السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 20 May 2024

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும்.தொடர்10

 

தல்கீன்: -------- மைய்யித்துக்கு தல்கீன் கூறுவது சுன்னத்: அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான். فذكر فان الذكرى تنفع المؤمنين  நல்லுபதேசம் செய்யுங்கள் நிச்சயமாக நல்லுபதேசம் முஃமீன்களுக்கு பிரயோசனம் செய்யும். முகல்லபுக்கு தல்கீன் சுன்னத்தாகும், முகல்லப் அல்லாதவருக்கு சுன்னதில்லை; ஷஹீதுக்கு தல்கீன் சொல்லப்படுவதில்லை; தல்கீனுக்குரிய வாக்கியங்கள் வருமாறு, يا عبدالله ابن امة الله  اذكر العهد الذي خرجت عليه من الدنيا  شهادة ان لا اله الاالله  وان محمدا  رسول الله  وان الجنة حق  وان النار حق وان القبر حق وان الساعة اتية لا ريب فيها  وان الله يبعث من في القبور وانك رضيت بالله ربا وبالاسلام دينا  وبمحمد صلي الله عليه وسلم نبيا ورسولا  وبالقران اماما  وبالكعبة قبلة  وبالمؤمنين اخوانا


தல்கீன்:
--------
மைய்யித்துக்கு தல்கீன் கூறுவது சுன்னத்:
அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.
فذكر فان الذكرى تنفع المؤمنين
நல்லுபதேசம் செய்யுங்கள் நிச்சயமாக நல்லுபதேசம் முஃமீன்களுக்கு பிரயோசனம் செய்யும்.
முகல்லபுக்கு தல்கீன் சுன்னத்தாகும், முகல்லப் அல்லாதவருக்கு சுன்னதில்லை; ஷஹீதுக்கு தல்கீன் சொல்லப்படுவதில்லை;
தல்கீனுக்குரிய வாக்கியங்கள் வருமாறு,
يا عبدالله ابن امة الله اذكر العهد الذي خرجت عليه من الدنيا شهادة ان لا اله الاالله وان محمدا رسول الله وان الجنة حق وان النار حق وان القبر حق وان الساعة اتية لا ريب فيها وان الله يبعث من في القبور وانك رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلي الله عليه وسلم نبيا ورسولا وبالقران اماما وبالكعبة قبلة وبالمؤمنين اخوانا
தல்கீனுடைய வாக்கியங்களை மூன்று விடுத்தம் கூறுவது சுன்னத்தாகும், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரே மகனான இப்றாஹீம் றழியல்லாஹு அன்ஹு ஒருவருடம் பத்து மாதமாக இருக்கும் போது வபாத்தாகி விட்டார்கள், அவர்களின் நல்லடக்கத்திற்குப் பின் பின்வரும் வசனங்களை றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒதினார்கள்;
قل الله ربي ورسول الله ابي والاسلام ديني
கூறுவீராக! அல்லாஹ் எனது றப்பு, அல்லாஹ்வின் திருத்தூதர் எனது தந்தை எனது மார்க்கம் இஸ்லாம்.
அல்லாஹ்வின் திருத்தூதரே! பாவமறியாத பச்சைக்குழந்தைக்கு இவ்வாறு தல்கீன் சொல்லப்படுகிறதே! எங்களுக்கு யார்தான் சொல்லித்தருவார்கள்? என்று ஸஹாபாக்கள் கூறிய போது
يثبت الله الذين امنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الاخرة
பலப்படுத்தும் வார்த்தையின் காரணமாக ஈமான் கொண்டவர்களுக்கு
இம்மைவாழ்விலும் மறுமையிலும் அல்லாஹுத்த ஆலா பலப்படுத்துவான்.
தல்கீன் தொடர்பான ஹதீது பலவீனமானது என்று சிலர் கூறி தல்கீன் பித்அத் என்கின்றனர்; றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்குப் பின் புதிதாக உருவானதற்குத்தான் பித்அத் எனப்படும்; தல்கீனுக்கான மூல ஆதாரம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருவாயினால் மொழியப்பட்டுள்ளதால் அதனை பித்அத் என்று கூறுவது சரியல்ல!ஆயினும் இப்போதுள்ள முறைப்படி தொடர்சியாகச் செய்வது பித்அத்தாக இருப்பினும் அது சுன்னத் என்று அறிஞர்கள் தீர்ப்புக்கூறியுள்ளனர்.
தல்கீன் பற்றிய ஹதீத் பலவழிகளால் வந்திருப்பதால் அது ஹஸன் தரத்தில் உள்ளது; தவிர, பலவீனமான ஹதீதை சுன்னத்தான அமலுக்கு ஆதாரமாகக் கொள்ள முடியும் என்பது புகஹாக்கள் முஹத்ததீன்களின் இஜ்மாஃவாகும்.
