السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 14 May 2024

இஸ்லாத்தில் கற்பனைக்கு இடமில்லை

 

இஸ்லாத்தில் கற்பனைக்கு இடமில்லை

மலக்குகள் பத்றுயுத்தத்தில் கலந்துகொண்டது போன்று காஸாயுத்தத்திலும் கலந்துகொண்டதாக
முகநூலில் ஒரு பிரபலமான தேவ்பந்திவஹாபி பேசி பதிவிட்டதைப்பார்த்தேன். அதையே பலரும் காப்பியடித்து பேசினார்கள்; அந்த பதிவுதான் அல்பத்று வாட்சப் தளத்திலும் பதியப்பட்டது.
{அதற்குத்தான் பதில் கூறினேன்.}
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் பல யுத்தங்களில் கலந்துகொண்டார்கள், அதுபோல் ஸஹாபாக்களும் கடினமான பல யுத்தங்களில் ஈடுபட்டார்கள்;
யர்மூக் யுத்தத்தில் 4000 ஸஹாபாக்கள் ஷஹீதானார்கள்,
காஸா யுத்தத்தை விட அதிகமான இழப்புக்களை ஸஹாபாக்கள் அனுபவித்தார்கள்;
பத்று, ஹுனைன் யுத்தங்களில் மலக்குகள் கலந்து கொண்டத்தை அல்லாஹுத்த ஆலா திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்,
அகழி, உஹது, தபூக் உள்ளிட்ட கடினமான யுத்தங்களிலெல்லாம் மலக்குகள் கலந்து கொண்டதாக திருக்குர்ஆனிலும் இல்லை, றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூறவில்லை;
யுத்தத்தில் அல்லாஹ்வின் உதவி மறைமுகமாகக் கிடைப்பது வேறு! மலக்குகள் நேரே கலந்து யுத்தம் செய்வது வேறு!
காஸா யுத்தத்தில் மலக்குகள் கலந்துகொண்டதைக்கண்டவர் யார்?
அனுமானத்தில் கூறுவதை இஸ்லாம் ஏற்கவில்லை,
ஹளறத் உதுமானிப்னு மழ்னூன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகப்பெரிய துறவி, ஸஹாபாக்களால் அதிகம் மதிக்கப்பட்டவர்கள்; ஸஹாபாக்கள் இவர்களை வஸீலாவாக்கி துஆக்கேட்பார்கள்‌.
இப்படிப்பட்டவர்கள் வபாத்தான போது சிலர் இவர்களை சொர்க்கவாதி என்றனர்,
இதை செவிமடுத்த றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் அவ்வாறு கூறியதைக் கண்டித்தார்கள்.
ஸஹாபாக்கள் அனைவரும் சொர்க்கவாதிகள் என்பது நமது நம்பிக்கை அப்படியிருந்தும் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தடுத்தார்கள்,
காரணம் திட்டவட்டமாகத் தெரியாததைக் கூறுவது உண்மையாகாது! பொய்யாகும் என்று எச்சரிப்பதற்காக கூறினார்கள்.
பத்று யுத்தத்தில் கலந்துகொண்டவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன,
கடுமையான சிரமங்களை சந்தித்த தபூக் யுத்தத்தை என்ன எந்த ஒரு யுத்தத்தையும் பத்று யுத்தத்தோடு ஒப்பிட முடியாது!
அப்படியிருக்க இப்போது நடக்கும் காஸாப்போரை பத்று யுத்தத்தோடு ஒப்பிடுவது பத்று யுத்தத்தையும் அதில் கலந்துகொண்டோரையும் மலினப்படுத்துவதாகும்.
பத்று யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு இழப்பு மிகக்குறைவு!, காஃபிர்களுக்கு மிகமிக அதிகம்.!
காஸாவில் அவ்வாறல்ல!
காஸாவில் கலந்து போர் புரியும் மலக்குகளால் இஸ்ரேல் போடும் குண்டுகளைத் தடுக்க முடியாது போய்விட்டதா?
இவ்வாறு நிறையவே கேட்க முடியும்?
இதுமட்டுமல்ல இந்த யுத்தம் முடிந்தால் ஹளறத் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வந்துவிடுவார்கள் என்றும் புருடா விடுகின்றனர்.
சமூகவலைத்தளங்களில் இப்படியான பதிவுகளை போட்டு பணம்சம்பாதிக்க பலர் வெளிவந்துள்ளனர்,
இதில் வஹாபிகள், ஷீஆக்கள் முன்னணி வகுக்கின்றனர், இதற்குள் நாம் பலியாகக் கூடாது!,
ஹாஜி அல்லாத ஒருவரை ஹாஜி என்று கூறுவது ஹறாம் என்று அகீதா நூல் கூறும்போது,
யுத்தத்தில் மலக்குகள் கலந்துகொண்டதாக கற்பனையாக க் கூறுவதை எப்படி ஷரீஅத் ஏற்கும்?

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.