு முரண்பாடாமலிருக்க வேண்டும். அல்லது ஷரீஅத்தில் தீர்மானமான ஒரு சுன்னத்தைப் பங்கப்படுத்தவோ, அதை இல்லாது ஒழிக்கவோ கூடாது.
உதாரணமாக
தஸ்பீஹ் செய்வதற்கு இன்று பயன்படுத் தப்படுகின்ற தஸ்பீஹ் மாலைகள் "பித்அத்துன் ஹஸனா" என்ற தீர்மானத்திற்குள்தான் வருகின்றதன, காரணம், குறிப்பிட்டளவு எண்ணிக்கையை தஸ்பீஹ், தஹ்லீல் செய்யவேண்டுமாயின், அதனைக் கணிப்பீடு செய்வதற்கு ஏதாவது ஒன்று தேவைப்படுகின்றது. தஸ்பிஹ் தஹ்லீலின் எண்ணிக்கையை எப்படிக் கணிக்க வேண்டும். என்று நபியவர்களால் கற்றுத் தரப்படவில்லை;. ஆகவே, கணிப்பது எப்படியிருந்தாலும்சரி "சுன்னத்" ஆகும்.
ஒரு வாஜிப் (கடமை) நிறைவேறுவதற்கு காரணமானதும் வாஜிப்தான்
لا يتم الواجب الا به فهو واجب
என்ற பொதுவிதியின்படி, இங்கு தஸ்பீஹால் எண்ணிக்கையைப் பூரணப்படுத்தப்படுவதால் தஸ்பீஹ் பாவனை சுன்னத்தாகின்றது. எண்ணிக்கையைப் பூர்த்தியாக்கும் கருவி எதுவாகவும் இருக்கலாம், அது தஸ்பீஹ் மணியாக, முடிச்சுக்களாக;, கல்லாக;, மணியாக; இலத்தரனியல் கருவியாக எதுவாகவும் இருக்கலாம்.
தொழுகைக்குப் பின் துஆக்கள், திக்றுகள்; அவ்ராதுகள் ஓதுவது ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டவையாகும். ஆயினும், தொழுகைக்குப் பின் ஓத வேண்டிய குறிப்பிட்ட சில திக்ருகளை ரஸுல்லலலாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். இவ்வாறு நபியவர்கள் கற்றுத் தந்த குறிப்பான சில தஸ்பிஹ், திக்றுகளை மாற்றியமைத்தால், அது தீய பித்அத்துக்குள் வரும்.
செயல், பித்அத் என்ற அடிப்படையில் இல்லாமல் ஒரு சுன்னத்தை மாற்றியமைத்தல் என்ற அடிப்படையில் இச் செயல் தடுக்கப்பட வேண்டியவையாகும்.
இரு பெருநாட்களிலும் தொழுகைக்குப் பின்புதான் கொத்பா நிகழ்த்தப்படல் வேண்டும். நபியவர்கள் காலந்தொட்டு இப்படித்தான் நடைமுறை இருந்தது. இதனை மதீனாவின் அமீராக இருந்த மர்வான் மாற்றியமைத்தார்; அதனை அபூஸஈதில் குத்ரிய்யி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சேபித்தார்கள். ஏனைய ஸஹாபாக்களும் எதிர்த்தார்கள். பின் அது கைவிடப்பட்டது.
இங்கு ஒரு சுன்னத்தின் அடிப்படை மாற்றப்படுவதினால் அது தீய பித்அத் ஆகும்.
04 திருக்குர்ஆனுக்கோ, திருநபி மொழிக்கோ, இஜ்மாவிற்கோ முரண்பாடில்லாத முஸ்லிம்கள் நல்ல செயல் என்று பார்க்கின்றவைகள்.