நல்லடக்கத்திற்குப் பின் கப்றைச்சுற்றி சிலர் தங்கியிருந்து மைய்யித்துக்காக பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்; மையித்தை நல்லடக்கம் செய்த பின் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கப்றடியில்நின்று
استغفروا لاخيكم واسئاواله التثبيت فانه الان يسئل
தங்களின் சகோதரருக்காக பாவமன்னிப்புத்தேடுங்கள் நிச்சயமாக இந்த நேரத்தில் அவர் விசாரிக்கப்படுகின்றார் என்று கூறுவார்கள்.
புஜைறமி என்ற நூலில் தல்கீனின் வாக்கியம் பின்வருமாறு உள்ளது
• اعوذ بالله من الشيطان الرجيم ، بسم الله الرحمن الرحيم ، كل من عليها فان ةيبقي وجه ربك ذوالجلال والاكرام ،كل نفس ذائقة الموت وانما توف ن اجوركم يوم القيمة فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز ، وماالحية الدنيا الا متاع الغرور منها خلقناكم للعمل والثواب نعيدكم للقبر والتراب ومنها نحرجكم للبعث والحساب تارة اخرى ،
يا عبد الله يا ابن امة الله اذكر العهد الذي خرجت عليه من دار الدنيا الي دار الاخرة وهو شهادة ان لا اله الا الله وان محمدا رسول الله ، وان الجنة حق وان النار حق وان الساعة اتية لا ريب فيها وان الله يبعث من في القبور ،
فاذا جاءك الملكان فلا يفزعاك ولا يروعاك ولا يرهباك فانما هما خلق من خلق الله تعالى فاذا سئلاكا عن ربك وعن نبيك وعن دينك فقل لهما الله ربي ومحمد صلي الله عليه وسلم نبيي والكعبة قبلتي والقران امامي وامؤمن ن اخواني ،
ثبتك الله وايانا وجميع المؤمنين بالقول الثابت يثبت الله الذيم امنوا بالقول الثابت في الحيوة الدنيا وفي الاخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء ، يا ايتها النفس المطمئنة ارجعي الي ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي
வள்ளம், கப்பல் ஆகியவற்றில் மரணித்து கடலில் தாழ்த்திப்போட்டாலும், மீன் முதலை வயிற்றுக்குள் போனாலும் அடங்கிய இடத்தில் நிற்காமல் அந்தக்கப்பல் வேறு இடத்திற்குப் போனாலும் தல்கீன் ஓத வேண்டும். கப்பலில் மரணித்து கடலில் போட முன் தல்கீன் ஓதுவது சுன்னத்.
மைய்யித் பருவமெய்திய ஆணாக இருந்தால் அதன் தலைமாட்டில் ஒருவர் உட்கார்ந்து கிப்லாவை பின்னோக்கி மைய்யித்தை முன்னோக்கி தல்கீன் ஓதுவது சுன்னத், மைய்யித் பெண்ணாக இருந்தால் கிப்லாவை முன்னோக்கி தல்கீன் ஓதுவது முஸ்தஹப்பாகும் (மஙானி)
இட நெருக்கடி, அதிகளவான மைய்யித்தின் தொகை உள்ளிட்ட அவசியமான காரணங்கள் இல்லாமல் ஒரு கப்றில் இரு மைய்யித்துக்களை நல்லடக்கம் செய்வது மக்றூஃ; இதற்கான விளக்கத்தை இமாம் பாஜூரி றஹ்மதுல்லாஹி அலைஹி இவ்வாறு கூறுகின்றார்கள்.
ஒரு கப்றில் இரு மைய்யித்துக்களை நல்லடக்கம் செய்வது ஒரே இனம் (ஆண், அல்லது பெண்) அல்லது திருமணம் முடிக்க ஹறாமான மஹ்றமிய்யத்தான உறவினர்களாக இருந்தால் மட்டும் மக்றூஃ, இல்லாவிட்டால் இமாம்களின் ஏகோபித்த கருத்துப்படி ஹறாமாகும். சிலர் ஒத்த இனத்தவர்களாக இருந்தாலும் ஹறாம் என்கின்றனர்; சேர்த்து அடக்கும் நிர்பந்த சூழல் ஏற்பட்டால், ஒருவரை ஒருவர் படாத படி இருவருக்கு மத்தியில் களி மண்போன்ற ஒரு தடையை வைக்க வேண்டும்;
காறிஜா பின் ஸைத், ஸஃது இப்னு றபீஃ ஆகிய இருவரையும் ஒரு கப்றிலும், நுஃமான் இப்னு மாலிக், அப்து இப்னு கஷ்காஷ் ஆகிய இருவரை ஒரு கப்றிலும் சேர்த்து நல்லடக்கம் செய்யப்பட்டது
மைய்யித்தை அவர்களின் சிறப்பைக்கவனித்து முற்படுத்த அல்லது பிற்படுத்த வேண்டும், பொதுவாக அவசியத்தைக்கவனித்து ஒரே இனத்தைச்சார்ந்த இரு மைய்யித்துக்களை ஒரே கப்றில் நல்லடக்கம் சொய்வது ஆகும்; தவிர்க்க முடியாதளவு கடுமையான தேவை ஏற்பட்டால் இனவித்தியாசமானவர் (ஆண், பெண்)களை ஒரே கப்றில் நல்லடக்கம் செய்யலாம்;
கப்று தோண்டும் போது மற்றுமொரு மைய்யித் நல்லடக்கம் செய்திருப்பது தெரிய வந்தால் அல்லது அதன் ஊனம் இருந்தால் அதை மூடி விட வேண்டும்; கப்றை முழுமையாகத் தோண்டிய பின் எலும்புகள் காணப்பட்டால் அதை அதே இடத்தில் வைத்து மூடி விட்டு வேறு இடத்தில் கப்று தோண்டுவது வாஜிபாகும்; சொரிமணலில் குழி அமைத்து மைய்யித்தை அடக்கினால் மைய்யித்தில் மண் விழாதவாறு தடுப்புப்போடுவது வாஜிபாகும்.
