السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 20 May 2024

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும். தொடர்9

 

நல்லடக்கம் செய்தல்: ----------------------- மனிதனை நல்லடக்கம்  செய்யும் இடத்தை "கப்று" எனப்படும், கப்றில் மைய்யித்தை நல்லடக்கம் செய்வது வாஜிப், நல்லடக்கத்தில் ஆகக்குறைந்தளவு ஆழம் மைய்யித்தின் துர்நாற்றம் பரவாதிருப்பதும்,  சுகாதாரத்திற்கு பொதுவாக  கேடு ஏற்படாதிருப்பதோடு  வேட்டை மிருகங்களும் அவையல்லாதவையும்  மைய்யித்தை ஊடுருவ முடியாதளவுக்கும் மய்யித்திற்குக் கண்ணியக்குறைவு ஏற்படாதளவுக்கும் இருக்க வேண்டும். ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனாகிய காபில் மற்றுமொரு மகனாகிய ஹாபிலைக் கொலை செய்த போது  மைய்யித்தை அடக்குவது பற்றிய தெளிவான விளக்கம் பின் வரும் திருவசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,

நல்லடக்கம் செய்தல்:
-----------------------
மனிதனை நல்லடக்கம் செய்யும் இடத்தை "கப்று" எனப்படும், கப்றில் மைய்யித்தை நல்லடக்கம் செய்வது வாஜிப், நல்லடக்கத்தில் ஆகக்குறைந்தளவு ஆழம் மைய்யித்தின் துர்நாற்றம் பரவாதிருப்பதும், சுகாதாரத்திற்கு பொதுவாக கேடு ஏற்படாதிருப்பதோடு வேட்டை மிருகங்களும் அவையல்லாதவையும் மைய்யித்தை ஊடுருவ முடியாதளவுக்கும் மய்யித்திற்குக் கண்ணியக்குறைவு ஏற்படாதளவுக்கும் இருக்க வேண்டும்.
ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனாகிய காபில் மற்றுமொரு மகனாகிய ஹாபிலைக் கொலை செய்த போது மைய்யித்தை அடக்குவது பற்றிய தெளிவான விளக்கம் பின் வரும் திருவசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,
فبعث الله غرابا يبحث في الارض ليريه كيف يواري سوأة اخي
தனது சகோதரரின் மைய்யித்தை எவ்வாறு நல்லடக்கம் செய்வது என்பதை அவருக்குக் காட்டுவதற்காக பூமியில் தோண்டக்கூடிய காகத்தை அல்லாஹுத்த ஆலா அனுப்பி வைத்தான்.
பூரணமான நல்லடக்கம் என்பது கப்றின் ஆழம் ஒருமனிதனின் உயரத்தோடு ஒருமுழமும் இருக்க வேண்டும்; இமாம் றாபியி றஹ்மதுல்லாஹி அலைஹி இந்த ஆழத்தை மூன்றரை முழம் என்று கணித்துள்ளார்கள் ; இமாம் நவவி றஹ்மதுல்லாஹி அலைஹி இதை மறுத்து நாலரை முழம் ஆழமாக இருப்பதை ஆகுமாக்கி உள்ளார்கள்;
கப்று இருவகைப்படும்:
1- லிஹ்து - لحد பிள்ளைக்குழி