உதாரணமாக , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் ஜும்ஆ தினத்தன்று இரண்டு அதான்கள்தான் (இகாமத் உட்பட) நடைமுறையிலிருந்தன. முதல் அதான் (பாங்கு) இமாம் மிம்பரில் அமர்ந்ததும் ஒலிக்கப்படும்;
இதே நடைமுறை கலீபா அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு, அமீருல் முஃமினீன் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் இருந்தது. பின், உதுமான் ரழியல்லாஹு அன்ஹு தனது ஆட்சிக்காலத்தில் மூன்றாவது அதானை அதிகப்படுத்தினார்கள். (ஆதாரம் : இப்னுமாஜா , திர்மிதி)
அமீருல் முஃமினீன் உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதிகப்படுத்திய அதான் வணக்கம் சார்ந்த விடயமாகும், . இதனை சஹாபாக்கள் நல்லதாகக் கண்டார்கள்; எவரும் . அதனைத் தடை செய்யவில்லை ;!. இச்செயலை கண்ணியமான எவரும் குறைகாணவில்லை . என்பது கவணிக்கத்தக்கது!
ஆகவே, இச்செயல் பித்அத்துன் ஹஸனா ஆகின்றது,
பெருநாட்தொழுகையும் , ஜும்ஆத்தொழு கையும் ஒரு நகரத்தில் ஒரிடத்தில்தான் நபியவர்கள் காலத்தில் நடைமுறையிலிருந்தன, . இதே நடைமுறைதான் கலீபா அபூபக்கர் , அமீருல் முஃ . மினீன்களான ஹழரத் உமர் , ஹழரத் உதுமான் ரழியல்லாஹு அன்ஹுமாகாலத்திலும்இருந்தது . பின், செய்தினாஅமீருல் முஃமினீன் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் பலவீனமானவர்கள் தூரத்தி லிருந்துசிரமத்தோடு வருவதைஉணர்ந்து நகரத்தில் பல ஜும்ஆக்களை ஏற்பாடு செய்தார்கள்; அது போன்று இரு பெருநாட்கள் தொழுகையையும் பல் வேறு இடங்களில் பரவலாக்கினார்கள்; இதனை இப்னுதைமியயா தனது மின்ஹாஜுஸ்ஸுன்னா " என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இச்செயலை ஸஹாபாக்களில் எவரும் பிழை காணவில்லை,
தற்காலத்தில் பள்ளிவாசல்களில் எழுந்துநின்று பயான் செய்வது போன்ற ஒரு நடைமுறை நபியவர்கள் காலத்திலோ, கலீபாக்களான ஹளறத் அபூபக்கர்ஸித்தீக், , அமீறுல் முஃமினீன் ஹளறத்உமர் ரழியல்லாஹுமா ஆகியோரின் காலத்திலோ இருக்கவில்லை ;. அமீருல் முஃமினீன் ஹளறத்உதுமான றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில்தான் இப்பழக்கம் தோற்றம் பெற்றது;
. ஹழரத் தமிமுத்தாரி ரழியல்லாஹு அமீறுல் முஃமினீன் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மஸ்ஜிதுன் நபவியில் நல்லுபதேசம் புரிவதற்கான அனுமதியை வேண்டினார்கள், அனுமதி வழங்கப்படவில்லை, இருப்பினும் , அவர்களின் இறுதிக் . காலத்தில் ஜும்ஆ தினத்தில் ஹளறத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளி வாசலுக்குள் வருமுன் பயான் செய்வதற்கு அனுமதி அளித்தார்கள்;
அமீருல் முஃமினீன ஹளறத் உதுமான் ரழியல்லாஹு ஒரு வாரத்தில் இருதடவைகள் பயான செய்தவற்கு அனுமதி அளித்தார்கள்; இதனை எந்த ஒரு சஹாபியும் ஆட்சேபிக்கவில்லை .