கப்றின் அருகில் நிற்பவர்கள் இரு கைகளினாலும் கப்றின் தலைப்பக்கத்திலிருந்து மூன்று தடவைகள் மண் எடுத்து முதற் தடவையில்
منها خلقناكم،
என்றும் இரண்டாவது தடவை
وفيها نعيدكم
என்றும் மூன்றாவது தடவை..
ومنها نخرجكن تارة اخرى
என்றும் ஓதி மண்ணை கப்றில் போடுவது சுன்னத், இன்னும் சற்று அதிகப்படுத்தி முதற் தடவை
اللهم لقنه عند المسالة حجته
இரண்டாவது தடவையில்
اللهم افتح أبواب السماء لروحه
மூன்றாவது தடவையில்
اللهم جاف الارض عن جنبيه
ஓதுவது சுன்னத்.
இன்னும், கப்றிலிருந்து மண் எடுத்து சூறா இன்னா அனாஸல்னாஹுவை ஏழு விடுத்தம் ஓதி கபனைத்திறந்து நெஞ்சுப்பகுதியில் அல்லது கப்றில் அந்த மண்ணை வைத்தால் கப்றின் பித்னாக்களிலிருந்து பாதுகாப்பு கிட்டும்.
கப்றை மீண்டும் தோண்டல்:
-------------------------------
நல்லடக்கம் செய்யப்பட்ட பின், மைய்யித்தைத் தோண்டி வெளியில் எடுப்பது மைய்யித்தை இடமாற்றும் நோக்கமாக இருந்தாலும் சரி மைய்யத்துக்குக் கண்ணியக் குறைச்சலாகும் என்பதனால் ஹறாமாகும்.
கப்றைத்தோண்டுவதற்கான முக்கிய காரணங்கள் வருமாறு,
1- மைய்யித் சுத்தமில்லாமலும்,
குளிப்பாட்டாமல் அல்லது தயம்மம் செய்யாமல் அடக்கியிருந்தால், தோண்டிஎடுத்து குளிப்பாட்டி அல்லது தயம்மம் செய்யவேண்டும். ஒரு நிபந்னை! மைய்யித் பழுதாகாமல் இருக்க வேண்டும்.
2- அபகரிக்கப்பட்ட நிலத்தில் மைய்யித் அடக்கப்பட்டு நில உரிமையாளர் வேண்டினால் மைய்யித் பழுதாகியிருந்தாலும் கப்றைத்தோண்ட வேண்டும். நில உரிமையாளர் அவ்வாறு வேண்டாதிருப்பது சுன்னத்தாகும்.
3- கப்றில் ஒரு பொருள் வைக்கப்பட்டிருந்தால் பொருள் வீணாகக்கூடாது என்பதற்காக மைய்யித் பழுதாகியிருந்தாலும் தோண்டலாம்.
4-, மைய்யித் கிப்லாவுக்கு நேராக இல்லாமல் அடக்கப்பட்டு மைய்யித் பழுதாகாதிருந்தால் கப்றைத் தோண்டி மைய்யித்தை கிப்லாப்பக்கம் வைக்க வேண்டும், கபன் செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டால் கப்றைத் தோண்டக்கூடாது; ஏனெனில் அடக்கத்திற்குப்பின் மைய்யித் தானாகவே மறைக்கப்பட்டுள்ளது; மறைப்புக்கான அவசியம் இல்லாமல்போய்விட்டது.
5- ஹறம் ஷரீப் பூமியில் காபிர் அடக்கப்பட்டால்
6-வாரிசுக்காறர்கள் அடக்கப்பட்டவர் ஆணா, பெண்ணா என்று தர்க்கம் செய்து கொண்டால்
7- நிறைமாத ஒரு கற்பிணிப் பெண் அடக்கப்பட்டு வயிற்றிலிருக்கும் அக்குழந்தை உயிருடன் இருக்கிறது அதனை உயிருடன் வெளியில் எடுக்க முடியும் என்று நம்பியிருந்தால்
8- கற்பமுற்றிருக்கும் தன் மனைவியை நோக்கி உன் வயிற்றிலிருப்பது ஆணாக இருந்தால் நீ தலாக் என்று கூறியிருக்க அதை அறிவதற்கு முன் அவள் இறந்து அடக்கப்பட்டால்,
மேற்கண்ட நிர்ப்பந்தமான சந்தர்ப்பங்களில் கப்றைத்தோண்டலாம்.
தொடரும்..
கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி
All react