இதன் பொருள்: சாய்தல் அல்லது குனிதல் ஷரீஅத்தில் லிஹ்து لحد என்பது கப்றின் ஓரத்தில் கிப்லாத் திசையில் மையித்தை உள்ளே வைத்து மறைக்கும் அளவுக்கு தோண்டப்படும் குழிக்குக் கூறப்படும்;
2- ஷக்கு شق : என்பது, ஆறு போன்று நடுவில் பள்ளமாகத் தோண்டப்படும் கப்றுக்குக் கூறப்படும்;
கப்று கண்டிப்பான நிலமாக இருந்தால், பிள்ளைக்குழியில் நல்லடக்கம் செய்வது சுன்னத்தும் சிறப்புமாகும்; நிலம் சொரிமணலாக இருந்தால் கப்றின் நடுவில், ஆறு போன்று தோண்டி அதன் இருபக்கத்திலும் (நெருப்பு தொடாத) பச்சைக்கல்லால் சுவர் எழுப்பி அதில் நல்லடக்கம் செய்ய வேண்டும்; மைய்யித்தை நிலத்திற்கு மேல் வைப்பது மட்டும் போதாது; ஏதாவது ஒரு நிலத்தில் தோண்டுவது சாத்தியமில்லாதிருப்பின், மைய்யித்தை நிலத்திற்கு மேல் வைத்து அதன் நான்கு பக்கத்திலும் சுவர் எழுப்பி கப்றாக்க வேண்டும்; ஆகவே,
ஷக்கு شق உள்ள கப்றில் மூன்று விதங்கள் இருக்கின்றன,
1- தோண்டுவது போதுமானது,
2- நான்கு பக்கமாக சுவர் எழுப்புவது
3- கொஞ்சம் தோண்டுவது கொஞ்சம் சுவர் எழுப்புவது
கப்றில் விரிப்பு வைப்பது, அல்லது பெட்டி அமைப்பது மக்றூஃ
கப்றில் ஈரம் அல்லது நீர்க்கசிவு இருந்தால் விரிப்பைவிரிப்பது மக்றூஃ இல்லை; றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித கப்று இதில் விதிவிலக்காகும்;
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
افرشوا لي قطيفتي في لحدي فان الارض لم تسلط علي اجساد الانبياء ،
எனது பிள்ளைக்குழியில் எனது விரிப்பை விரியுங்கள் நிச்சயமாக நபிமார்களின் திருமேனியில் பூமி சாட்டப்படுவதில்லை.
நபிமார்களின் திருமேனி பேதகப்படுவது அழிந்து போவதிலிருந்து விடுதலைபெற்றதாகும், ஆகவே அவர்களின் கபுனித கப்றுகளில் உயிருள்ளவர்களைப்போன்று விரிப்பை விரிப்பது பொருத்தமாகும்;
கடற்பிரயாணத்தில் மரணம் நிகழ்ந்தால், கரை அண்மித்திருந்தால் நல்லடக்கத்திற்காக கரையில் காய்ந்த இடத்தை எதிர்பார்க்க வேண்டும்; காய்ந்த நிலம் தூரமாகவும் மைய்யித் பழுதுபடுவதற்கான அச்சமும் இருந்தால் மைய்யித்தை இரு கம்புக்கு மத்தியில் வைத்துக் கட்டி கடற்மேல்பரப்பில் போடவேண்டும். கரையில் உள்ள எவராவது முஸ்லிம் கையில் அகப்படுமாயின் அதை அவர்கள் நல்லடக்கம் செய்வார்கள்‌; மற்றுமொரு முறையில் பாறாங்கல்லைக்கட்டி கடலில் விடவேண்டும் அது கடலாழத்திற்குச் சென்று விடும்.