( ஆதாரம் : அல்மவாஇழ் வல்இஃதிபார் பாகம் 03
பக்கம் 199 )
அதானுக்கு முன்போ , பின்போ உரத்த குரலில் ரஸுலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வலைலம் பேரில் ஸலவாத்துக் கூறுவது சஹாபாக்கள் காலத்தில் நடைமுறையிலிருக் வில்லை, . இந்த நடைமுறை ஹிஜ்ரி 719 ல் வந்தது! . இதனை ஆரம்பித்தவர் ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபிறஹ்மதுள்ளாஹி அலைஹி ஆவார்கள் ;. இச்செயலை அறிஞர்கள் , ஆரிபின்கள் எவரும் ஆட்சேபிக்கவில்லை . மாறாக,
இச்செயல் தொடங்கிய பின், ரஸுலல்லாஹு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு அதானுக்குப்பின்பும் தரிசனம் வழங்குவதாக ஒருவர் கனவு கண்டிருந்தார் .அதன்பின் இச் செயல் இன்று வரை நடைமுறையிலிருக்கின்றது
. இச் செயல் திருக்குர்ஆனில் வருகின்ற, "நன்மையான காரியங்களைச் செய்யுங்கள் ” என்ற கட்டளைக்குள் வருவதால், இது "சுன்னத்தான காரியம்" என்று அறிஞர்களால் முடிவு செய்யப்பட்டது .
ஆதாரம் : கௌலுல் பதீஃ :
பர்ளான தொழுகைக்குப் பின், நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்கின்ற நடைமுறை நபியவர்களின் காலத்திலோ , சஹாபாக்கள்காலத்திலோ இருக்கவில்லை;
தாபியீன்களின் காலத்திலேயே இந்த நடைமுறை வழக்கிற்கு வந்தது ;இதற்கு ஒரு வரலாறு உண்டு !.
இதனை ஹளறத் அபூபக்கர் முஹம்மத் பின் உமர்றஹ்மதுள்ளாஹி அலைஹி என்ற அறிஞர் இவ்வாறு விபரிக்கின்றார்;
. நான் அபூபக்கர் பின் முஜாஹித் ( இவர் மாபெரும் தப்ஸீர்கலைஅறிஞர் )
இவர்கள் பாடம் நடாத்திக் கொண்டிருக்கும் போது மாபெரும் ஞானியான அஷ்ஷெயக் ஷிப்லி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அங்கு வந்தார்கள்,அவர்களைக் கண்டதும் முஜாஹித றஹ்மத்துல்லாஹி அலைஹி எழுந்து ஆலிங்கனம் , ( முஆனகா ) செய்து அவரின் இரு கண்களுக்குமிடையில் முத்தமிட்டார்கள்;
இச்செயலைக்கவனித்த மாணவர்கள் முஜாஹித் அவர்களிடம் யாசெய்யிதி ! பகுதாத்நகரத்திலுள்ள அனைவரும் ஷிப்லியை பைத்தியகாரர் என்றே கருதுகின்றனர் ,. அப்படிப்பட்டவரோடு இவ்வாறு நீங்கள் நடந்து கொள்வது உங்களுக்குத் தகுதியாகுமா ? என்று கேட்டேன்; அதற்கு அபூபக்கர் பின் முஜாஹித் சொன்னார் .
நான் காருண்ய நபி அவர்கள் ஷிப்லியை முத்த மிட்டதைக் கனவில் கண்டு அல்லாஹ்வின் திருத்தாதரே! நீங்களா ஷிப்லியோடு இப்படி நடந்துகெள்கிறீர்கள் ? என்றுகேட்டேன், அதற்கு நபியவர்கள் இவ்வாறு பதில் கூறினார்கள்
இவர் ( ஷிபலீ ) ஒவ்வொரு பரளான தொழுகைக்குப் பின்பும் لقد جاءكم رسول என்ற திருவசனத்தை ஓதிய பின், என் மீது மூன்று முறை صلى الله عليك يارسول الله என்று மொழிகிறார்என்று கூறினார்கள்
. இமாம் ஷிப்லி ரஹ்மதுல்லாஹி அலைஹி தன்னிடம் வந்த போது அது பற்றிக் கேட்டேன், அவர் அதனை வழி மொழிந்தார்.
.
