السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday 19 May 2024

தரவு விஞ்ஞானி எனும் (Data Scientists)

Eravur

 தரவு விஞ்ஞானி எனும் (Data Scientists) இலட்சியத்தோடு பயணிக்கும் மீராவோடை மாணவனுக்கு அப்துல் கலாம் விருது.


மாணவனை சமூகமயப்படுத்தி எதிர்கால இலட்சியத்தினை அடைய வைப்பது கல்குடாவில் உள்ள சமூக சிந்தனையாளர்களின் தார்மீக பொறுப்பாகும்.


ஓட்டமாவடி, மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி கற்கும் அப்Fனான் அஹமட் எனும் மாணவன் கணனித்துறையில்  தனக்கிருக்கும் Advanced Cording Skills எனும் அசாதாரண அறிவுத்திறமையை (Extraordinary. Knowledge) வைத்து இளம்  கண்டு பிடிப்பாளர்களின் (Junior Inventor)  பிரிவில் Driver Sleeping Alarm எனும் புதிய கண்டு பிடிப்புக்கு இந்தியாவில் வருகின்ற September மாதம் அப்துல் கலாம் விருதினை பெறவுள்ளமையானது பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் மிகப்பெருமையான விடயமாக பார்க்கப்படுகின்றது.


அத்தோடு எதிர் காலத்தில் பல சாதனைகளுக்கு சொத்தக்காரனாகும் மாணவனாகவும் பார்க்கப்படுகின்றார்.


Computer Advanced Cording Skills எனும் துறையில் தனக்கிருக்கும் Extraordinary Knowlendge னை வைத்து பத்தாம் தரத்தில் படிக்கின்ற பொழுதே வலைத்தளங்களை Web page உருவாக்கும் திறமைகளை கொண்ட குறித்த மாணவன் தான் கல்வி கற்கும் மீராவோடை அல் ஹிதாயா பாடசாலையின் சகல தரவுகளையும் உள்ளடக்கிய  வலைத்தளத்தினை Web page உருவாக்கி  முடியும் தருவாயில் உள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


அத்தோடு தானாகவே DP Education IT Campus யினூடாக  கலிபோனிய கற்கை நிறுவனத்தில் OnLine மூலமாக 12 மாத கற்கை நெறிக்காக  Python Game Developer, Advanced Cording Skills, Complex Cording Concept, Data Analyst போன்ற பாடங்களை கற்று வருகின்றார்.


நாளாந்த தச்சுத்தொழில் செய்யும் இவருடைய தந்தை மாதாந்தம் OnLine கற்கைகான கட்டணமாக 90 அமரிக்க டொலர்களை (27000Rs) செலுத்தி வருகின்றமை அவர்களுடைய நாளாந்த ஜீவனோ பாயத்துக்கு மத்தியில் பெரும் சுமையாகவும் தியாகமாகவுமே பார்க்கப்படுகின்றது.


சிறு வயதிலே தான் ஒரு (Data Scientists )தரவு விஞ்ஞானியாக வர வேண்டும் என்ற இலட்சியத்தோடும் அசாதாரண திறமையோடும் (Extraordinary Knowledge)  பயணிக்கும் குறித்த மாணவனின் கனவு நிறை வேற எமது கல்குடா சமூகத்தில் உள்ள சமூக சிந்தனையாளர்களும்,  படித்த சமூகமும்,  கொடை வள்ளல்களும், இஸ்லாமிய சிந்தனையாளர்களும் குறித்த மாணவனை ஊக்குவித்து உதவி ஒத்தாசைகளை வழங்க முன்வர வேண்டும் என்பது எனது பார்வையாக உள்ளது.

நன்றி - Ahmed Irshad Mohamed Buhary