4 மனைவிகளை திருமணம் செய்த ஒரு அரசன் வாழ்ந்து வந்தான்.
அவன் நான்காது மனைவியை பைத்தியமாக விரும்பினான்.
அவளை அவன் மகிழ்விக்க தன் சக்தியில் (செல்வத்தில் )அனைத்தையும் செலவு செய்தான்.
மூன்றாவது மனைவியை, அவன் நேசித்தான், ஆனால் அவள் வேறு ஒருவனுக்காக தன்னை விட்டுவிடுவாள் என்று உணர்ந்தான்.
இரண்டாவது மனைவி :
அரசன் துன்பத்தில் இருந்தால் அவளிடத்திலேயே நிம்மதி பெற ஒதுங்குவான்; அவள் எப்பொழுதும் அவனுக்குச் செவிகொடுத்து, துன்ப நேரத்தில் அரசனை ஆதரிக்கக் கூடியவளாக இருந்தாள்.
முதல் மனைவியைப் பொறுத்தவரை, அரசனால் புறக்கணிக்கப்பட்டவளாகவும்,கவனிப்பாரற்றும் இருந்தாள்.
அவளுக்குரிய உரிமையை கொடுக்காமலும் அரசன் இருந்தான்.
ஆனால் அவள் அரசனை மிகவும் நேசிக்கக் கூடியவளாக இருந்ததுடன், அவனுடைய ராஜ்யத்தை பராமரிப்பதில் பெரிய பங்கு வகித்தாள்.
அரசன் நோயுற்றான்.
தனது இறுதி நேரம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தான்.
அதனால் அவன் சிந்தித்துச் சொன்னான்.
எனக்கு 4 மனைவிமார் இருக்கின்றனர்.
நான் தனியாக (கப்ருக்கு)கல்லறைக்குப் போக விரும்பவில்லை.
(அவர்களில் ஒருவரையேனும் அழைத்துச் செல்லவேண்டும் என நினைத்து,)
தனது நான்காவது மனைவியை அழைத்துக்கேட்டான்:
என் மற்ற மனைவிகளை விட நான் உன்னை அதிகம் நேசித்தேன்,
மேலும் உனது விருப்பங்கள் ,மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றினேன்,
எனது கல்லறைக்கு என்னுடன் வருவாயா ?என அரசன் கேட்டான்.
அதற்கவள் ஒற்றை வார்த்தையில் : (முடியாது) என்றாள்.
அரசனுக்கு எந்த இரக்கமும் காட்டாமல் உடனடியாக விலகிச் சென்றாள்.
மேலும் அரசன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.
என் வாழ்நாள் முழுவதும் உன்னை நேசித்தேன், நீ என்னோடு என் கல்லறைக்கு வருவாயா? என்று கேட்டான்.
( நிச்சயமாக இல்லை) என்று அவள் சொன்னாள்.
வாழ்க்கை இனிமையானது ,
நீ இறக்கும் போது நான் போய் மற்றொரு திருமணம் செய்து கொள்வேன் என்றாள்.
இரண்டாவது மனைவியை அரசன் அழைத்தான்:
அவன் அவளை நோக்கி:
நீ எனக்காக அறுத்துப் பலியிட்டு தர்மம் செய்தாய், எனக்கு உதவி செய்தாய்.
நான் எப்பொழுதும் துன்பத்தில் இருந்தால் உன்னிடமே அடைக்களம் தேடினேன்.
ஆகவே, நீ என்னுடன் என் கல்லறைக்கு வருவாயா? என்று கேட்டான்.
என்னை மன்னித்துவிடு!, என்னால் உனது வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை.!
ஆனால்
உன்னை உன் கல்லறை வரைக்கும் எடுத்துச் சென்று முடிந்தவரை அடக்கம் செய்ய உதவி செய்ய இயலும் என்றாள்.
இம்மூன்று மனைவிமாரினதும் அதிருப்தியான பதில் கேட்ட அரசன் கடும் கவலை கொண்டான்.
தூரத்தில் இருந்து ஒரு குரல் வந்தது..
“நீர் எங்கு சென்றாலும் நான் உன்னுடன் இருப்பேன். உன் கல்லறைக்கு உன்னுடன் நான் வருகிறேன்” என்று.
அரசன் திரும்பிப் பார்த்தான்.
தனது முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள்.
அவள் ஒரு பலவீனமான, நோயுற்ற நிலையில் இருந்தாள்.
அரசன் வாழ்ந்த காலத்தில் அவளை புறக்கணித்ததால்,
அவளைக் கவனிக்காததால்
அரசன் வருத்தப்பட்டான், மனம் வருந்தினான்.
ஏனைய மனைவிமாரை
விட நான் உன்னை அதிகமாக கவனித்திருக்க வேண்டும்.!!
நான் காலத்திற்கு பின்னோக்கி செல்ல முடிந்தால், என் நான்கு மனைவிகளில் அதிக அக்கறை கொண்டவள் நீயாகத்தான் இருப்பாய்.
என்று அரசன் சொன்னான்.
{உண்மையில் என் அன்பு நண்பர்களே}
நம் அனைவருக்கும் 4 மனைவிகள் இருக்கின்றனர்.
{ நான்காவது } மனைவி
“எமது உடல்”
எவ்வளவுதான் உடலை கவனித்து ஆசைகளை தீர்த்து வைத்தாலும்,
நாம் இறக்கும் போது உடல்கள் நம்மை விட்டு உடனே போய்விடும்.
{ மூன்றாவது } மனைவி
“பணம் மற்றும் சொத்துக்கள் “:
நாங்கள் இறக்கும் போது எங்களை விட்டு நமது சொத்துக்கள்
மற்றவர்களிடம் போய்விடும்.
{ இரண்டாவது } மனைவி
எமது குடும்பம் மற்றும் நண்பர்கள் :
நம் வாழ்வில் நமக்காக அவர்களின் தியாகங்கள் எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை நாம் இறக்கும் போது
நாம் அவர்களை கல்லறைக்கு அழைத்து செல்வதை விட அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கக் கூடாது.
{ முதல் } மனைவி
“நாம் செய்யும் நல்ல அமல்களாகும்.”
எம்முடன் நாம் செய்யும் நல்ல அமல்கள் மட்டுமே வர இருப்பதை புரிந்தும் ,
நண்பர்கள், சொத்துக்கள், இச்சைகள் என்பவற்றை கவனித்தே எமது வாழ்வு செல்கின்றது.
இது வேதனைக்குரிய விடையமாகும்.
மேற்படி சம்பவத்தில் வந்த அரசன் நாமே.!
எமது 4 மனைவிமாரில் முதலாவது மனைவியாகிய “அல்- அமலுஸ்ஸாலிஹு “எனும் நல்லமல்களே எம்முடன் வர இருக்கும் உண்மை மனைவி என்பதை அறிந்து
இறுதிவரை நல்லமல்கள் புரிந்து வாழ்வோம்!
அரபு நட்பு முகநூல் வட்டத்தில் வாசித்தவற்றில் பிடித்தது..