ஆதாரம் : அல்கவ்லுல் பதிஃ
இந்த நிகழ்வுக்குப் பின்னாலிருந்து பர்ழான தொழுகைக்குப் பின்னால், ஸலாவாத்து மொழிவதை "ஸுன்னத்" என்று அறிஞர்கள் முடிவு செய்தனர்,
ஜும்ஆத் தினத்தில் இமாம் கொத்பா ஒதுவதற்கு முன் " மஹ்ஷர் " ஒதுகின்ற நடைமுறை நபியவர்கள் காலத்திலோ, , சஹாபாக்கள் காலத்திலோ இருந்ததில்லை, பின்னர் புதிதா இடம் பெற்றது!
நபியவர்கள் தனது இறுதிப் பிரசங்கத்தை அறபா பெருவெளியில் நிகழ்த்த முன் , அமைதியாக இருக்குமாறு கூறும்படி ஹழரத் பிலால்றழி யல்லாஹு அன்ஹு அவர்களைப் பணித்தார்கள், இந்த முன்மாதிரி மஹ்ஷருக்கு ஒத்து வருவதால், மஹஷர் "சுன்னத்" என்று முடிவு சேய்யப்பட்டது.
( ஆதாரம் நிஹாயா , கல்யூபி )
ரொட்டியை முத்தமிடும் வழக்கம் அரபியர்களுக்கு மத்தியில் இன்று வரை காணப்படுகின்றது, . இச்செயல் நபிகள் நாயகத்தின் காலத்தில் காணப்படவில்லை;ஆகவே, இச்செயல் பித்அத் ஆகுமா? அல்லது ,ஹறாமாகுமா ? என்று ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு , அவர்கள் வழங்கிய தீர்ப்பு நமது கவனத்திற்குரியதாகும் .
" ரொட்டியை முத்தமிடுதல் என்பது, பித்அத் என்பது சரிதான்! . ஆனால் , பித்அத் அனைத்தும் ஹறாம் என்பதற்குள் அடங்காது! . பித்அத் ஐந்து வகையானசட்டங்களில்வரும்; இச்செயல் ஒரு போதும் ஹறாம் என்பதற்குள் வராது என்பதில் ஐயமில்லை;
ஏனெனில் ,, இது ஹறாம் என்பதற்கான எதுவித ஆதாரமும் கிடையாது! . மக்றூஹ் என்றும் வராது, . அவ்வாறு முத்தமிடுதல் கூடாது என்று குறிப்பான எத் தடையும் வரவில்லை;
இச்செயல்ஆகுமான பித்அத் என்ற வகையில் வரும், ரொட்டியை முத்தமிடுவதால் அதனைக் கண்ணியப் படுத்துதல் நோக்கமாயின் , அச்செயல் "சுன்னத்" ஆகும், காரணம், அதனைக் கண்ணியப்படுத்துமாறு ஹதீதுகள் வந்துள்ளன, .
ரொட்டியை நிலத்தில், குப்பையில் போட்டுவிடுவது, கடுமையான மக்றூஹ் வெறுக்கத்தக்கதாகும்.
ஆதாரம்:
அல்ஹாவி லில் பதாவா
பாகம் 1- பக்: 193
.ரொட்டியை முத்தமிடுவது ஒரு பித்அத்துதான் என்பது திட்டவட்டமானது, ஆயினும் ;, அதனை கண்ணியப்படுத்துதல் என்ற நல்லண்ணத்தால் சுன்னத்தாக மாறி விடுகின்றது!
. அஸர் , ஸுப்ஹு தொழுகைகளுக்குப் பின் முஸாபஹா செய்யும் வழக்கம் நீண்ட காலமாக முஸ்லிம்கள் மத்தியில் இருந்து வருகின்றது, இச்செயல் நபியவர்கள் காலத்திலோ , சஹாபாக்கள் த்பியீன்கள் காலத்திலோ இருந்ததில்லை; பிந்திய காலத்தில்தான் தோற்றம் பெற்றது! . ஆகவே ,
இச்செயலை பித்அத் என்றுதான் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர், . முஸாபஹாச் செய்தல் என்பது, ஆகுமான செயலாக இருப்பதனால், இதனை ஆகுமான பித்அத்துக்குள் அறிஞர்கள் அடக்குகின்றனர்;
. இருப்பினும் " இரு முஸ்லிம்கள் புதிதாக சந்திக்கும் போது முஸாபஹாச் செய்வது கன்னத்தாகும் "என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் . இந்த வகையில் தொகைக்குப் பின் முஸாபஹாச் செய்வதுசுன்னத் என்று முடிவு செய்யப்பட்டது .
