எம்மிடத்தில் ஆகாயத்தில் பறப்பது கராமத்தாகாது
ஏனெனில் பறவை அதை செய்கின்றது.
மேலும் தண்ணீரின் மேல் நடப்பதும் , ( நீந்துவதும்) எம்மிடம் கறாமத்தாக ஆகாது.
ஏனெனில் மீன் அதை செய்கின்றது.
பூமி உனக்கு சுருட்டப்படுவதும் எம்மிடம் கராமத்தாக ஆகாது.
ஏனெனில் சபிக்கப்பட்ட அல்லாஹ் வின் எதிரியான இப்லீஸ் அவனுக்குக்கூட பூமி சுருட்டப்பட்டிருக்கின்றது.
எம்மிடம் கறாமத்தாகிறது இஸ்திகாமத் எனப்படும் நிலையைக் கொண்டு அல்லாஹ் உன்னை சங்கை படுத்துவதும், அவனது சிந்தனையில் நேமமாக நிலைத்திருப்பதுவுமேயாகும்.
கறாமத்தில் மிக உயர்வான கறாமத்தாகிறது அது அல்லாஹ்வின் நினைவு ( திக்ர்)ஆகும்.
அல்லாஹ்வின் நினைவானது மிகப்பெரும் விடையமாகும்.
1000 கராமத்துக்களைவிட எம்மிடம் சிறந்தது அல்லாஹ்வின் திக்ர் ஆகும்.
ஷரீ அத்தின் வாயல் வழியாக எவர் நுழையவில்லையோ அவர் ஹகீகத்தின் வாயல் வழியாக நுழைய மாட்டார்.
என அல்குத்புந் நபவீ, பாபுன் நபீ ஷைகுல் அறப் அஸ்ஸெய்யித் அஹ்மதல் பதவீ நாயகம் அவர்கள் கூறினார்கள்.
Fasmin Rabbani