நல்லடக்கம் செய்யும் முறை:'
------------------------------
நல்லடக்கம் செய்வதற்காக ஜனாஸாவை கப்றின் பிற்பகுதியில் கால்மாட்டுப் பக்கமாக வைத்து மைய்யித்தின் தலைப்பக்கத்திலிருந்து மெதுமெதுவாக கப்றினினுள்ளே இறக்க வேண்டும், கப்றுக்குள் இறக்கும்போது தலையை உயர்த்தி கால்பகுதியை பணித்து இறக்கவேண்டும்; தலையை பணித்து கால்பகுதியை உயர்த்தி மைய்யித்தை கப்றுக்குள் இறக்குவது ஹறாமாகும்;
மைய்யித்தை கப்றில் கிப்லாவுக்கு நேராக ஒருபக்கம் சாய்த்து வைக்க வேண்டும், உயிருள்ள போது வலது பக்கமாக சாய்ந்து தூங்குவதுதான் சிறப்பு; கிப்லாவை முன்னோக்கி இடதுபக்கமாகவும் வைக்க முடியும்; ஆயினும் அவ்வாறு வைப்பது மக்றூஃ; மைய்யித்தை கிப்லாவை முன்னோக்கி அடக்கம் செய்யாவிட்டால், கப்றைத்தோண்டி மைய்யித்தை கிப்லாவை முன்னோக்கிவைத்து அடக்குவது வாஜிபாகும்; ஆனால், மைய்யித் பேதகப்பட்டிருந்தால் அவ்வாறு செய்யக்கூடாது;
கப்றில் வைத்தபின் ஒரு சீலையால் கப்றை மூடிக்கொண்டு கபனுக்கு மேலுள்ள முடிச்சை அவிழ்த்து மைய்யித்தின் வலது பக்கத்து கபனை விலக்கி அல்லாஹ்விடத்தில் மைய்யித்தின் பணிவையும் தாழ்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக வலது கன்னத்தை மண்ணில் படத்தக்கதாக வைக்க வேண்டும்; மைய்யித்தை கப்றில் கிப்லாவை நோக்கி வைக்கும் போது தலையும் காலும் கப்றின் சுவரில் படக்கூடியதாக இருக்க வேண்டும்; இன்னும் மைய்யித் ஊதி சரிந்து விழாமலிருப்பதற்காக வேண்டி மையித்திற்குப் பின்பக்கமாக பச்சைசெங்கல்லால் அல்லது பச்சைக்கொத்தால் அணைத்து வைக்க வேண்டும்;
மைய்யித்தை பிள்ளைக்குழியில் அல்லது ஷக்கில் வைத்தபின் தலையை உயர்த்தி வைப்பதற்காக பச்சை செங்கல்லை தலைக்கைக் கீழ் வைக்க வேண்டும்; மையித்தின் மேல்பகுதியை முழுமையாக அடைத்த பின் கப்றுக்குழிக்குள் முழுமையாக மண்ணை நிறப்ப வேண்டும்; மண்வெட்டி அல்லாத கருவிகளால் கப்றைத்தோண்டுவதும் மூடுவதும் மக்றூஃ; கப்றுக்குள் வைக்கும் பச்சைசெங்கல் ஒற்றையாக இருப்பதும் மொத்தம் ஒன்பதாக இருப்பதும் சுன்னத்தாகும்; றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித கப்று ஷரீபில் மொத்தம் ஒன்பது பச்சைசெங்கல்கள் வைக்கப்பட்டன;
பிள்ளைக்குழியை கிப்லாவுக்கு நேராகத் தோண்ட வேண்டும் என்பது அவசியமில்லை; உள்ளே இருக்கும் சுவருக்கு நேராகவும் பிள்ளைக்குழியைத் தோண்டலாம்; ஆனால் மைய்யித்தை கிப்லாவுக்கு நேராக வைப்பது ஷர்த்தாகும்; உள் சுவர் இருபக்கமாகவும் இருக்கலாம்; கப்றிலிருந்து துர்நாற்றம் வெளியேறுதல் அல்லது மிருகங்கள் உள்நுழைவதற்கான அச்சம் காணப்பட்டால், அவசியத்திற்கு ஏற்ப கப்றை சீரமைப்பது வாஜிபாகும்.