.ஆதாரம்:
ஷரஹு முஸ்லிம் அத்காறுன் நவவி
ஜனாஸாவைச் சுமந்து செல்லும் போது மரண சிந்தனையோடும், . மறுமையைப் பற்றியஅச்சத்தோடும் . அமைதியாகச் செல்லும நடைமுறைதான் நபியவர்கள் காலத்தில் இருந்தது, . இந்த ஒழுங்கு பிற்காலத்தில் சிதைந்து , மற்றவர்கள் . பற்றிய புறம் , தகாத பேச்சுக்கள் அங்குநுழைந்த காரணத்தினால் ,திக்ர் , கலிமா போன்றவைகளை மொழிந்தவண்ணம் ஜனாஸாவை தூக்கிச்செல்லும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது; . இதனை "நல்ல செயல்!" என அறிஞர்கள் . வரவேற்றனர்;
. ஆகவே, இச்செயல் சுன்னத் என்று முடிவு செய்யப்பட்டது !
. இவ்வாறு, ஒரு பித்அத்தான ஒரு செயல் அதன் நேக்கத்தாலும், , அதனையொத்த ஒரு நல்ல செயலுக்கான சட்டத்தினடிப்படையிலும் , முஸ்லிம்கள் நல்லது என்று அதைக் காணுகின்ற காரணத்தாலும் , நன்மைபயக்கும் ஒன்று என்ற அடிப்படையில் ஒரு பித்அத் சுன்னத்தின் நிலைக்கு உயர்கின்றது,
. இஸ்லாத்தில் தோன்றிய பேரறிஞர்கள் கண்ட இம் முடிவை மாற்றவோ , பிழை எனக் கூறி நிராகரிக்கவோ எவருக்கும் தகுதியில்லை , அதிகாரமுமில்லை;
எவராவது இதை நிராகரித்தால், அது அவரின் மன இச்சையின் முடிவாகவும், மடத்தனத்தின் வெளிப்பாடாகவுமாகவே கருத வேண்டி வரும்.!
. இந்த வகையில் , கூட்டு துஆ ' பித்அத் ” என்றே வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும் , மேற்கண்ட மேற்கோள்களினடிப்படையில் அது பித்அத்துத்துன் ஹஸனா என்ற வகைக்குள் வருகின்றது!
பித்அத்துன் ஹஸனாஅனைத்தும் சுன்னத் என்று அனைத்து இமாம்களும் இஜ்மாவாக கூறியுள்ளதாக இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமி மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பதாவா ஹதீதியாவில் குறிப்பிடுகின்றனர்,
. இந்த வகையில் பர்ளான தொழுகைக்குப் பின், ஒதப்படுகின்ற கூட்டுத்துஆ ஐயமற சுன்னத்தான நற்காரியம் என்றாகி விடுகின்றது !. இதனைப் பிழை என்று உதிர்பதாயின், , தக்க நியாயத்தை முன் வைக்க வேண்டும்!
தவிர , புதியவைகள் எதுவும் கூடாது !ஏற்கமுடியாதுஎன்பதை ஏற்றால், இஸ்லாம் நாகரீகமான மார்க்கம் என்று கூறுவதும் காலத்தின் புதிய சவால்களுக்கு பொருந்தும் மார்க்கம் என்று கூறுவதும் பொய் என்றாகிவிடும்!
. இதனை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஏற்கின்றதா ?
தற்போதையஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையில் இருப்போருக்கு ஷரீஅத்தின் விதிமுறையும், ஃபிக்ஹு சட்ட ஞானமும் சுத்த சூனியமாக இருப்பது தெளிவு! மேலும்,