கப்றில் கட்டடம்:
----------------
கப்றின் மேற்பகுதியை ஒரு சாண் உயர்த்தி வைக்க வேண்டும், கப்றின் எந்த ஒரு பகுதியும் ஒட்டகத்தின் அல்லது காளைமாட்டின் திமிலைப்போன்று உயர்ந்து இருக்கக்கூடாது, கப்றை உறுதியாக்கவோ அதற்கு மேல் கட்டடம் எழுப்புவதோ கூடாது; நிழலுக்காக கப்றுக்குமேல் பந்தல்போடுவது அல்லது குப்ப போன்று நிழலமைப்பது மக்றூஃ; ஹளறத் உமர் றழியல்லாஹு அன்ஹு ஒரு கப்றில் குப்பா அமைக்கப்பட்டதை பார்த்த பின் அதை உடைத்துவிட்டு அவரின் அமல் அவருக்கு நிழல் கொடுக்கப்போதுமானது என்றார்கள்;
நபிமார்கள், ஷுஹதாக்கள், வலிமார்களின் கப்றில் குப்பா உள்ளிட்டதைக் கட்டுவதற்கு புகஹாக்களில் உள்ள சூபிகள் விதிவிலக்களித்துள்ளார்கள்; ஸியாறத் செய்பவர்கள் அவர்களைத் தரிசிப்பதற்காக குப்பா உள்ளிட்ட கட்டிடம் கட்டலாம்; கப்றின் தலைப்பக்கத்தில் அடையாளத்திற்காக கல் அல்லது குறிப்புப் பலகையை ஊன்றி நடுவது சுன்னத்;
ஹளறத் உதுமானிப்னு மழ்னூன் றழியல்லா‌ஹு அவர்களின் கப்றின் தலைமாட்டுப்பகுதியில் ஒரு கல்லை றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நட்டபின் இதன் மூலம் எனது சகோதரரின் கப்றை அடையாளம் கண்டு கொள்வேன் என்று கூறினார்கள்; சகோதரர் என்பது பால்குடி சகோதரர் ஆகும் , நல்லடியார்களைச் சுற்றி நல்லடக்கம் செய்வது சிறப்பு! ஸியாறத் செய்வதற்கு வசதியாக குடும்பத்தவர்களை ஒரிடத்தில் நல்லடக்கம் செய்வதும் ஏற்றமாகும்.
கப்றில் மண்ணைப் போடும்போது அவசரமாக இல்லாமல் மெதுவாக கவலையோடு போடவேண்டும்; அதன்பின் கப்றில் பச்சைக்கொத்தை நட்டு தண்ணீர் தெளிப்பது சுன்னத்; றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களின் மகனார் ஹளறத் இப்றாஹீம் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் கப்றில் நீர் தெளித்தார்கள்; பன்னீர் உள்ளிட்ட வாசமுள்ளதைத் தெளிப்பதில் பணவிரயமிருப்பதால் மக்றூஃ மலக்குகள் அங்கு வருவதாலும், அவர்கள் மணத்தை விரும்புவதாலும் அவர்களைக் கண்ணியப்படுத்தும் நோக்கில் சிறிதளவு பன்னீர் தெளிப்பது மக்றூஃ அல்ல!
பிறக்காத குழந்தை:
----------------------
மரணித்த கற்பிணித்தாயின் வயிற்றிலுள்ள சிசு உயிரோடு இருப்பதற்கான சாத்தியம் இருந்தால் குழந்தையோடு சேர்த்து மைய்யித்தை அடக்குவது ஆகாது, வயிற்றைக்கிழித்து குழந்தையை வெளியில் எடுப்பது வாஜிப் ! குழந்தை உயிர்வாழ்வதற்கான சாத்தியம் குறைவாக இருப்பின் குழந்தையின் துடிப்பு அடங்கும்வரை மைய்யித்தை அடக்கக்கூடாது .கற்பிணி மைய்யித்தின் வயிற்றில் செங்கல்லை வைப்பது தவறு அவ்வாறு வைப்பது சிசுவைக்கொலை செய்வதாக அமையும்.
அடக்குவதை மறைத்தல்:
-----------------------------
அடக்கும் வேளை மக்களின் பார்வையிலிருந்து திரைபோடுவது பற்றி வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது , மைய்யித் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சீலையால் கப்றை மறைப்பது சுன்னத்.
அடக்குவோர் தொகை:
--------------------------
மைய்யித்தை கப்றுக்குள் வைக்கும் போது நல்லடக்கத்தீல் ஈடுபவர்களின் எண்ணிக்கை ஒன்று அல்லது மூன்றாகும், எவ்வாறாயினும் ஒற்றை எண்ணிக்கையிலிருக்க வேண்டும்; மைய்யித் பெண்ணாயினும் கப்றில் மைய்யித்தை ஆண்தான் வைக்க வேண்டும்; தொழுவிப்பதற்குத் தகுதியானவரே கப்றில் மைய்யித்தை வைப்பதற்கும் தகுதியானவர்; தொழுவிப்பதில் கணவருக்கு முன்னுரிமை இல்லாவிட்டாலும் கப்றுக்குள் பெண்மைய்யித்தை வைப்பதில் அவரின் கணவருக்கு முன்னுரிமையுண்டு; இதன்பின் மஹ்றமான உறவினர்களை முற்படுத்த வேண்டும்; இதற்குப்பின் ஸாலிஹான நபராவார்; இந்த ஒழுங்து சுன்னத் தவிர வாஜிப்அல்ல! கப்றுக்குள் மூன்று நபர் இருக்கத்தக்க விதத்தில் கப்றை சற்று விசாலமாகத் தோண்டவேண்டும்.
மைய்யித்தைக் குளிப்பாட்டுவதிலும் நல்லடக்கம் செய்வதிலும் ஃபிக்ஹு சட்டம் நன்கு தெரிந்த அல்லாஹ்வை அறிந்த நபருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; மைய்யித் தொழுகையின் நோக்கம் துஆவாகும் ; இவரின் துஆ கபூலாவற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது மைய்யித்தை கப்றுக்குள் வைக்கும் போது
بسم الله وعلي ملة رسول الله صلي الله عليه وسلم
என்று கூறவேண்டும், இவ்வாறு கூறினால் கப்றிலிருந்து நாற்பது வருட த்திற்கான வேதனை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
மைய்யவாடி:
-------------
மரணம் நிகழ்ந்த இடத்திலுள்ள மைய்ய வாடியில் ஸியாறத் செய்வோரின் துஆவுக்காக நல்லடக்கம் செய்வது சுன்னத், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களின் வீட்டில் மதீனா தைய்யிபாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்,
ஷுஹதாக்கள் அவர்கள் ஷஹீதான களத்தில் நல்லடக்கம் செய்வது போன்று நபிமார்களும் வபாத்தான இடத்தில் நல்லடக்கம் செய்யப்படுவது அவர்களின் தனித்துவமான சிறப்பாகும்;
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
ما يقبض الله نبيا الا في موضع الذي يحب ان يدفن
நபிமார்களின் றூஹ் அவர்கள் நல்லடக்கம் செய்யப் படுவதை அல்லாஹுத்த ஆலா விரும்பும் இடத்தில்தான் கைப்பற்றப்படும்‌.
ஹளறத் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முபாறக்கான மஸார் ஷரீப் தொடர்பில்
ادفنوا في موضع فراشه
அன்னாரின் படுக்கை விரிப்பு உள்ள இடத்திலேயே நல்லடக்கம் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
மரணித்த இடத்திலுள்ள மைய்ய வாடியை தவிர்த்து விட்டு மைய்யித்தை தூரத்திலுள்ள மைய்ய வாடியில் நல்லடக்கத்திற்காக இடமாற்றுவது ஹறாம்; சிலரிடத்தில் மக்றூஃ ஆனால், மக்கா மதீனா பைத்துல் முகத்தஸ் அல்லது ஏதாவது ஒரு நல்லடியாரின் கப்றுக்குப் பக்கத்தில் நல்லடக்கம் செய்வதற்காக இடம்மாற்றலாம் . இவ்வாறு எடுத்துச்செல்வதில் மைய்யித்தின் உடலில் மாற்றம் நிகழாதிருக்க வேண்டும்; இச்சட்டம் பொதுவான மைய்யித்தின் விடயத்தில்தான் பொருந்தும் ; ஒரு ஷஹீதை அவர் கொல்லப்பட்ட களத்திலேயே நல்லடக்கம் செய்வதுதான் மிகச் சிறப்பாகும்.
தொடரும்....

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.